இன்று ஒரு
குறுஞ்செய்தி
NEWS TODAY
ஒரு
வீட்டுக்கூரை
மூலம் 37
குடும்பத்திற்கு
தண்ணீர் சேமிக்கலாம்.
வீட்டின் கூரையில் எவ்வளவு மழைநீரை
அறுவடை செய்யலாம். இதை சுலபமாக கணக்கிடலாம் கீழ்கண்ட பார்முலாவை பயன்படுத்தி. உங்கள்
வீட்டுக் கூரையில் மூலம் கிடைக்கும் மழை நீரின் அளவைக் கணக்கிடலாம்.
வீட்டுக் கூரையின் நீளம் எவ்வளவு ? அகலம் எவ்வளவு
? பரப்பளவு எவ்வளவு ? எல்லா அளவுகளையும் மீட்டரில் கணக்கிட வேண்டும்.
உதாரணமாக 400 சதுர மீட்டர் அளவுள்ள ஒரு வீட்டுக்
கூரையின் மூலம் எவ்வளவு மழைநீரை அறுவடை
செய்யலாம்? இதனை எப்படி கண்டுபிடிக்கலாம் ? கூரையின் பரப்பளவை
அந்த பகுதி ஆண்டு சராசரி மழை அளவால் பெருக்கவேண்டும்.
கூரையில் பரப்பு –
400 சதுர மீட்டர்
x 0.950 மீட்டர் (தமிழ் நாட்டின் ஆண்டு சராசரி மழை) x 1000 லிட்டர் = 3,80,0000 லிட்டர்
நீர்.
400 சதுர மீட்டர்
கூரை உடைய வீட்டில் மூலம் ஒரு ஆண்டில் 3 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
இந்த முறையில்
உங்கள் வீட்டின் கூரை மூலம் எவ்வளவு தண்ணீரை அறுவடை செய்யலாம் என நீங்களே கணக்கிடலாம்.
ஒரு கன மீட்டர்
கொள்ளவு கொண்ட ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு பள்ளத்தில் 1000 லிட்டர் தண்ணீர் பிடிக்கும்.
அதனால்தான் 1000 த்தால் பெருக்க வேண்டும் என்பது.
குடிக்க சமைக்க
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 7 லிட்டர் போதுமானது என ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதன்படி நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஓர் ஆண்டின் நீர்த்தேவை 10 ஆயிரத்து 220 லிட்டர் மட்டுமே.
ஆக 400 சதுரமீட்டர்
கூரை பரப்பில் அறுவடை செய்யும் தண்ணீரைக்கொண்டு
37
குடும்பங்களின் ஒரு ஆண்டு தண்ணீர் தேவையை சமாளிக்கலாம்.
88888888888888888
No comments:
Post a Comment