அல்ஃபாஸ்
இ மேவாத்
சமுதாய வானொலி
எழுதியவர்
சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்
888888888888888888888888888888888888
காட்சி – 1
இடம்: கிராமத்தெரு
பாத்திரங்கள்: 1. கோடாங்கி 2. மலர் பாரதி
88888888888888888888888888888888888888888
(வீடுகளில் வீட்டுத்
திண்ணைகளில்
வீதிகளில் வீதி வளைவுகளில்
தெருக்களில் தெருமுக்குகளில்
மந்தைவெளிகளில் சந்தைக் கடைகளில்
காய்கனி கருவாட்டுக் கடைகளில்
வயல்களில் வரப்புகளில்
மணக்கும் சமூகமொழிகள்தான்
இந்த வானொலியின்
நாக்கிலுல் வாக்கிலும்
நடமாடும் நல்லமொழி
எளிமையான மொழி
சுலபமான மொழி
எல்லொருக்கும் புரியும் மொழி
அதுதான் பிரிய மொழின்னு
ஆத்தா சொல்லுது சாமி)
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
மாரி மகமாயி
மணிமந்திர சேகரியே ஆயி உமையே
அகிலாண்ட ஈஸ்வரியே
தேவி ஜக்கம்மா ராக்கு சொடலை
நீ ஒரு நல்ல வாக்கு சொல்லு
நீ ஒரு நல்ல சேதி சொல்லு
மக்களா கேளுங்க
மகமாயி வாக்கு இது
ஜனங்களா கேளுங்க
ஜக்கம்மா வாக்கு இது
இந்த மண்ணு மனையபாத்தேன்
குறையில்ல
வீடு வாசலப்பற்றிப்பாத்தென்
குறையில்ல
மாடுகன்றப்பற்றிப்பாத்தென்
குறையில்ல
கொழி குஞ்சப்பற்றிப்பாத்தென்
குறையில்ல
மக்க மனுசாளப்பற்றிப்பாத்தேன்
குறையில்ல
மழைமாரிப்பற்றிப்பாத்தேன்
குறையில்ல
பயிர்பச்சயப்பற்றிப்பாத்தேன்
குறையில்ல.
பாரதி: வணக்கம்
கோடாங்கி உனக்காக
காத்துகிட்டு
இருந்தேன் என் பேரு பாரதி
எங்க அம்மா பெயர்
தமிழ் செல்வி.
அவங்களுக்கு உன்ன
நல்லா
தெரியும்னு சொன்னாங்க.
கோடங்கி: ஓ நீங்க தமிழ் அம்மாவோட
கோடங்கி: ஓ நீங்க தமிழ் அம்மாவோட
பிள்ளையா ? உங்களப்பத்தி நிறைய
கேள்வி பட்டு
இருக்கேன்.
பாரதி: நீங்க என்ன கேள்விப்பட்டு
பாரதி: நீங்க என்ன கேள்விப்பட்டு
இருக்கீங்க ?
கோடாங்கி: உங்க பேரு மலர்பாரதி.
கோடாங்கி: உங்க பேரு மலர்பாரதி.
எம் ஏ தமிழ்
படிச்சிருக்கீங்க.
ஒரு
விவசாய சங்கம் வச்சிருக்கீங்க.
பாத்த
நல்ல வேலயவிட்டுட்டு
விவசாயம்
பாக்கறீங்க. அதுல
அந்த குழு மூலமாக
நிறைய
விவசாயிகளுக்கு
உதவி செய்யறீங்க.
பாரதி: கோடாங்கி, எனக்கு மயக்கமே
வருது. என்னுடைய
சரித்திரத்தையே
விரல் நுனியில்
வச்சிருக்கீங்க.
ரொம்ப
சந்தோஷம் கோடாங்கி
இப்பொ
உங்களால எனக்கு
ஒரு
காரியம் ஆகணும்.
அதாவது
வட நாட்டுல அரியானாவுல
‘அல்பாஸ் இ மேவாத்’ அப்படின்னு
ஒரு
சமுதாய வானொலி.
விவசாயிகளே
நடத்துற சமுதாய
வானொலி. அதேமாதிரி எங்க ஊர் ஏரி
வாரியம்
மூலமா நடத்தலாம்னு
முடிவு
பண்ணியிருக்கோம்.
அதனால
அந்த ‘அல்பாஸ் இ மேவாத்’
சமுதாய
வானொலிபற்றி எடுத்து
சொன்னா
எங்களுக்கு
உபயோகமா
இருக்கும்.
கோடாங்கி:
சரி
சாமி உங்க ஏரிவாரியம்
மூலமா
என்ன செய்யறிங்க சாமி ?
