Tuesday, December 24, 2019

தப்பசி நோய்பல குணப்படுத்தும் மரம் - THAPPASI VERSATILE HERBAL TREE


தப்பசி

நோய்பல 

குணப்படுத்தும் மரம்  

THAPPASI VERSATILE 

HERBAL TREE




தாவரவியல் பெயர்: 

ஹாலோப்டீலியா இன்டெக்ரிஃபோலியா (HOLOPTELEA INTEGRIFOLIA)


தாவரக் குடும்பம் பெயர்: உல்மேசியே (ULMACEAE)


தாயகம்: இந்தியா (INDIA)


பொதுப் பெயர்கள்: இண்டியன் எல்ம்இ என்டயர் லீவ்டு எல்ம் ட்ரீ, ஐங்கிள் கார்க் ட்ரீ, சவுத் இண்டியன் எல்ம் ட்ரி


(INDIAN ELM, ENTIRE LEAVED ELM TREE, JUNGLE CORK TREE, SOUTH INDIAN ELM TREE)


ஆயா மரங்கள் இலை உதிர்க்கும்; 
அடிமரம் சாம்பல் வண்ணத்துடன் இருக்கும்.; 
இலைகள் கூம்பு மற்றும் கோள வடிவத்தில்
அடர்பச்சை நிறத்தில் இருக்கும்.
விதைகள் வித்தியாசனமாவை. 
சிறிய உருண்டையான விதைகளைச்சுற்றி
மெல்லிய சருகுபோன்ற இறகுகளுடன் இருக்கும்.

தப்புசி மரம்

வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி
தும்பேரி, சிக்கனாங்குப்பம்
தெக்குப்பட்டு, மல்லகுண்டா
நாயனசெரு, நாட்றம்பள்ளி 
பகுதிகளில் எல்லாம், இதனை 
தப்புசி மரம் என்று அழைக்கிறார்கள்.  
இங்கு துரிஞ்சிமரம்போல 
இயற்கையாக பரவி உள்ளது.  
இதனை தமிழ் நாட்டில் பல 
பெயர்களில் அழைக்கப்படுகிறது.  
அவை, ஆயா, தம்பச்சி, ஆவிமரம்
அவில்தோல், அயில் பட்டை
மற்றும் வெள்ளையா.

நிலத்துக்கு தழை வெட்டிப் 
போடலாம்

என்னுடைய தோட்டத்தில் நான்கைந்து 
மரங்கள், சுயம்புவாக வளர்ந்தவை. 
யாரும் விதைபோட்டு, கன்று நட்டு 
வளர வில்லை;  தானாக வளர்ந்தவை. 
உள்ளுர்க்காரர்கள் தப்புசி, தம்பச்சி 
என்ற பெயர்களில் சொல்லுகிறார்கள். 
இது கர்நாடகாவில் வழங்கும் பெயர்  
என்று தெரிகிறது. அதன் மருத்துவப் 
பண்புகள் பற்றி எல்லாம் பெரிதாக 
அவர்களுக்குத் தெரியவில்லை.  
நிலத்துக்கு தழை வெட்டிப் 
போடலாம் சார் என்கிறார்கள்.  
அதாவது தழைஉரமாகப் 
பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.

1.ஆயா மரத்தின் பல மொழிப் பெயர்கள்.

1.1. இந்தி: சில்பில், காஞ்சு, பாப்ரி (CHILBIL, KANJU, PAPRI)

1.2. மராத்தி: அயின சாதா டா, வாவலா (AINA SADHA DA, VAVALA)

1.3. தமிழ்: ஆயா, தம்பச்சி, ஆவி மரம் (AYAA, THAMBACHI, AAVI MARAM)

1.4. மலையாளம்: ஆவல் (AAVAL)

1.5. தெலுங்கு: நாலி (NALI)

1.6. பெங்காலி: நாட கரஞ்சா (NATA KARANJA)

1.7. ஒரியா: தாரஞ்சன் (DHAURANJAN)

1.8. குஐராத்தி: சாரல், கஞ்சோ (CHARAL, KANJO)

1.9. சமஸ்கிருதம்: சிர்விவா (CHIRVIVA)

1.10. நேபாளி: சனோ பாங்ரோ (SANO PANGRO)

