Thursday, December 26, 2019

பன்னீர்மரம் ஒரு பாலுணர்வுத் தூண்டி மூலிகை மரம் - PANNEER MARAM NATURAL SEX DRIVING HERB




பன்னீர்மரம்  ஒரு 

பாலுணர்வுத் தூண்டி 

மூலிகை மரம்


PANNEER MARAM NATURALSEX DRIVING HERB




தாவரவியல் பெயர்: கெட்டார்டா ஸ்பீசியோசா (GETTARDA SPECIOSA)தாவரக்குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)பொதுப்பெயர்கள்: பீச் கார்டெனியாசீப்ரா வுட், சீ ரேண்டியா, இண்டியன் லேவண்டர் ட்ரீ (BEACH GARDENIA, ZEBRA WOOD, SEA RANDIA, INDIAN LAVENDER TREE)தாயகம்: இந்தியா (INDIA)


இந்த மரம் பல நாடுகளில் வெப்பமண்டல 
கடலோர பகுதிகளில் பரவி உள்ளன. அவை 
கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, சிங்கப்பூர் உட்பட 
ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள
பாலிநேசியா மற்றும் பசுபிக் தீவுகள.
இந்தியாவில் இந்த மரம் தெயவீக 
மரமாக கருதப்படுகிறது.

பன்னீர் பூக்களுக்கு தேசிய மலராக 
அங்கீகாரம் தந்துள்ளது மார்ஷல் தீவுகள் 
என்னும் நாடு. பன்னீர் மரங்கள் 16 முதல் 
30 மீட்டர் வரை உயரமாக வளரும். இதன் 
பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும.
மாலையில் மலர்ந்து அடுத்த நாள் 
காலையில் உதிர்ந்து போகும்.

1. பன்னீர் மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

1.1. தமிழ்: பன்னீர் மரம், சிவகாய மரம்
காசி பன்னீர் மரம், மயிலாம்பூ மரம்
தெய்வப்பூ மரம் (PANNEER MARAM, SIVAKAYA 
MARAM, KASI PANNEER MARAM, MAYILAMPOO 
MARAM. DEIVAPOO MARAM)
1.2. தெலுங்கு: பன்னீர்செட்டு, பன்னீர் 
புஷ்பா (PANNEER SETTU, PANNER PUSHPA)
1.3. மலையாளம்: ரவா பூ (RAVAPOO)
1.4. சமஸ்கிருதம்: ஹின்மா (HINMA)
1.5. கன்னடம்: பிலிஹ_வினா லக்கி, பன்னீர்
ஆலு (BILI HOOVINA LAKI, PANNIR AALU)

இந்த பன்னீர் மரம் சிவபெருமான் மற்றும் மகா விஷ்ணுவுக்கு உரிய தெய்வீகமான மரம். 

தலைக்குத் தேய்க்கும்  எண்ணெயுடன் வாசனைக்காக  இந்தப் பன்னீர் பூக்களைப் போட்டு வைத்துப்  பின்னர் பயன்படுத்துகிறார்கள்.


பாலுணர்வு தூண்டும் சக்தி கொண்டது இது. இதன் இலைகள் மற்றும் பூக்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள்.


இதன் இலைகள் அகலமானவை நமது வாழை இலை போல அதில் உணவு பரிமாறுகிறார்கள்.


தலைமுடிக்கு பயன்படுத்தும் கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயார் செய்கிறார்கள்.


மரியானா என்னும் பெயருடைய பழவவ்வால்கள்.இதன் பழங்களை
விரும்பி சாப்பிடும்



ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் 
தலைவலி, கை கால்வலி, போன்றவற்றை 
குணப்படுத்த இதன் இலைகளைப் 
பயன்படுத்துகிறார்கள். பன்னீர் பூக்கள் 
மிகுந்த வாசனையுடன் இருக்கும்.  
குக் தீவுகளில் வசிக்கும் மக்கள் 
தலைக்குத் தேய்க்கும்  எண்ணெயுடன் 
வாசனைக்காக  இந்தப் பன்னீர் 
பூக்களைப் போட்டு வைத்துப்  
பின்னர் பயன்படுத்துகிறார்கள்.

பாலுணர்வு தூண்டும் சக்தி கொண்டது 
இது. இதன் இலைகள் மற்றும் பூக்களை 
இதற்குப் பயன்படுத்துகிறார்கள.; இதன் 
இலைகள் அல்லது பூக்களை தண்ணீரில் 
போட்டு ஊறவைத்து, வடிகட்டி பானமாக 
அருந்துகிறார்கள்.; பழங்குடி மக்களின் 
விருப்ப பானம் இது.

இதன் இலைகள் அகலமானவை 
நமது வாழை இலை போல அதில் 
உணவு பரிமாறுகிறார்கள். யூஸ் 
அண்ட் த்ரோ தட்டுக்களாகவும் 
இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள.
குழந்தைகளின் துணிகளை சுத்தப்படுத்தவும்,
டாய்லெட் பேப்பர் போலவும் இதனைப் 
பயன்படுத்துகிறார்கள.; தலைமுடிக்கு 
பயன்படுத்தும் கருப்பு நிற சாயமும் 
இந்த இலைகளில் இருந்து தயார் 
செய்கிறார்கள்.

இந்த மரங்களின் 
அடிமரக் கட்டைகள், பலகைகள்
கம்புகள், வேர்க்கட்டைகள் அனைத்தையும்   
பலவித காரியங்களுக்காக 
பயன்படுத்துகிறார்கள். அவை வீடுகள் 
கட்டுவதற்கான மரச்சாமான்கள,; 
மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் 
பிடிப்பதற்கான வலைகளில் பொருத்தும் 
கைப்பிடிகள், உயரமான மரங்களில் 
பழங்களை அறுவடை செய்வதற்கான 
நீளமான கவைக் கொம்புகள், கேனோஸ் 
என்னும் சிறு படகுகளைக் குடைந்து 
செய்வதற்கான பெரும் மரத் துண்டுகள்,  
அதற்கான துடுப்புகள் செய்யவும் 
பயனாகிறது.

இதன் பழங்கள் கொத்துக் கொத்தாகக் 
காய்க்கும். இந்த பழங்களுக்குக் காம்புகள் 
கிடையாது. உருண்டையான் 
கோலிக்குண்டுகளை போல இருக்கும். 
ஒவ்வொரு பழத்திலும் 4 முதல் 6 விதைகள் 
இருக்கும். பழங்களை தொட்டால் 
மெத்தென மிருதுவாக இருக்கும்.

வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த 
மரங்கள் நன்கு வளரும.; அதிலும் 
குறிப்பாக மணல் சாரியான, கடற்கரை 
பகுதிகள் இதற்கு பொருத்தமான இடம். 
இதற்கு நல்ல வடிகால் வசதி அவசியம் 
தேவை புதிய ரகங்களை உருவாக்குவது 
கொஞ்சம் கடினமான காரியம் காரணம.
இதன் விதைகள் முளைக்க 
பல மாதங்கள் பிடிக்கும.;

மரியானா என்னும் பெயருடைய 
பழவவ்வால்கள். இதன் பழங்களை 
விரும்பி சாப்பிடும். இந்த மரங்களின் 
விதைகளை பல்வேறு இடங்களிலும் 
பரப்புவதற்கு முக்கியமான காரணமாக 
இருப்பவை இந்த வவ்வால்கள்தான.
இந்த வவ்வால்கள்தான் பழங்களை 
சாப்பிட்டுவிட்டு விதைகளை தங்கள் 
சாணத்தின் மூலமாக பல பகுதிகளலும்
பரப்புகின்றன. அதன் மூலமாக 
புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன.

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் 
ஆண்டு வரையில் 1865 தமிழகத்தின் 
கோவில்களில் ஒரு தல விருட்சங்கள் 
பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் 
சுமார் 112 வகையான தாவர வகைகள் 
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 
ஒன்றுதான் இந்த பன்னீர் மரம்.

இந்த பன்னீர் மரம் சிவபெருமான் 
மற்றும் மகா விஷ்ணுவுக்கு உரிய 
தெய்வீகமான மரம்.  திருச்செந்தூர் 
முருகன் கோவிலுக்கு உரிய புனிதமான 
மரம் இந்த பன்னீர் மரம.; திருச்செந்தூர் 
கோயிலில் பக்தர்கள் அளிக்கும் விபூதி 
பிரசாதம் இந்த பன்னீர் மர இலைகளில்தான் 
தருவார்கள் இந்த மரத்தின் அழகான 
வெண்மை நிற பூக்களை அர்ச்சனை 
செய்வதற்காக தெய்வச் சிலைகளுக்கு 
மாலைகள் தயாரிக்கவும் 
பயன் படுத்துகிறார்கள்.

தே. ஞானசூரிய பகவான், போன்: 
91-8526195370, 
இமெயில் :gsbahavan@gmail.com

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html


www.murugan.org/research - sacred trees in murugan temples
www.florafaunaweb.nparks.gov.sg/ Guettarda speciosa
www.tropical.theferns.info/ Guettarda speciosa
www.keys.trin.org.au/ -  Guettarda speciosa
www.ecoterritae.cpree.org – CPR Environmental Education Centre
www.scribd.com – Enthnomedicinal uses of sthalavrikshas (Temple Trees) in Tamilnadu, South India.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...