Saturday, December 14, 2019

RAIN COULD ONLY RAIN - மழைக்கு பேயத்தான் தெரியும் பேசத் தெரியாது !




மழைக்கு பேயத்தான் தெரியும் 

பேசத் தெரியாது ! 


பாடம் 4


நடத்துபவர் 

தே. ஞானசூரிய பகவான் 



(மக்கள் தொலைக்காட்சியில் 

மலரும் பூமியில்  

வேளாண்மைத் தொடராக 

ஒளிபரப்பானது) 


(A TV SERIAL)

பொதுத் தலைப்பு

வரப்புயர நீர் உயரும்



ஒர் ஆண்டில் சராசரியாக தமிழ்நாட்டில் 
கிடைக்கும் மழை 950 மில்லி மீட்டர்.
மழைக்கு பேயத்தான் தெரியும்

'தேவைக்கு மேல் பெய்து கொண்டுதான் 
இருக்கிறேன். அதை சேமித்து வைத்துக் கொள்ள 
துப்பு இல்லை என்றால் அது யாருடைய தப்பு ?" 
மழைக்கு பேசத் தெரிந்தால் இப்படி கேட்கும். 
அதற்கு பேயத் தெரியுமே தவிர பேசத் தெரியாது.


சிரபுஞ்சியில் தண்ணீர் பஞ்சம்


உலகத்தில் அதிக மழை ஊற்றும் ஊர் 
சிரபுஞ்சி என்பது தெரிந்த சேதி. 
ஆனால் ஓர் ஆண்டில் ஆறு மாதம் 
குடம் இங்கே குடிநீர் எங்கே? என்று 
சிரபுஞ்சி தாய்மார்கள் குடத்துடன் 
குரல் கொடுப்பது தெரியாத சேதி. 
எங்க ஊர்ல அதிக மழை பேயுதுன்னு  
அஜாக்கிரதையா இருந்துட்டோம். 
எவ்வளவு பேஞ்சாலும் 
அதை சேமிக்கலன்னா 
நம்ம தண்டிக்காமல் விடாது தண்ணீர் என்று 
புரிஞ்சிகிட்டோம். 
இது எங்களுக்கு மழை 
சொல்லித் தந்த பாடம்"
 என்கிறார்கள் சிரபுஞ்சிக்காரர்கள்.

'புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவங்களில் கற்றுக்கொள்ளுவார்கள்" நாம் சிரபுஞ்சியைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டும்ஏற்கனவே பெரிய விலையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.


ஆறில் ஒருபங்கு ஆற்றில் ஓடும்


பெய்யக்கூடிய மொத்த மழைநீர் ஆறு பங்கு என்றால் அதில் ஒரு பங்குதான் ஆற்றில் ஓடும். ஆறு என்பது அதனால் வந்த பெயரா மீதம் உள்ள ஐந்து பங்கு நீர் பூமிக்குள் இறங்கும். அந்த ஐந்து பங்கில் நான்கு பங்கு நம் கையில் அகப்படாத நீர். அந்த நான்கு பங்கும் சேதாரம் ஆகிவிடும். கடைசி ஒரே ஒரு பங்கு மட்டுமே நிலத்தடி நீராக தங்கும். இவை எல்லாம் ஒரு ஆணியையும் நாம் பிடுங்காமலே நடக்கும் சமாச்சாரங்கள்.

நான்கு பங்கு நீர் வீணாகிறது


இதே ரீதியில் பார்த்தால் இந்தியாவில் ஓர் ஆண்டில் பெய்யும் சராசரி மழை அளவு 1250 மிமீ. அதில் ஆற்றின் ஓடும் நீரின் அளவு 208.3 மிமீ. 1041.7 மிமீ. நீர் பூமிக்குள் இறங்கும். 833.4 மிமீ நீர் வீணாகப் போகிறது. நிலத்தடி நீராக சேகரம் ஆவது 208.3 மிமீ. மட்டும்தான்.

மழையின் பண்புகள்


'நமக்கு கிடைக்கும் மழை அதிகம். உலக நாடுகளின் சராசரி மழை அளவைவிட அதிகம். மழை சில ஆண்டுகளில் குறைவாகப் பெய்யும். சில ஆண்டுகளில்அதிகமாகப் பெய்யும். பருவ மழை சில ஆண்டுகள் சரியான சமயத்தில் பெய்யும்.

சில ஆண்டுகள் தாமதமாகப் பெய்யும். சில ஆண்டுகள் பரவலாகப்பெய்யும். சில ஆண்டுகளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கூட பெய்துவிட்டு கம்பி நீட்டும். தேவையான சமயத்தில் பேயாதுபல சமயங்களில்;.

மழை நீரை சேமித்தால்

 தண்ணீர் பஞ்சம் வராது


சிலசமயம் உடுக்கை இழந்தவன் 
கைபோல கை நீட்டும்" இதுதான் மழையின் பண்பு. 
இதற்கு முக்கிய காரணம் பருவக்கால மாற்றம்.

அந்த மழை நீரை ஒழுங்காய் சேமித்தால் 
தண்ணீர் பஞ்சம் வராது. வரட்சிவராது. 
பயிர் இழப்பு வராது. விவசாயிகளுக்கு 
வருமான இழப்பும் வராது. கிராமத்தில் 
ரீயல் எஸ்ட்டேட்டும் வராது. 
பருவநிலை மாற்றத்தினால் 
ஏற்படும் விளைவுகளையும் 
தவிர்க்கலாம் தடுக்கலாம்.

இதை வீட்டிலும் செய்யலாம் 
பயிர் செய்யும் காட்டிலும் செய்யலாம். 
எப்படி செய்யலாம் என்பதைத்தான் 
நாம் திட்டமிட வேண்டும்.

88888888888888888888888888888888888888888








No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...