ருத்திராட்சம்
சிவபெருமானின்
அடையாள மரம்
RUDRATCHUM
BEAD TREE
LORD SHIVA
தாவரவியல் பெயர்:
எலியோகார்பஸ் கனிட்ரஸ் (ELAEOCARPUS
GANITRUS)
தாவரக் குடும்பம்
பெயர்: எலியோகார்ப்பேசி (ELAEOCARPACEAE)
தாயகம்: இந்தியா, நேபால், மலேசியா (INDIA,
NEPAL, MALAYSIA)
ருத்திராட்சை என்பது ஒரு மரத்தின்
விதை.
அந்த விதைகளை மாலையாக்கி
கழுத்தில்
அணிவர். ஆன்மிகத்தில்
ஆழமான நம்பிக்கையும் ஞானமும்
இருப்பவர்கள் ருத்திராட்சை
அணிவார்கள்.
சிலர் போலியான ஆன்மிகக்
தோற்றம் தரவும்
இதனை அணிவார்கள். ஆனால்
இதுபற்றி
சரியாகக் தெரியாமல் அணிந்தால்
கெடுதல் நடக்கும் என்றும்
சொல்லுகிறார்கள்.
பொதுவாக ருத்திராட்சைக்கு
மருத்துவப்பண்புகள்
மற்றும்
ஆன்மிகப் பண்புகள் என இரண்டும் உண்டு.
இருபத்தியோரு முகங்கள்
ருத்திராட்சைக்கு முகங்கள் உண்டு.
ஒருமுகம் இருமுகம் என 21 முகங்கள் வரை
உண்டு. இ;ந்த
முகங்களின் தன்மைக்கு
ஏற்ப பலன்கள், நன்மைகள் வேறுபடும்.
ருத்திராட்சையை வாங்கும் போது
பார்த்து வாங்க
வேண்டும்.
இல்லை என்றால் உங்களை ஏமாற்றி
விடுவார்கள். இதற்கு மூன்று
பரிசோதனைகள்
உண்டு. அதனை
செய்துப்பார்த்து நல்லது எது
போலி
எது என கண்டுபிடிக்கலாம். நல்லவை,
தண்ணீரில் போட்டால் முழுதும்:
கல்லில் உரசினால்
தங்க நிறக்
கோடுகள் தெரியும்: செம்பு
நாணயாங்களுக்கு நடுவே வைத்தால்
ருத்ராட்சை
சுழலுமாம். இதில் ஏதாவது
ஒரு சோதனையைச்
செய்தால் போதும்.
இமையமலை அடிவாரத்தின்
கங்கை
சமவெளிப்பகுதிகள் முதல்
தென்கிழக்கு ஆசியா வரை நேப்பாளம்,
இந்தோனேசியா, நியூகினியா முதல்
ஆஸ்திரேலியா வரை ருத்திராட்ச
மரங்கள் பரவியுள்ளன.
பெரிய பசுமை மாறா
மரம்
ருத்திராட்ச மரங்கள், ஆண்டு முழுவதும்
பசுமை மாறாதது: வேகமாக வளரும்
பெரியமரம்: மூன்று அல்லது நான்கு
வயது மரங்கள் காய்க்கத் தொடங்கும்:
ருத்திராட்ச
பழங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
சமஸ்கிருத மொழியி;ல் ‘ருத்ரா’
(RUDRA)என்றால் சிவபெருமான்
என்று அர்த்தம். ஆக்ஷா (AKSHA)
என்றால் கண்ணீர்த்துளி (TEAR
DROPS)
என்று அர்த்தம்.
ரத்த அழுத்த நோய், சக்கரை நோய்
ருத்ராட்ச மரம் பாரம்பரிய மருத்துவம்
ஆயுர்வேத மருத்துவம் ஆகியவற்றால்
அங்கீகரிக்கப்பட்ட
மூலிகை மரம்.
உயர் ரத்த அழுத்த நோய், சக்கரை நோய்,
உடல் காய்ச்சலால் ஏற்பட்ட தளர்ச்சி,
சின்னம்மை, எலும்புருக்கி நோய்,
நாள்பட்ட இருமல், ஆஸ்துமா,
இருதய நோய்கள், நினைவுகளை
இழத்தல், புற்றுநோய், ஆகியவற்றை
குணமாக்குவதற்குரிய மருந்துகளை
இதில்
தயாரிக்க முடியும்.
அமிலநீக்கி, அழற்சி நீக்கி, கீல்வாத நீக்கி,
காய்ச்சலடக்கி, உயர் ரத்த அழுத்தம்போக்கி,
ஒவ்வாமைநீக்கி (DEMULCENT) சளி போக்கி
(EXPECTRANT) இரைப்பைக் குடல் வலி நீக்கி
(CARMINATIVE) செரிமானத் தூண்டி,
புற்றுநோய் போக்கி, மரபணு எதிர்ப்பி
(ANTI MUTAGENIC), ரத்தச் சக்கரை குறைப்பி
(HYPOGLYCEMIC), பிலிரூபின் குறைப்பி
(BILIRUBIN LOWERING), சிறுநீர்ப்பைக்கல்
அகற்றி (ANTI GOUT), வலி நிவாரணி (ANALGESIC),
தசை இறுக்கம்போக்கி (MUSCE RELAXANT),
ஆக்சிஐன் ஏற்றம் குறைப்பி (ANTI OXIDANT),
அழுத்தம் நீக்கி (ANTI STRESS), மன இருக்கம்
போக்கி(ANTI STRESS), மனத்தளர்ச்சி நீக்கி
(ANTI DEPRESSANS), அரிப்புப் போக்கி (ANTIPRURITIC)
போன்ற, 21 வகையான மருத்துப்
பண்புகளைக் கொண்டது ருத்ராட்சம்.
சிவனின் அருட்கொடை
இந்த மதத்தினர், ‘ருத்திராட்சை’ யை
சிவபெருமானின் அடையாளமாகப்
பார்க்கிறார்கள். ‘ருத்ராட்ச மாலை’
அணிவது மிகப் பெரிய
சக்தியையும்
மனத்தில் மகிழ்ச்சியையயும் மற்றும்
ஆரோக்கியத்தையும் உருவாக்கக்
கூடியது
என்று ஆழமாக நம்புகிறார்கள்.
அது
மட்டுமில்லாமல், ருத்ராட்சை மாலை
அணிவபவர்களுக்கு சிவனின்
அருட்கொடை கிடைப்பதுடன்,
பிறவி இல்லாத மோட்சநிலை
கிடைக்கும் என்றும்
நம்புகிறார்கள்.
இதனால் பக்தர்கள், சாதுக்கள்,
முனிவர்கள் போன்றோர், ருத்திராட்ச
மாலை அணிகின்றனர்.
சிலர் ஒற்றை விதை கொண்ட
ருத்திராட்ச லாக்கட்
அணிவது வழக்கம்.
எனது தாத்தா சிவபக்தர். அவர் அடிக்கடி
சொல்லும் பழமொழி என் நினைவுக்கு
வருகிறது.
“அஞ்சு எழுத்து
ஒதுகிறவனுக்கு கஞ்சி வரும்
தலைமேல்” என்று சொல்லுவார்.
ஆவர் எப்போதும் கழுத்தில் அந்த
ஒற்றை ‘ருத்திராட்ச கொட்டை’ கொண்ட
லாக்கட்டை சாகும் வரை அணித்திருக்தார்.
ருத்திராட்சகொட்டை அணிந்தவர்களில்
பிரபலமானவர்களில் எனது நினைவிலிருக்கும்
ஒருவர் திருமுருக
கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
சத்யயுகம், திரேகாயுகம், துவாபாயுகம்>
கலியுகம் என காலங்கள் தோறும்
கடவுளர்களும், ரிஷிகள், மற்றும்
முனிவர்களும் ருத்திராட்சை அணித்திருந்;தார்கள்>
என புராணங்களில் குறித்துள்ளனர்.
