Monday, December 30, 2019

அரப்பு - அரை டஜன் நோய் நீக்கும் அபூர்வ மரம் - ARAPPU - MULTISPECIALITY HERBAL TREE


ALBIZIA ODOROTISSIMA










அரப்பு -  அரை டஜன் 

நோய் நீக்கும் 

அபூர்வ  மரம் 


ARAPPU - MULTISPECIALITY 

HERBAL  TREE

தே. ஞானசூரிய பகவான், போன்: + 918526195370,
Email. gsbahavan@gmail.com

அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும்.
உதாரணமாக, தொழு நோய், குடற்புண்,
சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய்
அழற்சி, சக்கரை நோய், உடல் எரிச்சல்
(LEPROSY, COUGH, BRONCHITIS, DIABETES, BURNING SENSATION)


இந்த சிலை மரம்தான். ‘உசிலம்பட்டி
பெண்குட்டி’ பாடலுக்கு கவிஞர்
வைரமுத்துவுக்கு காலெடுத்துக்
கொடுத்ததும் இந்த மரம்தான் என
இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும்
ஒன்றுதான்: கருவாகையும் ஒன்றுதான்.

இந்த மரத்தின் கட்டைகள் (வுஐஆடீநுசுளு),
அடர்த்தியான காவி நிறத்தில் வலிமையாக
இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும்.
இழைக்க இழைக்க பளபளப்பும்
மெருகும் கூடும். அனைத்து வகையான
மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும்
செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட்
என்ற பெயரும் உண்டு.

இந்த மரங்களையெல்லாம் நமது
இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்தும் பொறுப்பும்
கடமையும் பெற்றோர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு,
தொண்டு நிறுவனங்களுக்கு, உள்ளது.
அரப்பு, சீயக்காய், ஷேம்பு தயாரிக்க
ஒரு தொழில் தொடங்கலாமே ! 

ALBIZIA ODOROTISSIMA


























தாவரவியல் பெயர்: அல்பீசியா ஒடரோடிசிமா
(ALBIZIA ODOROTISSIMA)

தாவரக் குடும்பம் பெயர்: மைமோசியே
(MIMOSACEAE)

தாயகம்: இந்தியா, சைனா, பங்ளாதேஷ்,
லாவோஸ், மியான்மர், நேப்பாளம், பாகிஸ்தான்,
ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.

பொதுப் பெயர்கள்: பிளாக் சீரிஸ்,
சிலோன் ரோஸ் வுட், பிராக் ரண்ட்
அல்பீசியா, டீ ஷேட் ட்ரீ (BLACK SIRIS, 
CEYLON ROSE WOOD, 
FRAGRANT ALBIZIA, TEA SHADE TREE)
உள்ளுர் ஷேம்பு மரம்

சமீப காலமாக இந்த மரம், அரப்பு மரம்
என்றும் ‘ஷேம்பு மரம்’ என்றும் கூட
அழைக்கிறார்கள். சங்ககாலத்தில்
இதன் பெயர் சிலைமரம். இதுதான்
உசிலை மரம் என்பதும் தெரிகிறது:
உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக
இருந்ததும் இந்த சிலை மரம்தான்.
‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடலுக்கு
கவிஞர் வைரமுத்துவுக்கு காலெடுத்துக்
கொடுத்ததும் இந்த மரம்தான் என
இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும்
ஒன்றுதான்: கருவாகையும் ஒன்றுதான்.

சங்க காலத்து மரம் 


இந்த மரம் சங்க இலக்கியத் காலத்தில்
பிரபலமான இந்த மரம் இன்று எனது
தோட்டத்து வேலியில் தானாய்
முளைத்த மரம். அந்த மரத்தின்மீது
எனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்தது.
இந்த கட்டுரையை எழுதி முடித்த
பின்னால் அந்த மரங்களைப் போய்
பார்த்தபோது  எனக்கு கண்ணீரே வந்தது.

