இலந்தை - சிறு பழ மரம்
ILANTHAI - POOR MEN'S FRUIT TREE
தாவரவியல் பெயர்: ஜிசிபஸ் ஜுஜுபா(ZIZIPHUS JUJUPA)
தாவரம் குடும்பம் பெயர்:
ராம்னேசி
(RHAMNACEAE)
பொதுப் பெயர்கள்:
இண்டியன்
டேட்,கொரியன் டேட், சைனிஸ் டேட்,ரெட் டேட், ஜூஜூப் (INDIAN
DATE,
KORIAN DATE, CHINESE DATE,RED DATE, JUJUBE)
பத்ரிநாத் கோவில்
1995 ம் ஆண்டு நான் ஜார்கெண்ட்
மாநிலத்தில் இருக்கும்; பத்ரிநாத்
கோவிலுக்குப் போய் இருந்தேன்.
அங்கு நான் சேகரித்த
தகவல்களில்
ஒன்று இலந்தை மரத்துடன்
தொடர்புடையது. ஒரு காலத்தில்
இந்த பத்ரிநாத் கோவில் இருந்த
இடத்தில் ஒரு பெரிய
இலந்தைமரக்காடு
இருந்தது என்பதுதான் அது.
இந்து புராணத்தின்படி இன்று
பத்ரிநாத் கோவில் இருக்கும்
இடத்தில் விஷ்ணு நிஷ்டையில்
அமர்ந்தார். அது கடுமையான
குளிர்ப்பிரதேசம்.
குளிரிலிருந்து
பாதுகாக்க லட்சுமிதேவி ஓர்
இலந்தை
மரமாக மாறி பாதுகாப்;பு தந்தார்.
நிஷ்டை முடிந்ததும்
விஷ்ணுபெருமான்
இந்த இடத்திற்கு பத்ரிகா
ஆசிரமம்
என பெயர் சூட்டினார். இந்தி
மொழியில்
பத்ரிகா என்றால் இலந்தை மரம்
என்று அர்த்தம்.
சிறு பழ மரம்
நிறைய முட்களுடன் படர்ந்து வளரும்
நிறைய முட்களுடன் படர்ந்து வளரும்
சிறிய மரம். 5 முதல் 12 மீட்டர் வரை கூட
உயரமாய் வளரும். சின்னச் சின்ன இலைகள்
பளபளப்பான பச்சை நிறத்தில்
இருக்கும்.
காய்களும் பழங்களும் ஏறத்தாழ
சுண்டைக்காய் அளவில்
இருக்கும்.
காய்கள் பச்சையாகவும்
பழங்கள் காவி நிறத்திலும்
இருக்கும்.
பள்ளிக்கூட பழம்
ஒரு காலத்தில் பள்ளிக்கூட
பையின்களின் புத்கக மூட்டையை
ஆராய்ந்தால், குறைந்தது மூன்றுவகையான
பழங்களாவது இருக்கும். அவை,
நாவல், நெல்லி, மற்றும் இலந்தை.
அதேபோல ஒவ்வொரு பள்ளிக்
கூடத்தின் முன்னாலும்
நாலைந்து
கூடைகளில் இந்தப் பழங்களுடன்
நாலைந்து பாட்டிகளும்
உட்கார்ந்திருப்பார்கள்.
அப்படி இல்லை என்றால் அன்று
பள்ளிக்கூடம் விடுமுறை
என்று அர்த்தம்.
பெரும்பாலும் பள்ளிக்கூடங்கள்
பக்கத்தில் இருக்காது. குறைந்தது
ஒன்று அல்லது இரண்டு
கிலோமீட்டராவது
நடந்து செல்ல வேண்டி
இருக்கும்.
எங்கோ ஒரு பள்ளிக்கூடம்தான்
இருக்கும்.
பள்ளிக்கூடம் போகும்
வழியிலேயே
இதை எல்லாம் கொள் முதல்
செய்து கொண்டே போகலாம்.
“நல்ல பழமா எதுவும் இல்லையாடா?”
