நம் வயதில்
எத்தனை வயதை
குறைக்கும்
காற்று
மாசு ?
AIR POLLUTIONWILL REDUCE YOURLIFE TIME
இன்று ஒருகுறுஞ்செய்தி
NEWSTODAY
காற்று மாசு
பற்றி நிறைய பேசப்படுகிறது. பத்திரிகையில் நிறைய செய்திகள் வருகின்றன. குறிப்பாக
டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு பற்றி நிறைய நிறைய செய்திகள் வந்துள்ளன. காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
டெல்லி உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இப்படிப்பட்ட காற்று மாசுக்கு நாள்
மக்களின் வாழ்நாள் காலத்தில் 17 ஆண்டுகள் குறையும் என்று சொல்கிறார்கள். 20 நாட்களாக தொடர்ந்து
காற்றின் தரம் வெகுவாக குறைந்திருந்தது.
இது உலக சுகாதார
நிறுவனத்தின் அனுமதித்த அளவைவிட காற்றின்மாசு 25 மடங்கு அதிகம் என்று பத்திரிகை செய்தி வெளியிட்டது 2016 ஆம் ஆண்டு
சிகாகோவில் செய்த ஆய்வில் புது டெல்லி வாழ் மக்களின் வாழ்வில் 10 ஆண்டும் பெல்ஜியத்தில் ஆறு ஆண்டுகள் லாஸ் ஏஞ்சல்சில் வசிப்பவர்கள்
ஒரு ஆண்டும் வாழ்நாள் குறையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
உலக அளவில்
இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு காரணம் அது என்னவென்று ஒரு ஆய்வு செய்தார்கள் அதில்
ஐந்தாவதாக இருப்பது காற்று மாசு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். காற்று மாசுக்கு மூன்று காரணங்கள்
சொல்லப்படுகின்றன. அவை ஒன்று மின் நிலையங்களின் கழிவு, இரண்டாவது வாகனப்புகை மூன்றாவது எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் என்று சொல்லுகிறார்கள். இந்த ஆய்வு வட இந்தியாவில் செய்யப்பட்டது.
செடிகளை அல்லது
மரங்களை வளர்ப்பதன் மூலமாக காற்று மாசுவை எப்படி கட்டுப்படுத்தும் என்று பார்க்கலாம்.
முக்கியமாக அவை ஒலி மாசுவை குறைக்கும். இரண்டாவது சுற்றுச்சூழலில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும். மூன்றாவது
காற்றில் நறுமணம் சேர்க்க்கும். நான்காவது காற்றில் இருக்கும் ஆவியாகும் ரசயனங்கள் என்று
சொல்லப்படும் பென்சீன் ஃபார்மால்டிஹைடு போன்றவற்றை சுற்றுச்சூழலிலிருந்து அவற்றை நீக்கும்.
இவற்றை சுவாசிப்பதால் சுவாசம்
சம்பந்தமான நோய்கள், கேன்சர் கட்டிகள், ஹார்மோன் குறைவு
சம்மந்தமான நோய்கள், இனப்பெருக்க சக்தியை மேம்படுத்துதல், மேலும் உயிரிழப்பு ஏற்படும் பல நோய்களை செடி கொடிகள்
கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment