Monday, December 30, 2019

சேங்கொட்டை - பெண்களுக்கான கருத்தடை மூலிகை - SENKOTTAI SUPREME FAMILY PLANNING HERB















சேங்கொட்டை -

பெண்களுக்கான  

கருத்தடை மூலிகை 


SENKOTTAI  SUPREME 

FAMILY PLANNING HERB


பூமி ஞானசூரியன்

போன்: +918526195370, +828376767, Email: gsbahavan@gmail.com


குளிர் பருவத்தில் இந்த கோடம்பியை (பழங்களை) பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப சாப்பிடுகிறார்கள். காரணம்கோடம்பி சாப்பிட்டால்கருத்தரிக்காதாம். நல்ல இயற்கையான கருத்தடைச் சாதனம். 


ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கைமற்றும் பாலியல் ரீதியான உயிர்ச்சக்தியினை மேம்படுத்த இது உதவுகிறது. 


இதய நோய்கள்ரத்த அழுத்தம்சுவாசம் தொடர்பான  பிரச்சினைகள்புற்று நோய்மற்றும் நரம்பு சம்மந்தமான நோய்களையும் சரி செய்யும் சக்தி கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.




இந்தக் குறிதான் அந்த காலத்து 

ஆதார் கார்ட் இது ஒரு கிராமத்து 

துணிகள் அத்தனையும் வெளுத்து

துணிகள் மாறாமல் பிரித்து மூட்டையாகக் 

கட்டி எடுத்துச் சென்று தருவார்கள். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 

ஒவ்வொரு மூட்டை.


















தாவரவியல் பெயர்: செமிகார்பஸ் அனகார்டியம் (SEMECARPUS ANACARDIUM)
தாவரக் குடும்பம் பெயர்: அனாகார்டியேசி ANACARDIACEAE)
தாயகம்: இந்தியா (INDIA)

பொதுப் பெயர்கள்: மார்கிங்; நட் ட்ரீ, டோபி நட் ட்ரீ,                      இண்டியன் மார்கிங் நட் ட்ரீ, மலாக்கா பீன், மரானி நட், மார்ஷ்          நட், ஒரியண்டல் கேஷ்யூ நட், வார்னிவு; ட்ரீ (MARKING NUT TREE, DHOBI NUT TREE, INDIAN  MARKING  NUT TREE,  MALACCA  BEAN, MARANY NUT, MARSH  NUT, ORIENTAL  CASHEW NUT, VARNISH  TREE)


1.பல மொழிப் பெயர்கள்:

1.1.இந்தி: பிலாவா, பிலாவா, பில்லார் (BILAVA, BILAVAH, BILLAR)


மராத்தி: பல்லடாக்கா, பில்லாவா, பிப்பா (BHALLATAKA, BHILLAVA, BIBBA)


1.2    தமிழ்: சேங்கொட்டை, சோம்பலம், காலகம், காவகா, கிட்டாக்கனிக் கொட்டை எரிமுகை        (SENKOTTAI, KOMBALAM, KALAKAM, KAVAKA, KITTA-K-KANI-K-KOTTAI, ERIMUGAI)


1.3    மலையாளம்: அலக்குசீர்,  சீன்குரு, தீன்கொட்டா       (ALAKKUSEER , SEENKURU, DHEENKOTTA)


1.4    தெலுங்கு: பில்லடாமு, ஜெடிமாமடி சேட்டு        (BILLATAMU, JIDIMAMDI SETTU)


1.5    கன்னடா: ஜெரு,ஜெரானியா மரா        (GERU, GERANIA MARA)


1.6    பெங்காலி: பெல்லட்டா, பல்லட்டாக்கா        (BELLATTA, BHALLATAKA)


1.7    ஒரியா: பொல்லடாக்கி, போனிபல்சா        (BOLLATAKI, BONIBHALSA)


1.8    கொங்கணி: அம்பேரி, பிப்பா       (AMBERI, BIBBA)


1.9    உருது: பலடூர், பில்லாவன், பில்லார்        (BALLADUR, BHILAVAN, BILLAR)


1.10   அசாமிஸ்: பாலா       (BHALA)


1.11   குஐராத்தி: பிலாமோ பிலாமு       (BILAMO, BILAMU)


1.12   சமஸ்கிருதம்: அஹ்வலா, அப்சாஷ்டா, ஆரூத்கா, பல்லடாக்கா, வஹ்னி, விகஸ்யா        AHVALA, ABSHASTAH, ARUDHKA, BALLATAKAH, VAHNIH, VIHASYA)


1.13   நேபாளி: பலாயோ       (BALAAYO)

1960 ம் ஆண்டு வாக்கில் கூட சலவைத் 
தொழிலாளிகள், இந்த மார்க்கிங் நட் 
கொட்டையிலிருந்து இங்க் மதிரி 
சாயம் எடுத்து துணிகளில் அடையாளக்குறி 
போடுவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 
ஒரு குறி;;. ஒரு குடும்பத்தின் துணி இன்னொரு  
குடும்பத்திற்கு மாறிப் போகக் கூடாது. 
இந்தக் குறிதான் அந்த காலத்து 
ஆதார் கார்ட் இது . ஒரு கிராமத்து 
துணிகள் அத்தனையும் வெளுத்து
துணிகள் மாறாமல் பிரித்து 
மூட்டையாகக் கட்டி எடுத்துச் 
சென்று தருவார்கள். ஒவ்வொரு 
குடும்பத்திற்கும் ஒவ்வொரு மூட்டை.

அந்தக் குறிபோடும் மையினை 
சேங்கொட்டையிலிருந்து தான் தயார் 
செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ அந்த மை 
அடர்த்தியான ஊதா நிறத்தில் இருக்கும். 
இந்த மையில் குறிபோட்டுவிட்டால் 
துணிகள் கிழிந்து போனால் கூட
அதனை அழிக்கவே முடியாது. 
இப்படி அன்று சலவைத் தொழிலாளிகள் 
வைத்த குறி மாறவே மாறாது.

இலை உதிர்க்கும் மரம் இது: அதன் 
இலைகளைப் பார்க்க முந்திரி இலைகள் 
போலத் தோன்றும்: சேங்கொட்டை
முந்திரிக் கொட்டை, மாங்கொட்டை 
அத்தனையும் அனாகார்டியேசி என்ற 
குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

இதன் பழங்களில் முன்பகுதி 
ஆரஞ்சு நிறமாகவும் , பின்பகுதி 
கருப்புநிறமாகவும் இருக்கும். 
முன்பகுதி பழம் கனிந்தால் இனிப்பாக 
இருக்கும்: சாப்பிடலாம். பழத்தின் பின் 
பகுதி நச்சுத்தன்மை உடையது.  
சாப்பிட்டால் ஒவ்வாமை (ALLERGY) ஏற்படும்: 
கருப்பு நிறப் பழப்பகுதியில் 
இருக்கும் கொட்டைகளை, பதப்படுத்தி 
சாப்பிடலாம். இந்தியில் இந்தக் 
கொட்டைகளின் பெயர் கோடம்பி 
(KODAMBI).

பாரம்பரிய மருத்துவத்தில் 
இதனை பலவிதமாக இன்றும் 
கூட பயன்படுத்தி வருகிறார்கள். 
ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை
மற்றும் பாலியல் ரீதியான 
உயிர்ச்சக்தியினை மேம்படுத்த 
இது உதவுகிறது. செரிமானம் 
தொடர்பான பிரச்சீனைகளைத் தீர்க்கிறது.  
கபத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை 
நிவர்த்தி செய்கிறது. இதற்கு 
இந்தப் பழத்தின் ஆரஞ்சு நிறப் 
பகுதியைப் பிரித்தெடுத்து, நடுத்தரமாக 
உலர்த்திப் பிறகு பயன்படுத்தலாம்.

இந்த பழங்களை கருத்தறித்தப் பெண்கள் 
அதிகம் சாப்பிட்டால், கருச்சிதைவு நேரிடும்.  
அளவாக இதனை சாப்பிட்டு வந்தால்
பெண்களின் இனப் பெருக்க மன்டலத்தை 
சீர் செய்யும்.

பழங்கள், விதைகள் உட்பட இந்த மரத்தின் 
பல்வேறு பாகங்களையும் ஆயுர்வேத 
மருத்துவத்தில், பலவிதமான மருந்துகள் 
தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.  
முக்கியமாக உணவுப்பாதை 
(ALIMENTARY CANAL) மற்றும் 
சருமநோய்கள் (DERMATOLOGICAL DISEASES)
குணப்படுத்தும் 
மருந்துகளைச் செய்கிறார்கள்.  
இதய நோய்கள், ரத்த அழுத்தம்
சுவாசம் தொடர்பான  பிரச்சினைகள்
, புற்று நோய், மற்றும் நரம்பு சம்மந்தமான 
நோய்களையும் சரி செய்யும் சக்தி 
கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பழத்தின் விதைகளை 
கோடம்பி எனப் பார்த்தோம். 
வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த 
கோடம்பி உலர் திராட்சை போல உலர் பழமாக 
(DRY FRUIT) பயன்படுத்துகிறார்கள்.  
குளிர் பருவத்தில் இந்த கோடம்பியை 
பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப 
சாப்பிடுகிறார்கள். காரணம்
கோடம்பி சாப்பிட்டால், கருத்தரிக்காதாம். 
நல்ல இயற்கையான கருத்தடைச் சாதனம். 
கோடம்பி யை பதப்படுத்திய பின்னர்தான் 
சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சேங்கொட்டையின் விதையுறைகளிலிருந்து 
எடுக்கும் சாயத்தைத்தான் குறியிடுவதற்காக 
பயன்படுத்தினார்கள். மரங்கள் நடவு செய்த 
10 வது ஆண்டில் தான் பூக்கத் தொடங்கும். 
ஜூன் - ஐPலை மாதங்களில், பூக்க ஆரம்பிக்கும். 
நவம்பர் முதல் டிசம்பர் வரையான 
காலங்களில் காய்கள், முதிர்ந்து 
கனியாகும். 25 முதல் 30 ஆண்டுகள் 
வரை பலன் தரும். வளர்ந்த ஒரு மரம் 
25 முதல் 45 கிலோ பழங்கள் தரும்.

இந்திய நாட்டின் மூலிகைகள்
அவற்றைப் பயன்படுத்தும் மருந்துவ 
சிகிச்சை முறைகளுக்கு சர்வதேச 
அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் உள்ளது.  
வளர்ந்த மேலை நாடுகளில் 
இது போன்ற அனுபவ அறிவு 
ரொம்பவும் குறைவு அல்லது இல்லை 
எனச் சொல்லலாம்.
சித்த மருத்துவம் மற்றும் 
ஆயுர்வேத மருத்துவத்தில் 
சேங்கொட்டைக்கென்று 
தனி இடம் உள்ளது.  அந்த அளவுக்கு 
முக்கியத்துவம் கொண்ட 
மூலிகை மரம் சேங்கொட்டை.
சேங்கொட்டை இன்றும் 
நிறைய அளவில் பயன்படுத்திக் 
கொள்ள வாய்ப்பு உள்ளது: 
ஆனால் இதற்கு இன்னும் 
நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட 
வேண்டும்: இதனை சிறந்த 
மூலிகை மரமாக வளர்ந்து சித்த 
மருத்துவம் மற்றும் ஆயுர்வேத 
மருத்துவத்தில் பயன்படுத்தும் 
வாய்ப்புகள் நிரம்ப உள்ளன.

ஆண்மையின்மை, குறைவான 
விந்தணுக்கள் இருப்பது 
போன்றவற்றையும், பெண்களுக்கு 
சிறந்த கருத்தடைச் சாதனமாகவும் 
பயன்படுத்தும் வாய்ப்புகள் பிரகாசமாக 
உள்ளன.  இயற்கை மருத்துவம் 
தொடர்பான விழிப்புணர்வு பெருகி 
வரும் நிலையில், சேங்கொட்டை 
போன்ற மரங்களைத் தேடி வளர்க்கும் 
வாய்ப்பு வாய்க்கும் என்று 
நினைக்கிறேன்.

இமயமலையின் வெளியே 
உள்ள பகுதிகளில் (ழுருவுநுசு ர்ஐஆயுடுயுலுயுளு) 
சட்லெஐ; முதல் சிக்கிம் வரையான 
வெப்ப மண்டலப் பகுதிகளில், மற்றும் 
அஸ்ஸாமின் கிழக்குப் பகுதிகளிலும் 
இம்மரம் பரவலாகக் காணப்படுகின்றன.  
இந்த மரத்தை யாரும்  சாகுபடி 
செய்வதில்லை. ஆனால் சால் 
மரக்காடுகளில் இயற்கையாகப் 
பரவியுள்ளன.  லேசான மற்றும் 
நடுத்தரமான சரளை மண்ணில்
போதுமான வடிதால், வசதி 
இருப்பின், சேங்கொட்டை 
மரங்கள் சிரமமின்றி வளரும்.

விதைகள் மூலம் புதிய மரக்கன்றுகளை 
உருவாக்கலாம். அறுவடை செய்த 
பின்னர், 6 மாதங்கள் வரை 
முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும். 
நூற்றுக்கு 60 முதல் 66 விதைகள் முளைக்கும்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

WWW.VIKASPEDIA.IN/ASRICULTURE/ ‘SENE CARPUS ANACARDIUM’, WWW.NCBI.NLM.NIH.GOV/ ‘SEMECARPUS ANACARDIUM’, WWW.EN.WIKIPEDIA.ORG/ ‘SEMECARPUS ANACARDIUM’


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...