Saturday, December 14, 2019

WATER FAMINE IN CHIRAPUNJI - சிரபுஞ்சியில் தண்ணீர் பஞ்சம்




















சிரபுஞ்சியில் 

தண்ணீர் பஞ்சம் 

பாடம் 

888888888888888888


(மக்கள் தொலைக்காட்சியில் 

மலரும் பூமியில்  

வேளாண்மைத் தொடராக 

ஒளிபரப்பானது) 



(A TV SERIAL)

பொதுத் தலைப்பு

வரப்புயர நீர் உயரும்


காடு போச்சி ! தண்ணீரும் போச்சி ! 
டும் டும் டும் !  என்று சொல்லிக்கொண்டிருந்த 
சிரபுஞ்சி மக்கள் கூரைநீர் 
அறுவடை செய்வதில் குறியாய் இருக்கிறார்கள்.


புத்திசாலிகள் எப்போதும் அடுத்தவர்களின் 
அனுபவங்களின் படங்களிலிருந்தே பாடம்  
கற்றுக்கொள்ளுபவர்கள்தான் புத்திசாலிகள்.



சிரபுஞ்சியில ஒரு வாளி தண்ணிய 
பத்து ரூபா குடுத்து வாங்கறாங்க
எனக்கு ஒரு சினிமா பாட்டு 
ஞாபகத்துக்கு வருது.

கையில வாங்கினேன் பையில போடல
காசுபோன இடம் தெரியல
காதலிபாப்பா காரணம் கேப்பா
ஏதுசொல்றது புரியல

இது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களோட பாடல் வரிகள். இரும்புத்திரை என்ற படத்துக்காக எழுதின பாட்டு. இது சிரபுஞ்சிக்கு பொருத்தமான பாட்டு. சிரபுஞ்சிமக்களுக்கு  தமிழ் தெரிஞ்சிருந்தா இப்பிடி பாடுவாங்க.

மலையில பேஞ்சது மண்ணுல போகல
மழைதண்ணி  போனஇடம் தெரியல
ஊருஒலகம் உள்ளது கேட்டா
என்னன்னு சொல்றது புரியல

சிரபுஞ்சி ஒரு மலைக்கிராமம்


இந்தியாவுன் வடகிழக்கு பகுதி மாநிலம் மேகாலயா. இந்த மேகாலயா மாநிலத்தில் இருக்கும் மலைப்பகுதிக்கு பெயர் காசி மலைத்தொடர். காசி மலைத்தொடர்ல இருக்கும் ஒரு ஊருதான் சிரபுஞ்சி. ஒரு காலத்தில் காசி பழங்குடி மக்களுக்கான  நாடாக இருந்த்து. அந்த நாட்டின் தலைநகரம்தான் இந்த சிரபுஞ்சி.  இதன் பழய பெயர் சொஹ்ரா என்பது. சிரபுஞ்சி என்றால் ஆரஞ்சுவிளையும் நாடுதெ லண்ட் ஆஃப் ஆரஞ்சுஎன்று அழைத்தார்கள்.

சிரபுஞ்சி உலகம் பூராவுக்கும் தெரிஞ்ச பெயர், தெரிஞ்ச ஊர். உலகத்துல அதிகமா மழை பெய்யக்கூடிய இடம். உலகத்தின் ஈரமான பகுதி. இங்க கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11777 மில்லிமீட்டர். இதுவரை உலகின் அதிக மழைபெறும் கிராமம் என்ற  பட்டத்தை இன்னொரு கிராமம் தட்டிப்பறித்துவிட்டது. அது என்ன கிராமம் ? அது எங்க இருக்கு ? அதப்பற்றி பிறகு சொல்றேன்.

ஒரு வாளி தண்ணி 10 ரூபா


மழை எவ்ளோ பேஞ்சாலும் அதை சேமிக்கலன்னா குடிநீர்ப் பஞ்சமும் வரும். வறட்சியும் வரும்னு தெரிஞ்சிக்கிட்டோம். இத்தனை வருஷத்துல இது நாங்க கத்துக்கிட்ட பாடம்னு சொல்றாங்க சிரபுஞ்சிக்காரங்க. உலகத்துல அதிக மழை பேயற இடமுன்னு சொல்றாங்க. ஆனா நாங்க ஒரு வாளி தண்ணி 10 ரூபா குடுத்து வாங்கறோம்னு சொல்றாங்க.

