பிணவாடைப்
பூக்கள்
CORPSE
FLOWERS
CORPSE FLOWER |
தாவரவியல் பெயர்:
அமோர்போபேல்லஸ்டைட்டேனியம் (AMORPHOPHALLUSTAITTANIUM)
குறுஞ்செய்திகோவாலு
உலகிலேயே
மிகப்பெரிய கிளையற்ற
பூங்கொத்தை
தரும் செடியின் பெயர்
டைட்டன்
ஆரம் (TITAN ARUM) என்பது.
அதிகபட்சமாக
10 அடி நீளம் வரை
உயரமாக
வளர்ந்து மிரட்டும். செடியும்
பூவும்
சேர்ந்து ஒரு பெரிய நாட்டு
செக்கு
மாதிரி தோற்றம் தரும்.
இந்த பூக்கள்
அழுகும் மாமிச வாடை
வீசும்.
பிராணிகளின் அழுகிய மாமிசத்தை
சாப்பிடும்
மாமிசவண்டுகள் மற்றும்
மாமிச ஈக்களை
கவருவதற்குத்தான்
இந்த விஷேச
வாசனை. இவை
இந்த பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
உதவுகின்றன.
இந்த பூங்கொத்தே
பார்க்க ஒரு மரம்
போல காட்சி
தரும். இதன் இலைகள்
20 அடி
நீளமும் 16 அடி அகலமும்
கொண்டவைகளாக
இருக்கும்.
புதிய செடிகளை
உருவாக்க இதன்
கிழங்குகளை
நடவேண்டும். ஒரு கிழங்கு
அதிகபட்சமாக
150 கிலோ வரை எடை
இருக்கும்.
இந்த டைட்டன் ஆரம்
செடியின்
தாவரவியல் பெயர் அமோர்போபேல்லஸ்
டைட்டேனியம்
(AMORPHOPHALLUS
TAITTANIUM).
இதன் சொந்த ஊர்
இந்தோனேசியாவில்
உள்ள சுமத்திரா தீவு.
இது உலகில்
உள்ள தீவுகளில்
ஆறாவது
பெரிய தீவு என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment