கடல்நுரை கண்டு
கலக்கம்
அடையவேண்டாம்
DO NOT AFRAID OF
SEAFOAMS
ஆஸ்திரேலியாவின் யம்பா கடற்கரை |
சமீபத்திய காலை தொலைக்காட்சி செய்திகளில், சென்னை
மெரினாவில் ஏராளமான கடல் நுரை கரை ஒதுங்கிய காட்சிகள் இடம் பெற்றன. அலையடிக்கும்
கடல் பரப்பில் கூட ஏராளமான கடலில் மிதந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. பொதுமக்களிடையே
இது பற்றிய அச்சம் நிலவி வருவதாக செய்திகள் கூறின. கடல் நுரை பற்றிய சில செய்திகளை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பெரும்பாலான கடல்நுரைகளால் எவ்வித பாதிப்பும்
இல்லை என்கிறார்கள். அதனால் நாம் கலக்கம் அடையவேண்டாம்.
ஆல்கல் புளூம்
இந்த நுரையினை, சிஃபோம்ஸ், ஓஷன்ஃபோம்ஸ், பீச்ஃபோம்ஸ் (SEA FOAMS, OCEAN FOAMS, BEACH FOAMS) என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். புரோடீன்கள், லைப்பிட்ஸ், லிக்னின் (PROTEINS, LIPIDS, LIGNIN) போன்ற அங்ககப் பொருட்கள் கூடுதலான அளவில்
கடல் நீரில் கலக்கும் போது இது போன்ற நுரைகள் ஏற்படுகின்றன. இந்த அங்ககப்பொருட்களை யார் கடலில்
சேர்க்கிறார்கள் ? ‘ஆல்கல் புளூம்’ (ALGAL BLOOM)ஏற்படும் சமயங்களில் கடற்பாசிகள் மிக அதிகளவில்
உற்பத்தியாகும்.
ரசாயன உரங்கள்
இதைத்தான் ‘ஆல்கல் புளூம்’ என்று சொல்லுகிறார்கள். இது நல்ல தண்ணீரிலும் ஏற்படும். கடல் நீரிலும் ஏற்படும். இதனை எப்படி கண்டறிவது ? இது எப்படி ஏற்படுகிறது,
என்று
பார்ப்போம். தழைச்சத்து மணிச்சத்து மற்றும் தரக் கூடிய ரசாயன உரங்கள் கரைந்து
நீராதாரங்களில் சேர்ந்து
கடலில் சேரும் சமயம் அதிக அளவு புரோட்டீன் லிக்னின் லைபிட்ஸ் போன்றவை கடல் நீருடன் கலக்கின்றன.
தொழிற்சாலை கழிவுகள்
சில சமயங்களில்,
தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கடல் நீரில்
கலப்பதாலும் வெள்ளை நுரை உண்டாகிறது. இவை கடலோரத்தில் வசிக்கும் மனிதர்கள் பறவைகள் விலங்குகள் மற்றும்
மீன்களையும் பாதிக்கக்கூடும்.
வெள்ளை மட்டும் அல்லாமல் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கடலில் நுரைகள் ஏற்படுவது உண்டு. இதனை இயற்கையான நிகழ்வு என்றும் சொல்லுகிறார்கள். உலகம் முழுவதும் இது போல பல நாடுகளில் பல முறை
இப்படி நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் யம்பா கடற்கரை
ஆஸ்திரேலியாவின்
கிழக்குப் பகுதியில் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள யம்பா கடற்கரையில் (YAMBA SEASHORE) இப்படி
கடல் நுரை ஏற்படுவது வாடிக்கை என்கிறார்கள். இப்படி கலர் கலராக வரும் கடல் நுரைதான் சர்வதேச அளவில் இந்த யம்பா நகரை சுற்றுலா நகரமாக மாற்றி
உள்ளது என்கிறார்கள்.
சிவப்பு ஆரஞ்சு நிற நுரைகள்
கடலில்
வசிக்கும் பிராணிகளின் இறந்த உடல்கள், தாவரங்கள் மற்றும்
அவற்றின் கழிவுப் பொருட்கள் இவை அனைத்தும், அழுகி மக்கிய பின்னால் அவை அலைகளால் அரைக்கபட்டு,
சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற நுரைகளாக மாறுகிறது. இயற்கையாக கடலில் ஏற்படும் நுரையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மனிதர்களுடைய செயல்பாடுகளால் ஏற்படும்
நுரையினால் தான் தீங்கு விளைவிக்கும்.
நாம்தான் காரணம்
தெரிந்தோ
தெரியாமலோ நமது குப்பைகள் கழிவுகள் சாக்கடை நீர் அனைத்தையும் ஆறுகளில்
விட்டுவிட்டால் போதும். அது கடலில் போய் கலந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என நினைக்கிறோம்.
இவை அனைத்தும்
நம்மை சுற்றி இருக்கும் காற்றை மாசுபடுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் நீரை
மாசுபடுத்துகின்றன. நமது விவசாய நிலங்களை மாசுபடுத்துகின்றன. நமது
சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அதன் விளைவுதான் ஹார்ட் அட்டாக், கான்சர், ஆர்த்ரைட்டிஸ் என்னும் மூட்டுவலி, டெங்கு, மூளைக்காய்ச்சல், பன்றிக்
காய்ச்சல் சிக்குன்குனியா எல்லாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
தே.ஞானசூரிய பகவான், பூமி அறக்கட்டளை, தெக்குபட்டு.
No comments:
Post a Comment