என்று பலசமயம் வாத்தியார்களே
பையன்களிடம் பழம்
கேட்பதுண்டு.
பழம் தரும் பையன்களுக்கு
அடியும் உதையும் அவ்வளவாய்
கிடைக்காது. இலந்தம் பழங்களை
சாப்பிடும்போது, கொஞ்சம்
செங்காயாக சாப்பிடுவது
பாதுகாப்பு.
ரொம்பப் பழுத்தப் பழத்தில்
ஒரு புழுவாவது இருக்கும்.
நாவல் பழம் சாப்பிட்டால் சில
சமயம்
தொண்டை கட்டிக்
கொண்டும்.
சளியும் தும்மலும் கூட வரும். எங்கள்
வீட்டில் நாவல் பழம் சாப்பிட
தடை
உத்தரவே இருந்தது. ஜுர மாத்திரை
என்றுகூட அதற்கு பெயர்
வைத்திருந்தார்கள்.
ஆனால் அதுபற்றி எல்லாம்
நாங்கள்
கவலைபபட மாட்டோம்.
நெல்லிக்காய்
அதிகம் சாப்பிட
மாட்டோம்.
எதுவும் இல்லாத சமயம் அதுவும்
ஒடும்.
அது கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தி
!
அதை சாப்பிட்டால் உடனே
தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒருவகை இனிப்பாய் இருக்கும்.
இலந்தைப் பழங்களைப்
பறிக்கும்போது
ஜாக்கிரதையாய் பறிக்க
வேண்டும்.
இல்லையென்றால் முள்ளில்
மாட்டிக்
கொள்ளுவோம். நிறைய தடைவை
புதுசட்டைகளைக்கூட அதில்
கிழித்துக் கொண்டிருக்கிறோம்.
இலந்தம் பழத்தில் நிறைய தசை
இருக்காது. பழத்தில் ஒற்றைக் கொட்டை
பலமாக பெரிசாக இருக்கும்.
வீட்டுத்தோட்ட மரம் -
இண்டியன் ஜூஜூப்
இண்டியன் ஜூஜூப்
இலந்தை, இந்தியாவிற்கு
சொந்தமான மரம். பிரபலமானது
என்று கூட சொல்ல
முடியாது.
குறைவான முக்கியத்துவம்
உள்ளது.
ஆனால் கூட உலகம் முழுவதும்
பரவியுள்ளது.
தெற்கு ஆசியாவில் லெபானான்
முதல் வட இந்தியா வரை,
மத்திய மற்றும் தெற்கு சீனா,
தென்கிழக்கு ஐரோப்பா
என்று
பரவியுள்ளது. பல்கேரியாவில் வீட்டுத்
தோட்டங்களில் பழம் தரும்
மரமாக வளர்க்கிறார்கள்.
குர்ரான்'ல் சொல்லப்பட்ட
லோட்டி மரம்
கரிபியன், டிரினிடாட், பஹாமாஸ்,
லோட்டி மரம்
கரிபியன், டிரினிடாட், பஹாமாஸ்,
கலிபோர்னியா போன்ற இடங்களில்
எல்லாம் ‘இண்டியன் ஜூஜூப்’ என்கிறார்கள்.
அரபிக் மொழி பேசும் இடங்களில்,
‘சிசுபஸ் லோட்டஸ்’ என்னும். இலந்தை ரக
மரங்களை
வளர்க்கிறார்கள்.
அவை குர்ரானில் சொல்லப்படும்
‘லோட்டி’ என்னும் மரங்களுடன் (LOTE TREES)
நெருங்கிய தொடர்புடையவை
என்று சொல்லுகிறார்கள்.
பாலைவனங்களில் வளரும்
இலந்தை மரம் பரவலான
தட்ப வெப்ப சூழல்களில் வளரும்; 15 டிகிரி
சென்டிகிரேட் கொண்ட
குளிரையும் தாங்கும்.
மலைகள் மற்றும் பாலைவனங்களின்
வெப்பத்தையும் தாங்கும்.
ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின்
வெப்பமான மற்றும்
குளிர்ச்சியான
பகுதிகளிலும் கூட வளர்கின்றன.
அறுவடை செய்த பழங்களை
உலர்த்தி
காப்பி மற்றும் தேநீருடன்
தின்பண்டமாகச்
சாப்பிடுகிறார்கள். ‘பிளாக் ஜூஜுப்ஸ்’
என்ற பெயரில் பழங்களுக்கு
புகையிட்டு சாப்பிடும்
பழக்கம்
வியட்நாமில் உள்ளது.
சீனா மற்றும் கொரியாவில்,
இலந்தைத் தேநீர் தயாரித்து
சாப்பிடுகிறார்கள்.
சீனாவில் இலந்தை ஐஸ் மற்றும்
இலந்தைவினிகர் கூட தயார்
செய்கிறார்கள்.
ஒயினும் ஊறுகாயும்
செய்யலாம்
செய்யலாம்
மேற்கு வங்காளம், மற்றும் பங்ளாதேஷில்
இலந்தை ஊறுகாய் தயார்
செய்கிறார்கள்.
அங்கு இலந்தை ஊறுகாய் ரொம்ப
பிரபலமாம்.
“ஹாங் சாவ் ஐpயூ” என்னும்
ஒருவதை இலந்தை ஒயின்
தயார் செய்கிறார்கள் சீனாவில்.
சில சமயங்களில் பைஐயூ என்னும்
ஒருவகை சீனமதுவில் இலந்தை
பழங்களைப் போட்டு ஊறவைத்து
விடுகிறார்கள், அடுத்த பதப்படுத்திய
இலந்தம் பழங்களை ஜியூ ஜாவோ
என்று சொல்லுகிறார்கள்.
வியட்நாம் மற்றும் டைவானில்
அறுவடை செய்யும் பழுத்த
இலவம் பழங்களை உள்ளுர்
மார்கெட்டில்
விற்பனை செய்கிறார்கள். தரமான
தெறிப்பான பழங்களைப் பொறுக்கி
எடுத்து தென்கிழக்கு ஆசிய
நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறார்கள்.
காலம் காலமாக இந்தியாவில்
எப்படி
இதைப் பயன்படுத்தினர்கள்.
பழங்களை
உலர்த்துவார்கள்.
கொட்டைகளை
நீக்குவார்கள்.
அத்துடன் தேவையான அளவு புளி>
மிளகாய், உப்பு மற்றும் வெல்லம்
சேர்த்து இடிப்பார்கள். பின்னர் மறுபடியும்
சூரிய ஒளியில் காய வைத்து வடை
செய்வார்கள். இதுதான் இலந்தை வடை.
இதை தெலுங்கில் ‘ரெகி வடையாலு’
என்பார்கள்.
இந்தாலி, செனிகல் போன்ற நாடுகளில்
‘இலந்தை ஒயின்’ தயார் செய்கிறார்கள்.
இதன் பழக் கூழிலிருந்துஇ ஜாம்>
ஜெல்வி போன்றவைகளும்
செய்கிறார்கள்.
பெண்களை
மயக்கும் சக்தி
மயக்கும் சக்தி
இமாலயா மற்றும் காரகோரம்
பகுதி இனளஞர்கள் தங்கள்
குல்லாய்களில்> இலந்தை
பூங்கொத்துக்களை அலங்காரமாக
வைத்துக்
கொள்ளுகிறார்கள்.
அதனால் சுலபமாய் அவர்களிடம்
‘ஐ லவ் யூ’ சொல்லுகிறார்களாம்.
இவற்றைப் பூக்களின் வாசனைக்கு
பெண்களை மயக்கும் சக்தி
இருக்கிறதூம்.
சீனாவில் முதலிரவில் மணமக்கள்
சாப்பிடுவதற்காக, வேர்கடலை,
செஸ்ட்நட் கொட்டை, லாங்கன்
பழங்கள், மற்றும் இலந்தம் பழங்களை
வைப்பார்களாம். அப்படி வைப்பதால்
சீக்கிரமாக அவர்கள் அம்மா
அப்பா
ஆவார்களாம்.
