Monday, December 23, 2019

உத்திரட்டாதி நட்சத்திர மரம் வேம்பு - இன்று ஒரு குறுஞ்செய்தி - UTHIRATATHI BIRTHSTAR TREE VEMBU








வணக்கம்

உத்திரட்டாதி   

 நட்சத்திர  மரம்  

வேம்பு -

இன்று ஒரு   

குறுஞ்செய்தி


UTHIRATATHI 

BIRTHSTAR TREE 

VEMBU - NEWS TODAY


NEWS TODAY

 

 எப்போதும் உண்மை விளம்பியாக
இருப்பதால் உங்களை அரிச்சந்திரனின்
அடுத்த வாரிசு என்றும் சொல்லுவார்கள்.

சாக்குப்போக்கு சொல்ல
நீக்குப்போக்கு தெரிந்திருந்தாலும்
தந்த வாக்கை தட்டாமல் காப்பாற்றுவீர்கள்.

வந்த செல்வம் வந்தவழி எந்த வழி
என்று பாராமல்
வாங்கி வரவில்  வைக்க மாட்டிர்கள்.

சூதுவாது இல்லாமல் வாதிடும் திறனை
வரமாக பெற்றவர்கள்.

நீங்கள் தோட்ட காரியத்தையும்
தொடாத காரியத்தையும்
விட்ட காரியத்தையும்  விடாத காரியத்தையும்
தொடுத்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

உங்கள் நட்சத்திர மரம்
வேப்பமரம்.

கிராமத்து மருந்துக்கடை என
அகிலம் போற்றும் மரம்.

அமுதத்தில் குளித்த அதிசய மரம்
உலகத்து நோய்கள் அத்தனைக்கும்
அருமருந்து அளிக்கும் மரம்.

ஆண்டு முழுவதும்
பசுமையை பராமரிக்கும் மரம்.

உங்கள் நட்சத்திர மரம்
வேம்பினை நட்டு வளர்த்தால்
உங்களை பற்றி இருக்கும்
தோஷங்களை நிக்கும்.

உங்கள் வாழ்வில்
வளம் சேர்க்கும் நலம் சேர்க்கும்
பட்டியலிடும் பதினாறு செல்வங்களும்
போட்டிபோட்டபடி வந்து சேரும்.



இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...