பாரதி:
வருஷா
வருஷம் எங்க கிராமத்து
ஏரிகள்ள
குளங்கள்ள தூர் எடுக்கறோம்.
ஆழப்படுத்தறொம். அகலப்படுத்தறோம்.
கரைகள
பலப்படுத்தறோம்.
புதுசா
குளம் எடுக்கறோம். எங்க ஏரிவாரியம்
சங்கத்துல
மொத்தம் 750 குடும்பங்கள்
உறுப்பினரா
இருக்காங்க.
அந்த
காலத்துல சோழர்கள் அரசாட்சி
காலத்துல
இருந்தது மாதிரியான ஏரிவாரியம்.
கோடாங்கி:
என்ன செஞ்சாலும்
அதுல
எனக்கு என்ன
கிடைக்கும் என்று
யோசனை பண்ற இந்த
உலகத்துல,
உங்களை மாதிரி
பார்க்கிறது அபூர்வம்.
அதனாலதான் உங்கள
பத்தி நிறைய
கேட்டு விசாரிச்சு
தெரிஞ்சுகிட்டேன்.
உங்கள
மாதிரி நல்லவர்கள்
இருக்கறதனாலதான்
மழை பேயுதுன்னு
ஒரு
பழைய தமிழ் பாட்டே இருக்கு.
உங்களுக்கு
அந்த பாட்டு
ஞாபகம்
இருக்கா சாமி.
பாரதி:
நல்லார்
ஒருவர் உளரேல்
அவர்
பொருட்டு எல்லார்க்கும்
பெய்யுமாம்
மழைன்னு சொல்லுவாங்க
கோடாங்கி. அப்பிடியே வாங்க
நான்
எங்க சங்கத்து கட்டிடத்துல
இருக்கேன். சமுதாய
வனொலிபத்தி
அங்க
வந்து சொல்லுங்க.
அங்க
கொஞ்சபேர் இருக்காங்க.
நீங்க
மெல்ல வாங்க நான்
வேகமாப்
போறேன்.
கோடாங்கி: சரிங்க சாமி
(காட்சி முடிவு – மாற்று இசை)
காட்சி 2
88888888888888888888888
இடம்: கிராமத்தெரு
பாத்திரங்கள்: 1. கோடாங்கி 2. இளங்கோ
நல்லகாலம்
பொறக்குது
நல்லகாலம்
பொறக்குது
அம்மா
தாயி…
இளங்கோ:
வணக்கம்
கோடாங்கி. நான் பாரதியோட
நண்பன். எங்க ஊரு எங்க விவசாயம்,
எங்க
சங்கம் எல்லாம் எப்பிடி
இருக்கும்னு
ஆத்தாவ கேட்டு
நல்லசேதியா
எதாச்சும் சொல்லு கோடாங்கி.
கோடாங்கி: நீங்க என்னா செய்யறிங்க இளங்கோ ?
இளங்கோ: கோடாங்கி நானும் பரதியும்
ஒண்ணாதான்
படிச்சோம்.
ஒரே
இடத்துலதான் வேலைபாத்தோம்.
ரெண்டுபேருமே
அந்த வேலயை விட்டுட்டு
இப்பொ
இங்க விவசயம் பாக்கொறோம்.
இந்த
ஏரிவாரியத்தோட வேலய நானும்
பாரதியும்தான்
பாக்கறோம். முக்கியமா
மூணு
வேலை பாக்கறோம்.
ஒண்ணு
கிராமத்துக்காரங்க எல்லாம் சேந்து
கிராமத்துக்கு
பொதுவான
ஏரி
குளம் குட்டைகள பரமரிக்கறது.
ரெண்டு
விவசாயிங்க சொட்டுநீர்
பாசனம்
போட உதவி செய்யறது.
மூணு
வீட்டுல கூரை தண்ணியெ
சேகரிக்க
ஏற்பாடு செய்யறது.
இதுக்கு
நாங்க உதவி செய்யறோம்.
விழிப்புணர்வு
குடுக்கறோம்.
நீங்க
கேட்டதுக்கு நான்
பதில்
சொல்லிட்டேன்.
இப்போ
ஒரு குறி சொல்லு கொடாங்கி.
நாங்க
செய்யற வேலைக்கு
பலன்
கிடைக்குமா ? கிடைக்காதா ?
நல்லகாலம்
பொறக்குது
நல்லகாலம்
பொறக்குது
அம்மா
தாயி…
மக்களா
கேளுங்க மகமாயி வாக்கு இது
ஜனங்களா
கேளுங்க ஜக்கம்மா வாக்கு இது.
ஏரி குளம் குட்டை ஓடை
அத்தனைக்கும்
தூரெடுத்து சீரெடுக்கும்
அத்தனை பேருக்கும் ஊருக்கும்
இந்த நாடே
நன்றியும் வணக்கமும் சொல்லணும்னு
ஆத்தா சொல்லுது தாயி
பதினாறு செல்வங்களும் பெற்று
பெருவாழ்வு வாழ்கன்னு
உங்க எல்லா குடும்பத்துக்கும்
ஆத்தா ஆசி சொல்லுது சாமி.
அதாவது
பொன்னும் புகழும்
பெருமையும் தேடி வரும்
அறிவும் கல்வியும் ஆயுளும்
அம்சமாய் நாடிவரும்
வளமையும் வலிமையும்
துணிவும் வெற்றியும்
வெருசா ஓடிவரும்
நல்மக்களும்
நட்பும்
நல்லூழும் அழகும்
இளமையும்
நோயில்லா வாழ்வும்
நிச்சயமா சித்தியாகும்.
அய்யா இந்த ஊர்க்காரங்க
நின்ற இடம்
நீர் செழிக்கும்
நிலம் செழிக்கும்
மரம் செழிக்கும்
நெல் செழிக்கும்னு
ஆத்தா சொல்லுது தாயி.
நீங்க தொட்டகாரியமும்
தொடாத காரியமும்
இட்டபணியும் இடாத பணியும்
இன்னலில்லாம இடைஞ்சல் இல்லாம
ஈடேறும் சாமி.
புல்ல விதைச்சி நெல்ல அறுக்கலாம் சாமி
தூண்டில்ல துரும்பை மாட்டி
இரும்பை பிடிக்கலாம் சாமி
ஆனா நம்பிக்கை ஒரு பங்கும்
உழைப்பு ஒன்பது பங்கும் இருக்கணும்னு
ஆத்தா சொல்லுது தாயி.
நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
அம்மா தாயி
இளங்கோ:
ரொம்ப நன்றி கோடாங்கி.
நீங்க சொன்ன குறி இன்னும்
எங்களை நல்லா உற்சாகப்படுத்தும்படியாக
இருந்தது கோடாங்கி.
எங்க சங்கக் கட்டிடத்துல
கொஞ்சப்பேர் உங்க்கிட்ட
குறி கேக்க காத்திட்டு இருக்காங்க.
அங்க போங்க. நானும் அங்க வர்றேன்.
காட்சி 3
88888888888888888888888888888888888
இடம்: ஏரிவாரியம் சங்க கட்டிடம்
பாத்திரங்கள்: 1. கோடாங்கி 2. பாரதி 3.
பாரதி: கோடாங்கி இதுதான் எங்க
ஏரிவாரியத்தோட சங்க கட்டிடம்.
இப்போ இங்க முக்கியமான
உறுப்பினர் அஞ்சுபேர் இருக்காங்க.
இப்போ நீங்க அந்த ‘அல்பாஸ் இ மேவாத்’
சமுதாய வானொலிபற்றி சொல்லுங்க.
அது விவசாயிகளுக்கு உதவியா இருக்கும்
சமுதாய வானொலின்னு
கேள்விப்பட்டிருக்கோம்.
கோடாங்கி:
இது அரியானா மாநிலத்தோட
அதி அற்புதமான சமுதாய
வானொலி சாமி
அல்ஃபாஸ் இ மேவத்
அதன் பேரு சாமி
காகாஸ் கிராமத்து
விவசாய சமூகத்துக்கு
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயர குடியுயரும்
குடியுயர கொலுயரும்னு
சொல்லித்தரும்
சமுதாய வனொலி சாமி.
ஏர்பிடிக்கும் சமூகத்துக்காக
சால்பிடிக்கும் சத்தான
சமுதாய வானொலி
சாமி
இளங்கோ: கோடாங்கி
அண்ணா.
இந்த வானொலிக்கு இலக்குன்னு
எதாச்சும் இருக்கா ? விவசாயத்தோட
வேற ஏதாச்சும் சேத்து ஒலிபரப்பு
செய்யறாங்களா ?
விவசாயத்தோட
வேற என்னென்ன நிகழ்ச்சிகள்
எல்லாம் ஒளிபரப்பு செய்யறாங்க ?
அதாவது உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
அதாவது உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்
இதுதான் இந்த சமுதாய
வானொலிக்கு
பிரதான இலக்கு
இது விவசாய சமூகத்துக்கான
அக்மார்க் வானொலி சாமி
கனகாம்பரம் மல்லி
முல்லை, வெட்டிவேரு
தவனம் மரிக்கொழுந்து
எல்லம்வச்சி கட்ற
கதம்பமாலை மாதிரி
இந்த சமுதாய வானொலி
சுத்தம் சுகாதாரம்
உடல் நலம் சத்தான உணவு
பெண்கல்வி பெண்ணுரிமை
குழந்தைத் திருமணம்
நாட்டுநடப்பு நாட்டுப்புறப்பாடல்
இப்படி எல்லாப் பூவையும்
சேத்துகட்டி கதம்ப ஒலிபரப்பு
செய்யுது சாமி இந்த வானொலி
.
பாரதி:
பாரதி:
இந்தி மொழியிலதான ஒலிபரப்பு
செய்யறாங்க கோடாங்கி இந்த சமுதாய
வானொலியில ? இல்ல குஜராத்தி
மொழியில ஒலிபரப்பு செய்யறாங்களா ?
நிகழ்ச்சிகள்ள யார் பங்கேற்பாங்க ?
யார் நட்த்தறாங்க கொடாங்கி ?
கோடாங்கி:
கோடாங்கி:
முத்தமிழ் முக்கனி
மும்மூர்த்திகள் என்பது மாதிரி
இந்தி உருது மேவார் என
மும்மொழி பேசும் வானொலி சாமி
இந்த நிகழ்ச்சிகள்ள
உள்ளூர் குழந்தைகள்
உள்ளூர் இளைஞர்கள்
உள்ளூர் பெரியவர்கள்
நிகழ்ச்சியில் பங்கு பெறுவதால்
இந்த அல்ஃபாஸ் வானொலியில்
உள்ளபடியே உள்ளூர்
வாசமும்தான் வாடையும்தான்
உயரமாய் வீசும்
வீடுகளில் வீட்டுத் திண்ணைகளில்
வீதிகளில் வீதி வளைவுகளில்
தெருக்களில் தெருமுக்குகளில்
மந்தைவெளிகளில் சந்தைக் கடைகளில்
காய்கனி கருவாட்டுக் கடைகளில்
வயல்களில் வரப்புகளில்
மணக்கும் சமூகமொழிகள்தான்
இந்த வானொலியின்
நாக்கிலுல் வாக்கிலும்
நடமாடும் நல்லமொழி
எளிமையான மொழி
சுலபமான மொழி
எல்லொருக்கும் புரியும் மொழி
அதுதான் பிரிய மொழின்னு
ஆத்தா சொல்லுது சாமி
இளங்கோ: கோடாங்கி அண்ணா,
ஆச்சரியமா இருக்கு. மூணுமொழியில
ஒலிபரப்பு செய்யறாங்கன்னு சொல்றீங்க.
உள்ளூர்காரங்களே நிகழ்ச்சியில பேசறாங்க,
நடிக்கறாங்க, பாடறாங்க,
நிகழ்ச்சிய நட்த்தறாங்கந்னு
சொல்றீங்க எப்படிண்ணா ?
கோடாங்கி: ஆமாங்க தம்பி,
நிகழ்ச்சிகளை
நடத்தறாங்க
தயாரிக்கறாங்க
படிக்கறாங்க
நடிக்கறாங்க
அத்தனைக்கும் ஆறுமாத
பயிற்சிகள் போதும்னு சொல்றாங்க
பாமர மக்களும் பயிற்சி பெற்றால் பாங்காய்
நடத்தலாம் சமுதாய வானொலின்னு
சொல்றாங்க சாமி
கொஞ்சமா
எழுதப்படிக்க தெரிஞ்சாகூட போதும்
சஞ்சலமில்லாம
எதையும் எடுத்து செய்யலாம்
அடுத்து செய்யலாம்
தொடுத்து செய்யலாம்
சமுதாய வானொலி
சங்கடம் தராது
மனமிருந்தா மார்கமுண்டுன்னு
ஆத்தா சொல்லுது சாமி.
பாரதி: கோடாங்கி அண்ணா.
இந்தியாவுல 250 சமுதாய வனொலி
இருக்குன்னு சொல்றீங்க.
அதுல நம்ம அல்ஃபாஸ்
சமுதாய வானொலி சிறப்பா
செயல்படும் வனொலியா இருக்குமா ?
கொடாங்கி: ஆமாங்க சாமி,
இந்த சமுதாய வானொலி
விவசாய சமூகத்துக்குசெய்த
அற்புதமான பணிக்கு
அரிதான வானொலி சேவைக்கு
‘மந்தன் விருது’ கொடுத்து
மத்திய அரசாங்கம்
மரியாதை செய்திருக்கு சாமி .
எதிர்வரும் காலத்தில்
ஏரிவாரியம் சமூக வானொலியும்
மந்தன் விருது வாங்கி
மகிமை பெறுமுன்னு
மகமாயி சொல்லுது சாமி
நான் வர்றேன் சாமி
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது நல்ல
காலம் பிறக்குது அம்மா தாயே
8888888888888888888888888888888888
No comments:
Post a Comment