Monday, January 20, 2020

அபூர்வமான அழகு மூலிகைமரம் சுளந்தம் - BEAUTIFUL HERBAL TREE - TORCH WOOD TREE



ORNAMENTAL TREES OF INDIA

அழகான இந்திய மரங்கள்



சுளந்தம் 

மரம்


TORCH WOOD 

TREE





IXORA

PAVETTA


பூங்கொத்தில் இருக்கும் பூக்கள் அனைத்து ஒரே மட்டத்தில் இருக்கும்  (CORYMBS) யாரோ மட்டப்பகை வைத்து சரி செய்த மாதிரி இருக்கும்.  தூரத்தில் இருந்து பார்த்தால் தீப்பந்தம் மாதிரியே இருக்கும்.  அனால்தான் இதனை ஆங்கிலத்தில் டார்ச்வுட் ட்ரீ என்கிறார்கள்.


சுளுந்து மரத்தின் பட்டைத் கஷாயம்ரத்தசோகையை குணப்படுத்தும்: பொதுவான உடல் பலவீனத்தைப் போக்கும்:

குழந்தைகளுக்கு வரும் நோய்களில் முக்கியமானதுகக்குவான் இருமல்.  இது வந்தால் அவ்வளவு சீக்கிரம் போகாது.  மருந்து வாங்கிக் குடுத்தேன்.  போகலை என்று சொல்லுவார்கள்.  அவர்களுக்கு இந்த சுளுந்து கைகண்ட மருந்து.

வீடுகட்ட தொடங்கும் நாளில் ஒரு பூஜை நடத்தி அதனை ஆரம்பம் செய்வார்கள்அந்த நாளில் இந்த சுளந்து மரத்தின் ஒரு துண்டினை கொண்டு வந்துஇந்த பூஜையில் வைத்து வணங்கும் பழக்கம் இருந்து வந்தது.  குறிப்பாக கர்நாடக மாநிலத்தில்சில பகுதிகளில் இன்னும் கூட இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.


தாவரவியல் பெயர்: இத்கசாரா பவிட்டா (IXORA PAVETTA)தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)பொதுவான பெயர்கள்: டார்ச்வுட் ட்ரீ(TORCHWOOD TREE)தாயகம்: தெற்கு ஆசியா (SOUTH  ASIA)


சுளந்தம் மலைமரம் அழகு பூ மரம்  மூலிகைமரம்


பல மொழிப் பெயர்கள்:1.     தமிழ்: சுளந்தம், கோரான் (SULANTHAM, KORAN)
2.     கன்னடா: கொராவி (GORAVI)3.     மலையாளம்: சூச்சி முல்லா (SOOCHI MULLA)4.     இந்தி: ஐpல்பாய், கோட்ட கண்டல், லோக ஐங்கின், ஷால் கார் (JILPAI, KOTA KANDHAL, LOGAJANGIN, MASHAL KA JAR)5.     மராத்தி: கோரவிகா டாகி, மாகாடி, ரெய்குரா (GORAVIKA TAGI, MAKADI, RAIKURA)
6.     சமஸ்கிருதம்: நெமாலி, நெவாலி (NEMALI, NEVALI) 

சுளுந்து மரம் அழகான ஒரு மூலிகை மரம்  (A BEAUTIFUL HERBAL TREE )
சுளுந்து, இயற்கையாக ஒரு அழகுமரம்.  பல நாடுகளில் பயன்படும் மரம்.  ஆனாலும் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு உரிய அழகுமரம்.  இதை மருத்துவ மரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.  ஒரு காலத்தில் குடிசை அல்லது கூரைவீடுகள் கட்டுபவர்கள், இதனைப் பயன்படுத்தி வந்தார்கள்.  ஆக இந்த சுளுந்து மரம் ஒரு அழகு மரம், இது ஒரு மூலிகை மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்பட்ட மரம்.

ரத்த சோகையைப் போக்கும் மரம் (CURES ANEMIA)


சுளுந்து மரத்தின் பட்டைத் கஷாயம், ரத்தசோகையை குணப்படுத்தும்: பொதுவான உடல் பலவீனத்தைப் போக்கும்:

சிலருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  அதுக்குப் பல காரணங்கள் இருக்கு.  முக்கியமாக தண்ணீர் சரியா குடிக்கலன்னா சிறுநீர் மஞ்சளா போகும்.  உடல் சூடாயிட்டா சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  அவர்களுக்கு இந்த சுளுந்து மரப் பழங்களை மருந்தாகக் கொடுக்கலாம்.  இதன் வேர்களில் கஷாயம் தயாரித்து, அதையும் மருந்தாகக் கொடுக்கலாம்.

கக்குவான் இருமலைப் போக்கும் (WHOOPING COUGH)


குழந்தைகளுக்கு வரும் நோய்களில் முக்கியமானது, கக்குவான் இருமல்.  இது வந்தால் அவ்வளவு சீக்கிரம் போகாது.  மருந்து வாங்கிக் குடுத்தேன்.  போகலை என்று சொல்லுவார்கள்.  அவர்களுக்கு இந்த சுளுந்து கைகண்ட மருந்து.  அதற்கு, இதன் பூக்களை இடித்து சாறெடுத்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் காலம் காலமாக கிராம மக்களிடையே உள்ளது.

இது புனிதமான மரமும் கூட (SACRED TREE)


குடிசை வீடு அல்லது கூரை வீடு கட்டுபவர்கள், கடைகால் போடும் நாளில் இதனை வணங்கி வழிபட்டு வேலையைத் தொடங்குகிறார்கள்.  வீடுகட்ட தொடங்கும் நாளில் ஒரு பூஜை நடத்தி அதனை ஆரம்பம் செய்வார்கள், அந்த நாளில் இந்த சுளந்து மரத்தின் ஒரு துண்டினை கொண்டு வந்து, இந்த பூஜையில் வைத்து வணங்கும் பழக்கம் இருந்து வந்தது.  குறிப்பாக கர்நாடக மாநிலத்தில், சில பகுதிகளில் இன்னும் கூட இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.  ஆனால் நவீன கட்டுமானத் தொழில் நுட்பங்கள் நுழைந்த பின்னால் இந்த வழக்கங்கள் அருகிவிட்டன.  மரங்கள் அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் வளரும்.

குடிசை அல்லது கூரை வீடுகள் கட்டும் மண்சுவர் வைத்துக் கட்டுவார்கள்.  இந்த மண் சுவற்றின் ஊடாக உறுதியாக இருப்பதற்கு மரக் கொம்புகள் வைப்பது பழக்கம்.  ஆனால் அதற்கு ஒரு சில மரங்களைத்தான் பயன்படுத்துவார்கள்.  அப்படி கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் இந்தப் பழக்கம் இருத்து வந்துள்ளது.  தமிழ்நாட்டில் கூட இந்தப் பழக்கம் இருந்தது.  நொச்சி, நுணா, வேம்பு, பூவரசு போன்ற மரங்களின் உறுதியான கிளைகளைக்கூட இதற்குப் பயன்படுத்துவார்கள்.

மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பூக்கும் (FLOWERING IN MARCH APRIL)


இட்லிப்பூ என்று நாம் சொல்லுவது இந்த வகைப் பூக்களைத் தான்.  இட்லி வடிவத்தில் இருக்கும்.  இது பூவல்ல, பூக்கள்.  இதனை பூங்கொத்து என்று சொல்வது தான் சரி.  இயற்கையாக தயாரித்த பூச்செண்டு என்று சொல்லலாம்.  அந்த பூங்கொத்தில் இருக்கும் பூக்கள் அனைத்து ஒரே மட்டத்தில் இருக்கும்  (CORYMBS) யாரோ மட்டப்பகை வைத்து சரி செய்த மாதிரி இருக்கும்.  தூரத்தில் இருந்து பார்த்தால் தீப்பந்தம் மாதிரியே இருக்கும்.  னால்தான் இதனை ஆங்கிலத்தில் டார்ச்வுட் ட்ரீ என்கிறார்கள்.
 
சுளந்தம் மரத்தின் தாவரவியல் பெயர் இக்சோரா பவிட்டா.  இக்சோரா என்றும் தாவரப் பிரிவைச் சேர்ந்தது.  இவை எல்லாமும் ரூபியேசி என்றும் தாவரக் குடும்பத்திற்குள் அடக்கம்.  இந்த இக்சோரா பிரிவில் ஏறத்தாழ 562 இனங்கள்  (SPECIES) உள்ளன.  வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் இவை அனைத்தும் அழகுமரங்களாக  செடிகளாக பரவியுள்ள.  பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதழ்கள் பின்புறம் வளைந்திருக்கும்.

பழங்கள்  (FRUITS)


மார்ச் ஏப்ரல் மாதங்களில் பூத்தாலும், ஆண்டு முழுவதும் காய்த்து பழங்களாகும். பழுத்தப் பழங்கள் அடர்த்தியான ஊதா நிறத்தில் இருக்கும்.

மலைப்பகுதி மரம்  (COMMON TREES IN HILLOCKS)


மலைப் பகுதிகளில் சாதாரணமாகக் தென்படும் மரம்.  இலையுதிர்க் காடுகளில் நிரம்ப உள்ளன.  ஆனால் இது பசுமைமாறா மரம்.  இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய; நாடுகளில் இந்த மரங்கள் பரவலாக வளர்ந்திருக்கின்றன.

இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியுள்ள மரம் (DISTRIBUTION IN INDIA)
இந்தியாவில் தென் மாநிலங்கள், மற்றும் மத்திய மாநிலங்களிலும் இந்த மரங்கள் பரவியுள்ளன.  அவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, சத்தீஷ்கர், ஒரிசா, பீஹார், மற்றும் வெஸ்ட் பெங்கால்  மலைகளில் இருக்கும் மரங்களின் மேல் நாம் கவனம் வைந்தால், அழகு மரமாக, மருந்து மரமாக நரங்களில் அறிமுகம் செய்யலாம்.

REFERENCES:1.      WWW.PICHANDIKULA.HYRBARIUM.ORG / IXORA PAVETTA.
2.      WWW.FLOWERS OF INDIA.NET/ IXORA PAVETTATORCH WOOD TREE.
3.      WWW.INDIABIODNESITY.ORG/IXORA PAVETTA
 

         




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...