விஷ்ணு பத்தர்களுக்கு துளசி மாலை
அணிவது போல
சிவ பத்தர்களுக்கு
ருத்திராட்ச மாலை என்று சொல்லுகிறார்கள்.
பத்துலட்சம் விலை
போகும்
ருத்ராட்ச விதை ஒன்று பத்துலட்ச
ரூபாய்க்குக் கூட விற்பனை ஆகும்.
அது
அதில் இருக்கும் கோடுகளைப்
பொருத்தது. ஒரு
விதையில்
21 கோடுகள் இருந்தால் அதுதான்
அரியவகை ருத்ராட்சை.
அதுதான்
10 லட்சம் வரை விலைபோகும்.
சராசரியாக எல்லா ருத்ராட்ச
கொட்டைகளிலும் 5 கோடுகள்
இருக்கும். கோடுகளுக்கு
ஏற்றபடிதான் விலை.
ருத்திராட்ச விதைகளின் விலை
எக்குதப்பாக
இருப்பதால் இதில்
நிறையபேர் ஏமாற்று வேலைகளில்
ஈடுபடுகிறார்கள். அவர்களே
செயற்கையாக கோடுகள் போட்டு>
ஏமாற்றுகிறார்கள்.
சிலர் அதை
அப்படியே அச்சாக பிளாஸ்டிக்கில்
தயாரிக்கிறார்கள். இதில் நிறையபேர்
வல்லுநர்களாக
இருக்கிறார்கள்.
அவர்கள் உண்மையான
ருத்திராட்சை வாங்க உங்களுக்கு
உதவி செய்வார்கள்.
ஆனால்
அவர்களுக்கு அதற்காக அவர்கள்
வழங்கும் ஆலோசனைக்கு நாம்
ஒரு தொகை
வழங்க வேண்டும்.
ஆனால் இதனை பயிர் செய்து
எந்த விவசாயியாவது
பணம்
சம்பாதிக்கிறார்களா என்று தெரியவில்லை.
ருத்ராட்சை விதைகளில் இருக்கும்
கோடுகளை ‘முர்கி’
(MURHI) என்று
குறிப்பிடுகிறார்கள். தமிழில் முதம்.
நாம் வேண்டுமானால் ஒரு முக
ருத்ராட்சை, இருமுக ருத்ராட்சை
என்று சொல்லாம். 21க்கும் மேல்
கூடுதலான முகங்கள் இல்லை.
21 தான் அதிகபட்சம். அதிக முகங்கள்
கொண்ட
ருத்ராட்சைகள் அதிக
பயனும், சத்தியும் அளிக்கும்
என்பது நம்பிக்கை.
முதுபெரும் சித்தர் திருமூலர்
தமிழின் முதுபெரும் சித்தர்
திருமூலர் தனது
திருமந்திரம்
நூலில் ருத்ராட்சை> நெறி
பிறழாதவர்களின் அடையாளம்
என தனது
திருமந்திரத்தில்
பாடலாக எழுதி உள்ளார்.
“இணை ஆர் திருவடி ஏத்தும் சீர்வங்கத்து
இணை ஆர் இணைக்குழை, ஈரணை முத்திரை>
குணம் ஆர் இணைக் கண்ட மாலையும் குன்றாது
ஆணைவாம் சரியை கிரியை யினார்க்கே,”
-திருமந்திரம்-142
‘சரியை, கிரியை என்னும்
இரண்டு நெறிகளில் பிறழாமல்
இருப்பவர்களின் உடலில் இரண்டு
அடையாளங்கள் இருக்கும். ஒன்று
காதணிகள். இன்னொரு ருத்ராட்சையினால்
உருவாக்கப்பட்ட செபமாலை
மற்றும்
கண்டமாலை என்னும் கழுத்தணி
மாலை’ என்கிறது இந்தப் பாடல்.
மாலைகள் அணிவது
உடலால் வழிபடுவது -
இது சரியை,
கிரியை- உடலாலும் உள்ளத்தாலும் வழிபடுவது.
தே. ஞானசூரிய பகவான், போன்: 91 8526195370
Email:
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment