888888888888888888888
இந்தியாவில்
நாம் பெறும் மழை
88888888888888888888888888888888
8888888888888888888888888888888888888888888
மக்கள்தொலைக்கட்சியின்
மக்கள்தொலைக்கட்சியின்
வேளாண்மைப்பள்ளி
8888888888888888888888888888888888888888888888888888
வரப்புயர நீர் உயரும் - பாடவரிசை
8888888888888888888888888888888888888
தூற்றிக் கொண்டிருப்பதால்,
நம்மால் மறக்கமுடியாத பழமொழி
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
ஆனால் மழை நமக்கு சொல்லும்
புது மொழி மழை வரும்போதே
பிடித்துக்கொள். மழை பிடிக்க
பாத்திரம் செய்வதும், பத்திரம்
செய்வதும்தான் :நமது பணி !)
29 மாநிலங்கள்
7 யூனியன் பிரதேசங்கள்
உலகின் மழைமா நகரமாக
தற்போது
விளங்கும் மாசின்ரோம்’ஐ
உள்ளடக்கிய இந்தியாவின்
ஆண்டு சராசரி மழை
1250 மில்லி மீட்டர்.
அதிக மழை பெறும் பகுதிகள்
ஏழு யூனியன்
பிரதேசங்கள் சேர்த்து
மொத்தம் 29
மாநிலங்களைக் கொண்ட
நம் நாட்டின் அதிக மழைபெறும்
பகுதிகள் இரண்டு.
ஒன்று கேரளா. இன்னொன்று கோவா.
2000
மி.மீ. மற்றும் அதற்கும்
மேல்
மழை பெறும் மாநிலங்கள் – 7
1. அருணாச்சலப்பிரதேசம் (2782 மி.மீ)
2. அசாம் (2818 மி.மீ)
3. கோவா (3005
மி.மீ.)
4. கேரளா (3005 மி.மீ.)
5. சிக்கிம் (2739 மி.மீ.)
6. வெஸ்ட்பெங்கால் (2089 மி.மீ.)
7. அந்தமான் (2967 மி.மீ.)
8. தாதர் & நாகர் ஹவேலி
(2169 மி.மீ.)
1000
மி.மீ. – 1999 மி.மீ வரை
மற்றும்
அதற்கும் மேல் மழை பெறும் மாநிலங்கள் - 14
1. பீஹார் (1256 மி.மீ.)
2. இமாச்சலப்பிரதேசம் (1251 மி.மீ.)
3. ஜம்மு காஷ்மீர் (1011 மி.மீ)
4. கர்னாடகா ( 1771 மி.மீ.)
5. மத்தியப்பிரதேசம் (1177 மி.மீ.)
6. மஹராஷ்ட்ரா (1455.5 மி.மீ.)
7. மணிப்பூர் (1881 மி.மீ.)
8. மேகாலயா (1881 மி.மீ.)
9. மிசோரம் (1881 மி.மீ.)
10. நாகாலாந்து (1881 மி.மீ.)
11. ஒடிசா (1489 மி.மீ.)
12. திரிபுரா (1881 மி.மீ.)
13. உத்தரப்பிரதேசம் (1196 மி.மீ.)
14. லட்சதீபம் (1515 மி.மீ.)
15. ஜார்கெண்ட் (1174 மி.மீ.)
குறைவாக மழைபெறும்
பகுதிகள் -10 (400 – 1000 மி.மீ வரை)
கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
இந்தியாவில் குறைவான மழை பெறும் மாநிலம் ராஜஸ்தான் என்று.
ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி அதிர்ஷ்டம் செய்தது. அதன் ஆண்டு சராசரி மழை 675 மில்லி மீட்டர். மேற்குப் பகுதி பெறுவது 313 மில்லி மீட்டர். கிழக்கு மேற்கு பகுதிகளின் சராசரி
494
மில்லி மீட்டர். ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழை கூட இஸ்ரேலின் மழையை விட அதிகம்.
1. ராஜஸ்தான் (494 மி.மீ)
2. ஆந்திரப்பிரதேசம் (887 மி.மீ)
3. குஜராத் (842.5 மி.மீ)
4. ஹரியானா (617 மி.மீ)
5. பஞ்சாப் (649 மி.மீ)
6. சண்டிகர் (617 மி.மீ)
7. தெலிங்கானா (961 மி.மீ)
8. டெல்லி (617 மி.மீ)
9. புதுச்சேரி (998 மி.மீ)
10. தமிழ்நாடு (998 மி.மீ)
11. டையு & டாமன்
(706 மி.மீ.)
