Thursday, December 19, 2019

ABDUL KALAM'S INTEGRATED WATER MISSION - கலாம் அவர்களின் தண்ணீர் தன்னிறைவுத் திட்டம்



கலாம் அவர்களின் 
தண்ணீர் தன்னிறைவுத் 
திட்டம்

தே. ஞானசூரிய பகவான் 


நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நமக்கு தந்திருக்கும் நீர்மேலாண்மைத்திட்டம் அறிவியல் பூர்வமானதுஇந்த உலகில் இருக்கும் அத்தனை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானி, அறிவியல் காந்தி என்று போற்றப்படுபவர் கலாம் அவர்கள். அறிவியல் பூர்வமாக நமக்கு வகுத்துத் தந்த நீர்மேலாண்மைத் திட்டத்தைப் பற்றி இந்த பாடத்தில் சுருக்கமாகப் பார்க்கலாம்

வாட்டர் மிஷன்.


இந்த்த் திட்டத்திற்கு அவர் 
இண்டெக்ரேட்டட் வாட்டர் 
மிஷன்என்று பெயர் வைத்துள்ளார்
அதனை நாம்ஒருங்கிணைந்த 
தண்ணீர் தன்னிறைவுத் திட்டம்’ 
என அழைக்கலாம்.


நமது நீர் தேவைகள் நான்கு. 
அவை குடிநீர்தேவை, விவசாயம், தொழிற்சாலைகள் 
மற்றும் சுகாதாரத் தேவைகள். இவற்றை நிறைவு 
செய்யத்தான் கலாம் அவர்களின் வாட்டர் மிஷன்.


மூன்றில் ஒருபங்கு மக்கள் 


இது வறட்சி மற்றும் வெள்ளம் 
ஆகியவற்றை சுலபமாக 
தடுக்கும். ஆண்டுதோறும் மூன்றில் ஒருபங்கு 
மக்கள் இந்தியாவில் வறட்சி மற்றும் 
வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நபருக்கு ஒரு ஆண்டில் 
நமது நீர் இருப்பு 
(Per capita availability of water) 
10 கிலோ லிட்டர் முதல் 50 லிட்டர்.

கலாம் அவர்கள் போட்ட  தண்ணீர் கணக்கு


ஓர் ஆண்டில் இயற்கையாக கிடைக்கும் 
நீரின் அளவு 4000 பில்லியன் 
கியூபிக் மீட்டர். அதாவது மழை 
மூலம் கிடைக்கும் நீரின் அளவு இது. 

நீராவியாக ஏற்படும் இழப்பு மட்டும்  
700 பில்லியன் கியூபிக் மீட்டர் 
அல்லது 17.5 சதவிகிதம். 

நிலத்தில் ஓடுநீராக ஏற்படும் 
இழப்பு இன்னொரு  700 பில்லியன் 
கியூபிக் மீட்டர் அல்லது 17.5 சதவிகிதம். 
இதனை ரன் ஆப் வாட்டர் 
(RUN OFF WATER LOSS)என்பார்கள். 

வெள்ள நீராக கடலில் போய் 
கலக்கும் நீரின் அளவு – 1500 பில்லியன் 
கியூபிக் மீட்டர். அதாவது அது மட்டுமே 
37.5 சதவிகிதம். நிலத்தடி நீராக சேகரம் 
ஆவது – 430 பில்லியன் கியூபிக் மீட்டர்

நாம் பயன்படுத்தும் நீரின் அளவு  
300 பில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே.
நாம் குடிக்க, சமைக்க, குளிக்க, 
விவசாயம் பார்க்க 
கால்நடை வளர்க்க, 
தொழில்கள் செய்ய 
எல்லாவற்றிற்கும் சேர்த்து
300 பில்லியன் கியூபிக் மீட்டர் மட்டுமே.
இது வெறும் 7.5 சதவிகிதம்தான் .
  

மீண்டும் ஒருமுறை சொல்லுகிறேன்.
நாம் பயன்படுத்தும் நீரின் அளவு,  
7.5 சதவிகிதம். 
நிலத்தடி நீராக  சேகரம் ஆவது 
10.75 சதவிகிதம். 
ஆக மொத்தம் பயன்படும் நீரின் அளவு 
18.25 சதவிகிதம்.   நமக்கு கிடைக்காத நீரின் 
அளவு 81.75 சதவிகிதம்.

வெள்ளம் வறட்சி


இந்தியாவின் மொத்த பூகோளப்பரப்பில் 
தோராயமாக பாதியளவு அதாவது 
159.7 மில்லியன் எக்டர் சாகுபடி 
பரப்பாகக் கொண்டது

இதில் 86.6 மில்லியன் எக்டர் 
இறைவை சாகுபடி செய்யும் பரப்பு
உலகிலேயே அதிக அளவு 
இறைவை சாகுபடி 
பரப்பைக் கொண்டது இந்தியா 
என்பது பெருமைபடக்கூடிய செய்தி. 

ஆண்டுதோறும் வெள்ளத்தினால் 
பாதிக்கப்படும் மக்கள் – 260 மில்லியன் 
பரப்பளவில் பார்த்தால் அது 
40 மில்லியன் எக்டர். இது 
14 மாநிலங்களில் சுமார் 
160 மாவட்டங்களில் பரவியுள்ளது.

வெள்ளநீரை அறுவடை செய்து 
வறட்சியான பகுதிகளை மேம்படுத்த வேண்டும் 
என்பதுதான் அப்துல் கலாம் 
அவர்களின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு 
தீர்வு காணும்  ஒருங்கிணைந்த திட்டம்.  





No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...