Monday, December 23, 2019

இன்று ஒரு குறுஞ்செய்தி இலுப்பை - ரேவதி நட்சத்திர மரம் - இன்று ஒரு குறுஞ்செய்தி - ILUPPAI - REVATHY BIRTH STAR TREE








இலுப்பை  - ரேவதி  

 நட்சத்திர மரம்

இன்று ஒரு குறுஞ்செய்தி


ILUPPAI - REVATHY BIRTH STAR 

TREE - NEWS TODAY


இன்று ஒரு  

குறுஞ்செய்தி

NEWS TODAY



வணக்கம்


பிறருக்கு எப்போதும் உண்மையாக
உதவும் உள்ளப்பாங்கினை உடைய
வள்ளல் நீங்கள்.

அறிஞர்களும் ஞானிகளும் உங்களை
நாடிவந்து உங்கள் நட்பினை வேண்டுவர் .

விரல்நீட்டி குற்றம் சொல்லும்படியான
செயல்களை செய்ய அஞ்சுவீர்.

கைகூப்பி வணங்கும்படியான
அரிதான செயல்களை மட்டுமே
அடிக்கடி செய்ய விரும்புவீர்.

சொந்த புத்தி மந்தமில்லாமல் இருந்தாலும்
சொன்ன புத்திக்கும் செவிதந்து
செயல்படுவீர்.

நீங்கள் குரல் எடுத்து பேசினால்
குத்து வாளுடன் வந்தவனும்
அதை மெத்த ரசித்து
மேன்மை செய்வான்.

உங்கள் நட்சத்திரமரம்
இலுப்பை மரம்.

ஒரு காலத்தில் கோவில்களுக்கு
வெளிச்சம் தந்த மரம்.
ஆலை இல்லாத ஊர்களில்
எல்லாம் சக்கரையாய்
இனித்தமரம் இலுப்பையை
நட்டு  வளர்த்து வந்தால்
தோஷங்கள்  அத்தனையும்
விட்டு விலகும்.

எட்டிச்சென்ற  கிட்டாத வளங்கள்
அத்தனையும் உங்களை
சுற்றிவந்து கும்மி அடிக்கும்.

இப்படிக்கு
குறுஞ்செய்தி கோவாலு

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...