Tuesday, December 31, 2019

இருவாச்சி மூன்று சிவத்தலங்களின் ஸ்தல விருட்சம் IRUVAACHCHI SHIVA TEMPLE TREE



TEMPLE TREES OF INDIA  -  இந்திய கோவில் மரங்கள்












இருவாச்சி

மூன்று  

சிவத்தலங்களின் 

ஸ்தல விருட்சம்

 

IRUVAACHCHI

SHIVA TEMPLE TREE





திருவாத்தி 

என்னும் 

காட்டாத்தி மரம்


YELLOW ORCHID TREE


தே. ஞானசூரிய பகவான், போன்: + 8526195370
Email: gsbahavan@gmail.com


மரக்கட்டைகள் வலுவாக, கடினமாக
இருக்கும். ஆப்ரிக்காவில் பாரம்பரிய
வீடுகளை கட்டுவதற்காக இந்த மரத்தைப்
பயன்படுத்துகிறார்கள்.


இந்த  மரத்தின் பூக்களில் தேனும்,
மகரந்தமும் கூடுதலாக இருக்கும். இது
அதிகப்படியான பட்டாம் பூச்சிகளை மற்றும்
தேனீக்களைக்  கவரும்.


பலவித மருத்துவ
குணங்களைக் கொண்டவை. இந்தியா மற்றும்
ஆப்ரிக்காவின் பாரம்பரிய மருத்துவ
முறைகளில் இவற்றைப்
பயன்படுத்துகிறார்கள்.


தாவரவியல் பெயர்: பாஹினியா
டொமண்டோசா (BAUHINIA TOMENTOSA)


தாவரக் குடும்பம் பெயர்:சிசால் பைனியே
(CAESALPINEACEAE)


பொதுப் பெயர்கள்: எல்லோ ஆர்கிட் ட்ரீ,
செயிண்ட் தாமஸ் ட்ரீ, எல்லோ பெல்
(YELLOW ORCHID TREE, SAINT THOMAS TREE, YELLOW BELL)தாயகம்: இந்தியா (INDIA)


இருவாச்சி  என்னும் காட்டாத்தி
கோவில்களில் தலமரமாக உள்ளது.
திருஆப்பாடி, திருச்சிற்றேமம், மற்றும்
திருச் செங்காட்டாங்குடி மூன்று
சிவத்தலங்களின் தலமரம் இது.

திருச்செங்காட்டான் குடி, உத்தர பசுபரீஸ்வரர்
ஆலயத்தின் ஸ்தவிருட்சம் காட்டாத்தி.
இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகள்
பழமையானது. திருவாரூர் மாவட்டத்தில்
உள்ளது. இந்த சிவாலயத்தின் மூலவர்
கணபதீஸ்வரர், உச்சவர் உத்திர பசுபதிஸ்வரர்,
அம்மன் வாய்த்த திருக்குதல் உமை நாயகி.
சைவக் குறவர்கள் திருஞான சம்மந்தர்,
திருநாவுக்கரசர், மற்றும் அருணகிரி
நாகரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
இது காவிரிக் கரையில் உள்ள 79 வது சிவத்தலம்.
திருச்சிற்றேமம் சிவன் கோவிலும்
திருவாரூர் மாவட்டத்தில்தான் உள்ளது.
கோவில் திருவாரூர் திருத்துரைப் பூண்டி
சாலையில் ஆலத்தம்பாடி சென்று
அங்கிருந்து, சித்தாய்மூர் செல்லும்
பாதையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வாலயத்தின் மூலவர்
சுவர்ணஸ்தாபனேஸ்வரர்,
உற்சவர் பொன்வைத்தநாதர்,
அம்மன் அகிலாண்டேஸ்வரி.
இந்தத் கோவிலின் தல விருட்சமும்
ஆத்திதான்: இந்த ஆலயம் சித்தாய்மூர்
என்றும் இடத்தில் உள்ளது.   
திருஅப்பாடி சிவன் கோவிலின்
ஸ்தலவிருட்சமும் ஆத்தி மரம்தான்.
திருப்பனந்தாளிலிருந்து 4 கி.மீ  தொலைவில்,
திருவிசாலூரில் காவிரி ஆற்றின்
வடக்குக் கரையில் உள்ளது.

இருவாச்சி  மரத்தின்
பல மொழிப் பெயர்கள்


      1. தமிழ்: இருவாச்சி , சிறியாத்தி மரம்
 (IRUVACHI  MARAM, SIRIYATHI MARAM)


2. நேபாளி: அமில் டாங்கி (AMIL TANKI)


3. கன்னடா: மந்தாரா ஹ_ (MANDARA HOO)


4. இந்தி: கச்னார், காஞ்சனா (KACHNAR, KANCHANA)


5. தெலுங்கு: அடவிமந்தரமு, தேவ காஞ்சனமு
 (ADAVI MANDARAMU, DEVA  KANCHANAMU)


6. மராத்தி: அப்டு, சான் (APTU, CHAN)


7. சமஸ் கிருதம்: அஸ்மந்தகா, காஞ்சனராஹ்
(ASMANTAKA, KANCHANARAH)


8. மலையாளம்: காஞ்சன பூ, காஞ்சினா
 (KANCHANA PU, KANCHENA)


9. கன்னடா: ஆனி பாடா, காடாத்தி
(AANE PAADA, KADATHI)


இருவாச்சி , ஆத்தி, மந்தாரை எல்லாமே
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள்தான்:
இருவாச்சி  மரத்திற்குக் கூட காட்டாத்தி
என்ற பெயரும் உண்டு: இவற்றின் இலைகள்
எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும்.
இலைகளின் அளவு மட்டும் வித்தியாசப்படும்.