‘டீப்பயங்சோ’ என்னும் ஒரு வகையான
ஒரு இசைக் கருவியை இலந்தை
மரத்தில்
செய்கிறார்கள். நம்ம ஊர் தெருக்கூத்துகளின்
பயன்படுத்தும் முகவீணை
(குறுங் குழல்)
மாதிரி உள்ளது. இது கொரிய
நாட்டின் பாரம்பரியமான
இசைக்கருவி.
சீனாவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு
முன்னாலிருந்து
பழக்கத்திலிருக்கும்
விளையாட்டு ‘கோ’ என்பது.
அது பார்க்க ஒடு சிறிய பெட்டி
போல உள்ளது.
அதன் மேல் கருப்பு வெள்ளை
பட்டன்கள்
வைக்கப்பட்டுள்ளது.
அதையும் இந்த இலவன்
மரத்தில்தான்
செய்கிறார்கள். அத்தோடு மணிமாலைகள்
வயிலின் போன்ற
இசைக்கருவிகளுக்கான
உதிரி பாகங்களும் தயார் செய்ய
இலந்தை கட்டைகளைப்
பயன்படுத்துகிறார்கள்.
பாரம்பரிய வைத்தியம்
பூசணக் கொல்லி, நுண்ணுயிர்க்கொல்லி>
குடற்புண் நீக்கி, வீக்கமகற்றி, உடல்
வெப்பமகற்றி, நடுக்கம்கற்றி, சிறுநீரக
நோயகற்றி இருதய உரமாக்கி,
தடுப்பு சக்தி ஊக்கி, காயமாற்றி,
கருத்தடை ஊக்கி, ஆகிய மருத்துவ
சிகிச்சைப் பண்புகளைக் கொண்டது.
இலந்தையின் பல்வேறு
பாகங்கள்.
பாரம்பரிய வைத்திய முறையில்
தொடங்கி தற்போது பல்வேறு
நவீன வைத்திய முறைகளிலும்
இதனை கையாண்டு வருகின்றனர்.
அவ்வப்போது இலந்தைப்பழம்
சாப்பிடுபவர்களுக்கு கீழ்கண்ட
பிரச்சினைகள் ஏதும் வராது.
1. பேருந்தில் பயணம் செய்யும்போது
தலைச்சுற்றல், வாந்தி வராது.
2. பசி இல்லை என்ற செரிமானப்
பிரச்சினை வராது.
3. மாதவிலக்கு காலங்களில்
உதிரப்போக்கு அதிகம்
ஏற்படாது.
4. எலும்பு தேய்மானம்> மூட்டுவலி>
மற்றும் மூட்டுப்பிடிப்பு
வராது.
5. சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால்
பற்களும்> எலும்புகளும் பலவீனமாகாது.
சங்க இலக்கியத்தில்
சங்க இலக்கியத்தில் எல்லாம்
கூட
இலந்தைமரங்கள்பற்றிய பாடல்கள்
வருகின்றன. “உதாரணமாக நற்றிணை”
யிலிருந்து ஒரு பாடல்.
இலந்தை மரங்கள் எல்லாம்
மான்களால் மேய்ந்தது போக
இன்னும் கூட வழி எல்லாம்
காய்கள்
சிதறிக் கிடக்கின்றன. அந்த
மரங்கள்
இன்னும்கூட பயன் தருவனவாய்
உள்ளன. அதுபோல தலைவி
தலைவனின் பிரிவினால்
துன்பப்பட்டு
இருந்தாலும் ஒருவேளை வந்துவிட்டால்
அவளால் அவனுக்கு இன்பம்
தரமுடியும். என்ற பொருளில்
புலவர் இளங்கீரனார்
என்பவரால் எழுதியப் பாடல்.
“உழை அணந்து உண்ட இறை வாங்கு
உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி பல்கத் தாவும்
பெருங்காடு இறந்தும்……. (நற்றிணை. 113. பாலை)
No comments:
Post a Comment