Saturday, December 14, 2019

REJENDARSINGH THE WATER LION - ராஜஸ்தானுக்கு ராஜேந்தர்சிங் தந்த ரகசிய ஃபார்முலா





ராஜஸ்தானுக்கு 

ராஜேந்தர்சிங் தந்த  


ரகசிய ஃபார்முலா

பாடம் 6

நடத்தியவர்; தே . ஞானசூரிய பகவான் 





88888888888888888888888

மக்கள்தொலைக்கட்சியின்

வேளாண்மைப்பள்ளி

888888888888888888888888888888

வரப்புயர நீர் உயரும் - பாடவரிசை

8888888888888888888888888888888888888

யார் இந்த ராஜேந்தர் சிங் ?


ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 
ஒட மறந்த ராஜஸ்தானத்து ஆறுகளை 
மீண்டும் உயிர்பெற்று ஓட வைத்தவர்
5000 கிராமங்களில் தண்ணீர் தன்னிறைவை 
உருவாக்கியிருப்பவர்
1200 கிராமங்களில் மிகுதியான நீருள்ள  
கிராமங்களாக மற்றிய சாதனை 
சாதித்துக்கட்டியவர். அவர் யார்
அவருடைய திருப்பெயர்தான் ராஜேந்தர்சிங்
உலகம் முழுவதும் தண்ணீர் மனிதர் 
என்று அழைக்கப்படுகிறார்.

என் கனவில் வந்தார்.

இதையெல்லாம் எப்படி தனிமனிதராக சாதித்துகாட்டினீர்கள் ? ஏதாச்சும் மந்திரக்கோல் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன், ‘ ஆமாம் நான் எனது கையில் ஒரு மந்திரக்கோல் வைத்திருக்கிறேன். அது ரொம்பவும் பாரம்பரியமானது. அது ரொம்பவும் பழசு. அதைத்தான் நான் எப்போதும் கையில் வைத்திருக்கிறேன். அந்த மந்திரக்கோலை நீங்களும் உபயோகப்படுத்தலாம். ஜோஹாத் என்பதுதான் நான் வைத்திருக்கும் மந்திரக்கோல். மழையை மடக்கிப்பிடிப்பதுதான் அதன் முக்கியமான வேலை. அதை பயன்படுத்தும்போது ஒரு மந்திரம் சொல்லவேண்டும் என்று சொன்னார். என்ன மந்திரம் என்றேன். அவர் சொன்னார்

ஓடும் நீரே நடந்து போ
நடக்கும் நீரே நின்று போ
நிற்கும் நீரே பூமியில் இறங்கிப்போ
என்று சொல்லிவிட்டு  
அதற்கு வழி செய்ய வெண்டும் என்றார்.

அதன் பிறகு அவரிடம் கேட்டேன் ஜோஹாத்ன்னா என்னன்னு கேட்டேன். ‘உங்க ஊர்ல ஏரி குளம்னு சொல்றதுதான் இங்க ஜோஹாத்அப்படின்னு சொன்னார்.  இன்னொரு கேள்வி கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்குள் என் கனவு கலைந்துவிட்டது.

தண்ணீர் சிங்கம்

இந்த ஜோகாத்கள் அங்கு மட்டுமல்ல ஹரியானா பஞ்சாப் உத்திரப்பிரதேசம் ஆகிய ,டங்களிலும் புழக்கத்தில் உள்ளன.

ஜோகாத்கள் பெரும்பாலும் ஒரு கிராமத்திற்கு சொந்தமானவைகளாக ,ருக்கும். மழை அறுவடை செய்வதும் அதன் மூலம்  நீரை சேமிப்பதும் நிலத்தடி நீரை கூட்டுவதும்தான் இவற்றின் முக்கியமான நோக்கம்.

தமிழ்நாட்டின் ஜோஹாத்கள் 39000

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 5000 கிலோ ஜோகாத்கள் ,ருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு அதைவிட கூடுதலாக ,ருக்கலாம் என்று என்று நான் நம்புகிறேன்
ஆனால் தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் வெட்டிய ஏரிகள் அல்லது குளங்களை  மட்டும் 39000 ஏரிகள் என தமிழ்நாட்டின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.
தமிழ்நாட்டில் குளங்களில் ஏரிகளில் மழைநீரை சேமித்தால் நிச்சயமாக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து விடலாம். தமிழ்நாட்டின்  மழை ராஜஸ்தானைவிட மிக அதிகம் என்கிறார் சிங்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 

ஆண்டு சரசரி மழை அளவு

இந்த இடத்தில் ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழையை தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைக்கும்  ஆண்டு சராசரி மழை 200 முதல் 400 மி.மீ. மட்டுமே. மேற்கு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் பெறும் மழை வெறும் 185 மி.மீ. மட்டுமே.
ராஜஸ்தானில் பெரும் மழையைவிட தமிழ்நாட்டில் பெறுவது ஏறத்தாழ இரண்டு பங்கு அதிகம். தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 945 மி.மீ.

மழை சேமிப்புப் பாத்திரங்கள்

தமிழ்நாடு மட்டுமல்ல ந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து விட முடியும்.
அதற்கு வேண்டியது நமது கிராமங்களில் ருக்கின்ற ஏரிகள், குளங்கள், ஓடைகள், மற்றும்  ஆறுகளை, எல்லாம் செப்பனிட வேண்டும். காரணம், நாம் மழை அறுவடையை பத்திரமாக சேமிப்புசெய்வதற்காமழைசேமிப்பு பாத்திரங்கள் இவைதான். தமிழ் நாட்டில் மட்டும் 33 ஆற்றுப்படுகைகளும் 39000 ஏரிகளும் இரண்டரை லட்சம் ஓடைகளும் மழைநீர் சேகரிக்கும் பாத்திரங்கள் நம்மிடையே இருக்கின்றன.

மழை அறுவடை மட்டும்தான் 
நிரந்தரமான தீர்வு

குடிக்க, சமைக்க, குளிக்க> துவைக்க> இதர வீட்டு தேவைகளுக்கு எடுக்க, ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட், குளிப்பாட்ட, வண்டிவாகனங்களைக்  கழுவ, தொழிற்சாலை பாய்லர்களை நிரப்ப, இயந்திரங்களை குளிரவைக்க  இப்படி எல்லாவற்றிற்கும் ராஜஸ்தான் மக்களுக்கு பயன்படுவது ஜோகாத்கள்தான்.
ஆண்டு முழுவதும் அதாவது வருஷம் 365 நாளும் ஜோகாத்களில் தண்ணீர் தண்ணீர் தேங்கி நிற்கும்படியாக அவற்றை பராமரிக்கிர்றார்கள். நிலத்தடி நீர்வளம் சுலபமாக அதிகரிக்கிறது.

இரண்டு மாதம் 

சேமிக்கிறார்கள்

ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழை வெறும் 200 முதல் 400 மில்லி மீட்டர் மட்டுமே ஆனால் தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 945 மில்லி மீட்டர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மழை பெய்கிறது ந்த மழையை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேகரிக்கிறார்கள்> சேமிக்கிறார்கள்.

ந்த இரண்டு மாதங்களில் பெய்த மழையை சேமித்து பத்துமாதங்களுக்கு
பயன்படுத்துவதுதான் ராஜேந்தர்சிங் ராஜஸ்தானுக்கு தந்திருக்கும் ரகசிய பார்முலா.


888888888888888888888888


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...