உண்ணி மரம்
BIG SAGE
A PLEASING
HERB TOO
LANTANA
CAMARA
தே. ஞானசூரிய பகவான்,
போன்: + 91-8526195370Email:
gsbahavan@gmail.com
தாவரவியல் பெயர்: லெண்டானா கேமரா (LANTANA CAMARA)தாவரக் குடும்பம் பெயர்: வெர்பனேசி (VERBENACEAE)தாயகம்: அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகள் (AMERICAN TROPICS)பொதுப் பெயர்கள்: பிக் சேஜ், ஒயில்ட் சேஜ், ரெட் சேஜ், ஒயிட் சேஜ், டிக் பெர்ரி, வெஸ்ட் இண்டியன் லெண்டானா (BIG SAGE, WILD SAGE, RED SAGE, TICK BERRY, WEST INDIAN LANTANA)
எங்லோருக்கும்
தெரிந்த பெருஞ்செடி அல்லது , குறுமரம்: அதாவது, சிறிய மரம் பெரிய
செடி. எல்லோருக்கும் தெரிந்த பெயர் உண்ணி
செடி. சீமைக் கருவை மரத்தைப்போல,
அங்கிங்கெனாதபடி பரவி
இருக்கும் இன்னொரு சீமை சரக்கு. “அழகான ஆபத்து” என்று
வருணிக்கிறார்கள் தாவரவியல் அறிஞர்கள்.
அமெரிக்கா
அனுப்பிவைத்த அழகான ராட்சசி (A BEAUTIFUL INVASIVE PLANT)
இதன் தாயகம் அல்லது
சொந்த ஊர் அமெரிக்கா, மற்றும் ஆப்ரிக்காவின் வெப்பமானப் பகுதிகள். அமெரிக்காவில், குறிப்பாக மத்திய
அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அறிமுகமான அனைத்து நாடுகளிலும் “இன்வாசிவ் ஸ்பீசிஸ்’ (INVASIVE SPECIES) என்று பெயர் எடுத்துள்ளது.
இப்படி “அழகான செடி” என்று இறக்குமதி செய்துவிட்டு அல்லல்படும் இடங்களில் முக்கியமானவை, தெற்கு ஆசியா, தெற்கு ஆப்ரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா. முக்கியமான இடங்களை
மட்டும் சொல்லியிருக்கிறேன்.
“அழகான ராட்சசியே” என்று ஒரு
சினிமாப்பாட்டு வந்ததாக ஞாபகம். அதுபோல
இது, அமெரிக்கா அனுப்பிவைத்த அழகான ராட்சசி! ஆனால் இந்த
ராட்சசியைக் கொண்டு வந்தது, பிரிட்டிஷ்; வெள்ளைக் காரர்கள்.
ஏழுவண்ண பூக்கள் (VIBGYOR FLOWERS).
உண்ணி செடியின் பூக்கள் எந்த நிறம், என்று யாராலும் சொல்ல
முடியாது. காரணம், எல்லா நிறத்திலும்
இருக்கும். நீளமான காம்பில் ஒரு மலர்க்
கொத்து. கைப்பிடி வைத்த பூச்செண்டு. ஊதா, கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள், ஆரஞ்சு, மற்றும், சிவப்பு (VIBGYOR).
அநேகமாய் வானவில்லின் எல்லா நிறங்களையும் குத்தகை எடுத்துள்ள உலகின் அநேகமாய் ஒரே செடி.
கெட்டவற்றில் நல்லவை (GOOD AMONG THE BAD)
இன்வேசிவ் (INVASIVE) செடிகள் அல்லது மரங்கள் என்றால், என்ன என்று நான் பல கட்டுரைகளில்
எழுதியிருக்கிறேன். தொடர்ந்து படிக்கும் இயற்கை வாசகர்களுக்குத் தெரியும். ‘இன்வேசிவ்” என்றால் இடத்தைக்
கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரங்கள்
அல்லது செடிகள் என்று அர்த்தம்.