1.11. இருளா: ஆயி மரம் (AAYEE MARAM)

1.12. கன்னடா: தபஸி, தவசி (TAPSI,  THAVASI)

சர்க்கரை நோய் 
முடக்கு வாதம் 
தொழு நோய்

இதன் பட்டைகள், இலைகள் 
பலவிதமான மருந்துகள் செய்ய 
பயன்படுத்துகிறார்கள்.  இவை 
முக்கியமாக முடக்குவாதம்
சக்கரை நோய், நீர்கட்டி, வீக்கம்
தொழுநோய், தோல்சம்மந்தமான நோய்கள்
மூல நோய்கள், வயிறு சம்மந்தமான 
உபாதைகள், வெப்ப மண்டலப் 
பகுதிகளில் ஏற்படும் வாந்தி 
போன்றவற்றையும் குணப்படுத்துகின்றன.

கோழகொழப்பான இதன் பட்டையை 
கொதிக்கவைத்து, அதன் சாற்றினைப் 
பிழிந்து மூட்டு வீக்கத்தின் மீது தடவ 
வீக்கமும் வலியும் குணமாகும்.

இலைகளிலிருந்து குடிநீர் தயாரித்து, 
அதனை தோல் நோய்களால் பாதிக்கப்பட்ட 
இடங்களில் தடவிவர 
அவை விரைந்து குணமாகும்.

நகசுத்தி வந்தால், இந்த மரத்தின் 
பட்டையை நன்கு அரைத்து கூழாக்கி 
அதன் மீது தடவ, வலி குறைந்து 
குணமாகும்.


மலேரியா ஜுரம்

மலேரியா ஜூரத்திற்கு ஒரு 
வித்தியாசமான சிகிச்சை 
சொல்லுகிறார்கள்.  தப்புசி மரப்பட்டையை
ஒரு ரூபாய் காசு அளவிற்கு 
வட்டமாக நறுக்கி எடுத்து அதனை
இடது கையில் தோள்பட்டைக்குக்  
கீழே கட்டிக் கொள்ள வேண்டும்.  
அவ்வளவுதான். 
உடனடியாக பலன் தெரியும்.

இதில் சொல்லப்படும்;
சிகிச்சை முறைகள் நீங்கள் 
அவற்றை கடை பிடிப்பதற்காக அல்ல.  
சிகிச்சை முறைகளை ஒரு 
மருத்துவரின் பரிந்துரைப்படி 
மட்டுமே கைக்கொள்ள வேண்டும்.  
ஆனால் இவை பாரம்பரியமாக 
இயற்கையோடு இயற்கையாக 
நமது மக்கள் வாழ்ந்த போது 
கடைபிடித்தவை. இன்னும்கூட 
கடைபிடித்து வருகிறார்கள்.  
இந்த பாரம்பரிய அறிவு  
மறைந்துவிடாமல் இருப்பதற்காக 
மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன்.

மரத்தின் பட்டை வெண்மையான 
சாம்பல் நிறமாகவும் மரம் 
லேசாக, மஞ்சளும் காவியும் 
கலந்த நிறமாகவும், புதியதாக 
வெட்டிய மரத்தில் ஒரு விதமான 
வாடையும் வீசும்.  காய்ந்ததும்  
அது காணாமல் போய்விடும்.



ஆயாமரம் சமவெளிகளில் 
அதிகம் வளரும்.  மலையடி வாரங்களில் 
அதிகபட்சமாக 1100 மீட்டர் உயரம் வரை 
உள்ள பகுதிகளில் நன்கு வேகமாக வளரும்.  
இந்தியா, இமயமலை, ஸ்ரீலங்கா, பர்மா
இந்தோ சைனா ஆகிய இடங்களில் 
ஆயாமரம் பரவாக வளர்ந்துள்ளன.

