Thursday, December 19, 2019

CLEAN RAINWATER BY BLEACHING POWDER மழைநீரை சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர்



மழைநீரை 

சுத்தப்படுத்த

பிளீச்சிங் பவுடர்



CLEAN RAINWATER

BY BLEACHING POWDER

தே . ஞானசூரிய பகவான் B.Sc(Ag), M.A(JMC)

88888888888888888888

(உலகமயமாக்கலுக்கு பிறகு 
உலகம் சுருங்கிப்  போய் விட்டது.  
நாம்  யு.கே.வுக்கோ,  யு. எஸ். ஏ.வுக்கோ   
போகும்  அதே நேரத்தில் 
ஒரு டெங்கு கொசு அங்கே போய் 
சேர்ந்துவிட முடியுமாம்.  ஒரு 
போலியோ வைரஸ்  போய்ச் சேருமாம்.  
எப்படி  எல்லாம் மிரட்டுகிறார்கள்  ?   
கொசுவும் வைரஸம் ஜோடிபோட்டு  
பறக்குமாம்.) 

தண்ணீரில் ஆர்செனிக் உப்பு அதிகம்
இருந்தாலும் பிரச்சனைதான்.
அதிகபட்சமாக கேன்சர் உட்பட
பல நோய்கள் வரும்.
காரணம் ஆர்செனிக் என்பது  ஒரு நஞ்சு.

ஆர்செனிக் என்னும் நச்சு


பல ஆண்டுகள் மிகுதியாக இருந்து
வயிற்றுப்போக்கிற்கு காரணம்
தெரியாமல் திண்டாடியது  ஒரு நாடு.
வயிற்றுப் போக்கினை எப்படி ஒழிப்பது
என்று புரியவில்லை. ஒரு நாடே
வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டது.
1980  ஆம்  ஆண்டுதான்  அவர்களுக்குத்
தெரிந்தது. இயற்கையாக
ஆர்செனிக் நச்சு உப்புக்  குடிநீரில்
கலந்துள்ளது  என்று.

ஆர்செனிக் தான் அந்த கருப்பு ஆடு
என தெரிந்தது.  125 மில்லியன்
மக்கள்தொகை  கொண்டது அந்த நாடு.
அதில் 35  முதல் 77  மில்லியன் மக்கள்
ஆர்செனிக் நஞ்சினால்  பாதிக்கப்படடிருந்தனர்.

உலக சரித்திரத்தினால்
தண்ணீர் மாசுவினால்  ஏற்பட்ட
மிகப்பெரிய பாதிப்பு  வேறு எதுவும் இல்லை
என்கிறது  உலக சுகாதார நிறுவனம்.
இப்படி பெருமளவு பாதிக்கப்பட்டது.
 நமது அண்டை நாடுதான்  வங்காளதேசம்.
அதன்பின்னர்   போர்க்கால
அடிப்படையில்  தடுப்பு நடவடிக்கைகளும்
சிகிச்சைகளும் தொடர்ந்தன.

சைல் நாட்டில் அட்டகாமினா
(ATACOMINA) என்னும் பழங்குடி மக்கள்
வசிக்கிறார்கள்.  அவர்கள் குடிக்கும்
நீரில் 5 மடங்கு அதிகமான ‘ஆர்செனிக்  நஞ்சு’
இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
     

மீன் களில் அளவுக்கு
அதிகமான மெர்குரி


பிரேசிலில்   அமேசோனியன்
என்னும் பழங்குடிமக்கள் வசிக்கும்
பகுதியில்  பெனி (BENI)  என்னும்
ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடும்
இடங்களிலெல்லாம் பழங்குடிமக்களுக்கு
பிரதான உணவு  மீன்
என்று  சொல்லவே  வேண்டாம்.

ஆனால் இந்த பெனி ஆற்றில்
பிடிக்கும் மீன் களில் அளவுக்கு
அதிகமான மெர்குரி   (MERCURY)
என்னும் பாதரசம்  உள்ளது.
பாதுகாப்பான அளவைவிட
நான்கு மடங்கு பாதரசம்  அதிகமாக உள்ளது.
ஆனால் அந்த பழங்குடிகள்
பாதரசம் பற்றி கவலைப்படாமல் 
மீன்ரசம்  பருகுவதில்
குறியாக இருக்;கிறார்கள்.

இப்படிப்பட்ட மாசுக்களிலிருந்து
மிகவும் குறைந்த செலவில்
எப்படி குடிநீரை சுத்தப்  படுத்தலாம்  ?
என்ற ஒரு ஆராய்ச்சியை நடத்தினார்கள்.
வட அமெரிக்காவின் நார்த்  கரோலினா
பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள்.

குளோரின் ஒன்றுதான்
சிக்கனமான வழி 


குளோரின் இட்டு குடிநீரை
சுத்தப் படுத்துவதுதான்  சிறந்த
சிக்கனமான வழி  என்று  சிபாரிசு
செய்துள்ளார்கள்.  குடிநீரால் ஏற்படும்
மிகப்பெரிய பாதிப்பான  வயிற்றுப்போக்கை
 குளொரினேஷன் கொண்டு சமாளித்து விடலாம்.
சவாலே  சமாளி  என்கிறார்கள்.

வயிற்றுப்போக்கு என்னும்
அசுரனை அடித்து விரட்ட இன்று
ஆயுதங்களை கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்
மாலத்தீவு மக்கள்.

ஆயுதம்  ஒன்று, குடிநீர் கிணறுகளுக்கு
குளோரின் பவுடர் என்னும் கால்சியம்
ஹைப்போ குளோரைட் (CALCIUM HYPO CHLORIDE )
அல்லது பிளீச்சிங் பவுடர் அல்லது
குளோரினேட்டட் லைம் (CHLORINATED LIME ).

ஆயுதம் இரண்டு
உப்பு சர்க்கரை  கரைசல்.

ஆயுதம் மூன்று  மழையை
அறுவடை செய்த  குடிநீர்.

இப்போது கட்டுக்கடங்காமல்
இருந்த  வயிற்றுப்போக்கு நோய்
இன்று கைகட்டி, வாய் பொத்தி   உள்ளது 
என்கிறார்கள் மாலத்தீவு மக்கள்.
குடிநீரை,  செலவு குறைவாக
சுத்தம் செய்யும் முறை  தற்போது
பிரபலமாகி வருகிறது  இதற்கு காரணம்
இது ஒரு செலவு குறைந்த  உத்தி,
சிக்கனமான உத்தி,
யார் வேண்டுமானாலும்  செய்யலாம்.

தூக்கி எறிந்த
கூல்டிரிங்ஸ்  பிளாஸ்டிக்
பாட்டில்கள்


வேண்டாம் என்று தூக்கி எறிந்த
கூல்டிரிங்ஸ்  பிளாஸ்டிக்
பாட்டில்கள் போதுமானது.
பாட்டில்களில் தண்ணீரை
நிரப்பி மூடி போட்டு மூடி
வெயில் சூட்டில் 5 மணிநேரம்
வைத்திருக்கவேண்டும்
அவ்வளவுதான்.

கிருமியெல்லாம்  சூரிய சூட்டில்
 “போயே போச்”  என்கிறார்கள்.
இதற்கு சோடிஸ்   என்று பெயர்
வைத்தள்ளார்கள் லெபனான் நாட்டினர்.
1980 ஆம் ஆண்டில்  இதனை
கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பிளாஸ்ட்டிக்  பாட்டில்களின்
அடிப்பகுதியில்  பாதியளவு
கருப்பு பெயிண்ட் அடித்து
பயன்படுத்தினர்.

சூரிய வெப்பத்தில் விரைவாக  சூடடைவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  ஏழை எளிய பழங்குடி மக்கள்    மினரல்வாட்டர் வாங்க வசதி இல்லாத மக்களுக்கு  இந்த கருப்பு பாட்டில் கைகொடுக்கும்  என்கிறார்கள்  ஆட்சியாளர்கள். 

கினிபுழு நோய் 


கினிபுழு நோய்  (GUINEA WORM DISEASE ) சுகாதாரமற்ற  குளம், குட்டை, கிணறுகள்  ஆகியவற்றிலுள்ள  தண்ணீரைக்  குடிப்பதால் வரும் நோயால்  20 ஆம்  நூற்றாண்டின் மத்தியில்  50 மல்லியன் பேர்  ஆசிய, ஆப்பிரிக்க, கண்டங்களில் இதனால் பாதிக்கப்பட்டனர். 

இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  96,000.  மட்டுமே.  ஆசியாவில் முற்றிலுமாக இந்த நோய்  வெளியேற்றப்பட்டு விட்டது. இன்னும் 13 நாடுகளில் இந்த நோய் சகவாசம்   தொடர்கிறது.

இந்த கினி புழு ஒருவரின் உடலில்  நுழைந்து  விட்டால்  ஒரு ஆண்டில்  அது ஒரு மீட்டர் நீளமாக  வளர்ந்து  விடும்.  அதுமட்டுமில்லாமல்  பாதிக்கப்பட்டோர்  பலவீனர்களாகி  நடைப்  பிணங்களாகிவிடுவர். உடனடியாக எந்த வேலையும்  செய்ய முடியாதவர்களாகி   படுத்த  படுக்கை   ஆகிவிடுவர்.

“ஆசியாவில் கினி புழு  நோயை  முழுசாய் விரட்டியாச்சு” என்று வீராப்பாய் சொல்லிக்கொள்ள முடியாது  என்கிறார்கள்.  அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்,,  சில மணி  நேரங்களில்  கூட  வந்திறங்கலாம்  என்கிறார்கள்.

சென்னையில் காலை டிபன் 
முடித்துவிட்டு  
விமானத்தில் புறப்பட்டால் 
இரவு சாப்பாட்டிற்கு  யு.எஸ்ஏ.விற்கும்  
மதிய சாப்பாட்டிற்கு  இங்கிலாந்திற்கும் 
போகலாம் என்கிறார்கள்.  
நாடுகள்  தனித்தனி  தீவுகளாக  
வாழ்ந்த காலம் மலையேறிப் போச்சு. 

 ஜோடிபோட்டு
பறக்கும் கொசுவும் 
வைரஸும் 


உலகமயமாக்கலுக்கு பிறகு 
உலகம் சுருங்கிப்  போய் விட்டது.  
நாம்  யு.கே.வுக்கோ,  யு. எஸ். ஏ.வுக்கோ   
போகும்  அதே நேரத்தில் 
ஒரு டெங்கு கொசு அங்கே போய் 
சேர்ந்துவிட முடியுமாம்.  ஒரு 
போலியோ வைரஸ்  போய்ச் சேருமாம்.  
எப்படி  எல்லாம் மிரட்டுகிறார்கள்  ?   
கொசுவும் வைரஸம் ஜோடிபோட்டு  
பறக்குமாம். 

ஆற்றின்மீது
அணை கட்டினால்
ஆபத்தா ?


ஒரு ஆற்றின்மீது அணைக்கட்டு கட்டினால் போதும்.  அது  பாசனத்திற்கு  பயன்படும்.  மின்சாரம் எடுக்கலாம்.  குடிநீருக்;கு உதவும்.  வெள்ளம் கட்டுப்படும். படகுகள்  ஓட்டலாம்.  மீன் உற்பத்தி  செய்யலாம்.  அந்த இடத்தை சுற்றுலா  ஸ்தலம்  ஆக்கலாம்.  அதன்மூலம், சமூக, பொருளாதார மேம்பாட்டைக்  கொண்டுவரலாம்.  அத்தனையும்  உண்மைதான்  மறுப்பதற் கில்லை. 
 
ஆனால் அணைக்கட்டுகள்  எத்தியோப்பியா  என்னும் ஆப்பிரிக்க நாட்டில்   வேறு ஒரு செய்தியைச் சொல்லி  பீதியை  கிளப்புகிறார்கள் உலக சுகாதார நிறுவனத்தினர்.  என்ன அந்த பீதி  ? 

எத்தியோப்பியா  ஒரு ஆப்பிரிக்க நாடு.  வளர்ந்து வரும் நாடு. அங்கு  ஆறுகளின் மீது  மைக்ரோ  டேம்  என்று சொல்லும்,  சிறு சிறு  அணைக்;கட்டுகளைக் கட்டினார்கள்.  அணைக்கட்டுகள் பல நல்ல விளைவுகளையெல்லாம் தந்தது. கூடவே எத்தியோப்;பியாவில்  மலேரியாவும்  ஏழு மடங்கு எகிறிவிட்டது. அதற்கு  காரணம் இந்த மைக்ரோ அணைக்கட்டுகள் என்று புலம்புகிறார்கள். 

இந்த  அனுபவங்கள்  எல்லாம்  
நமக்கு  பாடங்களாக  அமையும்.  
ஆனால் அணைக்கட்டே  வேண்டாம்  
என்று சொல்லிவிட முடியாது.

உதாரணமாக   கிளைமேட்   சேஞ்;ச்  
என்னும் பருவநிலை  மாற்றம்  
என்பதற்கு பின்னால் ஒளிந்து 
கொண்டிருப்பது  கார்பன் என்னும்  
கரியும் நமக்குத் தெரியும். 
இதனால் நம்மைச்  சுற்றியிருக்கும்   
காற்றுமண்டலத்தில்  
கார்பனை எப்படி நீக்குவது 
என்றுதான் மல்லாடுகிறோம்.

நாம் மூச்சுவிடும்போது கூட  
கார்பன் டை ஆக்சைடைத்தான்  
வெளிவிடுகிறோம்.   அதனால் நாம் 
மூச்சு விடுவதைக்  குறைத்துக்  
கொள்ள முடியுமா  ?   அல்லது 
நிறுத்திவிடத்தான் முடியுமா  ? 

அதுபோலத்தான்  அணைக்கட்டுகளும்.  
கொசுக்களுக்கு பயந்துகொண்டு குடும்பத்தையே  
காலி செய்துகொண்டு  போய்விட முடியுமா  ? 

இடுக்கண் இல்லாமல்
இல்லறம் நடத்த  பழலாம் .

புதுப்புது  நெருக்கடிகள் 
முளைக்கத்தான்   செய்யும்.  
நெருக்கடிகளை முடிந்தால் சமாளிக்க 
வேண்டும்.  முடியாவிட்டால் 
நெருக்கடிகளின்  இடையே  
இடுக்கண் இல்லாமல்  
இல்லறம் நடத்த  பழலாம் .

FOR FURTHER READING LIST
FROM VIVASAYA PANCHANGAM


1. பழவேற்காடு பகுதியில் பாரம்பரிய கூரைநீர் அறுவடை  -  TRADITIONAL ROOF WATER HARVESTING IN PAZHAVERKADU – Date: 21.12.2019 /https://vivasayapanchangam.blogspot.com/2019/12/traditional-roof-water-harvesting-in.html

2. பள்ளிக்கூடங்களில்   மழைநீர் சேகரிப்பு - RAINWATER HARVESTING IN SCHOOLS  - Date: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rainwater-harvesting-in-schools.html

3. மழைநீர்   சேகரிக்க  சில வழிமுறைகள்    - RAINWATER   HARVESTING  - TEN GUIDELINES – Date:19.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/roof-water-harvesting.html

4. தண்ணீரினால்  பரவும்  நோய்கள் -  WATERBORNE  DISEASES – Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/waterborne-diseases.html

5. மழைநீரை சுத்தம் செய்வது      எப்படி ?    HOW TO CLEAN  RAINWATER TO DRINK ? Date of Posting: 18.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/12/rain-water.html

6. இன்று ஒரு  குறுஞ்செய்தி - கூரைநீர்  அறுவடை - NEWS TODAY - ROOFWATER  HARVESTING / Date of Posting: 13.08.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/news-today-roofwater-harvesting.html

7. சென்னையில் மழை அறுவடை  விழிப்புணர்வு - ROOFWATER HARVESTING AWARENESS PROGRAMME IN CHENNAI - Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2019/07/roofwater-harvesting-awareness.html

8. மழைநீரை  சேகரித்து      சுத்தம் செய்து      குடிக்கலாம்  -   RAINWATER HARVEST CLEAN DRINK/ Date of Posting: 20.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/rainwater-harvest-clean-drink.html

9. 38000 கோவில்களில்   மழை அறுவடை செய்ய   அரசுக்கு கோரிக்கை !    38000 TEMPLES  NEED    RAINWATER HARVEST / Date of Posting: 12.08.2017/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/38000-request-for-rainwater-harvest-in.html

10. இஸ்ரேல்  நாட்டின்  மழை அறுவடை   வாத்தியார்  -   RAIN MAN OF ISRAEL/ Date of Posting: 07.07.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/07/water-rain-man-of-israel.html

11. உங்கள் வீட்டு  கூரை மூலம்  30000 லிட்டர் நீரை அறுவடை செய்யலாம்  - ROOF WATER HARVEST  YOU  CAN DO IT / Date of Posting: 27.02.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/30000-roof-water-harvest-you-can-do-it.html


12. கூரை நீர்   அறுவடை  சில கேள்விகளும்   பதில்களும்     ROOFWATER  HARVESTING QUESTIONS  & ANSWERS / Date of Posting: 19.12.2019/ https://vivasayapanchangam.blogspot.com/2017/08/roofwater-harvesting-questions-answers.html






No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...