Wednesday, December 18, 2019

மழைநீரை சுத்தம் செய்வது எப்படி ? HOW TO CLEAN RAINWATER TO DRINK ?


RAIN  HARVESTING POTS OF PAZHAVERKADU


மழைநீரை சுத்தம் செய்வது  

எப்படி ?





HOW TO CLEAN
RAINWATER TO DRINK ?

தே.ஞான சூரிய பகவான் B.Sc(Ag), M.A (jmc)

888888888888888888888888888888

எத்தனை குடிநீர் திட்டங்கள் வந்தாலும் உடனடியாக நமது குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. மழை நீரை அறுவடை செய்து குடிநீராகப் பயன்படுத்துவது ஒன்றுதான் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரமான அல்லது நீடித்த தீர்வு தரும்.


இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சுத்தமாக பொய்த்துப்போனாலும் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வரும் வடகிழக்கு பருவ மழையும் சாதகமாக இருக்கும் என நம்பலாம்.மழை நீர் பற்றி பலரும் கேட்கும் அடிக்கடி கேள்விகளுக்கான பதில்களை கீழே தொகுத்து அளித்துள்ளேன்.


1. மழைநீரை குடிக்கலாமா.. ?  கூடாதா ..? 

குடிக்கலாம். பயம் வேண்டாம். 
உலகம் முழுக்க பல நாடுகளில் 
மழை நீரை இன்றும் குடிக்கிறார்கள். 
மழை நீருக்கு சமமான சுத்தமான 
நீர் எதுவும் இல்லை.

2. மழைநீர் சுத்தமானதா ..? 

மழைநீர் சுத்தமானதுதான்; சுத்தமாக 
சேமித்தால் சுத்தமான மழைநீர் கிடைக்கும்.

3. மழைநீர் குடிப்பதற்கு ஏற்ற 
தரமான குடிநீரா ..? 

குடிப்பதற்கு ஏற்ற தரமான குடிநீர் 
என்று பார்த்தால் கிணற்று நீர், குழாய்நீர், 
பாட்டில் தண்ணீர் இவை 
எல்லாவற்றையும்விட 
தரமானது மழைநீர்.


4. மழை நீரில் தாது உப்புக்கள் இல்லை 
என்று சொல்லுகிறார்களே, 
அதைக் குடிப்பதால் சத்துக் குறைபாடு 
ஏற்படாதா ?

நாம் சாப்பிடும் உணவுப்  பொருட்களிலிருந்து 
அவை கிடைக்கிறது அதனால் நாம் குடிக்கும் நீர் 
சுத்தமாக இருந்தால் போதும்.


5. தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா  
அல்லது நோய்க் கிருமிகளை அழிக்க 
என்ன செய்ய வேண்டும் ..?

பத்து காலன் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் 
பிளீச்சிங் பவுடர் கரைத்து விடுங்கள். அதன்பின்னர் 
30 நிமிடம் கழித்து அந்த தண்ணீரைப் 
பயன்படுத்தலாம்.

6. பிளீச்சிங் பவுடர் என்பது  
என்ன ரசாயனம் ..? 

சோடியம் ஹைப்போ குளோரைட்  
என்பதுதான் அந்த ரசாயனம்.  
தண்ணீரை சுத்தப்படுத்தும் சோடியம் 
ஹைப்போ குளோரைட்  5 முதல் 6 %  
திறன் கொண்டதாக இருக்கும்.

7. குடிநீரில்  அதிகபட்சமாக எவ்வளவு   
குளோரின் இருக்கலாம் ..? 

அதிகபட்சமாக குளோரின் 4 பி பி எம் வரை 
இருக்கலாம்.  பி பி எம்.  என்றால் 
பார்ட்ஸ் பெர் மில்லியன் என்பர். 
அப்படி என்றால் பத்து லட்சத்தில் 
4 பங்கு என்று  அர்த்தம்.

8. குடிநீரில் பிளீச்சிங் பவுடர் கலந்த பிறகு 
எவ்வளவு நேரம் கழித்து அதனைப் 
பயன்படுத்தலாம் ..? 

இதனைக் கலந்த பிறகு 
அரைமணி நேரம் கழித்து 
குடிக்கவோ,  சமைக்கவோ 
பயன்படுத்தலாம்.

9. மழைநீரை சுத்தப்படுத்துவது 
ரொம்பவும் கடினமான வேலையா ..? 
 
சேமித்த மழைநீரை வடிகட்டி 
கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். 
இது கடினமான காரியமா ..?  
அதில் கிருமிகள் இருக்கலாம் என்று 
சந்தேகப்பட்டால் பிளீச்சிங் பவுடர் 
கலக்க வேண்டும்.   கலந்த பிறகு 30 நிமிடம் கழித்து 
குடிக்கலாம். மழை நீரை சேமித்து குடித்தால் மட்டுமே 
குடிநீர் பஞ்சத்துக்கு தீர்வு காண முடியும்.


10. சேமிக்கும்போதே சுத்தமான 
மழைநீரை சேகரிக்க முடியுமா ..? 

கண்டிப்பாக முடியும். மழைநீர் சேகரிக்கும் 
கட்டிடக் கூரையிலிருந்து  சேமிக்கும் பாத்திரம் 
அல்லது தொட்டிக்கு எடுத்து செல்லும் 
குழாய், அடுத்து சேமிக்கும் பாத்திரம், 
அல்லது தொட்டி,  இந்த மூன்றையும் 
சுத்தமாக வைத்துக் கொண்டால், 
சுத்தமான மழைநீரை சேமிக்கலாம்.
சேமித்துக் குடிக்கலாம். குளிக்கலாம். சமைக்கலாம். 
துவைக்கலாம். கழிவறையை சுத்தம் செய்யலாம். 
சைக்கிள் டுவீலர் கார் அத்தனையும் 
கழுவலாம். தொட்டிச் செடிகளுக்கு 
உயிர் கொடுக்கலாம். அத்தனைக்கும் மழை நீர் 
மட்டும்தான் கைகொடுக்கும்.

8888888888888888888888888888888888888888



No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...