மூலிகை மரம் - 
உலக சுகாதார நிறுவனம்

ஆயா மரத்தின் மருத்துவ குணங்கள் 
பற்றி சொல்லும்போது, இது  
சகலவல்லமை பொருந்திய மூலிகை மரம் 
என்று சொல்லுகிறார்கள்.  
ஆனால் நவீன மருந்துகள் 
தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை 
செய்வது அவசியம்.;
    
தாவரங்களைக் கொண்டு நோய்களை 
குணப்படுத்துவது குறித்து 
உலக சுகாதார நிறுவனம் 
(WORLD HEALTH ORGANIZATION
ஒரு புள்ளிவிவரத்தை 
வெளியிட்டுள்ளது.  
உலகம் முழுக்க உள்ளவர்களில் 
80 % மக்கள் மூலிகை மருந்துகளைத்தான் 
பயன்படுத்தி வருகிறார்கள்.  
உலகம் முழுக்கவே அந்தந்த 
நாட்டில் உள்ள பாரம்பரிய 
மருத்துவ முறைகளை பதிவு 
செய்யத் தொடங்கி உள்ளனர்.  
இந்த பூமியில் சுமார் 2.5 முதல் 
5 லட்சம் தாவரவகைள் 
(PLANT SPECIES)  உள்ளன.  
இவற்றில் இந்தியாவில் மட்டும் 
இருப்பவை 47000 தாவர வகைகள் 
மூலிகைகள் என அறியப்பட்டுள்ளன. 
இதில் சுமார் 800 (1.7 %) 
வகைகளை மட்டுமே நாம் பயன்படுத்தி 
வருகிறோம்.

அறிவியலுக்கு உதவுவது 
அனுபவ அறிவுதான்.  அது கிராமப்புற 
மற்றும் பழங்குடி மக்களிடையேதான் 
அபரிதமாய் உள்ளன.  அது வழிக்கொழிந்து 
போகாமல் காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது.

தப்புசி மரங்கள் செப்டெம்பர் 
முதல் ஐனவரி வரை இலைகளை 
உதிர்க்கும்.  ஐனவரி-பிப்ரவரி 
மாதங்களில் பூக்கும்.  
ஏப்ரல்-மே மாதங்கள் காய்கள் பழுக்கும்.

ஆவிகள் வசிக்கும் மரமா ?

இந்த மரம் பற்றி கிராமங்களில் 
ஒருவகையான நம்பிக்கை இன்றும் உள்ளது.  
பேய்கள் மற்றும் ஆவிகள் 
இந்த மரங்களில் தங்கி இருக்க 
ரொம்பவும் பிடிக்குமாம்.  
அதனால் பேயோட்டுபவர்கள் 
பேய் பிடித்தவர்களின் தலை முடியைக் 
கொண்டுவந்து இந்த மரத்தில் வைத்து 
ஆணி அடிந்துவிட்டுச் செல்வார்கள்.  
அதற்குப் பிறகு அந்தப் பேய் 
அந்த நபரை விட்டுவிட்டு 
அந்த மரத்திலேயே நிரந்தரமாகத் 
தங்கி விடுமாம்.

      
உங்கள் தோட்டத்தில் 
ஏதாச்சும் ஆயா மரங்கள் இருக்கா ?

தே. ஞானசூரிய பகவான்  போன்: 918526195370
இமெயில்: பளடியாயஎயn;பஅயடை.உழஅ
Photograph Courtesy: Thanks to Google.

REFERENCE:

(Holoptelea integrifolia: An overview – jyodhisharma & virendra singh): Europeon journal of Applied sciences- 2012- BN college of pharmacy, Udaipur, Rajasthan, Geethanjali Institute of Pharmacy, Dabok, Udaipur, Rajasthan), INDAI)


(BIOMED RESEARCA INTERNATIONAL – HOLOPTELAA INTEGRIFOLIA: A Review of it ethnobotany, phanmacology & phytochemistry)


WWW.SENTHU HERBALS. BLOGSPOT.COM/ HOLOPTELEA INTEGRIFOLIA


WWW.INDIABIODIVERSITY.ORG-HOLOPTELEA INTEGRIFOLIA-INDIA ELM.


(WWW.OPENDATA.KEYSTONE-FOUNDATION.ORG / HOLOPTELEA  INTEGRIFOLIA)



No comments:

HOW TO ENHANCE PULICAT ECO SYSTEMS - பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று ஆலோசனைகள்

  கடிதம்  2 பழவேற்காடு ஏரியின்   சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று  ஆலோசனைகள் ! DR.P.SATHYASELAVAM, DR.SELVAM அன்பின் இனிய   நண்பர...