Saturday, December 14, 2019

WORLD ANNUAL AVERAGE RAINFALL IS LESS THAN INDIA - உலக நாடுகளின் மழை இந்தியாவைவிட குறைவு



















உலக நாடுகளின் 
 மழை 
இந்தியாவைவிட குறைவு 





பாடம் 3



(மக்கள் தொலைக்காட்சியில் 

மலரும் பூமியில்  

வேளாண்மைத் தொடராக 

ஒளிபரப்பானது) 


(A TV SERIAL)

பொதுத் தலைப்பு

வரப்புயர நீர் உயரும்
















மழை அளவை பொருத்தவரை 
இந்தியா பெரும்புள்ளிதான் 
என்று புள்ளிவிவரங்கள் 
நமக்கு சொல்லுகின்றன.


ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழை கூட 
இஸ்ரேலின் மழையை விட அதிகம்.
மழையை பொருத்தவரை 29 மாநிலங்களை 
கொண்ட இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் 
24 வது இடம். பாண்டிச்சேரிக்கும் சம அந்தஸ்து.

நமக்கும் கீழே அதிர்ஷ்டக் கட்டையாக 
ஐந்து மாநிலங்கள் அணிவகுத்து நிற்கின்றன 
(மழையின் அடிப்படையில்).

ஆனால் இந்திய மழை புள்ளிவிவரப்படி  
தமழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் 
கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 
998 மில்லி மீட்டர்.
இந்தியாவின் தலைநகரம் டெல்லியுடன் 
ஹரியானா சண்டிகர் ஆகியவற்றில் கிடைக்கும் 
ஆண்டு சராசரி மழை 617 மல்லி மீட்டர்.

ஐந்து நதிகள் பாய்ந்து வளம் சுரக்கும் 
மாநிலம் பஞசாப். இதன் ஆண்டு சராசரி மழை 
ஆச்சரியப்படும் அளவு. டெல்லியைவிட கொஞ்சம் ஜாஸ்தி. 
வெறும் 649 மில்லி மீட்டர்தான்.

மீதமுள்ள அனைத்து 23 மாநிலங்களிலும் 
கிடைக்கும் ஆண்டு சராசரி  மழை 
1000 மில்லி மீட்டருக்கும் மேல்.

லட்சத்தீவுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் 
கேரள மாநிலம்தான் அதிகபட்ச ஆண்டு 
சராசரி மழை பெறுகிறது. மழை அளவு 
3005 மில்லி மீட்டர்.

கர்நாடகாவின் வடக்கு உட்பகுதியின் ஆண்டு 
சராசரிமழை 3456 மில்லி மீட்டர் பெற்றாலும், 
இதர இரண்டு பகுதிகளிலும் 731 மில்லி மீட்டரும் 
1,126. மில்லி மீட்டரும் கிடைக்கின்றன.


தென் மாநிலங்கள் என்று பார்த்தால், 
கடைசியிலிருந்து நாம் இரண்டாம் இடத்திலும் 
நமக்குத்துணையாக பாண்டிச்சேரியும் உள்ளது.

961 மில்லி மீட்டர் மழை பெறும் தெலுங்கானா 
நம்மைவிட குறைவான மழை பெறும் தென் மாநிலம்.

அப்படிப் பார்த்தால் எங்களைவிட 
ராஜஸ்தானில் மழைஅளவு குறைவு என்று 
தெலுங்கானா சந்தோஷப்படலாம்.

உலகத்திலேயே   விவசாயத்தில் 
அதிக வருமானம் பெறும் இஸ்ரேல் நாட்டின் 
ஆண்டு சராசரி மழைஅளவை விட, 
நாங்கள் அதிக மழை பெறுகிறோம் என்று 
ராஜஸ்தான்காரர்கள் சந்தோஷப் படலாம்.

இந்த விஷயத்தில் நாம் எல்லோருமே சந்தோஷப்படலாம்.

மழை அளவை பொருத்தவரை இந்தியா பெரும்புள்ளிதான் என்று இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லுகின்றன.

அது இல்லாதபோது நாம் தூற்றிக் கொண்டிருப்பதால் நம்மால் மறக்கமுடியாத பழமொழி காற்றுள்ள போதே தூற்றிக் கொள். ஆனால் மழை நமக்குச் சொல்லும் புது மொழி  மழை வரும்போதே பிடித்துக்கொள்.

மழை பிடிக்க பாத்திரம் செய்வதும்,  
பத்திரம்  செய்வதும்தான் நமது பணி !


உலகநாடுகளின் சரசரி மழை குறைவு
உலக நாடுகளின் ஆண்டு சராசரி மழை 
வெறும் 990 மில்லி மீட்டர்.