நமக்கு கீழே இருக்கும் ஒன்பது மாநிலங்கள்
தென் மாநிலங்கள் என்று
பார்த்தால் கேரளா முதலிடத்திலும்
கர்நாடகா இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு 3 ம் இடத்திலும்,
தெலிங்கானா 4 இடத்திலும் ஆந்திரா 5 இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கடைசியிலிருந்து பத்தாவது இடம் கிடைச்சிருக்கு. பாண்டிச்சேரிக்கும் நமக்கும் சம
அந்தஸ்து.
நமக்கும் கீழே அதிர்ஷ்டக் கட்டையாக ஒன்பது மாநிலங்கள் அணிவகுத்து நிற்கின்றன (மழையின்
அடிப்படையில்). அவை ராஜஸ்தான் (494 மி.மீ), ஆந்திரப்பிரதேசம்
(887 மி.மீ), குஜராத் (842.5 மி.மீ), ஹரியானா (617 மி.மீ.),
பஞ்சாப் (649 மி.மீ), சண்டிகர் (617 மி.மீ), தெலிங்கானா (961 மி.மீ),
டெல்லி (617 மி.மீ) மற்றும் டையு & டாமன்’ல் (706 மி.மீ.).
.
ஆனால் இந்திய மழை
புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் கிடைக்கும் ஆண்டு
சராசரி மழை 998
மில்லி மீட்டர்;.
இந்தியாவின் தலைநகரம்
டெல்லியுடன், ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் ஆகியவற்றில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 617 மல்லி மீட்டர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கேரள
மாநிலம்தான் அதிகபட்ச ஆண்டு சராசரி மழை பெறுகிறது. மழை அளவு 3005 மில்லி மீட்டர்.
மாசின்ரோம் மற்றும் சிரபுஞ்சியை
உள்ளடக்கிய மேகாலயாவின் ஆண்டு சராசரி மழை அளவு 1881
மில்லி மீட்டர்தான்.
உலகத்திலேயே
விவசாயத்தில் அதிக வருமானம் பெறும் இஸ்ரேல் நாட்டின் ஆண்டு சராசரி மழைஅளவை
விட ‘நாங்கள்
அதிக மழை பெறுகிறோம்’
என்று ராஜஸ்தான்காரர்கள் சந்தோஷப் படலாம்.
இந்த விஷயத்தில் நாம் எல்லோருமே
சந்தோஷப்படலாம்.
இந்தப் பிரபஞ்சத்தில்
எந்தப்
பகுதியாக இருப்பினும் இயற்கை
எல்லையில்லா தன் கருணையை
பொழிந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த கருணைமழை
இந்தியாவின்பக்கம்
கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.
இந்த புள்ளிவிவரங்களைக் கேளுங்கள்.
இவை எல்லாமே இந்தியாவில்
மழை அதிகம்பெறும்
மழைப்பிரதேசங்கள்.
1. மாசின்ரோம். மேகாலயா.
2. சிரபுஞ்சி மேகாலயா
3. சின்ன
கல்லார். தமிழ்நாடு.
4. நேரிய
மங்கலம். கேரளா.
5. ஆம்போலி மகாராஷ்ட்ரா.
6. தித்தார்
கஞ்ச் உத்ரகாண்ட்
7. சந்த்பால். ஓரிசா.
8. ஆடும்பே கர்நாடகா.
மழை அளவை பொருத்தவரை இந்தியா
பெரும்புள்ளிதான் என்று இந்த
புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லுகின்றன.
அது இல்லாதபோது நாம் தூற்றிக்
கொண்டிருப்பதால், நம்மால்
மறக்கமுடியாத
பழமொழி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
ஆனால் மழை நமக்குச் சொல்லும் புது மொழி
மழை வரும்போதே பிடித்துக்கொள்.
மழை பிடிக்க பாத்திரம் செய்வதும்,
பத்திரம்
செய்வதும்தான் :நமது பணி !
88888888888888888888888888888888
No comments:
Post a Comment