பொகைன்வில்லா -
அலங்கார மரம்
BOUGAINVILLA -
DECORATIVE TREE
BOUGAINVILLEA GLABRA
TREE OF
SOUTH AMERICA
தே.
ஞானசூரிய பகவான்,
போன்:
+91-8526195370
EMAIL:
gsbahavan@gmail.com
புகைப்படம்:
நன்றி கூகிள் வலைத்தளம்.
தாவரவியல்
பெயர்: பொகைன் வில்லியா கிளாப்ரா (BOUGAINVILLEA GLABRA)தாவரக்
குடும்பம் பொயர்: நிக்டே ஐpனேசி (NYCTAGINA
CEAE)
தாயகம்:
தென் அமெரிக்கா (SOUTH AMERICA)
பொதுப்
பெயர்கள்: பொகைன் வில்லா, வெஸ்ஸர் பொகைன்
வில்லா
(BOUGAINVILLA,
VESSAR BOUGAINVILLA)
பல
மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)
1. தமிழ்: காகிதப்பூ (KAGITHAPOO)2. இந்தி: பூகன்பெல் (BOOGAN
BELL)3. மணிப்புரி: சேரி (CHERRY)4. பெங்காலி: பெகன்பிலாஸ் (BEGAN
BILAS)5. மராத்தி: பூகன்வெல் (BOOGAN
VEL)6. கொங்கணி: பொகைன்வில்லா (BOUGAINVILLA7. தெலுங்கு: காகிதலப் புவ்வு (KAGITHALA
PUVVU)
தென்அமெரிக்காவில் பிறந்து, அழகுமரமாக அகிலம்
முழுவதும் அறிமுகமான பொகைன்வில்லா, மூலிகை மரமாக அவதாரம் எடுத்தது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஒரு
பிரான்சு நாட்டுக்காரர்
அறிமுகம்
செய்த தாவரம்
(A FRENCH SAILOR INTRODUCED
THE
PLANT)
ஒரு
பிரான்சு தேசத்தின் மாலுமியின் பெயரைத்தான் இதற்கு வைத்திருக்கிறார்கள். அவர் பெயர் லூயிஸ் டி பொகைன் வில்லா (LOUIS
D BOUGAIN VILLEA).
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நாள் பிரேசில் நாட்டின்
வழியாக பயணம் செய்தார், பொகைன்வில்லா. அங்குதான் அவர் முதன்முதலாக இந்த மரத்தை / கொடியைப் பார்த்தார். அது அவரை வெகுவாகக் கவர்ந்தது. அவர்தான் அதனை
பிரேசிலிலிருந்து வெளி உலகிற்குப்
பரவ காரணமாக இருந்தது. அதனால் நாம் “பொகைன்வில்லா” என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம் , உலகம் முழுக்க.
இது
மரமும் இல்லை
செடியும் இல்லை(NEITHER A PLANT NOR A VINE)
இது மரமும் இல்லை செடியும் இல்லை. இது ஒரு இரண்டும் கெட்டான் செடி கொடி (SEMI CLIMBER). இதன்
பூக்கள்தான் கவர்ச்சிகரமான அம்சம்.
பூக்கள் காகிதத்தில் செய்தது போல இருக்கும். இதன் கிளைகளில் சிம்புகளில் முட்கள் இருக்கும். இந்த மரங்கள் சராசரியாக 10 முதல் 12 அடி உயரம் வளரும்.
சில
வகைகள் 30 அடி கூட வளரும்.
இதன் பூக்கள் வழக்கமாக கொத்துக்களாக இருக்கும். பெரும்பாலான காகிதப் பூக்கள் அடர்த்தியான ரோஐhப்பூ நிறத்தில் இருக்கும். ஆனால் பூக்கள் பல நிறங்களில் இருக்கும். மஞ்சள், வெள்ளை என பல நிறங்களிலும் இருக்கும். வண்ணமயமான இருப்பவை இதன் பூக்களின் இதழ்கள்
அல்ல. அவை அந்த பூக்களின் புற இதழ்கள்
என்னும் புல்லி வட்டம். இவை பல வடிவங்களில் பல அளவுகளில் இருக்கும், இதன் இலைகள் அடர்த்தியான பச்சை நிறத்தில்
இருக்கும்.
பொகைன்
வில்லாவில்
18 தாவரவகைகள் உள்ளன(BOUGAINVILLA GENUS)
சுமார்
18 வகையான இனங்கள் இருக்கின்றன. அவை எல்லாமே, கொடிகள், புதர்கள் மற்றும் மரங்களாக உள்ளன. பொகைன்வில்லா பல நாடுகளில் பரவி உள்ளது. அங்கெல்லாம் என்ன பெயர்களில் அழைக்கப்படுகின்றன எனப்
பார்க்கலாம்.
