Friday, December 27, 2019

மலம்புளுவன் பாலைவன மருத்துவ மரம் MALAMBULUVAN - MATCHLESS DESERT TREE HERB



மலம்புளுவன் 

 பாலைவன 

மருத்துவ மரம்


MALAMBULUVAN - 

MATCHLESS  

DESERT 

TREE HERB

 


தாவரவியல் பெயர்: டெகோமா அண்டுலேட்டா
((TECOMAMELLA  UNDULATA)தாவரக் குடும்பம் பெயர்: பிக்னோனியேசி
(BIGNONIACEAE)தாயகம்: இந்தியா (INDIA)பொதுப்பெயர்கள்: ரோகிடா, ஹனி ட்ரீ,
டெசர்ட் டீக், மார்வார் டீக் (ROHEDA, HONEY TREE, DESERT TREE, MARWAR TREE)




மலம்புளுவன் மரத்தின் பூக்களை
ராஜஸ்தான் மாநில அரசு, அரசுமலர்
என அறிவித்துள்ளது.

இந்தியாவில்
பரவலாக இதனை அழைக்கும் பெயர்
ரோஹிடா மரம். ராஜஸ்தான்
மாநிலத்தின் பாரம்பரியமான மரம்
இது.

அங்கு இதன் பெயர் மார்வார்
தேக்கு. மார்வார் என்பது ராஜஸ்தான்
மாநிலத்தின் ஒரு பகுதி.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியில்
இதனை ஆங்கிலத்தில் ‘டெசர்ட் டீக்’;
என்று சொல்லுகிறார்கள். அதாவது
பாலைவனத் தேக்கு மரம்.

இந்தியாவில் இந்த மரம் மகாராஷ்டிரம்,
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும்
ஹரியானா மாநிலங்களில் அதிகம்
காணப்படுகின்றன.

ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும்
பார்மர், ஜெய்சால்மர், ஜோத்பூர், பார்மார்,
ஜெய்சால்மர், ஜோத்பூர், பாலி, ஆஜ்மீர்,
நாகார், பீகானீர், சூரு மற்றும் சீதார்
ஆகிய மாநிலங்களில் இந்த மரம்
மிகவும் பிரபலமானது.

1. பாலைவனத்தேக்கு மரத்தின்
பல மொழிப் பெயர்கள்

1.1. தமிழ்: மலம்புளுவன், சுனாச்சி,
நாகசம்பங்கி, நாககம் (MALAMPULUVAN, 
SUNACHI, NAGASAMPANGI, NAGAGAM)


1.2. ஹிந்தி: ருக்ட்ரோரா, ருடெண்டி
(RUKTRORA, RUDANTI)

1.3. ஆங்கிலம்: டெசர்ட் டீக்
(DESERT TEAK)

1.4. குஜராத்தி: ரோகிடோ (ROGIDO)


1.5. கன்னடா: முள்ளுமுண்டலா
(MULLUMUNTALA)

1.6. மராத்தி: ரோகிடோ (ROHIDO)


1.7. மலையாளம்: செம்மரம்
(SEMMARAM)

1.8. பஞ்சாபி: லபெர்ரா (LABERRA)


1.9. சமஸ்கிருதம்: டடிமா புஷ்பா,
டடிமா டாடா, லோகிதா, ரோகிதா,
ரத்த புஷ்பா, பில்ஹணா
(DADIMA PUSHPA, DADIMA DADA, 
LOHITHA, ROHIDHA, RATHAPUSHPA, 
PILHAGNA)

வலிமையானது; நீண்ட நாட்கள்
உழைக்கக் கூடியது;   கலையழகு
மிக்க பொருட்களைச் செய்ய
உதவக் கூடியது

பாலைவனப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு
 உதவும் முக்கிய மரங்களில் இந்த மரமும்
ஒன்று. 

பாலைவன மக்களின் முக்கிய
வாழ்வாதாரமாக விளங்கும் இந்த மரம்
மருத்துவ பண்புகளையும் உள்ளடக்கியது.

இந்த மரத்தின் பட்டைக் கஷாயத்தை
40 முதல் 50 மில்லி கொடுக்க
மன நோய்கள் குணமாகும்.

இந்த மரங்கள் பாலைவனங்களில்
மணல் குன்றுகள் நகர்வதைத் தடுக்க
உதவும்.


4 முதல் 6 மீட்டர் உயரம் வளரும்
இந்த மரம் மரச்சாமான்கள் செய்ய
மிகவும் ஏற்றது. மரம் மிகவும்
வலிமையானது. நீண்ட நாட்கள்
உழைக்கக் கூடியது.   கலையழகு
மிக்க பொருட்களைச் செய்ய
உதவக் கூடியது. விறகு மற்றும்
கரியாகப் பயன்படுத்தக்கூடிய அற்புதமான மரம்.
பாலைவனத்தில் இருக்கும் மரங்களுக்கு
சில முக்கியமான பண்புகள் அவசியம்.

இதன் இலை தழை மற்றும் நெற்றுக்கள்
ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்களுக்கு
தீவனமாகிறது ; இதற்கு நல்ல உதாரணம்;
வன்னி மரங்கள்; அவற்றை தரும் மரங்கள்
நிறைந்த இடங்களில்தான் இந்த
மக்களும் குடியேறுவார்கள்.

பாலைவனப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு
 உதவும் முக்கிய மரங்களில் இந்த மரமும்
ஒன்று.  இந்த மரங்களின் வேர்ப்பகுதி
மண்ணின் மேற்புரத்தைக் கவ்விப்
பிடித்திருக்கும்.

இதன் வேர்கள் சல்லி
வேர்களாக மண்கண்டத்தில் பரவி இருக்கும்.
பாலைவனத்தில் மண்ணரிப்பு என்பது
மூச்சுவிடுவது மாதிரி ஒவ்வொரு
வினாடியும் நடைபெறும் நிகழ்ச்சி.

வேகமாக வீசும் காற்றினால் இடம்பெயரும்;
மணல்மேடுகளைத்; தடுப்பதில்
இந்த பாலைவன தேக்குமரம் முக்கிய
பங்கு வகிக்கிறது.

பாலைவனத்தில்
உள்ள பறவைகள் மற்றும் பல்வேறு
உயிரினங்களுக்கு உணவும் உறைவிடமும்
தருவதற்கான ஆதாரமாக உள்ளது.

பாலைவன மக்களின் முக்கிய
வாழ்வாதாரமாக விளங்கும் இந்த மரம்
மருத்துவ பண்புகளையும் உள்ளடக்கியது.

இந்த மரத்தின் பட்டைகளைப்
பயன்படுத்தி சிபிலிஸ் என்ற
சொல்லும் பால்வினை நோய்கள்,
சிறுநீரக நோய்கள், மண்ணீரல் வீக்கம்,
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல,;
ஈரல் நோய்கள், லியுகோடெர்மா என்று
சொல்லப்படும் வெண்புள்ளி நோய்
ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.

உடலில் ஏற்படும் அப்செஸ் என்னும்
கட்டிகளை குணப்படுத்தும் சக்தி உடையவை.

பாகிஸ்தானில் காலம் காலமாக
இதன் பூக்களை பயன்படுத்தி
ஹெபடைடிஸ் வைரஸ்
நோயை கட்டுப்படுத்தி
வருகிறார்கள்.


தார்ப்பாலைவனம் இந்தியாவைச் சேர்ந்தது.
உலகில் உள்ள பெரிய பாலைவனங்களில்
 பதினெட்டாவது பாலைவனம் இது.
இதன் 75 சதவீத நிலப்பரப்பு இந்தியாவிலும்
25 சதவீத நிலப்பரப்பு பாகிஸ்தானிலும்
உள்ளது.

இந்தியாவின் பூகோள பரப்பில்
10 சதம் பரப்பை தார் பாலைவனம்
ஆக்கிரமித்துள்ளது. ராஜஸ்தானின்;
40 சதவீத மக்களுக்கு வாழ்வாதாரமாக
உள்ளது தார்ப் பாலைவனம்.

இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை
அளவு 100 முதல் 500 மில்லி.
பாலைவனத்தின் மணல் பிரதேசம்
மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு
மர வகைகளை அறிமுகம்
செய்துள்ளார்கள்.

இந்த மரங்களில்
முக்கியமானவை கருவை மரம்,
சீமைக்கருவை, வாகை மரம்,
தைல மர வகைகள்.  இதர கருவை
வகைகள் மற்றும் இலந்தை மரங்கள்.

ஆயுர்வேத மருத்துவ முறைகளில்
இந்த மரத்திற்கு முக்கியமான
இடம் தந்து இருக்கிறார்கள். முக்கியமாக
சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை,
மூல நோய்கள், குடற்புழுக்கள்,
அஜீரணக்கோளாறுகள், பெண்களுக்கு
ஏற்படும் வெள்ளைப்படுதல்
போன்றவற்றிற்கான ஆயுர்வேத
மருந்துகள் தயாரிக்க இந்த மலம்புளுவன்
என்னும் பாலைவனத் தேக்கு மரம்
வெகுவாக உதவுகிறது.

இந்த மரத்தில் பட்டை கஷாயம்
தயாரித்து அதில் குளித்தால் தோல்
அல்லது சருமப் பிரச்சினைகள் சரியாகும்.

வெள்ளைப் படுதலைக் குணப்படுத்த
இதன் பட்டை மற்றும் வேர் துண்டுகள்
சாந்துடன் தேன் சேர்த்து 3 முதல் 5 கிராம்
உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த மரத்தின் பட்டைக் கஷாயத்தை
40 முதல் 50 மில்லி கொடுக்க
மன நோய்கள் குணமாகும்.

இந்த மரத்தின் வைரப் பகுதியில்
தயாரித்த கஷாயத்தை தொடர்ந்து
சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய்
மற்றும் மஞ்சள் காமாலையை
குணப்படுத்தலாம்.

மரத்தின் பட்டை
தூளை 3 முதல் 4 கிராம் கொடுத்து
குடல் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இவை மட்டுமின்றி ஈரல் சம்பந்தமான
 நோய்களை, வயிற்றில் ஏற்படும்
புற்றுநோய், வயிறு உப்பிசம், தசைப்பிடிப்பு,
 உடல் பருமனாதல் மலச்சிக்கல், இரத்த ஓட்டம்
சம்பந்தமான பிரச்சனைகள,
மாதவிடாயின்போது ஒழுங்கற்ற
இரத்தப்போக்கு, மூக்கில் ரத்தம் வடிதல்,
கண் நோய்கள் போன்றவற்றையும்
குணப்படுத்தும்.

இந்த மலைப்புளுவன் மரத்திற்கு
வெப்பமான தட்பவெப்ப சூழல் ஏற்றது.
இந்த மரத்தின் பட்டைகள் தான் வியாபாரப்
பொருட்கள.; மூன்று அல்லது நான்கு
ஆண்டுகள் வளர்ந்த மரங்களில்
பட்டைகளை  வெட்டி எடுக்கலாம்.
பட்டையை எடுத்து உலர்த்தி
கோணிப் பைகளில் சேமித்து வைத்து,
தேவையானபோது  விற்கலாம்.

பாலைவனத்தேக்கு மற்றும்
மார்வார்தேக்கு என அழைத்தாலும்
இந்த மரம் தூக்கலாக ஒரு மூலிகை மரம்
என்பதே மிகவும் பொருத்தமானது.
இதன் விதைகளின் முளைப்புத்திறன்
குறைவான நாட்களே இருக்கும். மெல்ல வளரும்.
தாமதமாக வேரப்பிடித்து தாமதமாகவே வளரும்.

பூக்கள் பளிச்சென்ற மஞ்சள், ஆரஞ்சு,
மற்றும் சிகப்பு நிறத்தில் மலரும்.
பழங்கள் 20 சென்டிமீட்டர் நீளமாக
ஒல்லியாக கொஞ்சம் வளைந்து
இருக்கும். விதைகள் பறந்து சென்று
புதிய இடங்களில் விழுந்து முளைக்க
வாய்ப்பாக சிறகுகளுடன் இருக்கும்.

இந்த மரங்கள் பாலைவனங்களில்
மணல் குன்றுகள் நகர்வதைத் தடுக்க
உதவும். மணற்குன்றுகளை இயக்குவது
வேகமாக வீசும் காற்று. இன்று இங்கிருக்கும்
மணற்குன்று நாளை இங்கில்லை
எனும் பெருமை உடையவை,
மணற்குன்றுகள்  காற்றின்
வேகம் மற்றும் வீசும் திசைக்கு
ஏற்ப மணற்குன்றுகள் நகர்ந்து கொண்டே
இருக்கும். பாலைவனங்களில் மணல்
குன்றுகள் எப்படி இடம்பெயர்கின்றன
என்ற பார்க்க தார் பாலைவனம்
செல்ல வேண்டாம்.

திருநெல்வேலி
மாவட்டத்தில் குதிரை மொழித் தேறி
மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குச்
சென்றால் பார்க்கலாம். பாலைவனம்
போன்ற மணல் பிரதேசங்களுக்கு நம்ம
ஊர்ப்பெயர் தேறி நிலங்கள்.

தே. ஞானசூரியன், போன்: 918526195370, 91828376767,
Email: gsbahavan@gmail.com

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

Photography Courtesy: Thanks to GoogleReferences:www.en.m.wikipedia.org – ‘Tecomella undulata’, www.google.co.in ‘Rogitaka Tecomella undulate – Uses, Remedies, sude effects – research, www.vikaspedia.in ‘Tecomella undulata’, www.star.ayurveda.com – ‘Tecomella undulata’,www.researchgate.net - ‘Tecomella undulata’





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...