உலகில் அதிக மழை பெரும் இடம் 
சிரபுஞ்சி அல்ல மான்சிராம்.

முட்டிக்கு மேல் டவுசர் போட்ட 
மூணாங்கிளாஸ் மாணவன் கூட 
'உலகில் அதிக மழை எங்கே பேய்கிறது" 
என்று கேட்டால் டக்கென்று சொல்வான்
'சிரபுஞ்சி" என்று. 
கொஞ்சம் வயசான பெரியவர்கள் தான்
ரஷ்யா அமெரிக்கா என்று தடுமாறுவார்கள்.

உலகின் மிக ஈரமான பகுதி என்று 
கொண்டாடும் சிரபுஞ்சி இந்தியாவில் 
வடகிழக்கு பகுதியில்மேகாலயாவின் 
ஒரு நடுத்தர நகரம்.  இன்றும் கூட 
மூக்கின்மேல் விரல்வைக்கும் 
அதிகாரப் பூர்வமான ஆண்டு 
சராசரி மழை 11444 மில்லி மீட்டர்.

மழை அறுவடை பார்க்க 
பிரேசில் போனோம்

2012—ஆம் ஆண்டு

இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் அனுபவமுள்ள 30 பேர் அடங்கிய ஒரு குழு பயிற்சிபெற பிரேசில் நாட்டிற்கு சென்றது. அந்த குழுவில் நானும் இருந்தேன். இந்திய அரசின் ஒரு அங்கமான நபார்டு வங்கி இதனை ஏற்பாடு செய்திருந்தது.

வேர்ல்ட் ரிசோர்ஸ் சென்டர்  (WORLD RESOURCE CENTRE)  என்ற பிரேஸில் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் பயிற்சியை அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.                                                                                                                                                                                      
அந்த பயிற்சி நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெறும்.


சாவ் பவுலோ (SAVPAVLO) 


சாவ் பவுலோ (SAVPAVLO)   மாநிலத்தில் 
பின்ட்டிடாஸ் (PINTIDAS)  என்ற நகரில் 
முதல் நாள் பயிற்சி நடந்தது. 
அன்று மாலை ஒரு கலந்துரையாடல் நடந்தது.

அந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில்
பிரேஸில் நாட்டின் வேல்ட்  ரிசோர்ஸ்
சென்டர்ஐ சேர்ந்த பயிற்றுநர்கள் 
நபார்டு வங்கியின் அலுவலர்கள் 
மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த
நாங்களும் பங்கு பெற்றிருந்தோம்.

இதில் முக்கால்வாசி பேர் விவசாயம்
வேளாண்மைப் பொறியியல் மற்றும் 
சமூகவியல் துறையில் பட்டதாரிகளாகவும் 
அந்தந்த துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய 
அனுபவமும் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

ஓவ்வொருவரும் அவரவர் 
கருத்துக்களை வழங்கினர். 
எனது முறை வந்தது. நான் எனது கருத்தை 
ஒரு புள்ளி விவரத்தோடு சொன்னேன். 
நான் சொன்ன புள்ளி விவரங்களை தவறு 
என்று எங்களுடன் வந்திருந்த பயிற்சியாளர் 
ஒருவர் அதனை தள்ளுபடி செய்தார்.

அது சரியானதுதான் என்று நான் 
விளக்கம் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை. 
அதைத் தொடர்ந்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. 
வேறு யாரும் அதுபற்றி எந்தக் 
கருத்தும் சொல்லவில்லை.

எனக்கும் அவருக்குமான வாக்குவாதமாக மாற 
அந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வு
அத்துடன் முடிவுக்கு வர
நாங்கள் இரவு சாப்பாட்டிற்கு சென்றோம்.
நான் என்ன புள்ளி விவரம் சொன்னேன் ?  
அவர் ஏன் மறுப்பு தெரிவித்தார் என்று 
சொல்வதற்கு முன்னால் 
இந்தப் பயிற்சியைப் பற்றி 
சில விவரங்களை உங்களுக்கு 
சொல்ல வேண்டும்.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை 
செயல்படுத்தியதில் அனுபவம் 
பெற்றவர்கள்தான் இந்த பயிற்சியில் 
இடம் பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னேன்.

பிரேஸில் நாட்டின் 

டபிள்யூ. ஆர். ஐ.’ 


இயற்கை வளங்களில் முக்கியமாக 
நிலமநீர்வனவளம்பயிர்வளம் 
கால்நடைவளம்இவற்றைப் பாதுகாத்து
பராமரித்து மேம்படுத்தி மக்களின் 
சமூக கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு
உதவுவதுதான் நீர்வடிப்பகுத் மேம்பாட்டுத் திட்டம். 
இதனை நபார்டு வங்கிஅரசு அல்லாத 
நிறுவனங்களுடன் இணைந்து 
மிக சிறப்பாக செயல்படுததி வருகிறது.     
பிரேஸில் நாட்டில்  டபிள்யூ. ஆர். ஐ.’ ன் 
உதவியுடன் இதனை சிறப்பாக செய்கிறார்கள். 
இந்த அனுபவங்களை பெறத்தான் 
நாங்கள் அங்கு சென்றோம்.

முக்கியமாக மழைநீரை அறுவடை செய்து 
பயன்படுத்துவது குறித்த பயிற்சி இது.
இந்த பயிற்சி பெற நாங்கள் சென்றது 
பிரேஸில் நாட்டின் வடகிழக்குப் பகுதி. 
இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 
மிகவும் சொற்பம். இந்தியாவில் கிடைக்கும் 
ஆண்டு சராசரிமழையில் தோராயமாக பாதி. 
இப்போது கருத்து பரிமாற்ற நிகழ்ச்சிஎப்படி 

கருத்து விவாத மேடையானது…? என்று சொல்கிறேன். 
அப்படி நான் என்னதான் சொன்னேன்…?
நான் சொன்னது இதுதான்.

பிரேஸில் நாட்டின் இந்த வடகிழக்கு 
பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 
சுமார் 600 மில்லிதான். இந்தியாவின் 
சராசரி 1250 மில்லி.


சிரபுஞ்சியின் 

ஆண்டு சராசரி மழை 


பதினோராயிரத்து 444  மில்லி மீட்டர் மழையை 
ஒரு ஆண்டில் சராசரியாகப் பெறும் 
சிரபுஞ்சி நம் நாட்டில்தான் உள்ளது. 
இவர்களைப் போல மழைநீரை 
சேமித்துப் பயன்படுத்துவதில் 
கவனம் செலுத்தினால்
தண்ணீர் பிரச்சினையே நம் நாட்டில் ஏற்படாது

சிரபுஞ்சியில் கிடைப்பதாக 
நீங்கள் சொன்ன மழை அளவு மிக அதிகம். 
தவறான புள்ளி விவரம். இதபேன்ற 
புள்ளிவிவரங்களை சரியாக சொல்ல 
வேண்டும்’ என்றார் எனக்கு எதிராகக் கொடி பிடித்தவர்.

அன்று இரவே என்னுடன் இருந்த 
சில நண்பர்களுக்கு நான் சொன்ன புள்ளிவிவரங்கள்  
சரி  என்று நிரூபித்தேன். எனக்கு உதவியது 
கூகிள்.  வலைத்தளத்திற்கு 
நாம் நன்றி சொல்ல வேண்டும். 
மாதா பிதா கூகிள் தெய்வம் என்று 
நண்பர் சொன்னது சரிதான்.

நான் சொல்ல விரும்பியது 
புள்ளிவிவரங்கள் அல்ல. 
அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு செய்தி. 
அது, ‘இந்தியாவில் நாம் பெறும்  மழை குறைவல்ல’ 
என்பதுதான்.

என் புள்ளிவிவரத்தை தள்ளுபடி செய்த நண்பரும் 
நானும் கிட்டத்தட்ட 12 நாட்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். 
ஒரு நாளும் இதுபற்றி அவரும் பேசவில்லை. 
நானும் கேட்கவில்லை.


அந்தப்பயிற்சி முடிந்து அந்த நண்பரிடம் 
கைகுலுக்கி விடைபெறும் போது 
பிரெமிள் பானுசந்திரன்  
கவிதை ஒன்று என் ஞாபகத்தில் வந்தது.

ராமச்சந்திரனா…?  என்று கேட்டேன்.
ஆம்   என்றார்.
எந்த ராமச்சந்திரன்…? என்று 
நானும் கேட்கவில்லை…..அவரும் சொல்லவில்லை

00000000000000000000

மழைக்கு 
பேயத்தான் 
தெரியும் !
பேசத்தெரியாது !


பாடம் 4



(மக்கள் தொலைக்காட்சியில் 

மலரும் பூமியில்  

வேளாண்மைத் தொடராக 

ஒளிபரப்பானது) 


(A TV SERIAL)

பொதுத் தலைப்பு

வரப்புயர நீர் உயரும்



ஒர் ஆண்டில் சராசரியாக தமிழ்நாட்டில் 
கிடைக்கும் மழை 950 மில்லி மீட்டர்.
மழைக்கு பேயத்தான் தெரியும்

'தேவைக்கு மேல் பெய்து கொண்டுதான் 
இருக்கிறேன். அதை சேமித்து வைத்துக் கொள்ள 
துப்பு இல்லை என்றால் அது யாருடைய தப்பு ?" 
மழைக்கு பேசத் தெரிந்தால் இப்படி கேட்கும். 
அதற்கு பேயத் தெரியுமே தவிர பேசத் தெரியாது.


சிரபுஞ்சியில் தண்ணீர் பஞ்சம்


உலகத்தில் அதிக மழை ஊற்றும் ஊர் 
சிரபுஞ்சி என்பது தெரிந்த சேதி. 
ஆனால் ஓர் ஆண்டில் ஆறு மாதம் 
குடம் இங்கே குடிநீர் எங்கே? என்று 
சிரபுஞ்சி தாய்மார்கள் குடத்துடன் 
குரல் கொடுப்பது தெரியாத சேதி. 
எங்க ஊர்ல அதிக மழை பேயுதுன்னு  
அஜாக்கிரதையா இருந்துட்டோம். 
எவ்வளவு பேஞ்சாலும் 
அதை சேமிக்கலன்னா 
நம்ம தண்டிக்காமல் விடாது தண்ணீர் என்று 
புரிஞ்சிகிட்டோம். 
இது எங்களுக்கு மழை 
சொல்லித் தந்த பாடம்"
 என்கிறார்கள் சிரபுஞ்சிக்காரர்கள்.

'புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவங்களில் கற்றுக்கொள்ளுவார்கள்" நாம் சிரபுஞ்சியைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்ஏற்கனவே பெரிய விலையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.


ஆறில் ஒருபங்கு ஆற்றில் ஓடும்


பெய்யக்கூடிய மொத்த மழைநீர் ஆறு பங்கு என்றால் அதில் ஒரு பங்குதான் ஆற்றில் ஓடும். ஆறு என்பது அதனால் வந்த பெயரா மீதம் உள்ள ஐந்து பங்கு நீர் பூமிக்குள் இறங்கும். அந்த ஐந்து பங்கில் நான்கு பங்கு நம் கையில் அகப்படாத நீர். அந்த நான்கு பங்கும் சேதாரம் ஆகிவிடும். கடைசி ஒரே ஒரு பங்கு மட்டுமே நிலத்தடி நீராக தங்கும். இவை எல்லாம் ஒரு ஆணியையும் நாம் பிடுங்காமலே நடக்கும் சமாச்சாரங்கள்.

நான்கு பங்கு நீர் வீணாகிறது


இதே ரீதியில் பார்த்தால் இந்தியாவில் ஓர் ஆண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 1250 மிமீ. அதில் ஆற்றின் ஓடும் நீரின் அளவு 208.3 மிமீ. 1041.7 மிமீ. நீர் பூமிக்குள் இறங்கும். 833.4 மிமீ நீர் வீணாகப் போகிறது. நிலத்தடி நீராக சேகரம் ஆவது 208.3 மிமீ. மட்டும்தான்.

மழையின் பண்புகள்


'நமக்கு கிடைக்கும் மழை அதிகம். உலக நாடுகளின் சராசரி மழை அளவைவிட அதிகம். மழை சில ஆண்டுகளில் குறைவாகப் பெய்யும். சில ஆண்டுகளில்அதிகமாகப் பெய்யும். பருவ மழை சில ஆண்டுகள் சரியான சமயத்தில் பெய்யும்.

சில ஆண்டுகள் தாமதமாகப் பெய்யும். சில ஆண்டுகள் பரவலாகப்பெய்யும். சில ஆண்டுகளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கூட பெய்துவிட்டு கம்பி நீட்டும். தேவையான சமயத்தில் பேயாதுபல சமயங்களில்;.

மழை நீரை சேமித்தால்

 தண்ணீர் பஞ்சம் வராது


சிலசமயம் உடுக்கை இழந்தவன் 
கைபோல கை நீட்டும்" இதுதான் மழையின் பண்பு. 
இதற்கு முக்கிய காரணம் பருவக்கால மாற்றம்.

அந்த மழை நீரை ஒழுங்காய் சேமித்தால் 
தண்ணீர் பஞ்சம் வராது. வரட்சிவராது. 
பயிர் இழப்பு வராது. விவசாயிகளுக்கு 
வருமான இழப்பும் வராது. கிராமத்தில் 
ரீயல் எஸ்ட்டேட்டும் வராது. 
பருவநிலை மாற்றத்தினால் 
ஏற்படும் விளைவுகளையும் 
தவிர்க்கலாம் தடுக்கலாம்.

இதை வீட்டிலும் செய்யலாம் 
பயிர் செய்யும் காட்டிலும் செய்யலாம். 
எப்படி செய்யலாம் என்பதைத்தான் 
நாம் திட்டமிட வேண்டும்.

88888888888888888888888888888888888888888








No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...