அதனால்தான் நமது தமிழ் மக்கள்
இதனை 54 வேறுவேறு பெயரிட்டு
அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம்
என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது.
இதே கருத்தினை என் பாட்டன்மார்கள்
2000 வருஷத்துக்கு முன்னாடி
சொல்லியிருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள்
‘வில் அம்பு’ செய்ய உறுதியான மரம்
என்று சொல்லுகின்றன.

     “சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக்
      கொலைவில் எயினர் தங்கை!.....’) – ஒதலாந்தையார்
       (ஐங்குறுநூறு – 363 வது பாடல்)


‘சிலை’ என்பது கருவாகை மரத்தைக்
குறிக்கும். பகழி என்றால் அம்பு. ‘துவராடை’
என்றால் செந்நிற ஆடை. எயினர் என்றால்
பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள்.

“சிலை மரத்தால் செய்த வில்லையும்
அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து,
கொலை புரிதலை தொழிலாகக்
கொண்டவனின் தங்கையே..”
என்று சொல்லும் பாடல். 


சிலை என்னும்
கருவாகை மரத்தின்
பல மொழிப் பெயர்கள்

1. தமிழ்: சிலை, கருவாகை (SILAI, KARUVAGAI)
2. இந்தி: காலா சிரிஸ் (KALA SIRIS)
3. அசாமிஸ்: கொராய் (KORAI)
4. பெங்காலி: காக்குர் சிரிஸ் (KAKUR SIRIS)
5. குஐராத்தி: கலோ ஷிரிஷ் (KALO SHRIS)
6. கன்னடா: காடு பாக்கி (KAADU BAAGE)
7. காசி: டயங் கிரெய்ட் (DIENG KRAIT)
8. கொங்கணி: காலி சிரஸ் (KALI SIRAS)
9. மலையாளம்: கருவாகா, குன்னி வாகா,
நெல்லி வாகா, புலிவாகா (KARU VAGA,
KUNNI VAGA, NELLI VAGA, PULI VAGA)
10. மணிப்புரி: உயில் (UYIL)
11. மராத்தி: சின் சாவா (CHIN CHAVA)
12. மிசோ: காங் தேக் (KANG TEK PA)
13. நேப்பாளி: கலோ சிரிஷ் (KALO SIRISH)
14. ஓரியா: டீனியா (TINIYA)
15. சமஸ்கிருதம்: சிரிஷா (SIRISHA)
16. தெலுங்கு: சிண்டுகா(CINDUKA)
இலை உதிர்த்தபடி 15 முதல் 25 மீட்டர் வரை 

உயரமாக வளரும். இந்தியாவை
தாயமாகக் கொன்டது கருவாகை.

பங்ளாதேஷ், பூடான், நேபாளம்,
மியான்மர், லாவோஸ், தாய்லாந்து,
வியட்நாம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில்
பரவியிருக்கும் மரம்.

முக்கியமாக இந்த மரம் மிகவும்
வேகமாக வளரும். ஒர் ஆண்டில்
ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.
இன்னொரு முக்கியமான அம்சம்,
இந்த மரம், அதிகமான தழைச்சத்தை,
நிலைப்படுத்தும் (NITROGEN FIXATION)
சக்தி உடையது. காற்றில் வாயு வடிவில்
இருக்கும் தழைச்சத்தை கிரகித்து
மண்ணில் நிலைப்படுத்தும்.

ஆப்ரிக்கா
அமெரிக்காவிலும்
பிரபலம் 


ஆப்ரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில்
 எல்லாம் பரவியுள்ளது, கருவாகை
என்று சொல்லப்படும் சிலை மரம். இவை,
அங்கு பரவியிருக்கும் நாடுகள் கென்யா,
தான்சானியா, மலாவி, ஜிம்பாவே,
மொசாம்பிக், ஜோகன்ஸ்பர்க், மற்றும்
தென் ஆப்ரிக்கா.

