Wednesday, December 25, 2019

மரூலா மரம் - ஆனைமயக்கும் ஆப்ரிக்க மரம் MARULA - ELEPHANT CHARMING TREE




மரூலா மரம் - 

ஆனைமயக்கும் 

ஆப்ரிக்க மரம்


MARULA - ELEPHANT

CHARMING  TREE 



தாவரவியல் பெயர்: ஸ்கெலிரோகேரியா பிர்ரியா (SCLEROCARYA BIRREA)
தாவரக்குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
தாயகம்: தென் ஆப்ரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா, மடகாஸ்கர் பொதுப் பெயர்கள்: மரூலா, ஐல்லி பிளம், கேட் தார்ன், சிடர் ட்ரீ, (MARULA, JELLY PLUM, CAT THORN, CIDER TREE)



1.     மரூலா மரத்தின் பல மொழிப் 
பெயர்கள்

1.1.      1.1. போர்ச்சுகீஸ்: கேன் ஹீரோ
(FANHOEPRO)
1.2.      1.2. ஸ்வாகிலி: மகாங்கோ 
(MAGONGO)
1.3.      1.3. Pலு: உம்கானு 
(UMGANU)
1.4.      1.4. கென்யா: போரான், டிடிசா
கம்பா(BORAN, DIDISSA, KAMBA)
1.5.      1.5. அங்கோவா: என்காங்கோ 
(N CONGO)

சமீபத்தில் வாட்ஸ் அப் சமூக ஊடகத்தில் 
யானைகள், நெருப்புக்கோழிகள்,
பபூன்ஸ் என்னும் குரங்குகள், 
காட்டுப்பன்றிகள்போன்றவை 
மரூலா மரத்தின் பழங்களை 
சாப்பிட்டுவிட்டு, குடிகாரன்களைப்போல 
ஆடுவது போல ஒரு வீடியோ 
படக்காட்சி வைரல் ஆக சுற்றி வந்தது.  
ஆனால் என்ன மரம் என்ன பழம் 
என்று தெரியவில்லை.

யானைகளை மயக்கும் மரூலா பழங்கள்


அந்த வீடியோ படக்காட்சியில் யானைகள் 
மரூலா மரங்களைப் பிடித்து உலுக்கும்: 
மரூலா பழங்கள் மாம்பழங்கள் போல 
உதிர்கின்றன: உதிரும் பழங்களை 
யானைகள், மான்கள்,ஒட்டச் சிவிங்குகள்,
மான்கள், குரங்குகள், பன்றிகள் 
போட்டிப் போட்டபடி சாப்பிடுகின்றன: 
அடுத்த காட்சியில் அத்தனை 
மிருகங்களும் குடிகாரர்களைப்போல 
தள்ளாடியடி தரையில் விழுந்து புரளருகின்றன.

இரண்டு மூன்று நாள் தேடலுக்குப் 
பின், அது ஒரு ஆப்ரிக்கமரம் 
என்றும் அதன் பெயர் மரூலா 
என்றும் தெரிந்தது. அப்போதே 
அதைப்பற்றி எழுத வேண்டும் 
என முடிவு செய்தேன்.


மிருகங்கள் 

அழகானவை


1974 ம் ஆண்டு அனிமல்ஸ் ஆர் 
பியூட்டிபுல் பீப்பிள் (ANIMALS ARE 
BEAUTIFUL PEOPLE)  என்று ஒரு 
டாகுமெண்டரிப் படம் வெளிவந்தது.  
ஐமி உய்ஸ்(JAMIE UYS) என்பவரால் 
எடுக்கப்பட்டது இந்தப்படம். 
இது நமீப் மற்றும் கலகாரி 
பாலைவனங்கள்; மற்றும், 
ஒக்கவாங்கோ ஆற்றுப் படுகைகளில் 
படமாக்கப்பட்ட இந்தப்படத்திற்கு, 
கோல்டன் குளோப் அவார்ட் 
(GOLDEN GLOBE AWARD)  வழங்கப்பட்டது.

ஆனால் மரூலா பழம் சாப்பிட்ட 
மாதிரி படத்தில் நடித்த யானைகள் 
மற்றும் இதர மிருகங்களை 
ஒவராக்ட் பண்ண வச்சிட்டாங்க. 
அவ்ளோ கிக் வராது என்கிறார்கள்
வனத்துறை வல்லுநர்கள்.  
ஆனா பழங்கள், உதிர்ந்து 
நாளாச்சின்னா புளிக்கும். 
புளிச்சதுன்னா கண்டிப்பா கிக் வரும். 
புளிப்பு அதிகமானா கிக் ஜாஸ்தியா 
இருக்கும். புளிப்பு கம்மியா 
இருந்திச்சின்னா கிக்கும் கம்மியா 
இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.


மரூலா மேனியா


மரூலா பழத்தசையுடன் சக்கரை 
மற்றும் கிரீம் சேர்த்து அமரூலா 
என்னும் பானம் தயாரிக்கிறார்கள்.  
இதில் 17 சதம் ஆல்கஹால் உள்ளது.  
பீர் மது வகைகளில் கூட 4 சதம் 
ஆல்கஹால்தான் உள்ளது.  இதில் 
கிக் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.  
மரூலா மேனியா (MARULA MANIA) 
என்று இன்னொருவகை பானம் கூட 
மரூலா பழங்களின் உபயம்தான்.

இது தவிர மரூலா பழங்களின் 
கொட்டைகளிலிருந்து எண்ணெய் 
எடுக்கிறார்கள்.  அந்த எண்ணெயை 
வைத்து, நம்ம ஊர் பேர் அண்ட் 
லவ்லி மாதிரி 10 நாளில் சிவப்பழகு 
5 நாளில் வெள்ளழகு என்று 
பல்வேறு அழகு சாதனப் 
பொருட்கள் தயார் செய்கிறார்கள்.

ஆப்பிள் மாதிரி பழங்கள்


மரூலா> தென் ஆப்ரிக்காவின் 
வேகமாக வளரும் மரங்களில் 
ஒன்று: செப்டெம்பர் முதல் 
நவம்பர் வரை பூத்து, ஐனவரி முதல் 
மார்ச் வரை காய்க்கும்: ஆண், 
பெண் பூக்கள் தனித்தனியானைவ.  
ஆண் பூக்கள், அடர்த்தியான சிவப்பில் 
தொடங்கி, ஊதா நிறமாக நிறம் மாறி 
வெண்மையாக பூக்கும்: பெண்பூக்கள் 
ரத்தச் சிவப்பாய் தொடங்கி 
பர்ப்பிள் நிறமாக மாறி அதுவும் 
வெண்மையாக மலரும்: பழங்கள் 
ஏறத்தாழ ஆப்பிள் மாதிரி 
உருண்டையாக அல்லது 
கொஞ்சம் நீளமான உருண்டையாக 
மாங்காய் போல கோள வடிவத்தில் 
இருக்கும்;. நாள்பட்ட பழங்கள் 
உதிர்ந்தபின்னால் அருவருப்பான 
வாடை வீசும்.

ஒரு கிலோவில் 

400 விதைகள்


விதைகள் பெரும்பாலும் மூன்று 
அல்லது இரண்டு விதைகளின் தொகுப்பாக 
இருக்கும்.  விதைகள் முரட்டு 
விதையுறையினால் பாதுகாப்பாக மூடி 
இருக்கும்.  ஒரு கிலோ எடையில் 400 
விதைகள் இருக்கும்.

விதைகள், கிளைகள்

வேர்ச்செடிகள்


விதைகள் நன்கு முளைக்க 48 மணிநேரம் 
தண்ணீரில் முக்கி வைத்திருக்க வேண்டும்.  
பின்னர் விதைத்தால் 100க்கு 60 விதைகள் 
முளைக்கும்.  முளைப்பு முடிய 
குறைந்தபட்சம் 16 நாட்கள் ஆகும்.

விதைகளை விதைக்கலாம்: 
பெரிய கிளைகளை வெட்டியும் 
நடலாம்: கிளைகளைத் துண்டுகளாக்கியும் 
(STEM CUTTINGS) நடலாம்: 
வேர்ச்செடிகளையும் எடுத்து நடலாம்.

கடல் மட்டத்திலிருந்து 500 
முதல் 800 மீட்டர் உயரம், பனிப் பொழிவு 
இல்லாத வெப்பமான தட்ப வெப்பநிலை, 
சுமாராக வறட்சியைத் தாங்கும் தன்மை, 
நல்ல சூரிய ஒளி, மணற்சாரி, 
சரளை மண், மற்றும் பரவலான 
வறண்ட நிலங்களில்கூட வளரும்.
இஸ்ரேல் நாட்டில் சிறுசிறு 
மரூலா பழத்தோட்டங்களை 
அமைந்துள்ளார்கள்.  இதற்கான விதைகளை, 
போட்ஸ்வானா மற்றும் 
தென்ஆப்ரிக்காவின், குரூகர் என்னும் 
தேசிய பூங்காவிலிந்து, வரவழைத்துள்ளனர். 
இந்த மரங்கள் 3 ஆண்டுகளில் காய்க்கின்றன.

மரூலா மரங்களுக்கு கடினமான 
மண்வகை சரிப்படாது; நல்ல வடிகால் 
வசதி வேண்டும் ; மழைக்காலத்து 
நீர்தேக்கத்தை ஒரளவு தாங்கும்.  
இஸ்ரேல் நாட்டின் 
உப்புத் தண்ணீரில் வளர்ந்து 
வர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

மேனிஎழிலுக்கு மெருகூட்டும் சமாச்சாரங்கள்


மரூலாவின் மரங்கள், தரமும் 
வலுவும் இல்லாதவை; அப்படியே 
மரச்சாமான்கள்> எது செய்தாலும் 
அவை நீடித்து உழைக்;காது; அத்தோடு 
1962 ம் ஆண்டு இனி இந்த மரத்தை 
வெட்டுவது சட்டப்படி குற்றம் என்று 
அறிவித்தது, தென் ஆப்ரிக்க அரசாங்கம்.

பீர் ஒயின் ஜாம் ஜெல்லி 


பழமாக விற்பனை செய்வதோடு 
அமரூலா என்றும் பீர் ஒயின் 
குளிரூட்டப்பட்ட ஜூஸ் போன்றவற்றை 
அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்.  
இவை தவிர ஜாம் ஐல்லி போன்றவைகளும் 
தயாரிக்கிறார்கள்.  மரூலா 
கொட்டைகளிலிருந்து எண்ணெய் 
எடுத்து, நமிபியாவிற்கு ஏற்றுமதி 
செய்கிறார்கள்.  அவர்கள் மரூலா 
எண்ணெயிலிருந்து மேனிஎழிலுக்கு 
மெருகூட்டும் சமாச்சாரங்களை 
உற்பத்தி செய்கிறார்கள்.

செனிகல் மற்றும் தென் ஆப்ரிக்காவில் 
இதன் மரங்கள் மரச்சாமான்கள் 
செய்ய காலம்காலமாக் பயன்படுத்தப்பட்டு 
வந்தது.  சிறுகருவிகள், உரல், உலக்கை, 
மாவு அரைக்கும் சாதனங்கள், 
கிண்ணங்கள், குவளைகள், 
போன்றவை செய்தார்கள். அடுப்புக்கு 
விறகாகவும் கரியாகவும் அதிகம் எரித்தார்கள்.

இதன் இலைகள் மற்றும் தழைகள்
கால்நடைகளுக்கு தீவனமாகவும் 
பயன்படுகிறது.  ஆனால் கால்நடைகளும், 
காட்டு விலங்குகளும், 
அதன் பழங்களையே விரும்பிப் சாப்பிடுகின்றன.

மரூலாவின் இலைகள், பட்டைகள், 
வேர், ஆகியவற்றை பாரம்பரிய 
மருத்துவ முறைகளில் பலவிதமான 
நோய்களை குணப்படுத்தப் 
பயன்படுத்துகிறார்கள்.  வயிற்றுப்போக்கு, 
சீதபேதி, வயிற்று உபாதைகள், காய்ச்சல், 
குடற்புண், கண்நோய்கள் கம்பளிப் 
பூச்சிகளால் தோலில் ஏற்படும் 
கொப்புளங்கள் போன்றவை 
குணப்படுத்தப் படுகின்றன.

ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளாக 
மரூலா உணவுப் பொருளாக பயன்பட்டு 
வருகிறது: பழமாக சாப்பிடலாம்: பழத்தை 
கசக்கி மாம்பழம்போல சாற்றை மட்டும் 
அருந்தலாம்: பழத்தை புளிக்கவைத்து 
பீர் தயாரிக்கலாம்: அதையே சாராயம்போல 
காய்ச்சலாம். பிராந்தி, ரம், விஸ்கி 
போன்றவையும்  தயாரிக்கலாம்
விதைப் பருப்பினை சாப்பிடலாம்
அவற்றை இடித்து மாவாக்கி 
கேக், பிஸ்கட், போன்றவை 
தயாரிக்கலாம்; விதை எண்ணெயை, 
இறைச்சியை சேமிப்பதற்கான 
பிரிசர்வேட்டிவாகவும் 
சருமப் பாதுகாப்புக்கான 
அழகு சாதனமாகவும் 
உபயோகமாகிறது.

ஆப்ரிக்காவின் பெரும் பகுகளிலும் 
பரவியுள்ளது.  மரூலா பழ மரங்கள்: 
அவை மாரிஷியானா, செனிகல் 
முதல் எத்தியோப்பியா வரை 
எரித்திர்Pனா, நம்பியாவின் தென் பகுதி, 
போட்ஸ்வானா, pம்பாப்வே, மொசாம்பிக், 
தென்ஆப்ரிக்கா, சுவாசிலேண்ட்  
இவை தவிர, இஸ்ரேல், 
ஆஸ்திரேலியா, இந்தியா, ஒமன் 
ஆகிய நாடுகளிலும் மாரூலா 
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

REFERENCES: (WWW.ECOPORT.ORG “SCLEROCARYA BIRREA)தே. ஞானசூரிய பகவான், போன்: 91-8526195370Email:gsbahavan@gmail.com





TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
     

    


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...