Monday, December 30, 2019

ஆற்றுப்பூவரசு மிருதுவான மரவேலைக்கான மரம் - ATRUPPOOVARASU SOFT WOOD WORK TIMBER














ஆற்றுப்பூவரசு மிருதுவான

மரவேலைக்கான மரம்

ATRUPPOOVARASU

SOFT WOOD WORK

TIMBER

 

FALSE WHITE TEAK

தாவரவியல் பெயர்: டிரீவியா நியூடிபுளோரா (TREWIA NUDIFLORA)

தாயகம்: இந்தியா 


காஞ்சிமரம் ஒரு மிகச் சிறந்த மூலிகை மரமும் கூட. பலவிதமான மருத்துவப் பண்புகளை உள்ளடக்கியது: பித்தம்  போக்கியாகவயிற்று உப்புசம் நீக்கியாக,உடல் வீக்கம்இரைப்பை மற்றும் குடல்வலி நீக்கியாகவாதம் மற்றும் கல்வாதம் போக்கியாகசித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் காஞ்சிமரம் கலக்கி வருகிறது.


ஆற்றுப்பூவரசு மரம், இதன் பழங்களை காட்டு விலங்குகள் ருசித்து சாப்பிடுகின்றன.  இவற்றில் ஜாவா நாட்டின்காண்டா மிருகங்கள் மற்றும் மான்கள் முக்கிய புள்ளிகள்.


இதன் கட்டைகள் மிகவும் மிருதுவானவை. இவைதீக்குச்சிகள்தேயிலைப் பெட்டிகள்பொருட்களை அடைப்பதற்கான பெட்டிகள் (PACKAGING CASES) வேளாண்மைக் கருவிகள்நுகத்தடிகள்சிலேட்டுகள்படங்களுக்கு பிரேம் போடும் சட்டங்கள்கடைசல் மூலம் தயாரிக்கும் பொருட்கள்குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள்போன்றவற்றை தயாரிக்க உதவுகிறது.


தாவரவியல் பெயர்: டிரீவியா நியூடிபுளோரா 
(TREWIA NUDIFLORA)
தாவரக் குடும்பம் பெயர்: யூபோர்பியேசி 
(EUPHORBIACEAE)
தாயகம்: இந்தியா (INDIA)
பொதுப்பெயர்: பால்ஸ் ஒயிட் டீக் 
(FALSE WHITE TEAK)


தமிழ் இலக்கியங்களில், காஞ்சி என 
சொல்லப்படு;ம் மரம்தான் இந்த ஆற்றுப்பூவரசு. 
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது 
இந்த மரம். இங்கு பல மாநிலங்களிலும் 
பரவி உள்ளது. ஏறத்தாழ இது தேக்குக்கு 
சமமான மரம். அதனால்தான் இதனை 
ஆங்கிலத்தில் பால்ஸ் ஒயிட் டீக் 
(FALSE WHITE TEAK) என்கிறார்கள்.

காஞ்சி மரத்திற்கு தமிழில் மட்டும் 
14 பெயர்கள் உள்ளன: அவற்றில் 
சில முக்கியமான பெயர்கள், ஆற்றுப்பூவரசு 
ஆற்றரசு, சன்னத்துவரை,  மற்றும் நாய்க்குமிள்.

சங்க இலக்கியங்கள் பெருமைபட பேசும் 
மரங்களில் இந்த ஆற்றுப் பூவரசு 
என்னும் காஞ்சி மரமும் ஒன்று. 
பழந்தமிழ் இலக்கியங்களில் இதனை 
காஞ்சி என்றே குறிப்பிடுகிறார்கள். 
குறுந்தொகைப் பாடல் ஒன்றை 
உதாரணமாகப் பார்க்கலாம்.

;வயல்வரப்புகளில் காஞ்சி மரங்களில் 
பூக்கள் மாலைகளாக  பூத்துக் குலுங்கும். 
உழவு செய்யும் விவசாயிகள் சுலபமாக 
கிளைகளை வளைத்து பூக்களை 
உதிர்க்கும் படியாக இந்த மரங்கள் 
குட்டையாக நிற்கின்றன என்று  
சொல்லுகிறது, இந்தப் பாடல்

     பயறு போல் இணர் பைந்தாது படீ இயர்
   உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
   காஞ்சி ஊரன் கொடுமை
   கரந்தனள் ஆதலின் நாணிய வருமே. (ஒரம் போகியார் - குறுந்தொகை)

அகநானூற்றுப் பாடல் ஒன்று, காஞ்சி மலரின் மகரந்தம் பொன் நகைபோல மின்னும். என்கிறது.

    குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
  பொன் நகை நுண்தாது உறைப்ப அகநானூறு-

காஞ்சி மரத்தின் பிறமொழிப் பெயர்கள்


1.     தமிழ்: ஆற்றுப்பூவரசு, காஞ்சி    (ATRU POOVARASU,    KANCHI)


2.     இந்தி: பிண்டாலு, பிண்டார்    (PINDALU, PINDAR)


3.     மணிப்புரி: வாங் பாப் (WHAHG PHOP)

4.     மராத்தி: பெட்டாரி (PETARI)

5.     மலையாளம்: நீர்கடம்ப், பாம்பர கும்பில் (NIRKATAMP, PAMPARA KUMPIL)

6.     தெலுங்கு: எருபோனுக்கு (ERUPONUKU)

7.     கன்னடா: காடு கும்பலா, காடுகம்ச்சி (KADU GUMBALA, KADUKAMCH)

8.     பெங்காலி: பிட்டாலி (BITALI)

9.     ஒரியா: பித்தாலியா (PITHALIA)

10.    கொங்கணி: போம்வரோ (BUMVARO)

11.    உருது: பிண்டாரா (PINDARA)

12.    அசாமிஸ்: பெல்கோல் (BHEL KHOL)

13.    காசி: டையங் சோ லிண்டாட் (DIEN SOH LYNDOT)

14.    சமஸ்கிருதம்: பிண்டாரா (PINDARAH)

15.    நேப்பாளி: குரெல் (GUREL)

காஞ்சி உயரமாகவும், படர்ந்தும் 
வளர்ந்து இலை உதிர்க்கும் பெரியமரம்: 
10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரும். 
ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை. 
பெண் பூக்கள் ஒற்றைப் பூக்களாக 
மலரும். ஆண் பூக்கள் பூங்கொத்துக்களாக 
7 19 செ.மீ வரை பூத்துத் தொங்கும். 
டிசம்பர் முதல் மார்ச் வரையான 
காலத்தில் பூக்கும்.

இந்தியாவை தாயகமாகக் கொண்ட 
இந்த காஞ்சிமரம், ஆப்ரிக்காவின் வெப்ப 
மண்டலப் பகுதிகளில் அதிகம் 
காணப்படுகின்றன. இந்தியா உட்பட 
கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசிய 
நாடுகளில் பசிபிக் தீவுகள் மற்றும் 
ஆஸ்திரேலியாவிலும் இந்த மரங்கள் 
பரவியுள்ளன.  இந்தியாவில் குறிப்பாக 
மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் 
தொடர்ச்சி மலை மற்றும் இலையுதிர்க் 
காடுகளில் ஆற்றங்கரைகளில்
ஆற்றுப்படுகைகளில் காஞ்சி எனும் 
ஆற்றுப்பூவரசு மரங்கள் 
அதிகம் உள்ளன.

இவை தமிழ்நாட்டில், கோயம்புத்தூர்
நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் 
மாவட்டங்களில் உள்ளன.
கேரள மாநிலத்தில், இடுக்கி, கண்ணூர்
காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு
மலப்புரம், பாலக்காடு, பத்தனம்திட்டா 
ஆகிய பகுதிகளில், இந்த மரங்களை 
அதிகம் பார்க்கலாம்.

மகாராஷ்ட்ராவில், பூனா, ரேய்காட்
ரத்னகிரி, சிந்;துதுர்க், தானே ஆகிய 
பகுதிகளிலும், காஞ்சிமரம், பிரபலமானது.
இதன் கட்டைகள் மிகவும் மிருதுவானவை. 
இவை, தீக்குச்சிகள், தேயிலைப் பெட்டிகள்
பொருட்களை அடைப்பதற்கான பெட்டிகள் 
(PACKAGING CASES) வேளாண்மைக் 
கருவிகள், நுகத்தடிகள், சிலேட்டுகள்
படங்களுக்கு பிரேம் போடும் சட்டங்கள்
கடைசல் மூலம் தயாரிக்கும் பொருட்கள்
குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள்
போன்றவற்றை தயாரிக்க உதவுகிறது.

காஞ்சி மரங்கள், ஏற்ற சூழலில்
20 மீட்டர் உயரம் கூட வளரும் 
என்கிறார்கள், அறிவியல் ரீதியாக. 
ஆனால் தமிழ் நாட்டில் இந்த மரங்கள் 
சிறிய மரங்களாகவே இருந்துள்ளன.  
குறுந் தொகை, மற்றும் அகநானூற்றின் 
பாடல்களில் எல்லாம், சிறிய  
மரம் என்ற பொருளில் குறுங்கால்காஞ்சி 
என்கிறார்கள்.

வட இந்தியாவில் யமுனை 
நதிக்கரையில் தொடங்கி, தென்மதுரை 
வைகை நதிக்கரை வரை, 1200 மீட்டர் வரை 
உயரம் உள்ள பகுதிகளில் எல்லாம்
குறுங்கால்காஞ்சி ஆட்சி புரிகிறது.

பழங்களைப் பறித்து, அவற்றை 
சில நாட்கள் உலர வைக்க வேண்டும்.  
பின்னர் விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.  
ஒரு பழத்தில் 2 முதல் 5 விதைகள் 
இருக்கும்.  இந்த விதைகளை உடன் 
விதைத்தால் முளைப்புத் திறன் 
நன்றாக இருக்கும். சேகரித்த 
விதைகளை கூடுமான வரை ஒரே 
ஆண்டில் விதைத்துவிட வேண்டும்.  
நாற்றுக்கள் நடுவதைவிட நேரடி 
விதைப்பே சிலாக்கியம்.

இதன் பழங்களை காட்டு விலங்குகள் 
ருசித்து சாப்பிடுகின்றன.  
இவற்றில் ஐhவா நாட்டின், காண்டா 
மிருகங்கள் மற்றும் மான்கள் 
முக்கிய புள்ளிகள்.

ஒரு கிலோ எடையில் 4200 முதல் 
8100 விதைகள் இருக்கும். விதைகளை 
48 மணி நேரம்  தண்ணீரில் ஊர வைத்து 
விதைத்தால் முளைப்புத்திறன் நன்றாக 
இருக்கும். புதிய விதைகளை விதைத்தால் 
அவற்றின் முளைப்புத்திறன் 
70 முதல் 80 சதம் இருக்கும்.
வளர்ந்த மரங்களை வெட்டினால் 
நன்கு துளிர்த்து வளரும்.  
அதே சமயம் நிறைய வேர்ச் 
செடிகளையும் உருவாக்கும்.

காஞ்சிமரம் ஒரு மிகச் சிறந்த 
மூலிகை மரமும் கூட. பலவிதமான 
மருத்துவப் பண்புகளை உள்ளடக்கியது: 

பித்தம்  போக்கியாக, வயிற்று 
உப்புசம் நீக்கியாக,
உடல் வீக்கம், இரைப்பை மற்றும் 
குடல்வலி நீக்கியாக, வாதம் மற்றும் 
கல்வாதம் போக்கியாக
சித்த மருத்துவம் மற்றும் 
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் 
காஞ்சிமரம் கலக்கி வருகிறது.

தே.ஞானசூரிய பகவான், போன்: +918526195370, 
Email: gsbahavan@gmail.com


WWW.USES.PLANTNET.PROJECT ‘TREQTA’(PROSEA), WWW.EHORICULTURE.COM ‘TRENIA NUDIRLORA’, WWW.GREENCLEAM GUIDE.COM ‘ECONOMIC IMPORTANCE OF TREWIA NUDIFLORA’, WWW.ENVIS.FRIHT.ORG- “PLANT DETAILS FOR A TREWIA NUDIRDORA”, WWW.INDIA BLODLUERSITY.ORG – ‘TRENIA NUDIROLIA’,  WWW.TA.WIHPEDIA.ORG/” ATRU ARASU”,  WWW.SENTHU HERBALS.BLOGSPOT.COM ‘ATRUPPUUARASU – FALSE WHITE TEAK.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...