தண்ணி நிக்கமாட்டேங்குதுங்க


இதுபற்றி உண்மையா என்று கேட்டால் எங்க ஊர் மலைக்கு மேல இருக்கு. அதனால மழை பேஞ்ச அஞ்சி நிமிஷத்துல தண்ணி> எல்லாம் அடிவாரத்துக்கு எறங்கிடுது. விவசாயம் கூட பாக்க முடியல> விதைவிதைச்ச அடுத்த நிமிஷம் மழையில அடிச்சிட்டு பொயிடுத்து என்று புலம்புகிறது சிரபுஞ்சி;.

அக்டோபர் மாதத்தில் அடிக்கும் மழைக்குப்பின் தாய்மார்களும்> சிறுவர் சிறுமிகளும்> குடங்களுடன் குடிநீர் தேடி அலைவது அன்றாட காட்சி.

ட்ரக் லோடுகளில் தண்ணீர் கொண்டு வருபவர்கள்தான் சிரபுஞ்சிக் காரர்களின் நவம்பர் டிசம்பர் மாதக் கடவுள்கள். ஒரு வாளித்தண்ணீரை பத்து ரூபாய் விலைக் கொடுத்து வாங்குகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் நாட்களில் இங்கு தண்ணீர் வியாபாரம் சூடு பிடிக்கிறது. ஓர் ஆண்டில் சராசரியாக 20000 பேர் வந்து போகிறார்கள்.

மலையின் மடியில் இருக்கும்> இக்த மழை மாநகரத்தின் காலடியில் புறப்படும் ஆறுகளில்> ஓடும் நீரும்> அருந்துவதற்கு லாயக்கில்லாதவை.

இங்கு அமைந்துள்ள நிலக்கரி மற்றும் சுண்ணாம்பு வெட்டி எடுக்கும் சுரங்கங்கள்> இந்த ஆறுகளின் தண்ணீரை மாசுபடுத்தும்  அசுப காரியங்களை அன்றாடம் செய்து வருகின்றன.

மிக அதிகமான அமிலத்தன்மையும் மிகக்குறைவான கார அமிலத் தன்மையும் உடைய தண்ணீர் இது. தாவரங்களும் நீர் வாழ் பிராணிகளும் இதில் வாழமுடியாது.

அந்த அளவுக்கு மோசமான தண்ணீர். ஆயினும் சுரங்க வேலைகள்  நின்றபாடில்லை. இந்த ஆறுகளின் தண்ணீரை வில்லங்கப்படுத்தும்> சுரங்கங்களின் உரிமையாளர்கள் ஷில்லாங்கில் வசிக்கிறார்கள் என்று எழுதியுள்ளார் இப்பகுதியை நேரடியாக ஆய்வு செய்த சைலேந்திரா யஷ்வந்த்.


சிரபுஞ்சிக்கு  

இரண்டாம் இடம் 


1861 ம் ஆண்டு 26466 மில்லிமீட்டர் மழை சிரபுஞ்சியில் பதிவு செய்யப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்குப்பிறகு உலகின் அதிக மழை பெறும் இடம் என்பதில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது சிரபுஞ்சி. முதலிடத்திற்கு போயிருப்பது மான்சிராம். சிரபுஞ்சிக்கு 16 கி.மீ. தொலைவில் உள்ள இன்னொரு கிராமம். சிரபுஞ்சியின் மழை தற்போது குறைந்துள்ளது. சிரபுஞ்சியின் மழை குறைவிற்கு இன்னொரு காரணம், இந்த மலைச்சாரலில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதுதான். ஓக் மரக்காடுகளுக்கும் 250 வகையான ஆர்கிட் பூக்களுக்கும் 500 வகையான பட்டாம்பூச்சிகளுக்கும் டேக்சஸ் பக்கோடோ (TAXUS BACADO) என்னும் மூலிகைக்கும் பெயர்போன இடம் சிரபுஞ்சி. இதிலிருந்து புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கிறார்கள்.

தனிமாநில அந்தஸ்து 


1972 ஆம் ஆண்டு மேகாலயா தனி மாநிலம் ஆனது. தனி மாநிலம் ஆனதனால் அடைந்த ஆதாயம் அதிகபட்சமான காடுகளை வெட்டி காலிபண்ணியதுதான் என்கிறார்கள் சிரபுஞ்சியின் மண் ஆய்வு சங்கத்தின் அங்கத்தினர் ஒருவர். அங்கு உள்ளூரில் உள்ள சமூகநல சங்கங்கள் எல்லாம் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

கூரை நீர் அறுவடை


சிரபுஞ்சியின் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரே வைத்தியம்கூரை நீர் அறுவடைதான்என்கிறார்கள்  விஞ்ஞானிகள். கூரை நீரை அறுவடை செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டு வரைகூட வைத்துக்கொள்ளலாம். அந்த தண்ணீருடன் 1000 லிட்டருக்கு நாங்கு கிராம் பிளீச்சிங்க் பவுடர் சேர்த்து 30 நிமிடம் கழித்து பயன்படுத்தலாம்.

உலகின் மிக ஈரமான பகுதி சிரபுஞ்சியாக இருந்தாலும்> பாலைவன பூமி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆக இருந்;தாலும்> குடிநீர்ப் பஞ்சத்திற்கு ஒரே வைத்தியம் கூரை நீர் அறுவடைதான்என்பதுதான்.

நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடிக்கவும் சமைக்கவும் ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் ? தோராயமாக 10000 லிட்டர். அதாவது ஒரு நாளைக்கு 27 லிட்டர் குடிக்க சமைக்க. இந்த 10,000 லிட்டர் தண்ணீரை  5 அல்லது 6 மழை நாட்களில் சேமிக்கலாம். இப்போது சிரபுஞ்சியில் கூரை நீரை சேமிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெய்சால்மரில் குடிநீர் பஞ்சம் நஹி ஜீ 

ஓர் ஆண்டின் சராசரி ழையாக 185  மில்லி மீட்டர் பெறும் வறண்ட பாலைவனம் ஜெயசால்மர். ஆனால் அங்கு குடிநீர்ப் பஞ்சம் நஹி ஜீ  என்கிறார்கள் சேட்டுக்கள்.
இந்த மகிமைக்குக் காரணம் கூரைநீர் அறுவடைதான் ஜி என்று காலர்  இல்லா ஜிப்பாவை தூக்கிவிட்டுக்கொள்ளுகிறார்கள்.

ஓர் ஆண்டில் 185 மில்லி லிட்டர் ஆண்டு சராசரி மழை பெறும் ஜெய்சால்மர் ஒரு ஆண்டில் 11777 மில்லிமீட்டர் மழை பெறக்கூடிய சிரபுஞ்சியப்பாத்து சவுக்கியமான்னு கேட்கிறதாம்’. எப்பிடியிருக்கு பாருங்க ?

உங்க வீட்டு கூரை பரப்பு எவ்ளோன்னு பாருங்க. சதுர மீட்டர்ல எவ்ளோன்னு பாருங்க. கூரை பரப்பை ஆண்டு சரசரி மழையால பெருக்கி அதை ஆயிரத்தால பெருக்கினா உங்க வீட்டு கூரை மூலமா எவ்ளோ தண்ணிய அறுவடை செய்ய முடியும்னு கண்டுபிடிக்கலாம்.

ஒரு சதுரமீட்டர் கூரை மூலமா 1000 லிட்டர் தண்ணிய சேமிக்கலாம்


உதாரணமா உங்க வீட்டு கூரை 100 சதுர மீட்டர்னா அது மூலமா ஒரு லட்சம் லிட்டர் தண்ணிய செமிக்க முடியும். 50 சதுர மீட்டர்னா அது மூலமா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். 10 சதுர மீட்டர்னா அது மூலமா 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். ஒரு சதுர மீட்டர்னா ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
     
காடு போச்சி ! தண்ணீரும் போச்சி ! டும் டும் டும் !  என்று சொல்லிக்கொண்டிருந்த சிரபுஞ்சி மக்கள் கூரைநீர் அறுவடை செய்வதில் குறியாய் இருக்கிறார்கள்.

புத்திசாலிகள் எப்போதும் அடுத்தவர்களின் அனுபவங்களின் படங்களிலிருந்தே பாடம்  கற்றுக்கொள்ளுபவர்கள்தான் புத்திசாலிகள்.


8888888888888888888888888888



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...