ஆடாதோடா -ஒரு முழுமையான மூலிகை மரம்
ADADHODA -
A 100 PERCENT
HERBAL TREE
MALABAR NUT TREE
JUSTICIA ADATHODA
A HERBAL
TREE OF ASIA
ஆடாதோடா கஷாயத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், ரத்தக் கொதிப்பு, எலும்புருக்கி நோய், இருமல், காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
ஆடாதோடா இலைகளை நன்கு அரைத்து, அந்த இலைச்சாந்தினைப் பூசினால், மூட்டு வீக்கம், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
வாசிசின் மற்றும் வாசிசினால் (VASICINE & VASICINOL) ஆகிய தாவர ரசாயனங்கள் இதில் இருப்பதால் சக்கரை நோயைக் கட்டுப்படுத்த இது உதவும்.
தாவரவியல் பெயர்: ஐஸ்டீயா ஆடாதோடா (JUSTICIA ADATHODA)தாவரக் குடும்பத்தின் பெயர்: அகாந்தேசி (ACANTHACEAE)தாயகம்: ஆசியாபொதுப் பெயர்கள்: மலபார் நட் ட்ரி, அடுல்சா (MALABAR NUT TREE, ADULSA)
பலமொழப் பெயர்கள்.
1.தமிழ்:
ஆடாதோடா (ADATHODA)
2.கன்னடா:
ஆடுசோகா (ADUSOGA)3.தெலுங்கு:
அடம்காபு, அடம்பகா, அட்டசரம் (ADAMKABU, ADAMPAKA, ADDASARAM)4.மராத்தி:
அடுல்சா, அடுசா (ADULSA, ADUSA)5.ஒரியா:
பசங்கா
(PASANGA)6.பெங்காலி:
அடுல்சா, பஷாக், வசோக் (ADULSA, BASHAK, VASOK)7.குஐராத்தி:
அரதூசி, அடுல்சோ, ஆடுரஸ்பி,
பன்சா (ARADUSI,
ADULSO, ADURASPEE, BANSA)8.மலையாளம்:
ஆடலோடகம் (ADALODAKAM)9.இந்தி:
அசோசா, அருஷா, ரூஸ், பன்ஸ் (ADOSA, ARUSHA, RUS, BANS)
ஆடாதோடா, நொச்சி, நுணா, பூவரசு அத்தோடு ஒரு
முருங்கை - இவை ஐந்தும் என்னுடைய சிறுவயது விளையாட்டு இடங்கள். தாழப்
படர்ந்திருக்கும் கிளைகளில் உட்கார்ந்து விளையாட
எனக்குப் பிடிக்கும். நான் பள்ளிக்கூடம் போன சமயங்களில் அதே
கிளைகளில் சில சமயம் கள்குருவிகள், சில சமயம் ராமனாத்தி என்னும் மைனாவும் உட்கார்ந்து சப்தமாக பேசிக்
கொண்டிருக்கும். அவை இல்லாத சமயங்களில் அணில்கள்
ஒடிப்பிடித்து ஒரியாடிக் கொண்டிருக்கும்.
“கொஞ்சம் ஆடாதோடா இலையும் நொச்சி
இலையும் பறிச்சிக் குடுக்கறியா… ரெண்டையும் போட்டு வெந்நீர் வச்சிக் குளிச்சாத்தா ஒடம்பு வலிபோகும்…” என்று பாட்டி மார்கள்
யாராவது வந்து கேட்பார்கள்.
சிலர்
நுணா இலை கேட்பார்கள் பையன்கள் பூவரசம் பூ கேட்பார்கள். இவர்களுக்கு இலைகளும், பூக்களும் பறித்துக்
கொடுப்பது, எனது ஞாயிற்றுக் கிழமை வேலைகளில் ஒன்று. ஆடாதோடாவும், நொச்சியும் போட்டு
வெந்நீர் வைத்து ஆவி பறக்கக் குளித்தால் எப்படிப்பட்ட ஐலதோஷகும் பறந்து போகும். அந்த நாளில் ஆடாதோடாதான் அமிர்தாஞ்சன். நொச்சி தான் விக்ஸ்வேபரப். அந்த ஆடாதோடா – நொச்சி வெந்நீரில், இரண்டுவாசமும் போட்டி
போட்டபடி வீசும்.
பூமாலைகளின் ஊடா ஆடாதோவின் அழகான இலைகள் (ADATHODA LEAVES IN GARLANDS)
இதன்
இலைகள் “பச்சைப்பசேல்” என இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். இலையின் மூக்கு கூராக இருக்கும். கிராமங்களில் அல்லது சிறிய நகரங்களில் கூட
பூவிற்கும் பெண்கள், பூக்கள் வாடாமல் இருக்க அத்துடன் ஆடாதோடா இலைகளை பறித்து
கூடைக்குள் போட்டு வைத்திருப்பார்கள்.
பூக்கள் வாடாமல் அப்படியே புதுசாய் இருக்கும்.