மனிதர்களில் கூட, அப்படிப்பட்ட
மனிதர்களை சந்திக்கிறோம். “கூடாரத்திற்குள் தலையை மட்டும் நுழைக்கும் ஒட்டகம் போல: உள்ளுர் மரங்களை வசிக்க விடாது, சுவாசிக்க
விடாது. “ஒண்டவந்த பிடாரி” என்பதைக்கூட “இன்வேசிவ்” என்பதற்கு சரியான
அர்த்தமாகச் சொல்லலாம். வேறு
என்ன நன்மைகள் கிடைக்கும் ? இதை வேறு எந்த
விதத்திலாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
அழகான குறுமரங்கள் (BEAUTIFUL SHRUBS)
நிறைய வீடுகளில், வீட்டுத்
தோட்டங்களில், அலுவலகக் கட்டிட வளாகங்களில், பூந்தோட்டங்களில்
அழகுச் செடியாக வளர்க்கிறார்கள். அதற்கு
எற்றபடி நிறைய இதிலும் வித்தியாசமான வண்ணங்களில் ஒட்டுச் செடிகள் வந்துள்ளன.
பட்டாம் பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு தேன்தரும் (PROVIDES NECTAR TO BUTTERFLIES AND SMALL BIRDS)
லெண்டானா (LANTANA) தாவரக் குழுவில் சுமார் 150 வகையான சிறு
செடிகளும், குறு மரங்களும் (HERBS SHRUBS)
இருக்கின்றன. வெவ்வேறு நிறங்களின்
தொகுப்பாக இருக்கும் இதன் மலர்க்கொத்து என நமக்குத் தெரியும். ஆனால் இவை இளம் பூவாக இருக்கும் போது ஒரு நிறத்தில்
இருக்கும். பூக்கள், நாளாக நாளாக இரண்டு
மூன்று நிறங்களில் மாறும். இதற்கு
முக்கியமான காரணம், பட்டாம்பூச்சிகளையும், சிறு பறவைகளையும் “எங்கிட்ட தேன் தயாரா இருக்கும். வீணா எங்கயும் போய் அலையாதிங்க.” என்று
சொல்லத்தானாம். லென்டானா எங்கு
இருந்தாலும், அதிகப் பூக்களுடன் இருப்பவை அதுவாகத்தான்
இருக்கும். எகப்பட்ட பட்டாம்பூச்சி
இனங்களுக்கு லெண்டானாதான் வாழ்வாதாரம் என்கிறார்கள்.
புற்றுநோய், தொழுநோய், வெறிநோய் ஆகியவற்றை குணப்படுத்தும் (CURES MAJOR DISEASES)
நம் நாட்டில் செய்த
ஆய்வுகளில், இதனை பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக
பயன்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அது கூட சாதாரண நோய்கள் அல்ல.
புற்றுநோய், தொழுநோய்,
வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் “ரேபிஸ்” என்றும் நோய், சின்னம்மை, குழந்தைகளுக்கு வரும்
மணல்லாரி அம்மை, ஆஸ்துமா, குடற்புண்,
தோல் சம்மந்தமான நோய்கள் ஆகியவற்றை
கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்.
இந்த நோய்களை
கட்டுப்படுத்தும் சக்தி, அதற்குத் தேவையான மருத்துவப் பண்புகள் இதில்
உள்ளண. இதன் இலைகளில் சாற்றில் (LEAF
EXTRACT) நுண்ணுயிரிகள், பூசணங்கள், மற்றும் பூச்சிகளைக்
கட்டுப்படுத்தும் சக்தி (ANTIMICROBIAL, FUNGICUIDAL AND
INSECTICIDAL PROPERTIES) உள்ளது. இயற்கை வைசாயம் செய்யும் விவசாயிகள் இதன் இலைச்சாற்றை பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவதாக நான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
உண்ணிச் செடிகளை
நீக்குவது எப்படி? (HOW TO CONTROL LENTANA?)
இதுவரை 33 உயிரின வழிமுறைகளை (BIO CONTROL AGENTS) கடைபிடித்து ஆய்வு செய்ததில் எதுவும் அவற்றிகரமாக
அமையவில்லை, ஆள்வைத்து,
அல்லது ஜே சி பி வைத்த
நீக்குவது அதிக செலவு வைக்கும். இந்தச்
செடிகளை தூரோடு வெட்டி எடுத்துவிட்டு களைக்கொல்லிகளை பயன்படுத்துவது இன்னொரு முறை, இதுவும் அதிக செலவு வைக்கும். இன்னொன்று அதிகப் பிரச்சினைகளைக்
கொண்டுவரும். அப்படி என்றால் இதற்கு
என்னதான் வழி ?