ஆத்தி மரத்தின் இலைகள் மாதிரி இருவாச்சி
மரத்தின் இலைகளும் இரண்டாகப்
பிரிந்திருக்கும். அதனால் ஆத்தி மரத்தை
ஆங்கிலத்தில் ஒட்டகக்கால் மரம்
(CAMEL FOOT TREE) என்று
சொல்லுவார்கள்:

சிறுசாய் இருக்கும் இலைகளை சட்டென்று
பார்த்தால், பச்சை நிற பட்டாம் பூச்சி சிறகு
விரித்தபடி உட்கார்த்திருப்பது போலத்
தெரியும்.  இதன் இலைகளைக் கசக்கி
முகர்ந்தால், ரப்பர் எரித்தது போன்ற நெடி அடிக்கும்;.
ஆச்சா மரத்தின் இலைகளும் ஏறத்தாழ
இதே போலத்தான் இருக்கும். ஆனால்
அளவில் சிறுசாய் இருக்கும்.

இதன் இலைகள், பூக்கள், மொட்டுக்கள்,
காய்கள் அத்தனையும் பலவித மருத்துவ
குணங்களைக் கொண்டவை. இந்தியா மற்றும்
ஆப்ரிக்காவின் பாரம்பரிய மருத்துவ
முறைகளில் இவற்றைப்
பயன்படுத்துகிறார்கள். இருமல்,
வலிப்பு, மலச்சிக்கல், நுரையீரல் அழற்சி,
பால்வினை நோய்கள்
(COUGH, CONVULSIONS, CONSTIPATION, 
PNEUMONIA, VENERAL DISEASES)
போன்றவற்றிற்கு சிகிச்சை தர
பயன்படுத்துகிறார்கள்.

இதன் இளம் தளிர் இலைகளை கீரை
மற்றும் காய்கறியாக சமைத்துக்
சாப்பிடலாம். கொஞ்சம் அமிலச்
சுவையுடன் இருக்கும். இதன் விதைகளை
‘டானிக்’காகப் பயன்படுத்துகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், பாலுணர்ச்சித்
தூண்டியாகவும், உபயோகப்படுத்துகிறார்கள்.

இருவாச்சி மரத்தின் பூக்களில் தேனும்,
மகரந்தமும் கூடுதலாக இருக்கும். இது
அதிகப்படியான பட்டாம் பூச்சிகளை மற்றும்
தேனீக்களைக்  கவரும். பூக்கள் கவர்ச்சிகரமான
மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் பிரதானமாக
 இந்த மரம் ஒரு மூலிகை மரம்.

இதன் இலைகளிலிருந்து மஞ்சள் நிற
சாயம் எடுக்கிறார்கள். இதன்
பட்டைகளிலிருந்து எடுக்கும் நாரினை
பயன்படுத்தி கூடைகள் செய்கிறார்கள்.
மரத்தின் வயிரப்பகுதி மரம் கருப்புநிறமாக
 இருக்கும். இதன் மேல் பகுதியில் உள்ள
மரப்பகுதி (SAP WOOD)
வெளிர் ஊதா நிறமாக இருக்கும்.

மரக்கட்டைகள் வலுவாக, கடினமாக
இருக்கும். ஆப்ரிக்காவில் பாரம்பரிய
வீடுகளை கட்டுவதற்காக இந்த மரத்தைப்
பயன்படுத்துகிறார்கள்.
காட்டாத்தி மரம் என்னும் இருவாச்சிமரம்
வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப்
பகுதிகளுக்கு ஏற்றது. லேசான
பனிப்பொழிவைக் கூட தாங்கும்.
நல்ல சூரிய ஒளி வேண்டும். ஒரளவு
சுமரான நிழலைக் கூட சமாளிக்கும்.
ஈரச் செழிப்பான மண்கண்டமும்,
வடிகால் வசதியும் ஏற்றவை.

 ஒரளவு வறட்சியைக் கூட தாங்கும்.
 இளஞ்செடிகள் நன்றாக வளரும்.
நடவு செய்த இரண்டாம் ஆண்டே
மரங்கள் பூக்க ஆரம்பிக்கும். வெப்பமான
தட்ப வெப்ப நிலையில் மரங்கள்
பெரும் பாலான மாதங்களில் பூக்கும்.
வறட்சியான இடங்களில் வளரும்
மரங்களில் விதைகளை சேகரிப்பது நல்லது.





















REFERENCES:

WWW.TROPICAL.THEFENNS.INFO/-“BAUNINIA TOMENTOSA, ”,

WWW.TEMPLE.DINAMALAR.COM-“SN UTHINA PASUPATHEEDWARA GANAPATHESWAR TEMPLA”, 

WWW.P2A.SANBI.ORG-BAUHINIA TOMENTOSA, 

WWW.TA.WIKIPEDIA.ORG-KATTATM-, WWW.FLOWERS OF INDIA.NET/YELLOW ORCHID TREE, WWW.ENVIS.FRIHT.ORG/PLANT DETAILS FOR A BAUHINIA TOMENTOSA.





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...