Friday, December 13, 2019

INDIA IS RICH IN RAINFALL - (A TV SERIAL) இந்திய நாட்டின் மழை குறைவல்ல


 

இந்திய நாட்டின் 

மழை குறைவல்ல


பாடம் 02.

நடத்துபவர்  

தே.ஞானசூரியபகவான் 








(மக்கள் தொலைக்காட்சியில் 

மலரும் பூமியில்  

வேளாண்மைத் தொடராக 

ஒளிபரப்பானது) 

(A TV SERIAL)

பொதுத் தலைப்பு

வரப்புயர நீர் உயரும்



















888888888888888888888888888

இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பகுதியாக 
இருப்பினும் இயற்கை எல்லையில்லா 
தன் கருணையை பொழிந்து கொண்டுதான் 
இருக்கிறது. இந்த கருணைமழை 
இந்தியாவின் பக்கம் கொஞ்சம் 
கூடுதலாகவே உள்ளது.


88888888888888888888888


மக்கள்தொலைக்காட்சியின் வேளாண்மைப்பள்ளி மாணவர்களுக்கு வணக்கம். இன்று இரண்டாம் பாடம்.  இந்திய நாட்டின் மழை குறைவல்ல  என்பதுதான் இந்த பாடத்தின் தலைப்பு.

தண்ணீர் பங்குகள்

இன்று பஸ்சில்; ரயிலில் டிக்கட் வாங்கவில்லை என்றால்கூட தண்ணீர் பாட்டில் வாங்காமல் யாரும் ஏறுவதில்லை. ஒரு லிட்டர் பால் 15 ரூபாய்; தண்ணீர் 20 ரூபாய். இன்னும் சில ஆண்டுகளில் சாலைகளில் பெட்ரோல் பங்குகளைவிட தண்ணீர் பங்குகளை அதிகம் பார்க்கலாம்;. அப்படிப்பட்ட சூழ்நிலை வராது. வரக்கூடாது. அதற்கு சில புள்ளிவிவரங்களை நாம் தெரிஞ்சிக்கணும்.

இந்தியாவில் கிடைக்கும் மழை 1250 மி.மீ.

இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் இருக்கு. ஏழு யூனியன் பிரதேசங்கள் இருக்கு. உலகின் மழைமாநகரமாக தற்போது விளங்கும் மாசின்ரோம்ஐ உள்ளடக்கிய  இந்தியாவின் ஆண்டு சராசரி மழை 1250 மில்லி மீட்டர். மாசின்ரோம்ல் கிடைக்கும் மழை 11,782 மி.மீ. சிரபுஞ்சியைவிட இது அதிகம். சிரபுஞ்சியில் கிடைக்கும் மழை 11,444 மி.மீ. இந்தியாவில் குறைவாக மழை பெய்யும் மாநிலம் ராஜஸ்தானின் மேற்குப்பகுதி. இங்கு கிடைக்கும் மழை 185 மி.மீ. இந்த மழை அளவு எல்லாமே ஆண்டு சராசரி மழை அளவு. புள்ளிவிவரங்களை நாம மறக்கக்கூடாது.

எவ்ளோ காகங்கள் இருக்கு ?

அப்படித்தான் ஒரு ராஜா ஒரு நாள் தன்னோட மந்திரியை  கூப்பிட்டார். நம்ம ராச்சியத்துல மொத்தம் எவ்ளோ காகங்கள் இருக்கு ? தயங்காம ஒடனே சொன்னார் 85999 காக்கான்னு. போனமாசம் அதைவிட குறைவா இருக்குன்னு சொன்னாங்க. அப்படின்னு சொன்னதும் மந்திரி சொன்னார்அடுத்த நாட்டுல ஏதோ விஷேஷம்னு போயிருந்ததுங்கஅப்படின்னு சொல்லிட்டுசந்தேகமா இருந்தா எண்ணிப்பாத்துக்கங்க மகாராஜாஅப்படின்னு சொன்னார்.

இப்போ நான் சொன்ன புள்ளிவிவரங்கள் அந்தமாதிரி புள்ளிவிவரங்கள் இல்ல.

ஆண்டு சராசரி மழை என்றால் என்ன ?


மழை சில ஆண்டுகள்ள குறைவாக பெய்யும். சில ஆண்டுகள்ள அதிகமாக பெய்யும். சில ஆண்டுகள்ள நடுத்தரமாகப் பெய்யும். சில ஆண்டுகள்ள சுத்தமாகப் பெய்யாது. சில வருஷம் பேஞ்சி கெடுக்கும். சில வருஷம் காய்ந்தும்  கெடுக்கும். இதுதான் மழையின் அடிப்படையான குணம். ஒரு 25 வருஷம், இல்லன்ன 30 வருஷம். எவ்ளோ மழை பேயுதோ, அதோட சராசரி பாப்பாங்க. அதுதான் இந்த ஆண்டு சரசரி மழை.

இப்போ இன்னொரு தடவை சொல்லி பாப்போம்.

இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் இருக்கு. ஏழு யூனியன் பிரதேசங்கள் இருக்கு. உலகின் மழைமாநகரமாக தற்போது விளங்கும் மாசின்ரோம்ஐ உள்ளடக்கிய  இந்தியாவின் ஆண்டு சராசரி மழை 1250 மில்லி மீட்டர். மாசின்ரோம்ல் கிடைக்கும் மழை 11,841 மி.மீ. சிரபுஞ்சியைவிட இது அதிகம். சிரபுஞ்சியில் கிடைக்கும் மழை 11,777 மி.மீ. இந்தியாவில் குறைவாக மழை பெய்யும் மாநிலம் ராஜஸ்தானின் மேற்குப்பகுதி. இங்கு கிடைக்கும் மழை 185 மி.மீ. இந்த மழை அளவு எல்லாமே ஆண்டு சராசரி மழை அளவு.

உலகில் அதிக மழை பெறும் 10 இடங்கள்

இந்த பாடத்தின் தலைப்பு இந்தியாவின் மழை குறைவல்ல என்பதுதான். இதை சொல்லணும்னா மற்ற நாடுகளோட மழை அளவையும் பாத்துதான் சொல்ல முடியும்


இதில் முதல் இரண்டு இடங்களை இந்தியாவும் கடைசி இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. ஏழு எட்டு ஒன்பதாவது இடங்களை ஹவாய்  பிடித்துள்ளது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் இருப்பவை தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஈக்குவடோரியல் கினியா மற்றும் ஆப்ரிக்கா.


1. மாசின்ராம் – 11871 மி.மீ. – இந்தியா
2. சிரபுஞ்சி     - 11777 மி.மீ. – இந்தியா
3. ட்டூடெண்டோ – 11,770 மி.மீ. – கொலம்பியா, தென் அமெரிக்கா
4. கிராப் ரிவர் -   11,556 மி.மீ நியூசீலாந்து
5. சேன் ஆண்டோனியோ – 10,450 மி.மீ. பயொகொ தீவு, ஈக்வடோரியல் கினியா
6. டிபண்ட்ஸ்ச்சா – 10299 மி.மீ. – 10,229 கேமரூன், ஆப்ரிக்கா
7. பிக்பாக் -       10272 மி.மீ. – ஹவாய்
8. மவுண்ட் வாயாலேல் – 9763 மி.மீ. – ஹவாய்
9. கூகுய் – 9293 மி.மீ. ஹவாய்
10. எமிஷான் சீனா

இதில் முதல் இரண்டு இடங்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.


இந்தியாவின் மழை மாநகரங்கள் 


இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பகுதியாக இருப்பினும் இயற்கை எல்லையில்லா தன் கருணையை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கருணைமழை இந்தியாவின் பக்கம் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. கீழ்க்கண்ட பட்டியலைப் பாருங்கள். இவை எல்லாமே இந்தியாவில் மழை அதிகம்பெறும் மழைப்பிரதேசங்கள்.


1.     மாசின்ரோம்.      மேகாலயா (11,777 மி.மீ.)
2.     சிரபுஞ்சி         மேகாலயா (11,871 மி.மீ.)
3. சின்ன கல்லார். (1907 மி.மீ)    தமிழ்நாடு (இரண்டாவது சிரபுஞ்சி வால்பாறையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது- கூழாங்கல் ஆறு)
4.     நேரிய மங்கலம். (3849 மி.மீ) கேரளா
5.     ஆம்போலி (3589 மி.மீ) மகாராஷ்ட்ரா.
6.     தித்தார் கஞ்ச் (1405 மி.மீ)   உத்ரகாண்ட்
7.     சந்த்பால்.       ஓரிசா.
8.     ஆடும்பே        கர்நாடகா.

இந்திய நாட்டின் மழை அளவும் உலக நாடுகளின் மழை அளவைவிட அதிகம். இது ஒரு சராசரி மனிதனை மிரட்டும் சேதி !
                     ;.

உலகத்தில் குறைவாக 
மழைபெறும் இடங்கள்

1. குவைத் – 120 மி.மீ.
2. ஜோர்டான் – 110 மி.மீ.
3. மாரிஷியானா – 92 மி.மீ.
4. அல்ஜீரியா – 88 மி.மீ.
5. பஹ்ரைன் – 83 மி.மீ.
6. யுனைடட் அராப் எமிடரேட்ஸ் – 78 மி.மீ.
7. கட்டார் – 73 மி.மீ.
8. சவூதி அரேபியா – 58 மி.மீ
9. லிபியா – 55 மி.மீ.
10. எகிப்து – 50 மி.மீ.

இப்போ சொல்லுங்க 
இந்தியாவுல 
மழை அதிகமா ? குறைவா ?


888888888888888888888888888888888888888888



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...