Saturday, December 14, 2019

RAINFALL IN TAMILNADU - தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு மழை ?


தமிழ்நாட்டில் எந்த 
மாவட்டத்தில் 
எவ்வளவு மழை ?

பாடம் 7

நடத்தியவர்; தே . ஞானசூரிய பகவான் 






8888888888888888888888888888888888888888888

மக்கள்தொலைக்கட்சியின்

வேளாண்மைப்பள்ளி



8888888888888888888888888888888888888888888888888888

வரப்புயர நீர் உயரும் - பாடவரிசை

8888888888888888888888888888888888888


 (வெள்ளத்தை வடிப்பதற்கான 
ஏற்பாடுகளை வெள்ளம் இல்லாத 
ஆண்டுகளிலேயே தொடர்ந்து 
செய்யவேண்டும்வெள்ளநீரை 
சேமிப்பதற்கான கட்டுமானங்களை 
வெள்ளம் இல்லாத ஆண்டுகளிலேயே 
தொடர்ந்து செய்யவேண்டும்
இந்த இரண்டு காரியங்களை 
தொடர்ந்து செய்தால் வறட்சியை 
சமாளிக்கலாம்இன்னொன்று 
குடிநீர் பஞ்சத்தையும்   சமாளிக்கலாம்.)

தமிழ்நாட்டின் பருவமழைகள்


தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, குளிர்பருவ மழை, கோடைப் பருவமழைஇந்த நான்கு பருவமழைகள் மூலமாகத்தான் நமக்கு மழை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டெம்பர்இந்த நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழை கிடைக்கும் காலகட்டம். அடுத்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் நவம்பர் டிசம்பர் இந்த மூணு மாதங்களில் பெய்யும். ஜனவரிஃபிப்ரவரி மாதங்கள்ள குளிர் பருவ மழை பெய்யும். மார்ச் ஏப்ரல் மே மாதங்கள்ள பெய்யும் மழைக்கு கோடை மழைன்னு பேரு. இதில் அதிக மழை தருவது வடகிழக்கு பருவமழைதான். இதற்கு அடுத்ததுதான் தென்மேற்கு பருவமழை. குளிர் பருவம் மற்றும் கோடப்பருவம் மூலமா கிடைக்கும் மழை ரொம்ப ரொம்ப குறைவு.

இயல்பு மழை 

என்றால் என்ன ?


ஒரு ஆண்டில் இயல்பு மழையைவிட அதிகம் பெய்யும். அடுத்த ஆண்டு குறைவாக பெய்யும். இன்னும் சில ஆண்டில் நடுத்தரமான அளவு பெய்யும். சில ஆண்டுகளில் சுத்தமாக துடைத்து வைத்தமாதிரி ஒரு சொட்டுகூட பெய்யாது. இப்படி  25 அல்லது 30 ஆண்டுகளில் இதன் சராசரியை கணக்கிட்டுப் பார்த்தால் ஏறத்தாழ இயல்பான மழைக்கு சமமாக இருக்கும். ஓர் ஆண்டில் நமக்கு கிடைத்த மழை குறைவா ? நிறைவா ? அதிகமா என்பதை தெரிந்து கொள்ள நாம் இயல்பு மழை எவ்வளவு  என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் கிடைக்கும் மழை


இந்தியாவின் ஆண்டு சராசரி மழை 1250 மில்லி மீட்டர் என்பது நமக்கு தெரியும். இதனை இயல்பு மழை (NORMAL RAINFALL) என்றும் குறிப்பிடுகின்றனர்;.

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை (அ) இயல்பு மழை  945 முதல் 950 மில்லி மீட்டர் வரை.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 11 ல் அதிக மழையும், 14 ல் நடுத்தரமான அளவும், 7 ல் குறைவான அளவும், மழை பெய்கிறது.

அதிகபட்சமான மழை என்பது 1000 மில்லி மீட்டருக்குமேல். நடுத்தரம் என்பது 800 மில்லி மீட்டருக்கும்மேல். குறைந்தபட்சமான மழை என்பது  800 மில்லி மீட்டருக்கும் கீழ்.

கடலோர மாவட்டங்களில் அதிக மழையும்> பிற மாவட்டங்களில் குறைவான மற்றும் நடுத்தரமான அளவு மழையும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது.


அதிக மழை பெறும் மாவட்டம் நீலகிரி


1695.7 மில்லி மீடடர் ஒரு ஆண்டின் இயல்பு மழையாகப் பெறும்  நீலகிரி மாவட்டம்தான் தமிழ்நாட்டில் அதிகமாக மழை பெறும் மாவட்டம்.

மிகக்குறைவான மழை பெறும் மாவட்டம் தூத்துக்குடி


621 மில்லி மீட்டர் ஓர் ஆண்டின் இயல்பு மழையாக பெறும் தூத்துக்குடி மாவட்டம் தான் தமிழ்நாட்டில் குறைவான மழைபெறும் மாவட்டம்.

மாவட்டம்வாரியான 

மழை விவரம்


கூடுதலான அளவு 

மழைபெறும் மாவட்டங்கள் – 13

(1000 மி.மீ. மேல்)

இப்போது எந்தெந்த மாவட்டங்களில் அதக மழை பெய்கிறது என்று பார்க்கலாம். அவை 1. சென்னை (1298 மி.மீ.), 2. காஞ்சிபுரம் (1200 மி.மீ.), 3. திருவள்ளுர் (1104 மி.மீ.), 4. திருவண்ணாமலை (1033 மி.மீ.) , 5. விழுப்புரம் (1060..3 மி.மீ.), 6. கடலூர் (1050 மி.மீ.), 7. அரியலூர் (1139 மி.மீ.), 8. பெரம்பலூர் (1123 மி.மீ.), 9. தஞ்சாவூர் (1179 மி.மீ.), 10. திருவாருர் (1129 மி.மீ.), 11. நாகப்பட்டினம் (1341 மி.மீ.), 12. கன்னியாகுமரி (1006 மி.மீ.), மற்றும் 13. நீலகிரி (1695 மி.மீ.)

நடுத்தரமான அளவு மழைபெறும் மாவட்டங்கள் – 9
(800 மி.மீ. க்கும் மேல் 999 மி.மீ. வரை)


நடுத்தரமான அளவு மழைபெறும் 9 மாவட்டங்கள் 1. வேலூர் (917 மி.மீ.) , 2. கிருஷ்ணகிரி (750 - 900 மி.மீ.), 3. தர்மபுரி (853 மி.மீ.), 4. புதுக்கோட்டை (821 மி.மீ.), 5. மதுரை (811.314 மி.மீ.), 6. தேனி (791.2 மி.மீ.), 7. ராமநாதபுரம் (821 மி.மீ.), 8. விருதுநகர் (724 - 913 மி.மீ.), 9. சிவகங்கை (861.8 988.6 மி.மீ.)

குறைவான அளவு மழைபெறும் மாவட்டங்கள் – 8
(800 மி.மீ. மற்றும் அதற்கு கீழ்)


தமழ்நாட்டில் குறைவாக மழை பெறும் 7 மாவட்டங்கள் 1.சேலம் (800 - 1600 மி.மீ.) 2. நாமக்கல் (640 - 880 மி.மீ.) 3. கரூர் (742 மி.மீ.)> 4. ஈரோடு (572 - 833 மி.மீ.)> 5. திண்டுக்கல் (700 - 1006 மி.மீ.)> 6. திருச்சிராப்பள்ளி (730 900  மி.மீ.)> 7. திருநெல்வேலி (736 மி.மீ.)> மற்றும் 8. தூத்துக்குடி (621 மி.மீ.).
  

விழிப்புணர்வு வேண்டும்


நம்ம தமிழ்நாட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு மழை கிடைக்கிறது இதை தெரிந்து கொள்ளாமல் இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க இயலாது.

வறட்சி> வெள்ளம்> குடிநீர்ப் பஞ்சம்> இவைதான் ஒரு நாட்டின் பிரதானப் பிரச்சனைகள். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியுமா முடியும்.

இவை வராமல் தடுக்க முடியுமா ? முடியும். இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா ? முடியும். இவற்றால் ஏற்படும் சேதங்களை குறைக்க முடியுமா ? முடியும்.

வெள்ளத்தை வடிப்பதற்கான ஏற்பாடுகளை வெள்ளம் இல்லாத ஆண்டுகளிலேயே தொடர்ந்து செய்யவேண்டும். வெள்ளநீரை சேமிப்பதற்கான கட்டுமானங்களை வெள்ளம் இல்லாத ஆண்டுகளிலேயே தொடர்ந்து செய்யவேண்டும். இந்த இரண்டு காரியங்களை தொடர்ந்து செய்தால் வறட்சியை சமாளிக்கலாம். இன்னொன்று குடிநீர் பஞ்சத்தையும் சமாளிக்கலாம்.

மழையின் பண்புகளை புரிந்துகொள்ளவேண்டும்


இவற்றை செய்ய வேண்டுமென்றால்> மழையின் பண்புகளை; நாம் இன்னும கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இயல்பு மழை என்று நாம் தீர்மானம் செய்தவாறு பெய்யவில்லை என்பதற்காக மழையை யாரும் கண்டிக்கவும் முடியாது. தண்டிக்கவும் முடியாது. கேள்வி கேட்க முடியாது.
இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்லித் தரும்  பாடம் ஒன்றுதான். தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நீரை சேமிப்பதுதான்.

நமக்கு கிடைக்கும் மழையை சேமித்தால்  மட்டுமே போதும்;. அண்டை மாநிலத்தில நாம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ்நாட்டின் மாநிலங்கள்வாரியானஆண்டுசராசரி மழை விபரம்


கூடுதலான அளவு மழைபெறும்
மாவட்டங்கள் – 13 (1000 மி.மீ. மேல்)

1. சென்னை (1298 மி.மீ.)
2. காஞ்சிபுரம் (1200 மி.மீ.)
3. திருவள்ளுர் (1104 மி.மீ.)
4. திருவண்ணாமலை (1033 மி.மீ.)  
5. விழுப்புரம் (1060..3 மி.மீ.)
6. கடலூர் (1050 மி.மீ.)
7. அரியலூர் (1139 மி.மீ.)
8. பெரம்பலூர் (1123 மி.மீ.)
9. தஞ்சாவூர் (1179 மி.மீ.)
10. திருவாருர் (1129 மி.மீ.)>
11. நாகப்பட்டினம் (1341 மி.மீ.)
12. கன்னியாகுமரி (1006 மி.மீ.)
13. நீலகிரி (1695 மி.மீ.)

நடுத்தரமான அளவு மழைபெறும்
மாவட்டங்கள் – 9 (800 மி.மீ. க்கும்
மேல் 999 மி.மீ. வரை)

1. வேலூர் (917 மி.மீ.)  
2. கிருஷ்ணகிரி (750 - 900 மி.மீ.)
3. தர்மபுரி (853 மி.மீ.)
4. புதுக்கோட்டை (821 மி.மீ.)
5. மதுரை (811.314 மி.மீ.)
6. தேனி (791.2 மி.மீ.)
7. ராமநாதபுரம் (821 மி.மீ.)
8. விருதுநகர் (724 - 913 மி.மீ.)
9. சிவகங்கை (861.8 988.6 மி.மீ.)

குறைவான அளவு
மழைபெறும் மாவட்டங்கள் – 8
(800 மி.மீ. மற்றும் அதற்கு கீழ்)


1.சேலம் (800 - 1600 மி.மீ.)
2. நாமக்கல் (640 - 880 மி.மீ.)
3. கரூர் (742 மி.மீ.)
4. ஈரோடு (572 - 833 மி.மீ.)
5. திண்டுக்கல் (700 - 1006 மி.மீ.)
6. திருச்சிராப்பள்ளி (730 900  மி.மீ.)
7. திருநெல்வேலி (736 மி.மீ.)
8. தூத்துக்குடி (621 மி.மீ.)
9. கோயம்புத்தூர் (621 மி.மீ.)
10. திருப்பத்தூர் (694 மி.மீ.)

888888888888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...