Wednesday, December 18, 2019

FUNCTIONING OF DRIP IRRIGATION - சொட்டுநீர்ப்பாசனம் இயங்கும் முறை


சொட்டுநீர்ப்பாசனம்இயங்கும் முறை

தே. ஞானசூரிய பகவான்

888888888888888888888888888888888888  

சொட்டு நீர்ப்பாசனத்தின் சிறப்பு என்ன ?

சொட்டு நீர் பாசனத்தின் அடிப்படை இதுதான். 
சொட்டு நீர் பாசனம் பாசன நீரை வேர் பகுதிக்கு
செல்கிறது. பாசன நீர் விரயமாவது இல்லை
அதுபோல சொட்டு நீரில் உரத்தை கரைத்து 
பயிர்களுக்கு அளிக்கலாம்.
பாசனமும் கொடுக்கலாம். 
உரமும் கொடுக்கலாம். 
இந்த முறையில் நீரையும், 
உரச்சத்துக்களையும் சொட்டு நீர்ப்பாசனம் 
வேர்களுக்கு அறுகில் எடுத்துச் சென்று   
பயிர்களுக்குக் கொடுக்கிறது.
இதனால் உரம் வீணாவதில்லை. 
உரங்களை சிக்கனமாக இட முடிகிறது. 
பயிர்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் 
கிடைக்கிறது. சாகுபடி செலவு 
கணிசமாகக் குறைகிறது. 
உரமிடுவதற்கு ஆகும் ஆள் செலவு 
குறைகிறது. களை முளைப்பது குறைகிறது. 
பூச்சி நோய் தாக்குதல் குறைகிறது. 
மகசூல் அதிகரிக்கிறது.


வென்சுரி என்னும் உரத்தொட்டி

சொட்டுநீர் பாசனத்தில் உரம் உட் செலுத்தப் பயன்படுத்தும் உபகரணங்கள்
இதற்கு வென்சுரி, உரத்தொட்டி,  உரச் செலுத்தி ஆகிய மூன்று கருவிகளில் ஒன்றினைப் பயன்படுத்தலாம்.

வென்சுரி மிக எளிமையான விலை குறைவான கருவி. உரக்கரைசலை இது பிரதான சொட்டுநீர் குழாயில் உட்செலுத்துகிறது. சிறிய பாசனப் பகுதிக்கு ஏற்றது.

அடுத்து உரத்தொட்டி.  மெயின் சொட்டுநீர் குழாயில் செல்லும் நீரின் ஒரு பகுதியை தொட்டியின் மூலம் செலுத்தவேண்டும். தொட்டியில் இடும் உரம் இந்த நீரில் கரைந்து பாசன நீருடன் கலக்கும்.
மூன்றாவது உரம் உட்செலுத்தி. இந்த கருவி, குழாயில் செல்லும் நீரின் அழுத்தத்திலேயே இயங்கும். நீர் மற்றும் உரத்தின் விகிதாச்சாரம் எப்போதும் ஒரேமாதிரியாய் இருக்கும்.

இதனால் உரம் பயிர்களின் வேர்ப் பகுதிக்கு கிடைக்கிறது. பயிரின் தேவைக்கு ஏற்ப பலமுறைப் பிரித்துக் கொடுக்கலாம். உரமிடும் ஆட்செலவு குறைகிறது.. உரத்தின் பயன்பாட்டுத் திறன் 90 சதமும் மேல்தூவும் முறையில் 50 சதமூம் குறைகிறது. உரச் செலவு 25 சதம் குறைகிறது.

என்ன உரம் கொடுக்கலாம் ?

அம்மோனியம் நைட்ரேட், யூரியா ஆகியவை நீரில் முழுசாய் கரையும் தழைச்சத்து உரங்கள். மோனோ மற்றும் டை அம்மோனியம் பாஸ்பேட், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவை நீரில் முழுசாய் கரையும் மணிச்சத்து உரங்கள்.. போட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவையும் இந்தவகை சாம்பல் சத்து உரங்கள்.

மோனோ அம்மோனியம் பாஸ்பேட் பாலிபீட், மல்ட்டிகே, பொட்டாசியம் நைட்ரேட். ஆகியவை சொட்டுநீர்ப் பாசனத்திற்கான சிறப்பு உரங்கள். இந்த உரங்களில் இரும்பு, மங்கனீசு, போரான், மாலுப்டினம், தாமிரம், துத்தநாகம் ஆகிய நுண்நூட்டச் சத்துக்களும் உள்ளன.

முக்கியமாய் கவனிக்க வேண்டியவை என்னென்ன ?

உரம் தூசு, Jk;G இல்லாமல் சுலபமாகக் கரையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழவகை மற்றும் புகையிலைப் பயிர்களுக்கு குளோரைடு உரங்களை உபயோகிக்க கூடாது.

சொட்டுநீர்க் கருவிகளை அரிக்கும் உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. அதிக அளவு உரத்தைப் பயன்படுத்தக் கூடாது. உரங்களைப் பிரித்து பல முறையாக இட்டால் பலன் அதிகம்.

குறுகிய காலப்பயிருக்கு (காய்கறிகள்) வாரம் ஒருமுறை. நீண்டகாலப் பயிருக்கு ( கரும்பு,வாழை ) இரண்டு வாரத்திற்கு ஒரு முறை.

மூன்று கருவிகளில் ஏதாவதொன்றை நீர் வடிகட்டிக்கு முன்பாக பிரதான குழாயில் பொருத்திக் கொள்ளவேண்டும். ஒரு பங்கு உரத்தை ஐந்து பங்கு நீருடன் கரைக்க வெண்டும்.. உரக் கரைசலை செலுத்தும் முன் சொட்டுநீர்ப் பானத்தை இருபது நிமிடம் இயக்க வேண்டும்.

உரம் உட் செலுத்தும் அமைப்பின் வால்வுகளை இயக்கி உரத்தை நீருடன் கலக்குமாறு செய்ய வேண்டும். உரக்கரைசல் தீர்ந்த பிறகும் பதினைந்து நிமிடம் சொட்டுநீர்க் கருவியை இயக்கி உரக்கரைசல் முழுவதும் வெளியேறும்படி செய்ய வேண்டும்.

சொட்டுநீரில் அடைப்பு எப்போது ஏற்படும் ?

உப்புத்தனமை உடைய பாசன நீரைப் 
பாய்ச்சும்போது நாடைவில் குழாய்களில் 
அடைப்பு ஏற்படும். அடைப்பை நீக்க 
பிரதானக் குழாயின் இறுதியில் உள்ள 
பிளஷ் வால்வை இயக்க வேண்டும். 
பக்கவாட்டுக் குழாயின் இறுதியில் 
மடக்கி வைக்கப்பட்டு அமைப்பைத் 
திறந்து நீரை வெளியேற்றலாம்.
ஐந்துசதவிகித நீர்த்த கந்தக அமிலத்தை 
உட் செலுத்தியும் ஒரு இரவு வைத்திருந்து 
பின் அமிலத்தை வெளியேற்றி 
அடைப்பை நீக்கலாம்.
888888888888888888888888888888888888








No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...