Sunday, December 29, 2019

கருமருது கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏற்ற கடினமான மரம் KARUMARUTHU A HARD WOOD FOR CONSTRUCTION WORKS


















கருமருது  கட்டிடங்கள் 

கட்டுவதற்கு ஏற்ற 

கடினமான மரம்

 

KARUMARUTHU A HARD WOOD

FOR CONSTRUCTION WORKS


கருமருது

INDIAN LAUREL TREE

தே. ஞானசூரிய  பகவான் 

தாவரவியல் பெயர்: டெர்மினேலியா டொமன்டோசா (TERMINALIA TOMENTOSA)
தாவரக் குடும்பம் பெயர்: காம்பிரட்டேசி (COMBRETACEAE)
தாயகம்: இந்தியா, நேப்பாளம், பங்ளாதேஷ்;, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் கம்போடியா மற்றும் வியட்நாம்.
பொதுப் பெயர்கள்: ஆசன், இண்டியன் லாரெல் ட்ரீ, சில்வர் கிரே வுட், ஒயிட் சுக்லம் (ASAN, INDIAN LAUREL TREE, SILVER GREY WOOD, WHITE CHUGLAM)

1. கருமருது மரத்தின் பல மொழிப் பெயர்கள்: இண்டியன் லாரெல் ட்ரீ INDIAN LAUREL TREE

2. தமிழ்: கருமருது, அருச்சுனம், மருதமரம்        (KARUMARUTHU, ARUCHUNAM, MARUTHA MARAM)
3. மலையாளம்: மத்தி(MATTHI)4. தெலுங்கு: இன்னு  மத்தி, நல்ல மத்தி1.        (INNU MATTHI, NALLA MADDI)

5. கன்னடா: பானப்பு, கரிமத்தி, சாததா,  உணப்பு மரா
(BANAPPU, KARIMADDI, SADADA, UNAPU MARA
6. பெங்காலி: ஆசன் (ASAN))

7. ஒரியா: சாஹஜூ        (SAHAJU)

8. சமஸ்கிருதம்: ரக்தர்ஐன்         (RAKTHARJUN)
9. இந்தி: ஆசன், சாஹஜூ         (ASAN, SAHJU)

10. மராத்தி: ஏய்ன், அசன், சதாதா, சர்துல் (AIN, ASAN, SATADA, SHARDUL)

பூரட்டாதி பிறந்தநாள் நட்சத்திரத்திற்கு
உரியமரம்; இதன் தாவரவியல் பெயர்,
டெர்மினேலியா டொமன்டோசா
(TERMINALIA TOMENTOSA);
டெர்மினேலியா எலிப்டிகா
(TERMINALIA ELLIPTICA)என்பதும்,
டெர்மினேலியா எலேட்டா
(TERMINALIA ELATA) என்பதும்
கருமருது மரத்தைத்தான் குறிக்கும்.
 இதன் மரத்தின் பட்டையைப் பார்த்தால்,
முதலையின் முதுகைப் பார்ப்பது போலவே
இருக்கும்.  அதனால் இதன் பெயர்,
ஆங்கிலத்தில் கொரக்கடைல் பார்க் ட்ரீ
(CROCODILE BARK TREE)

மரத்தின் பட்டைகளில் லேசாய்
காயம் ஏற்பட்டால், கண்ணாடி போன்ற
பிசின், ஏகமாக வடியும். இந்தப்
பிசினை சாப்பிடுகிறார்கள்.
பட்டையிலிருந்து எடுக்கும்
சாற்றினை பனஞ்சீனி (Pயுடுஆ ளுருபுயுசு)
தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்:
இந்தச் சாறு துவர்ப்பு சுவையாக
இருக்கும். பட்டையை எரித்து
அதன் சாம்பலை, வெற்றிலைப்பாக்கு
போடுபவர்கள், சுண்ணாம்புக்கு
பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் பட்டை, பழங்கள், பட்டைச்சாறு,
பிசின் ஆகியவற்றை, பாரம்பரிய மருத்துவ
முறைகளில், மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
துவர்ப்பான அதன் பட்டை மூலம்
வயிற்றுப் போக்குக்கு சிகிச்சை
அளிக்கிறார்கள். காயங்கள் மற்றும்
புண்களின் மீது, அதன் பட்டைச்
சாற்றினை தடவி குணப்படுத்தலாம்.
பட்டைகளை கொதிக்கவைத்து,
வடித்து எடுத்த வடிநீரை தலையில்
தடவி தலையில் ஏற்படும் பொடுகினை
கட்டுப்படுத்தலாம். உடலில் ஏற்படும்
வீக்கங்கள் மற்றும் தீப்புண்களில்,
இதன் பிசினைத் தடவி அவற்றை
சுகப்படுத்தலாம்.

இந்த மரத்திலிருந்து கிடைக்கும்
அதிகப்படியான பிசின், அகர்பத்திகள்
 மற்றும், அழகு சாதனப் பொருட்கள்
தயாரிக்க பயன்படுகிறது.

இந்த மரத்தின் வயிரப்பகுதி ஆழ்ந்த
நிறம் கொண்டது. ஊடாக கருப்பு நிற
கோடுகள் போட்டது போல இருக்கும்.
இதன் மேற்புறத்து மரம் வெளிர் சிவப்பாக
இருக்கும். மிகவும் கடினத்தன்மை கொண்ட
அற்புதமான மரம். கட்டிடங்களின் கட்டுமான
வேலை, மேஜை  நாற்காலி போன்ற
மரச்சாமான்கள், பெட்டிகள்,
கருவிகளின் கைப்பிடிகள், நீருக்கு
அடியில் பயன்படுத்தும் மரக் கொம்புகள்,
மரப்பலகைகள், மற்றும் வீனீர்;
என்னும் மர ஒட்டுத் தகடுகள்
தயாரிக்கப் பயன்படும். அத்தோடு
அதி அற்புதமான விறகாக மற்றும்
கரியாகப் பயன்படுத்தலாம்.

தமிழில் கருமருது என்று அழைக்கப்படும்
இந்த மரத்தின் பொதுப் பெயர்,
இண்டியன் லாரெல் ட்ரீ. பெரிய மரமாக,
அதிகபட்சமாக 35 மீட்டர் உயரம் வரை
வளரும். காடுகளில் இருக்கும் இந்த மரங்களை,
 பெரும்பாலும் மருந்துகள் தயாரிக்க,
இதனை அறுவடை செய்கிறார்கள்.
இது தவிர வணிகரீதியில் இதனை
கட்டைகள் மற்றும் பலகைகளுக்காக
உபயோகப்படுத்துகிறார்கள்.

இந்த மரங்கள் பெரும்பாலும்,
கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம்
காணப்படுகின்றன. முக்கியமாக
அவை இந்தியா, பங்ளாதேஷ் ,
மியான்மர், தாய்லாந்து, கம்போடியா,
லாவோஸ், மற்றும் வியட்நாம்.   
இந்த மரங்கள் இந்தியாவில் சால்மரக்
காடுகளில் அதிகம் வளர்ந்துள்ளன.
அதிலும் குறிப்பாக 200 மீட்டர் முதல்
1400 மீட்டர் உயரம் உள்ள
இடங்களில் வளர்;ந்துள்ளன.

இந்த மரங்களுக்கு நடுத்தரமான
ஊட்டச்சத்துக்கள் கொண்ட மண் வேண்டும்.
நல்ல வடிகால் வசதி உள்ள மண் வேண்டும்.
முழுமையான சூரிய வெளிச்சம் அவசியம்.
இளம் மரங்கள் ஒரளவு நிழலைத்
தாக்குப்பிடிக்கும். ஆழமான
மண் கண்டம் இல்லாத, களிமண்
பாங்கான மண்ணில் நன்கு வளரும்.

ஆழமில்லாத, ஊட்டச் சத்துப்
பற்றாக்குறையான மண்ணில்,
வளர்ச்சி குன்றி காணப்படும். 4.5 முதல்
7.5 வரை கார அமிலநிலை உள்ள
மண்ணில் சமாளித்து வளரும்.
நீளமான ஆணி வேரைக் கொண்டது.
வெட்ட வெட்ட துளிர்க்கும்
(ஊழுPPஐஊஐNபு குசுநுநுடுலு)
இயல்புள்ளது. நெருப்பைக்கூட
தாங்கும் அளவுக்கு இதன்
பட்டைகள் முரட்டுத்தனமானவை.

மருத மரங்களில் பலவகை உண்டு.
கருமருது, நீர்மருது, பூமருது என
பல வகை இதில் உள்ளன. பொதுவாக
இவற்றை மருதமரம் என்று
சொல்லுகிறார்கள். திருவிடைமருதூர்,
மற்றும் திருஇடையாறு ஆகிய
இடங்களில், இது தல மரமாக உள்ளது.

இதன் இலை, பழம், விதை ஆகியவை
தசை மற்றும் நரம்புகளைச் சுருங்கச்
செய்யும் சக்தி உடையன. உடலுக்கு
பலம் கூட்டும். இதய பலவீனத்தை
சரிசெய்யும்.

விதைகளை குளிர்ச்சியான இடத்தில்
காற்றுப் புகாத குப்பிகளில் அடைத்து
வைத்தால் இரண்டு ஆண்டுகள் வரை
சேமித்து வைக்கலாம். விதைத்தால்,
 5 முதல் 50 சதம்வரை முளைக்கும்.
விதைகளை நேரடியாக பாலித்தின்
பைகளில் விதைக்கலாம். பதியன்கள்
மற்றும் கிளைகளை வெட்டியும்
நடவு செய்யலாம்.

பொருவாக பூரட்டாதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள், பிறர் மனதில் என்ன
நினைக்கிறார்கள், என்பதை தெரிந்து
கொள்ளுவதில் திறமைசாலிகளாக
இருப்பார்கள்: எல்லோரிடமும்
சகஐமாகப் பழகுவார்கள்: தொழிலில்
அக்கறையோடு ஈடுபடுவார்கள்:
மனைவி கிழித்தக் கோட்டைத்
தாண்டாதவர்கள்: அவர்களுக்கு
உரிய நட்சத்திர மரம் கருமருது: இந்த மரத்தை
வணங்கினால் நல்லவை நடக்கும்.
அல்லவை அகலும்.
     
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘வாட்ஸ்அப்’ ல்
ஒரு படம் சுற்றி வந்தது. ஒரு மரத்தின்
வெட்டிய பகுதியிலிருந்து தண்ணிர்
பீச்சி அடிக்கிறது: இரண்டு வனத்துறை
அலுவலர்கள் அந்த நீரை ஒரு
பாத்திரத்தில் பிடிக்கிறார்கள்.

ஆனால் அது என்ன மரம் என்று
போடவில்லை. பின்னர் ‘கூகிள்’
உதவியுடன், அது ‘கருமருது’ என
கண்டுபிடித்தேன். நன்கு வளர்ந்த மரத்தில்,
சுமார் மூன்று நான்கு அங்குல
ஆழத்திற்கு வெட்டினால் 4 முதல்
6 லிட்டர் தண்ணீர் கூட பீச்சி
அடிக்குமாம். காடுகளின் சுற்றித்
திரியும் வனஅலுவலர்கள், தாகம்
எடுத்தால், கருமருது எங்கே
இருக்கிறது எனத் தேடுவார்களாம்.

கோவை மாவட்டத்தில் இருக்கும்
மருதமலை முருகள் கோவிலின்
ஸ்தல விருட்சமாக உள்ளது மருதமரம்தான்.
வெகு கனமாக இருக்கும் இந்த மரத்தினை,
சுவாமிக்கு அருகில் இருக்குமாறு
அதனைப் போற்றி வளர்த்து வருகிறார்கள்.
தெய்வீகப்பசுவான காமதேவை,
மருதமலையில் பசிநீங்க மேய்ந்து,
மருதமரத்தின் கீழ் இருந்த நீரைப்
பருகியதாக, பேரூர் புராணத்தில்
கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார்.


WWW.TROPICAL.THEFESNS.INFO/ - TERMINALIA ELLIPLICA
 WWW.FROM.DINAMALAR.COM jpUkzj; jil ePf;Fk; KUfg; ngUkhdpd; 7 tJ giltPL.
(WWW.DINAMALAR.COM- g+l;lhjp el;rj;jpuf;F chpa Nfhtpy;>


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...