Friday, December 13, 2019

WATER IS THE SYMBOL OF DEVELOPMENT (A TV SERIAL) - வரப்புயர நீர் உயரும்


வரப்புயர 

நீர் உயரும்


பாடம் 01. 

தே.ஞானசூரியபகவான்

தொலைக்கட்சி 

வேளாண்மைத் தொடர்

(A TV SERIAL) 






மக்கள் தொலைக்காட்சியில் 

ஒளிபரப்பானது 
















 8888888888888888888888888

அன்பிற்குரிய மக்கள்தொலைக்காட்சி 
வேளாண்மை பள்ளி மாணவர்களுக்கு 

வணக்கம்

வரப்புயர நீர் உயரும் பாட வரிசையில் 

தண்ணீர் பஞ்சம் வராது 

என்ற தலைப்பில் முன்னாள் பண்ணை 

வானொலி அலுவலர் மற்றும் இயற்கை 

வளங்கள் பாதுகாப்பு நிபுணர் 

தே.ஞானசூரியபகவான் அவர்கள் 

நடத்தக்கேட்கலாம்.


88888888888888888888888

மக்கள்தொலைக்காட்சியின் வேளாண்மைப்பள்ளி 
மாணவர்களுக்கு வணக்கம்.

1. மக்கள் தொலைக்காட்சி


உலக தொலைக்காட்சிகளிலேயே மக்கள் 
தொலைக்காட்சிதான் இன்று முதல் 
வேளாண்மைப்பள்ளி 
என்னும் புதிய தொடரை தொடங்குகிறது

இந்த புதிய பாடத் தொடரின் பெயர் 
வரப்புயர நீர் உயரும்

மழை, மழைநீர் அறுவடை
அதனை சிக்கனமாக 
பயன்படுத்துதல்பற்றிய விழிப்புணர்வை 
இந்த பாடங்கள் உங்களுக்கு அளிக்கும்

தண்ணீர் தட்டுப்பாட்டை அதனால் 
ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த  
இந்த பாடங்கள் உங்களுக்கு 
உதவியாக இருக்கும்.

2. மாதம் மும்மாரி


உங்கள்ள எத்தனை பேர் தெருக்கூத்து பாத்திருக்கிங்க ? சினிமா டிராமாவுக்கு முன்னாடி தெருக்கூத்துதான். அந்த காலத்துல ராஜா வேஷம் கட்றவங்கதான் சூப்பர் ஸ்டாருங்க. தெரியுமா ?

தெருக்கூத்துல ராஜாவேஷம் வந்தஒடனே கட்டியங்காரன கூப்பிடுவார். 'அடேய் காவலா> நம்ம நாட்டுல மாதம் மும்மாரி மழை பேயுதா ? மக்கள் சுபீட்சமாக இருக்காங்களா ? " அப்படின்னு கேட்பார். அதுக்கு கட்டியக்காரன் சொல்லுவார் 'பிரபோ உங்க ஆட்சியில ஜனங்க சவுக்கியமா இருக்காங்க. மாசத்துக்கு மூணு மழை மணி அடிச்ச மாதிரி பேயுது மகாராஜா.. பாலாறும் தேனாறும் மாறி மாறி பாயுது.;  புலியும் மானும் ஆத்துல பக்கம் பக்கமா நிண்ணு தண்ணி குடிக்குதுங்க மகாராஜா" என்று சொல்லுவார் கட்டியங்காரன்.

இயற்கையை மறக்காத நம் பெரியவர்கள்


இன்றும் கூட தமிழ்நாட்டு தெருக்கூத்தில் இது பிரபலமான வசனம். காரணம் நமக்கு உதவும் இயற்கையை மறக்காமல் இருந்தார்கள். நம் மூதாதையர்கள்.

அந்த காலத்தில் 'எந்த ராஜா எந்;த பட்டினம் போனாலும்";  மாதம் மூன்று மழை. 365 நாள் கொண்ட ஒரு ஆண்டில் 36 மழை> அதாவது 10 நாளைக்கு ஒரு மழை. மணி அடிச்ச மாதிரி பெய்தது. மண் கண்டத்தில் ஈரம் காத்துக் கிடந்தது. ஓர் ஆண்டில்; மூன்று போகம் விளைந்தது.; ஒரு கட்டு கதிர் கலம் கண்டது.; ஒரு கதிர் உழக்கு கண்டது.


நெல்காய்ப்பது செடியிலா ? மரத்திலா ?


கணினியும் வலைத்தளமுமாக மாறிவிட்ட இந்த தகவல் யுகத்தில் வாழும் நம்மை விட நமது முன்னோர்கள் மழை பற்றி நிறைய செய்திகளை விரல் நுனியில் வைத்திருந்தார்கள்.

இன்றும் விவசாயம் சோறு போடும் தொழிலாக இருந்தாலும் 'நெல் காய்ப்பது செடியிலா மரத்திலா என்று நமது குழந்தைகளால் 'டக்" கென்று பதில் சொல்ல முடியவில்லை. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் ?;

பஞ்சம் வந்தால்தான் தண்ணீர் ஞாபகத்துக்கு வரும்


குளியல் அறை குழாயில் தண்ணீர் வரவில்லையா ? சமையல் அறையில் திடீர் என்று தண்ணீர் வராமல் வேலை நிறுத்தம் செய்கிறதா ? மானாவாரி நிலத்தில் விதைத்த கடலை காய்கிறதா ? ஒண்ணரை லகரத்தில் போட்ட போரில் தண்ணீருக்கு பதிலாக காற்று வருகிறதா ? ஆயிரம் அடி ஆழ்குழாய் கிணறு ஆறே மாதத்தில் அம்போ என்று கைவிட்டு விட்டதா ?  அப்போது மட்டும்தான் நமக்கு மழை நினைவுக்கு வரும். கஷ்டம் வரும்போது மட்டுமே கடவுள் ஞாபகத்துக்கு வருவது மாதிரி.


தாயைப்பழிச்சாலும் தண்ணீரைப் பழிக்காதே


1. கர்ணனுக்குப்பிறகு கொடையில்ல கார்த்திகைக்குப்பிறகு மழையில்ல. (கார்த்திகைக்கு பின்னாடி மழையை எதிர்பாக்காதன்னு அர்த்தம்)

2. நீரைச்சிந்தினியோ சீரைச்சிந்தினியோ (தண்ணீரை சிந்தறது  காசு பணத்தை சிந்தினதா அர்த்தம்)

3. உப்பத்தின்னவன் தண்ணீய குடிப்பான்அப்படின்னா தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவீப்பான்னு அர்த்தம்

4. நீர் இன்று அமையாது உலகுமுதன் முதல்ல கபிலர் சொன்னார். அப்பொறம் திருவள்ளுவர் சொன்னார்.

4. நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமயாது ஒழுக்குதிருவள்ளுவர் பத்து குறள் எழுதினார்.

5. கிணற்று வெள்ளத்தை ஆறு கொண்டுபோகாது (உனக்குத்தான் கிடைக்கும் அவசரப்படாதே)

மனிதர்களோட பண்புகளக்கூட தண்ணீரவச்சி சொல்லியிருக்காங்க.


காசை தண்ணீயா செலவு செய்யறான்அப்படின்னா அவன் ஊதாரி
தவிச்ச வாய்க்கு தண்ணிகூட குடுக்கமாட்டான்அப்படின்னா அவன் கருமி
அள்ளிகுடிக்க தண்ணி இல்ல ஆனைமேல அம்பாரிபோக ஆசைப்பட்டானாம்அப்படின்னா அவன் பேராசைக்காரன்

அவ்வையார் எழுதிய 

நீர்மேலாண்மைப்பாட்டு


வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயர குடி உயரும்குடி உயர கோல் உயரும்



வரப்புயரவரப்பை உயரமாகப்போடு. அது மழை அறுவடை செய்யும் ஒரு கருவி.
நீர் உயரும்என்றால்வரப்புகள் நிறைய மழை அறுவடை செய்யலாம். மண்கண்டத்தை ஈரமாக வைத்துக்கொள்ளும். அது நிலத்தடி நீர்மட்ட்த்தை உயர்த்தும்.

நெல் உயரும்அந்த மண்கண்டத்தில் எந்த பயிர் போட்டாலும் அதன் உற்பத்தி பெருகும்.

குடி உயரும்: அந்த மண்ணில் வழும் மக்களின் சமூக பொருளாதாரநிலை உயரும்.
(வரப்பு போட்டால் நீரை சேமிக்கலாம். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கலாம்)

கோல் உயரும்நீரை சேமித்து அல்லது அறுவடை செய்து பயிர்உற்பத்தியைப் பெருக்க அந்த அரசு அல்லது அரசன் உதவ வேண்டும் என்று அர்த்தம்.

அரசாங்கத்துக்கு அவ்வயார் 

எழுதிய விண்ணப்பம்


இந்த பாட்டில் நீர்மேலாண்மை இருக்கு.  பயிர் உற்பத்தி பெருக்கம் இருக்கு, சமூக மேம்பாடு இருக்கு, நல்லாட்சி அல்லது அரசின் கடமை எல்லம் அடங்கி இருக்கு. 

இந்த பாட வரிசையின் பெயர் வரப்புயர நீர் உயரும். மழை அறுவடை செய்தால் தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல எல்லா பஞ்சமும் தீரும் இந்த பாடங்கள் சொல்லும் பாடம்.

அவ்வையார் ஒரு புலவர் மட்டுமல்ல மிகப்ப்ரிய புத்திசாலி. சமயோஜிதமான அறிவு படைத்தவர். நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அவ்வையாரை வெறுப்பேற்றுவதற்காக ஒரு புலவர் அவரிடம் ஒரு புதிர் போடுகிறார். அது என்ன புதிர் ?

ஓர் காலில் நாலிலைப் பந்தலடி


ஓர் காலில் நாலிலைப் பந்தலடிபுதிர் போடுவது அந்த புலவரின் நோக்கமல்ல. அவ்வயை வாடிபோடி என்று சொல்லவேண்டும்.

ஒர் காலில் நாலிலைப்பந்தல் என்றால் அது ஆரை என்னும் ஒருவகை கீரையை குறிக்கும். அவ்வையார் அதற்கு பதிலும் சொல்ல வேண்டும் அதேசமயம் அதற்கு பதிலடியும் கொடுக்க வேண்டும். அதற்கு ஒருபாட்டாலேயெ எப்படி பத்லடி கொடுக்கிறார் என்று பாருங்கள்.

எட்டேகால் லட்சணமேஎமனேறும் பரியேமுட்டமேல் கூரையில்லா வீடேகுலராமன் தூதுவனேஆரையடா சொன்னாய் அது 

இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம் ?


 அவலட்சணம் புடிச்சவனேஎறுமைமாடே குட்டிச்சுவரேகுரங்குப்பயலேநீ சொன்னது ஆரைக் கீரைடாநாய்ப்பயலே !


இதுதான் அவ்யாரோட பதில் 

8888888888888888888888888888888888888888














No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...