கதம்ப மாலைகள் கட்டும் பூக்காரப் பெண்கள், பூக்களின் ஊடாக
ஆடாதோடா இலைகளை துண்டு துண்டாகக் கிள்ளி வைத்துக் கட்டுவார்கள்.
இதனால் கதம்ப மாலைகளில் வைக்கும் பூக்கள் பளிச் சென்று
இருக்கும் அநேகமாய் வேறு இலைகளை வைத்துக் கட்டுவதில்லை என்றே நினைக்கிறேன்.
ஆடாதோடா'வின்
தாவர ரசாயனங்கள்
( PLENTY OF PHYTOCHEMICALS
IN ADADHODA)
ஆல்கலாய்ட்ஸ், டேனின்ஸ், சப்போனின்ஸ், பினாலிக்ஸ் மற்றும்
பிளேவனாய்ட்ஸ், வாசிலின்,
குனாசோலின் (ALKALOIDS, TANNINS, SAPONINS, PHENOLICS &
FLAVANOIDS, VASICINE & QUINAZOLINE)
ஆகியவை இவற்றில் முக்கியமானவை என்பவை, வாசிசினி மற்றும் குனாசோலின் என்ற
ஆல்கலாய்டுகள். இவை எல்லாம் இருந்தால்
நிறைய நோய்களைக் கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகை என்று அர்த்தம்.
ஆடாதோடா எண்ணற்ற நோய்களைக் கட்டுப்படுத்தும்? (ADATHODA CAN CONTROL SEVERAL DISEASES )
ரத்தக் கொதிப்பு (ADATODA FOR BLOOD PRESSURE)
1.ஆடாதோடா கஷாயத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், ரத்தக் கொதிப்பு, எலும்புருக்கி நோய்,
இருமல், காய்ச்சல் ஆகியவை
குணமாகும்.
2.இந்த
கஷாயத்துடன், அதிமதுரம்,
திப்பிலி, மற்றும் தாளிசப்பத்திரி சேர்த்து சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும்
நாள்பட்ட இருமலை போக்கும்.
மூட்டுவலி (ADATODA FOR RHUMATISM)
3.ஆடாதோடா
இலைகளை நன்கு அரைத்து, அந்த இலைச்சாந்தினைப் பூசினால், மூட்டு வீக்கம், மூட்டுவலி ஆகியவை
குணமாகும்.
4.ஆடாதோடாவின் இலை, வேர், பட்டை, பூக்கள் என அனைத்து
பாகங்களுடன் வேறு வேறு மருந்துக்கான சரக்குகள் சேர்ந்து பலவித மருந்துகள்
தயாரிக்கிறார்கள்.
எல்லா மருத்துவ முறைகளிலும் ஆடாதொடா (ADATODA IN ALL MEDICAL SYSTEMS)
5.சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருந்துவம்
இப்படி பலவகையான மருத்துவ முறைகளிலும் ஆடாதோடையை பயன்படுத்துகிறார்கள்.
6.இதன் இலைகளை சிகரெட்போல சுருட்டி புகைப்பதன் மூலம்
ஆஸ்துமா மற்றும் மூச்சுவிடுவதற்கு சிரமம் இருந்தாலும் அவற்றைக் குணப்படுத்தும்.
7.எலும்பு முறிவை சரி செய்வதற்குக் கூட இதனைப் பயன்படுத்தலாம்.
8.வாசிசின் மற்றும் வாசிசினால் (VASICINE & VASICINOL) ஆகிய தாவர ரசாயனங்கள் இதில் இருப்பதால் சக்கரை நோயைக்
கட்டுப்படுத்த இது உதவும்.
9.ஆடாதேடா இலைச்சாற்றினை பயிர்களைத் தாக்கும் பூசன
நோய்களையும் மற்றும்; பூச்சிகளையும் கட்டுப்படுத்த உதவும்.
விதைகளைப் பயன்படுத்தலாம் (USE ADATODA SEEDS TO PROPAGATE)
புதிய
கன்றுகளை உருவாக்க இதன் விதைகளைப் பயன்படுத்தலாம்.
பரவியிருக்கும்
இடங்கள் (DISTRIBUTION)
அசாம்.
மத்தியப்பிரதேசம், ஒரிசா, உத்தாப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில்
ஆடாதோடா பரவியுள்ளது. அசாம் மாநிலத்தில்
அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது. இந்த
மூலிகைச் செடி.
இருமல், ஐலதோஷத்திற்கான சிறப்பு மூலிகை மரம் (ADATODA BEST MEDICINE FOR COMMON COLD)
இந்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பாரம்பரிய சீன
மருத்துவம், அனைத்திலும் இதனை சிறப்பான மூலிகை மரமாக
உபயோகப்படுத்துகிறார்கள். அந்த விதத்தில்
பார்த்தால் ஆடாதோடை ஒரு இருமல் தடுப்பு மரம்.
No comments:
Post a Comment