1. இந்தோனேசியா – போகாக் பங்கா கெர்டாஸ் (POKOK BUNGA KERTAS)2. ஸ்பெயின்: புகன் வில்லா (BUGAN VILLA)3. பாகிஸ்தான்: போகன்வில்லி (BOUGEN
VILLES)4. பிரேசில்: பிரைமாவேரா (PRIMAVERA)5. ஜெர்மனி: டிரிப்லெட் பிளவர் (TRIPLET FLOWER)
வளரும்
நாடுகளின்மக்கள்
மூலிகைகளை நம்பி
இருக்கிறார்கள் (DEVELOPING
COUNTRIES
RELIES
ON TRADITIONAL MEDICINES)
வளரும்
நாடுகளில் இன்றும் கூட 88 மூ மக்கள், தங்கள் உடல் உபாதைகளுக்கு மருந்தாக மூலிகைகளைத்தான்
பயன்படுத்தி வருகிறார்கள், என்று உலக சுகாதார
நிறுவனம் (WORLD HEALTH ORGANIZATION) அறிவித்துள்ளது.
Pபொகைன் வில்லா” போன்ற மூலிகைகளில் அன்ற அரக்கபி டெண்லு(ANTI OXDANT PROPERTIES) பண்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி
இவற்றில் உள்ளன. முக்கிய மாக, இப்போது அவசிய மற்றும் அவசறத் தேவை. இவைப்பற்றிய மெய்வாசன ஆய்வுகள் நிறைய பேரின்
வேண்டுகோளுக்கு ஏற்ப, தமிழ்நாட்டின் மொத்த
வனப்பரப்பு ஏவ்வளவு இருக்கிறது என்ற தகவலை கீழே தந்துள்ளேன். அதுமட்டுமல்ல ஒரு நபர் எவ்வளவு மரம் நட்டால்
வாழ்நாள் முழுக்க சுவாசிக்கலாம் என்ற புள்ளி விவரமும் தந்துள்ளேன்.
தமிழ்
நாட்டின்
வனப்பரப்பு:
(FOREST COVER
IN
TAMILNADU)
தமிழ்
நாட்டின் மொத்த வனப்பரப்பு 24.16 மூ 1988 ம் ஆண்டு வனக் கொள்கையின்படி மொத்த நிலப்பரப்பில் 33 மூ
வனங்கள் இருக்க வேண்டும். ஆனால்
இந்த 24.16மூ என்பது
முள்ளும் முரண்டுமாக மரங்களே இல்லாத இடங்களும், புதர்க்காடுகளும் சேர்ந்ததுதான் என்றும்
சொல்லுகிறார்கள். எது எப்படியோ இன்னும்
நாம் பசுமையாக மாற்றவேண்டிய பரப்பு நிறம்ப உள்ளது என்பதை நாம் புரிந்து கொண்டு
நாம் செயல்பட வேண்டும். நமது வாழ்நாளில்
சுவாசிக்க மட்டுமே ஒரு நபர் 6 முதல் 8 மரங்கள் நட வேண்டும். அதையாவது நாம் ஒவ்வொருவரும் செய்ய முன்வர
வேண்டும். இனிமேலாவது நாம் “ஒசி” யில் சுவாசிப்பதற்கு ஒரு முடி வெடுத்து, நம் சொந்த மரங்களின் உதவியுடன் சுவாசிக்கத் தொடங்க
வேண்டும்.
மருத்துவ
குணங்களுக்கு
அடிப்படையான
தாவர
ரசாயனங்கள் (PRESENCE
OF PHYTO
CHEMICALS
IN BOUGAINVILLEA)
ஒரு
தாவரத்தில் இருக்கும் தாவர ரசாயனங்கள்தான் அதனுடைய மருத்துவ குணங்களுக்கு
அடிப்படையானவை. நிpறைய தாவர ரசாயனங்கள் இருந்தால் அது அதிக எண்ணிக்கையான நோய்களை கட்டுப்படுத்தும் என்று அர்த்தம். இப்போது
பொகைள்வில்லாவில் எத்தனை தாவர ரசாயனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
அவை
அலிபேட்டிக் ஹைட்ரோகார்பன்கள், பேட்டிஆசிட்கள், பேட்டி ஆல்கஹால்கள், வாலட்டைல் காம்பவுண்டுகள், பினாலிக் காம்பவுண்டுகள், பெல்டோகைனாய்டுகள், பிளேவனாய்டுகள், பைட்டோஸ்டீரால்ஸகள், டெர்பீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் பீட்டாலெய்ன்கள், அது பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
போகைன்வில்லா
அழகு மரம் மட்டுமல்ல
நோய் போக்கும்
மூலிகையும் கூட
(BOUGAINVILLA
A HERB TOO )
பாரம்பரிய
மருத்துவ முறைகளில் பலநூறு ஆண்டுகளாக பல நோய்களைக் கட்டுப்படுத்த போகைன்வில்லாவின், இலைகள், பூக்கள், பட்டைகள், தண்டுகள், வேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி
வருகிறார்கள். போகைன் வில்லாவினால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள், ஆஸ்துமா, மூச்சுத் குழல் அழற்சி, வயிற்றுக்கடுப்பு, முகத்தில் தோன்றும் முகப்பருக்கள், நுரையீரல் வலி, புளுகாய்ச்சல், மற்றும் இருமல்.
வெளிநாட்டு மரம் என்று தெரியாமல் அழகுக்காக தோட்டத்தில், வேலிகளில், வீட்டுகளின் முகப்பில் பின்புலத்தில், அறுவலக.
வளாகங்களில், தொட்டிகளில், பெட்டிகளில், சட்டிகளில், பொகைன்வில்லா வைத்திருப்பவர்கள், “தான் மூலிகை வளர்க்கிறேன்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
REFERENCES: