Sunday, December 15, 2019

LET US JOIN TOGETHER AND WORK - குடிமராமத்து தொடங்கலாமா ?




குடிமராமத்து தொடங்கலாமா ? 

8888888888888888888888888888888888888888888

மக்கள்தொலைக்கட்சியின்வேளாண்மைப்பள்ளி - பாடம் 8

8888888888888888888888888888888888888888888 

வரப்புயர நீர் உயரும் – பாடவரிசை















ஒரு ஊர்ல கோவில் திருவிழாவுக்காக
வீட்டுக்கு ஒரு சொம்பு பாலை
கோவில் முன்னாடி வச்சியிருக்கற
அண்டாவுல ஊத்தணும்னு ஊர்ப்பொதுவுல
தண்டோரா போட்டாங்க. நூறு வீட்டுக்காரங்க
பால் ஊத்தும்போது நம்ம ஒரு வீடு
தண்ணி ஊத்தினா தெரியவா போகுதுன்னு
ஒரு வீட்டுக்காரர் மட்டும் கோவில்
அண்டாவுல ரகசியமா தண்ணிய ஊத்திட்டு
வந்துட்டார். அடுத்தநாள் கோவில் தர்மகர்த்தா
அண்டாவ திறந்து பாத்தா பால்
ஒரு சொட்டுக்கூட இல்ல. எல்லாருமே
ஒரேமாதிரி நினைச்சி எல்லாருமே தண்ணியெ ஊத்திட்டாங்க.
அந்த ஊர்ல யாரும் ஒருத்தர் பேச்சை
ஒருத்தர் கேக்கமாட்டாங்க. அதனால
அந்த ஊருக்கு எந்தஒரு
நல்ல காரியமும் நடக்கல.அடுத்த நாள் ஒரு சாது அந்த
ஊருக்கு வந்தார். அந்த ஊர்க்காரங்க
எல்லாருமே அவர்கிட்டபோயி முறையிட்டாங்க.
எங்க கிராமத்துல நாங்க யாரும்
ஒத்துமயா இல்லாததால எங்க ஊருக்கு
இதுவரைக்கும் எந்த நல்ல காரியமும் நடக்கல.
நாங்க ஒத்துமையா இருக்க
நீங்கதான் வழிகாட்டணும்னு
சொல்லி வேண்டினாங்க. நீங்க
என்ன சொன்னாலும் நாங்க
கேக்கறொம்னு சொன்னாங்க.
நாளைக்கு சூரிய உதயத்துல என்ன வந்து பாருங்கன்னார்.
அடுத்த நாள் சூரிய உதயத்துல
ஒரு முப்பது பேர் வந்துட்டாங்க.
எல்லாரையும் வட்டவடிவமா நிக்கசொல்லி
ஆளுக்கொரு வாழைப்பழத்தக் குடுத்தார்.
இந்த வாழப்பழம் வச்சிருக்கற கையெ
நீட்டி வச்சிக்கணும். நீட்டிய கையை மடக்காம
எல்லாரும் பழங்கள சாப்பிட்டு முடிச்சிட்டா.
நீங்க எல்லாரும் ஒத்துமையா ஆயிடுவீங்க.
ஆனா இந்த வாழப்பழத்தை கையை
மடக்காம சாப்பிடணும்னு  சொல்லி முடிச்சார்.
கையை மடக்காம யாராலும் சாப்பிட முடியல.
அப்பொறம் அவரே சொல்லிக்கொடுத்தார்.
உங்க கையில இருக்கும் பழத்தை
அடுத்தவருக்கு குடுங்க. அடுத்தவர்
கையில இருக்கும் பழத்தை
நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லி
முடிச்ச உடனே எல்லாரும்
சாப்பிட்டு முடிச்சிட்டாங்க.
அதுக்கு பிற்பாடு அந்த கிராமத்துல
வருஷா வருஷம் சிறப்பா
ஊர்கூடி தேர் இழுக்கறாங்க.














குடிமராமத்து என்றால் என்ன ?

ஊர்கூடி தேர் இழுத்தா அது குடி மராமத்து
ஊர்கூடி குளம் வெட்டினா அது குடி மராமத்து
ஊர்கூடி குட்டை வெட்டினா அது குடி மராமத்து
ஊர்கூடி ஏரி வெட்டினா அது குடி மராமத்து
ஊர்கூடி ஏரி, குளம், குட்டைகளை, ஓடைகளை
ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரைகள பலப்படுத்தினா
அது குடி மராமத்து

தமிழ் நாட்டுல பல இடங்கள்ள இளைஞர்கள்
இந்த பணியை செய்கிறார்கள்
இதுவும் குடிமராமத்துதான். அதேபோல
2015 ல் பல நூறு இளைஞர்கள்
வெள்ளத்தினால பாதிக்கப்பட்ட
பகுதிகள்ள வேலை பாத்தாங்க
அது கூட குடிமராமத்துதான்.

தமிழில் குடி மராமத்து வட மாநிலங்களில் சிரமதானம்


பொதுவான  வேலை நமது உடலுழைப்பை 
இலவசமாக அளிப்பது என்று அர்த்தம். 
தமிழில் நாம் குடிமராமத்து என்பதை 
வட மாநிலங்களில் ஷ்ரமதான் 
என்கிறார்கள். ஷ்ரமம் என்றால் 
உடல் உழைப்பு. தான் என்றால் 
தானம். ஒரு கிராமத்தில் ஒரு 
பயிற்சி வகுப்பில் குடிமராமத்து 
என்றால் யாராவது சொல்லுங்கள். 
தாமதமாக ஒருத்தர் கையை உயர்த்தினார். 
உற்சாகமாக சொல்லுங்கள் என்றேன்.’ 
எனக்கு குடின்னா தெரியும் சார். 
அது எங்க ஊர்ல குடி இருக்கு சார். 
மராமத்து  இல்ல சார்அப்படின்னு சொன்னார்.


சிரமதானம்


நபார்டு வங்கி திட்டத்தில  குடிமராமத்து 
செய்ய தயங்கும் கிராமத்துக்கு 
குறிப்பாக வாட்டர்ஷெட் என்று 
சொல்லக்கூடிய நீர்வடிப்பகுதி  திட்டங்களை 
அனுமதிக்க மாட்டங்க. இந்த திட்டத்தை 
அறிமகம் செய்யறதுக்கு முன்னாடி 
இதப்பத்தி நிறைய விழிப்புணர்வு குடுப்போம். 
இதை பல நபார்டு அலுவலர்கள் 
ஷ்ரம்தான் என்று சொல்வதை தமிழில் 
அதனை சிரமதானம் என்று 
நாங்கள் மாற்றிவிட்டோம். அதைப்பற்றி 
ஒரு பயிற்சி வகுப்பில் ஒருத்தர் 
சொன்னார். பிறருக்கு நம்மால் 
முடிந்தவரை சிரமத்தை இலவசமாக 
கொடுப்பது என்று சொன்னார்.

தும்பேரி கிராமத்தில் சிரமதானத்தில்
கட்டிய தடுப்பணை


நாங்கள் வேலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களில் வேலை பார்க்கிறோம். அதில் ஒரு கிராமத்தில் சுமார் 130 மீட்டர் நீளத்திற்கு  5 மீட்டர் உயரத்திற்கு ஒறு மண் தடுப்பணையை கட்டி முடித்திருக்கிறார்கள். அது முழுக்க முழுக்க அந்த கிராமத்து மக்களால் குடி மராமத்து முறையில் கட்டப்பட்டது. கக்கிலக்கானை என்ற ஒடை மூலம் வரும் தண்ணீர் முழுவதும் பாலாற்றுக்கு போய்க்கொண்டிருந்த்து.  இந்த தடுப்பணயின் மூலம் சுமார் 15 கிராமங்களும் 10000 ஏக்கர் விவசாயத்திற்கும்  பயன்படும் வகையில் அந்த மண் தடுப்பணை அமைந்துள்ளது. 

குடிமராமத்துதான் ராஜேந்தர்சிங்கின் ஆயுதம்


இப்போது நாம் எல்லாம் பெரிய அணைகள் கட்டுவது பற்றியும் நதிகளை இணைப்பது பற்றியும் அதிகமாக பேசி வருகிறோம். இந்த பெரிய அணைகள் கட்டுவதும் நதிநீர் ,ணைப்பு செய்வதும் பிரச்சனைகளைத்தான் அதிகப்படுத்தும். இவை உடனடியாக பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பதுதான் என் கருத்து என்கிறார் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்.
ராஜஸ்தானில் ஒடாமல் இருந்த ஆறு ஆறுகளை மறுபடியும் ஒடவைத்தது, 1200 கிராமங்களில் தண்ணீர் தன்னிறைவை சாதித்துக்காட்டியதற்கு காரணமாக இருந்தது குடிமரமத்துதான் என்கிறார் தண்ணீர் மனிதர் ராஜேந்தர்சிங் அவர்கள். 
.

நஞ்சை புஞ்சை குளங்கள்சிமெண்ட் கரை ஜோகாத்கள்


ஜோஹத்கள் என்று சொல்லும் அந்த குளங்களுக்கு சிமெண்ட் கரைகள் கட்டுகிறார்கள். அப்படி சிமெண்ட் கரைகள் கட்டிய ஜோகாத்களை டங்கி என்றும் டாங்கா என்றும் சொல்லுகிறார்கள்.

அவை எல்லாம் அளவில் சிறியதாக இருக்கின்றன. பெரும்பாலும் சிமெண்ட் கரையுடைய குளங்களை மானாவாரி பிரதேசங்களில் அமைக்கிறார்கள்.

அதையே நஞ்சை நிலத்தில் வேறுவிதமாக  அந்த குளங்களை அமைக்கிறார்கள்.

நஞ்சை நிலத்தில் ஜோகாத்கள்


இயற்கையாகவே சரிவாக தாழ்வாக அமைந்த நஞ்சை நிலப் பகுதியில் ஒருவகையான நுரம்பு அல்லது கற்களைக்கொண்டு மூன்று பக்கமும் உயர்ந்த கரைகளை அமைத்து நான்காவது பக்கம் நீர் வழிந்தோட கோடி போன்ற அமைப்பை கட்டுகிறார்கள். இதுவும் ஒரு விதமான தடுப்பணைகள்தான்.

இந்த இயற்கையாக அமைந்த நிலப்பகுதியிலேயே ஜோகாத்களாக  அல்லது குளங்களாக ஏரிகளாக பயன்படுத்துகிறார்கள்.

இந்த முறையை ஹரியானா, உத்தரப் பிரதேசம்  மற்றும் ராஜஸ்தானின் தார் பாலைவனம் பகுதியிலும் கடைபிடிக்கிறார்கள்.

பெண்களின் நெடும்பயணம்












1985 - 86 ஆம் ஆண்டு வரலாறு காணாத 
வறட்சியினால் பாதிக்கப்பட்டது. இந்த 
ஆல்வார் மாவட்டம். குடிக்க கூட 
தண்ணீர் ,இல்லாமல் தவித்தார்கள். 
ஒரே ஒரு குடம் தண்ணீர் எடுக்க 
பெண்கள் நெடும்பயணம் செல்ல 
வேண்டியிருந்தது.

அப்போதுதான் ராஜேந்திர சிங் அந்த கிராமத்தில் காலடி எடுத்து வைத்தார். அந்த சமயம் காடுகளிலிருந்து மரங்களை வெட்டுவதன் மூலம்  மர வியாபாரம் ஒரு பக்கம் கொடிகட்டிப் பறந்தது. ,ன்னொரு பக்கம் சுரங்கங்களைக் தோண்டி பூமி பரப்பை சல்லடை ஆக்கிக் கொண்டு இருந்தார்கள் சிலர்.

ஆல்வார் மாவட்டம்


ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் ஒன்று தான் ஆல்வார் மாவட்டம். இது ராஜஸ்தானில் மூன்றாவது மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்று. இதன் பரப்பளவு 2380 சதுர கிலோமீட்டர்.

ஆல்வார் பெரிய விவசாய மாவட்டம். ராஜஸ்தானின் 25 சத விவசாய நிலப்பரப்பு இங்குதான் உள்ளது. இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால்  83 சதவிகித நிலப்பரப்பு இறவை நிலங்களாகவும் 13 சதம் மட்டும் மானாவாரி நிலங்களாக உள்ளன.

ராஜேந்திரசிங்கின் தருண் பாரத் சங்கம்


ராஜேந்திரசிங் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர். இன்றைய தேதியில் அவருடைய வயது 60.

அவருடைய தொண்டு நிறுவனத்தின் பெயர் தருண் பாரத் சங்கம். அது  ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். ஹோரிபேகம்புரா  என்ற கிராமத்தில் உள்ளது இதன் தலைமையகம்.


தார்பாலைவனம்


இது சரிஸ்கா டைகர் ரிசர்வ் என்னும் 
புலிகள் சரணாலயத்தின் அருகில் உள்ளது. 
தார் பாலைவனமும் இதன் அருகில்தான்  
அமைந்துள்ளது.

உத்தரபிரதேச கிராமத்தில் ஒரு 
விவசாயக் குடும்பத்தில் 60 ஏக்கர் 
விவசாயம் பார்த்த பெரிய விவசாயிக்கு 
தலை மகனாக பிறந்தவர் சிங்.
ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் 
சாத்திர யுவ சங்கம் 
வாகினி என்ற அமைப்பில் 
ஒரு பகுதியின் தலைவராக 
சிறிது காலம் பணியாற்றினார் ராஜேந்திர சிங்.

கல்வித்துறையில் பணி


பிஎம்எஸ் எனும் ஆயுர்வேத மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் 1980ஆம் ஆண்டு நேஷனல் சர்வீஸ் வாலண்டியர் என்னும் அரசு பணியில் கல்வித்துறையில் ஜெய்ப்பூரில் பணியில் சேர்ந்தார்.

பிறகு ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் தான் அவர் யங் இந்தியா அசோசியேஷன் என்னும் தருண் பாரத் என்ற அமைப்பில் சேர்ந்தார்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு


இந்த அமைப்பு ஜெய்ப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டது. 1984ல் அந்த அமைப்பு முழுமையாக ராஜேந்திர சிங் அவர்களின் பொறுப்பில் வந்தது.

அவர் செய்த இந்த பணிகளை நாம் நம் கிராமத்தில் எப்படி செய்யலாம்  என்று யோசியுங்கள் ! குடிமரமத்து தொடங்கலாமா ?

888888888888888888888888888888888888888888888888






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...