Saturday, December 21, 2019

FLOOD CONTROL OF CHINA - சீனாவின் வெள்ளம் தடுக்கும் பஞ்சு மிட்டாய் நகரங்கள்

சீனாவின்  பஞ்சு மிட்டாய் நகரங்கள்

சீனாவின்
வெள்ளம் தடுக்கும் 
பஞ்சு மிட்டாய் 
நகரங்கள்

(LEARN THE ART OF FLOODCONTROL FROM SPONGE CITIES OF CHINA)

(மழைக்காலத்தில் சாலைகளில், 
அல்லது குடியிருப்புகள் 
இருக்கும் இடங்களில் இடுப்பளவு 
நீராக ஓடுவதில்லை. வெள்ள நீர் தேங்கி 
முதல்மாடிக்குப்  போய் எட்டிப் 
பார்ப்பதில்லை. கார் ஒடும் 
சாலைகளில் படகுகள் 
ஒடுவதில்லைஅவற்றை 
எல்லாம் அடியோடு மாற்றிய 
நகரங்களைத்தான் இவர்கள் 
பஞ்சுமிட்டாய் நகரங்கள் என்கிறார்கள்.)

உகான் சிட்டி

அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் 
நகரங்களில் மழை றுவடை மூலம் 
தீர்வு கண்ட நகரங்களுக்கு 
பஞ்சு மிட்டாய் நகரங்கள்   
என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 
அப்படிப்பட்ட பஞ்சு மிட்டாய் 
நகரங்களில் ஒன்று தான் உகான் நகரம். 
இந்த உகான் சிட்டிக்கு நூறு ஏரி நகரம் 
(HUNDRED LAKE CITY) என்ற பெயரும் உண்டு.

நூறு ஏரி நகரம்

உகான் சிட்டியின் பழைய பெயர் 
நூறு ஏரி நகரம். ஒரு காலத்தில் 
அங்கு 100 ஏரிகள் இருந்ததாம். 
1980 களிலேயே அத்தனை ஏரிகள் 
இருந்த ஊரில், இன்று 30 ஏரிகள்தான்  
உசிரோட இருக்கு என்கிறார்கள். 
என்ன காரணம் என்றால்
எல்லாம்  நகர்மயமாதல்தான்’ 
அடிப்படைக் காரணம்! ஏன்கிறார்கள். 
சென்னையை எடுத்துக் கொள்ளுங்களேன் 
நகர விரிவாக்கத்தில் எத்தனை ஏரிகளை 
காவு கொடுத்தோம் யோசித்துப் பாருங்குகள்.

நதிகள் ங்கமமாகும் இடம்:

இரண்டு நதிகள் சங்கம்மாகும் இடத்தில் 
அமைத்துள்ளது இந்த உகான்நகரம். 
அதனால் இந்தப்பகுதி அடிக்கடி 
வெள்ளத்திற்கு உள்ளாகும். 
பெரும்பாலும் கோடை
மாதங்களில்தான் இந்த வெள்ளம்  
அதன் கைவரிசையை காட்டும்
இங்கு உள்ள சிறுசிறு தெருக்கள், 
சாலைகள், தெருமுனைச் சந்துகள் 
எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு 
ஏரி, ஒரு குளம்,  ஒரு குட்டை என 
நீராதாரங்களின் பெயர்களைத்தான் 
வைத்திருப்பார்கள். குளத்தூர் 
என்று நம்ம ஊரில் வைக்கவில்லையா ?

உகான்சிட்டி  17 வது 

பஞ்சுமிட்டாய் நகரம்

2016 ம் ஆண்டில் கடுமையான வெள்ளம் 
நகரில் புகுந்து அழிச்சாட்டியம் செய்தது. 
ஆறுகள் பாய்ந்தோடும் இடத்தை விட 
உகான்நகரம், கீழ் மட்டத்தில் இருந்ததால்
வெள்ளம் எவ்விதமான கிரமமும் இன்றி 
நகருக்குள் புகுந்தது. அப்போது 
14 பேர்கள் உயிரிழந்தனர். அந்த 
வெள்ளத்திற்கு ஒரு ஆண்டிற்கு 
முன்னர்தான் உகான் நகரத்தை 
பஞ்சுமிட்டாய் நகரம் என அறிவித்தார்கள். 
இது 17 வது ப.மி நகரம். 
அதற்கு முன்னதாக சீனாவில் 16 நகரங்களை 
பஞ்சு மிட்டாய் நகரங்கள் 
என அறிவித்திருந்தார்கள்.

என்ன செய்தார்கள்?

வெள்ள நீரை கட்டுப்படுத்த என்ன 
செய்தார்கள் என்பதை நாம் தெரிந்து 
கொள்ளலாம். அது நமக்கு 
உபயோகமாக இருக்கும். 
2015 ம் ஆண்டு சென்னை நகரம் 
வெள்ளத்தால் திக்குமுக்காடிப் போனது. 
உகான் நகரை பஞ்சு மிட்டாய் 
நகரமாக மாற்றி, வெள்ள நீரை 
தேங்காமல் செய்ய சீனாக்காரர்கள் 
என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.

மழைநீர் உறிஞ்சும் தோட்டங்கள் மற்றும் நடைபாதைகள்

1980 வாக்கில் பெரிய கழிவுதீர்த் தேக்கமாக 
இருந்த ஒன்றை மிகப்பெரிய தண்ணீர்த் 
தோட்டமாக மாற்றிவிட்டோம் 
என்கிறார்கள். சாக்கடையாக தேங்கி 
நின்றதை சுத்தம்செய்து ஒட 
வைத்திருக்கிறார்கள். இதனைத்தவிர 
மழைத் தோட்டங்களை (RAIN GARDENS) 
மைத்திருக்கிறோம் என்கிறார்கள். 
அத்துடன் மழை அறுவடை செய்வதற்குத் 
தோதான புல்தரைகள், செயற்கைக் 
குங்கள், மற்றும் நஞ்சை நிலங்கள் 
ஆகியவற்றை  மிகுதியான வெள்ளநீரை 
சேமிக்கும் கிடங்குகளாகவும், அவற்றை 
வடிக்கும் இடங்களாகவும் 
உருவாக்கி உள்ளார்கள்.

வெள்ள நீர் 

என்னவாகும் ?

இந்த அமைப்புகள் எல்லாம், அதிகப்படியான 
வெள்ள நீரை நிலத்துக்கு அடியில்,  
சேமித்து தேக்கி வைப்பது, மூன்றாவதாக 
அந்தத் அதிகப்படியான தண்ணீரை 
ஆறுகளில் வடித்து விடுவது போன்ற 
காரியங்களைச் செய்கின்றன. இதனால் 
சாலைகளில், அல்லது குடியிருப்புகள் 
இருக்கும் இடங்களில் இடுப்பளவு 
நீராக ஓடுவதில்லை. வெள்ள நீர் தேங்கி 
முதல்மாடிக்குப்  போய் எட்டிப் 
பார்ப்பதில்லை. கார் ஒடும் 
சாலைகளில் படகுகள் 
ஒடுவதில்லை. அவற்றை 
எல்லாம் அடியோடு மாற்றிய 
நகரங்களைத்தான் இவர்கள் 
பஞ்சுமிட்டாய் நகரங்கள் என்கிறார்கள்.

இருபது  சத நிலத்தை ஒதுக்க வேண்டும்:

வெள்ள மீட்பு நடவடிக்கைகள், அதற்கான 
கட்டமைப்புகளை உருவாக்க நகரங்களில் 
20 சதவிகித நிலப்பரப்பு தேவைப்படும் 
என்கிறார்கள். இதன் மூலம் 70 சத 
வெள்ள நீரை கட்டுப்படுத்த முடியும். 
மொத்தம் 860 சதுர கி.மீ. பரப்புள்ள 
உகான்  நகரில் 170 ச.கி.மீ 
பரப்பை இதற்கென ஒதுக்கி இருக்கிறார்கள்.

பரவாலாகும் 

பஞ்சுமிட்டாய் 

திட்டம்:

மேலும் பல நகரங்களை இந்தத் திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இதற்கென இதுவரை 30 நகரங்களை தெரிந்தெடுத்துள்ளார்கள். இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கருத்து என்ன என்றால் மீண்டும் ஆறுகள்  ஓட இடம் கொடுங்கள்.  அதனுடன் சண்டை போடாதீர்கள். அதனை சாக்கடையாக மாற்றாதீர்கள்.





No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...