தொடர்ந்து நல்ல
மரங்களை நம்ம மரங்களை நட்டு அதனை வெளியேற்றுவது மட்டும்தான் சரியான வழியாகும், என்கிறார்கள் விஷயம்
தெரிந்த விஞ்ஞானிகள். இது ஒரு நீண்ட நாள்
திட்டம், நீண்ட நாள் திட்டம்தான் நீடித்தத் தீர்வு தரும் (SUSTAINABLE SOLUTION) என்றும்
சொல்லுகிறார்கள்.
உண்ணிச்செடி பற்றி
இன்னும் சில உபயோகமான செய்திகள் (OTHER USEFUL INFORMATION)
1.இதன் இலைகளை ஆடுமாடுகள் மேய்வதில்லை. காரணம் இவை நச்சுத்தன்மை உடையவை. பென்டாசைகிளிக் டிரைடெர்பினாய்ட்ஸ் (PENTACYCLIC
TRITERPENOIDS) என்னும் ரசாயனம் இந்த நச்சுத் தன்மைக்கு காரணமாக
உள்ளது.
2.ஒரு உண்ணி மரம் ஒர் ஆண்டில் 12000 பழங்களை, விதைகளை உற்பத்தி
செய்கிறது.
3.ஆப்ரிக்காவில், கொசுக்கள் மற்றும் “ட்சீட்சி” ஈக்கள் உற்பத்திக்கு
இடம் தருகிறது.
4.இதனை நெருப்பு வைத்து கொளுத்தினால் கூட, அடிக்கட்டைகள்
மீண்டும் துளிர்த்து வளரும்.
5.அல்லிலோபதி (ALLELOPATAY) என்பது இந்தக் செடிகள் உற்பத்தி செய்யும்
ரசாயனம். இது மற்ற தாவரங்களின் விதைகளை
முளைக்க விடாது. வேர்களின் வளர்ச்சியைத்
தடை செய்யும்.
6.பசுமையாக,
பழுக்காமல் இருக்கும் காய்கள் நச்சுத்தன்மை
உடையவை. அவற்றை சாப்பிடக் கூடாது. பழுத்த,
கனிந்த பழங்களை சாப்பிடலாம்.
7.வளர்ந்த, முதிர்ந்த மரங்களில் மேஜை நாற்காலி மற்றும் படுக்கை, இதர தட்டுமுட்டும்
சாமான்கள் செய்கிறார்கள். “டி வி எஸ்” குழு நண்பர்கள்
பழங்குடி மக்களுக்கு பயிற்சி தந்து இதனைச் செய்கிறார்கள். இந்தப் பொருட்களுக்கு “மவுசு” உள்ளது என்கிறார்கள்.
8.“டிஞ்சிட் பக்”
(
TINGID BUG) என்னும் பூச்சியினைக் கொண்டு இதனை அழிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளது, கர்நாடகா. “மந்திப்பூர் வனப்பகுதி’யில் லெண்டானாவுக்கு எதிரான இந்தப் போரைத் தொடங்கி
உள்ளார்கள். இந்த முயற்சி “வெற்றி பெறும்” என்கிறார்கள்,
கர்நாடகாக்காரர்கள்.
9.“டெலியோநீமியா ஸ்குருப்புலோசா” (TELEONEMIA
SCRUPULOSA) லெண்டானா செடிகளைத் தாக்கி உலரவைப்பதாகச் சொல்லுகிறார், கர்நாடக மாநிலத்தின் வேளாண்மைப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். இது இயற்கையான கட்டுப்பாடு. பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்து வருவதாக டைமஸ் ஆப் இந்தியா செய்தி
வெளியிட்டுள்ளது.
10.உலகின் மோசமான களைகளை ஒரு பட்டியலாக
வெளியிட்டிருக்கிறார்கள். அதில்
முதல் 10 களைகளில் ஒன்று நம் உண்ணி மரம்.
இந்த லெண்டானா
பிரச்சினைக்கு பந்திப்பூர் நேஷனல் பாரெஸ்ட்டிலிருந்து ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா, என்று பார்ப்போம் !
BEAUTIFUL TREES I SAW IN USA
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
ஊமத்தை ரேபிஸ் நோயை
கட்டுப்படுத்தும் அரிய மூலிகை
- DATURA A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html
2. நீர் பார்க்காத நான் பார்த்த
மொஜாவ் பாலைவன மரங்கள் -
WATER STARVING TREES OF MOJAVE
DESERT – Date
of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html
3.
செக்கோயா உலகின்
உயரமான செக்கோயா மரம் - KING SEQUOIA
WORLDS' TALLEST TREE –
Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
4. கலிபோர்னியா விசிறிப்பனை
சாலைகளுக்கு அழகு தரும் மரம்
- CALIFORNIA FAN PALM - GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html
5.
டவுக்ளஸ் பிர் -
பிரபலமான மின்சார மரம் DOUGLAS
FIR - - UTILITY POLE TREE –
Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html
6.
சில்க்பிளாஸ்-
ஹாலிவுட் அழகுமரம் - SILK FLASS -
HOLYWOOD BEAUTY TREE – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html
7.
செடார் எல்ம் - உறுதி மிக்க பாறை மரங்கள் - CEDAR ELM -
STRONG TIMBER TREE –
Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html
8.
டெக்சாஸ் மவுண்டெய்ன்
லாரெல் ட்ரீ - அழகு மரம் TEXAS MOUNTAIN LAUREL - AWESOME TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html
9.
சைனிஸ்
பிஸ்டாச்சி மிரட்டும் அழகு மரம் - CHINESE PISTACHE - TREE OF STUNNING BEAUTY –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html
10.
டெக்ஸாஸ் பெர்சிமான்
- சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -
EXCELLENT TIMBER TREE –
Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html
11.
சுமார்டு சிவப்பு ஒக்
மரம் - கலக்கலான வணிக மரம் SHUMARD RED
OAK - TOP CLASS BUSINESS TREE –
Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html
12.
சாவன்னா ஹோலி - அழகான
காட்டுமரம் - SAVANNA
HOLY - PRETTY WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html
13.
ரீகல் பிரின்ஸ்
ஒக் -
மரங்களின் சகல கலா வல்லவன் - REGAL
PRINCE OAK A VERSATILE
TREE – Date
of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html
14.
மக்னோலியா - ஒரு மரமே
சிறு வனமாகும் - MAGNOLIA - ONE TREE
FOREST – Date
of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html
15. லைவ் ஒக் - சமையல் எண்ணை மரம்
LIVE OAK -
COOKING OIL TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html
16.
ஈஸ்டன் ரெட் செடார்
வாசனைத்திரவிய மரம் EASTERN RED
CEDAR TREE OF PERFUMES –
Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html
17.
சிட்டல்பா சேம்பியன்
ட்ரீ அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம் -
CHITALPA CHAMPION A STUNNING
BEAUTY – Date of
Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html
18.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE
PET TREE OF ROOSEVELT
– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
19.
பிக் டூத்
மேப்பிள் சக்கரை மரம் -
BIG TOOTH MAPLE SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html
20.
பால்ட் சைப்ரஸ் பாரம்பரிய
மருத்துவ மரம் - BALD
CYPRESS A TRADITIONAL HERB – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html
21.
புளு அட்லஸ்
செடார் தொழில் மரம் - BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html
22.
அனாகேச்சோ
ஆர்கிட் அழகு பூமரம்”
- ANACACHO ORCHID GRACEFULL
FLOWERING TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html
23.
கிரேப்
மிர்ட்டில் நீண்ட பூங்கொத்து மரம் CRAPE MYRTLE
GLAMOROUS FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
24.
மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE -
NICE LOOKING TREE – Date of Posting; 16.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/mexican-cycamore-tree.html
25.
ஜோஷுவா அமெரிக்க
பூர்வகுடிகள் மரம் - JOSHUVA TREE OF AMERICAN NATIVES –
Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html
26.
பப்பாளி உடல்
எடை குறைப்பு மரம் - PAPAYA BODY
WEIGHT REDUCING TREE –
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html
27.
கார்டியா - மரச்சாமான்
மரம்- CORDIA NICE WOOD WORK TREE–
Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html
28.
டாக்வுட் ட்ரீ -
மலேரியாவை குணப்படுத்தும் மரம் - DOG
WOOD ANTI MALARIA TREE –
Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html
29.
சிவப்பு மேப்பிள்
மலிவான மரவாடி மரம் - RED MAPLE
CHEAP TIMBER TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html
No comments:
Post a Comment