அமெரிக்காவில், மத்திய அமெரிக்கா
மற்றும் புளோரிடா’ வில் தீவிரமாக
பரவியுள்ளது. இதற்கு முக்கியமான
காரணங்களில் ஒன்று, இது பரவலான
மண்வகைகளில் வளரும் என்பது.
ஆனால் அதிக ஈரப்பசை உள்ள மண்கண்டம்,
வடிகால் வசதி உள்ள மண், இருமண்பாடான
மண், மற்றும் கடல் மட்டத்திலிருந்து
1800 மீட்டர் வரை உள்ளப் பகுதிகளில்
நன்கு வளரும்.

இந்த மரத்தின் கட்டைகள் (TIMBER),
அடர்த்தியான காவி நிறத்தில் வலிமையாக
இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும்.
இழைக்க இழைக்க பளபளப்பும்
மெருகும் கூடும். அனைத்து வகையான
மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும்
செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட்
என்ற பெயரும் உண்டு.

பங்ளாதேஷ்  நாட்டில் பெரும்பாலான
தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில்
இருக்கும் நிழல் மரங்கள், சிலை மரம்தான்.
இதன் இலைதழைகள் ஆடுமாடுகளுக்கு
அருமையான தீவனம் ஆகிறது.

சிலைமரம் இயல்பாகவும், இயற்கையாகவும்
பரவி இருக்கும் மூன்று இடங்கள்,
இந்தியாவின் தென்பகுதி, மியான்மர்
மற்றும் சைனா. ஆனால் கிழக்கு
ஆப்ரிக்காவில் இது அறிமுகம்
செய்யப்பட்டது.

இதன் பூக்கள் வெண்மையாக அல்லது
வெளிர் மஞ்சளாக இருக்கும். பெரிய
நுனிக்கினை பூங்கொத்துக்களாக
(TERMINAL CLUSTERS)
பூக்கும். பூக்கள் வாசனை உடையவை.

மரங்கள் என்றால் பெரும்பாலும்
அவை கட்டைக்கானவை (TIMBER)
 என்று எல்லோரும் நினைப்பார்கள்.
 நானும் அப்படி நினைத்திருத்த ஒரு
காலம் உண்டு. மரங்கள் என்பவை
அப்படி அல்ல. பொதுவாக எல்லா
மரங்களுமே பல பயன் தரும்
மரங்களே. சில மரங்களில் சில
பயன்கள் தூக்கலாக இருக்கும்:
மற்றபடி எல்லா மரங்களுமே
சகலகலாவல்லமை உள்ளவை தான்.
நமது சிலைமரமும் அப்படித்தான்.

தொழுநோய்
சக்கரைநோய்
குணப்படுத்தும்


சிலைமரமும் மருத்துவப் பயன்களும்
உள்ள மரம் தான்: குறைந்தபட்சம் ஒரு
 அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும்.
உதாரணமாக, தொழு நோய், குடற்புண்,
சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய்
அழற்சி, சக்கரை நோய், உடல் எரிச்சல்
(LEPROSY, COUGH, BRONCHITIS, 
DIABETES, BURNING SENSATION)

சிலைமரத்துக்கு தமிழில் 54
பெயர்கள் உள்ளது ஆச்சரியம்
தரும் செய்தி. அவற்றில் முக்கிய
பெயர்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.
அவை கருவாகை, சிற்றிலைவாகை,
காசிமகா மரம், கல்துரிஞ்சி, துரிஞ்சி
மற்றும் வன்னிவாகை மரம்.

சிலைமரத்தின் முற்றிய நெற்றுக்கள்
செங்காவி நிறமானவை: நெற்றுக்களைப்
போல விதைகளும்
செங்காவி நிறமாகவே இருக்கும்.
விதைகள் பிரச்சினை
இல்லாமல் முளைக்கும்.

இதன் விதையுறை கொஞ்சம்
கடினமானவை. அதை நேரிடையாக
விதைத்தால் அதன் முளைப்புத் திறன்
அவ்வளவு சிறப்பாக இருக்காது. விதைகளை
24 மணிநேரம் நீரில் ஊறவைத்து
விதைக்க வேண்டும்.

அரப்பு
சீயக்காய்
ஷேம்பு


கிராமங்களில் ஷாம்பு வருவதற்கு
முன் ‘கருவாகை’ தான் ஷாம்பு.
இதன் இலைகளைப் பொடியாக்கி
டப்பாக்களில் சேமித்து வைத்துக்
கொள்வார்கள். இதனை தலைக்கு
போட்டுப் பாருங்கள். விளம்பரத் தலை
முடியை தோற்கடித்து விடும்.

மதுரைப் பகுதியில் பச்சைப்பொடி
என்று கடைகளில் விற்பனை ஆவது,
சிலைமர இலைப்பொடி தான்.
ஆனால் அங்கு இந்த மரத்தின் பெயர் உசிலை.
இந்த மரம் அதிகம் இருந்ததால் தான்,
ஒரு கிராமம் உசிலம்பட்டி ஆனது.
ஆண்டிப்பட்டிக்கு அடுத்த ஊர். உசிலம் பட்டி
அழகான ஊர். புல ஆண்டுகளுக்கு
முன்னால் அந்த ஊருக்குப் போய்
இருக்கிறேன். ‘இதுவா அந்த உசிலை மரம் ?”
என்று தேடிப்பிடித்துப் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் சிலைமரம் பரவலாக
பல மாநிலங்களில் பரந்துள்ளது.
அவை, அசாம், கேரளா, மத்தியப்பிரதேசம்,
ஒரிசா, மகாராவு;ட்ரா, மேற்கு வங்காளம்,
கர்காடகா, ஆந்திரப் பிரதேசம்
மற்றும் நம் தமிழ் நாடு.

என்ன செய்யலாம் ?

தமிழ்நாட்டில் உசிலை, துரிஞ்சி,
கல்துரிஞ்சி, இப்படி பல பெயர்களில்
பல மாவட்டங்களிலும் இயற்கையாகப்
பரவியுள்ளது. பல இடங்களில் களை
மரங்களாகப் பார்க்கிறார்கள். நலிந்துபோன
காடுகளில் மட்டும் மிச்ச சொச்சமாக
காடுகள் என்று சொல்லக் காட்சிப்
பொருளாக இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் கிராமப்புறப்
பெண்கள் அரப்பு மரம் என்று
ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.
‘ஷேம்பு’ வந்த பிறகு இதனை யாரும்
சீண்டுவதில்லை. அதைவிட
இப்படி மரங்களை தெரிந்துகொள்ள
வாய்ப்புகள் ஏதும் இல்லை
என்பதுதான் உண்மை.

இந்த மரங்களையெல்லாம் நமது
இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்தும் பொறுப்பும்
கடமையும் பெற்றோர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு,
தொண்டு நிறுவனங்களுக்கு, உள்ளது.
அரப்பு, சீயக்காய், ஷேம்பு
 தயாரிக்க ஒரு தொழில்
தொடங்கலாமே !


WWW.ENVISFRLHT.ORG –‘PLANT DETAILS FOR A ALBIZIA OPOROTISSIMS’, WWW.FLOWERS OF INDIA.NET ‘BLOCK SIRIS’, WWW.EN.WIKIPEDIA.ORG-‘ALBIZIA ODOROTISSIMA’, WWW.SENTHUHERBALS.BLOGSPOT- ‘ALBIZIA AMARA’
    


1 comment:

TreeMan said...

அரப்பு மரம் என்பது உசிலை மரம் சிலை என்பது சிலைவாகை மரம், உசிலை மரத்தின் படம் இது சிலை மரம் இல்லை

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...