Tuesday, December 31, 2019

இருவாச்சி மூன்று சிவத்தலங்களின் ஸ்தல விருட்சம் IRUVAACHCHI SHIVA TEMPLE TREE



TEMPLE TREES OF INDIA  -  இந்திய கோவில் மரங்கள்












இருவாச்சி

மூன்று  

சிவத்தலங்களின் 

ஸ்தல விருட்சம்

 

IRUVAACHCHI

SHIVA TEMPLE TREE





திருவாத்தி 

என்னும் 

காட்டாத்தி மரம்


YELLOW ORCHID TREE


தே. ஞானசூரிய பகவான், போன்: + 8526195370
Email: gsbahavan@gmail.com


மரக்கட்டைகள் வலுவாக, கடினமாக
இருக்கும். ஆப்ரிக்காவில் பாரம்பரிய
வீடுகளை கட்டுவதற்காக இந்த மரத்தைப்
பயன்படுத்துகிறார்கள்.


இந்த  மரத்தின் பூக்களில் தேனும்,
மகரந்தமும் கூடுதலாக இருக்கும். இது
அதிகப்படியான பட்டாம் பூச்சிகளை மற்றும்
தேனீக்களைக்  கவரும்.


பலவித மருத்துவ
குணங்களைக் கொண்டவை. இந்தியா மற்றும்
ஆப்ரிக்காவின் பாரம்பரிய மருத்துவ
முறைகளில் இவற்றைப்
பயன்படுத்துகிறார்கள்.


தாவரவியல் பெயர்: பாஹினியா
டொமண்டோசா (BAUHINIA TOMENTOSA)


தாவரக் குடும்பம் பெயர்:சிசால் பைனியே
(CAESALPINEACEAE)


பொதுப் பெயர்கள்: எல்லோ ஆர்கிட் ட்ரீ,
செயிண்ட் தாமஸ் ட்ரீ, எல்லோ பெல்
(YELLOW ORCHID TREE, SAINT THOMAS TREE, YELLOW BELL)தாயகம்: இந்தியா (INDIA)


இருவாச்சி  என்னும் காட்டாத்தி
கோவில்களில் தலமரமாக உள்ளது.
திருஆப்பாடி, திருச்சிற்றேமம், மற்றும்
திருச் செங்காட்டாங்குடி மூன்று
சிவத்தலங்களின் தலமரம் இது.

திருச்செங்காட்டான் குடி, உத்தர பசுபரீஸ்வரர்
ஆலயத்தின் ஸ்தவிருட்சம் காட்டாத்தி.
இந்தக் கோவில் 1000 முதல் 2000 ஆண்டுகள்
பழமையானது. திருவாரூர் மாவட்டத்தில்
உள்ளது. இந்த சிவாலயத்தின் மூலவர்
கணபதீஸ்வரர், உச்சவர் உத்திர பசுபதிஸ்வரர்,
அம்மன் வாய்த்த திருக்குதல் உமை நாயகி.
சைவக் குறவர்கள் திருஞான சம்மந்தர்,
திருநாவுக்கரசர், மற்றும் அருணகிரி
நாகரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
இது காவிரிக் கரையில் உள்ள 79 வது சிவத்தலம்.
திருச்சிற்றேமம் சிவன் கோவிலும்
திருவாரூர் மாவட்டத்தில்தான் உள்ளது.
கோவில் திருவாரூர் திருத்துரைப் பூண்டி
சாலையில் ஆலத்தம்பாடி சென்று
அங்கிருந்து, சித்தாய்மூர் செல்லும்
பாதையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வாலயத்தின் மூலவர்
சுவர்ணஸ்தாபனேஸ்வரர்,
உற்சவர் பொன்வைத்தநாதர்,
அம்மன் அகிலாண்டேஸ்வரி.
இந்தத் கோவிலின் தல விருட்சமும்
ஆத்திதான்: இந்த ஆலயம் சித்தாய்மூர்
என்றும் இடத்தில் உள்ளது.   
திருஅப்பாடி சிவன் கோவிலின்
ஸ்தலவிருட்சமும் ஆத்தி மரம்தான்.
திருப்பனந்தாளிலிருந்து 4 கி.மீ  தொலைவில்,
திருவிசாலூரில் காவிரி ஆற்றின்
வடக்குக் கரையில் உள்ளது.

இருவாச்சி  மரத்தின்
பல மொழிப் பெயர்கள்


      1. தமிழ்: இருவாச்சி , சிறியாத்தி மரம்
 (IRUVACHI  MARAM, SIRIYATHI MARAM)


2. நேபாளி: அமில் டாங்கி (AMIL TANKI)


3. கன்னடா: மந்தாரா ஹ_ (MANDARA HOO)


4. இந்தி: கச்னார், காஞ்சனா (KACHNAR, KANCHANA)


5. தெலுங்கு: அடவிமந்தரமு, தேவ காஞ்சனமு
 (ADAVI MANDARAMU, DEVA  KANCHANAMU)


6. மராத்தி: அப்டு, சான் (APTU, CHAN)


7. சமஸ் கிருதம்: அஸ்மந்தகா, காஞ்சனராஹ்
(ASMANTAKA, KANCHANARAH)


8. மலையாளம்: காஞ்சன பூ, காஞ்சினா
 (KANCHANA PU, KANCHENA)


9. கன்னடா: ஆனி பாடா, காடாத்தி
(AANE PAADA, KADATHI)


இருவாச்சி , ஆத்தி, மந்தாரை எல்லாமே
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள்தான்:
இருவாச்சி  மரத்திற்குக் கூட காட்டாத்தி
என்ற பெயரும் உண்டு: இவற்றின் இலைகள்
எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும்.
இலைகளின் அளவு மட்டும் வித்தியாசப்படும்.

ஆத்தி மரத்தின் இலைகள் மாதிரி இருவாச்சி
மரத்தின் இலைகளும் இரண்டாகப்
பிரிந்திருக்கும். அதனால் ஆத்தி மரத்தை
ஆங்கிலத்தில் ஒட்டகக்கால் மரம்
(CAMEL FOOT TREE) என்று
சொல்லுவார்கள்:

சிறுசாய் இருக்கும் இலைகளை சட்டென்று
பார்த்தால், பச்சை நிற பட்டாம் பூச்சி சிறகு
விரித்தபடி உட்கார்த்திருப்பது போலத்
தெரியும்.  இதன் இலைகளைக் கசக்கி
முகர்ந்தால், ரப்பர் எரித்தது போன்ற நெடி அடிக்கும்;.
ஆச்சா மரத்தின் இலைகளும் ஏறத்தாழ
இதே போலத்தான் இருக்கும். ஆனால்
அளவில் சிறுசாய் இருக்கும்.

இதன் இலைகள், பூக்கள், மொட்டுக்கள்,
காய்கள் அத்தனையும் பலவித மருத்துவ
குணங்களைக் கொண்டவை. இந்தியா மற்றும்
ஆப்ரிக்காவின் பாரம்பரிய மருத்துவ
முறைகளில் இவற்றைப்
பயன்படுத்துகிறார்கள். இருமல்,
வலிப்பு, மலச்சிக்கல், நுரையீரல் அழற்சி,
பால்வினை நோய்கள்
(COUGH, CONVULSIONS, CONSTIPATION, 
PNEUMONIA, VENERAL DISEASES)
போன்றவற்றிற்கு சிகிச்சை தர
பயன்படுத்துகிறார்கள்.

இதன் இளம் தளிர் இலைகளை கீரை
மற்றும் காய்கறியாக சமைத்துக்
சாப்பிடலாம். கொஞ்சம் அமிலச்
சுவையுடன் இருக்கும். இதன் விதைகளை
‘டானிக்’காகப் பயன்படுத்துகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், பாலுணர்ச்சித்
தூண்டியாகவும், உபயோகப்படுத்துகிறார்கள்.

இருவாச்சி மரத்தின் பூக்களில் தேனும்,
மகரந்தமும் கூடுதலாக இருக்கும். இது
அதிகப்படியான பட்டாம் பூச்சிகளை மற்றும்
தேனீக்களைக்  கவரும். பூக்கள் கவர்ச்சிகரமான
மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் பிரதானமாக
 இந்த மரம் ஒரு மூலிகை மரம்.

இதன் இலைகளிலிருந்து மஞ்சள் நிற
சாயம் எடுக்கிறார்கள். இதன்
பட்டைகளிலிருந்து எடுக்கும் நாரினை
பயன்படுத்தி கூடைகள் செய்கிறார்கள்.
மரத்தின் வயிரப்பகுதி மரம் கருப்புநிறமாக
 இருக்கும். இதன் மேல் பகுதியில் உள்ள
மரப்பகுதி (SAP WOOD)
வெளிர் ஊதா நிறமாக இருக்கும்.

மரக்கட்டைகள் வலுவாக, கடினமாக
இருக்கும். ஆப்ரிக்காவில் பாரம்பரிய
வீடுகளை கட்டுவதற்காக இந்த மரத்தைப்
பயன்படுத்துகிறார்கள்.
காட்டாத்தி மரம் என்னும் இருவாச்சிமரம்
வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப்
பகுதிகளுக்கு ஏற்றது. லேசான
பனிப்பொழிவைக் கூட தாங்கும்.
நல்ல சூரிய ஒளி வேண்டும். ஒரளவு
சுமரான நிழலைக் கூட சமாளிக்கும்.
ஈரச் செழிப்பான மண்கண்டமும்,
வடிகால் வசதியும் ஏற்றவை.

 ஒரளவு வறட்சியைக் கூட தாங்கும்.
 இளஞ்செடிகள் நன்றாக வளரும்.
நடவு செய்த இரண்டாம் ஆண்டே
மரங்கள் பூக்க ஆரம்பிக்கும். வெப்பமான
தட்ப வெப்ப நிலையில் மரங்கள்
பெரும் பாலான மாதங்களில் பூக்கும்.
வறட்சியான இடங்களில் வளரும்
மரங்களில் விதைகளை சேகரிப்பது நல்லது.





















REFERENCES:

WWW.TROPICAL.THEFENNS.INFO/-“BAUNINIA TOMENTOSA, ”,

WWW.TEMPLE.DINAMALAR.COM-“SN UTHINA PASUPATHEEDWARA GANAPATHESWAR TEMPLA”, 

WWW.P2A.SANBI.ORG-BAUHINIA TOMENTOSA, 

WWW.TA.WIKIPEDIA.ORG-KATTATM-, WWW.FLOWERS OF INDIA.NET/YELLOW ORCHID TREE, WWW.ENVIS.FRIHT.ORG/PLANT DETAILS FOR A BAUHINIA TOMENTOSA.




இடலை மூலிகை மரம் பாம்புக்கடியை குணப்படுத்தும் IDALAI MARAM CURES SNAKE BITES
















இடலை மூலிகை மரம் 

பாம்புக்கடியை 

குணப்படுத்தும் 
 


IDALAI MARAM 

CURES SNAKE BITES


தே. ஞானசூரிய பகவான்,
போன்: + 91 8526195370
Email: gsbahavan@gmail.com


தாவரவியல் பெயர்: ஒலியா டையாய்கா
(OLEA  DIOICA)



தாவரக்குடும்பம் பெயர்: ஒலியேசி
(OLEACEAE)


தாயகம்: இந்தியா(INDIA)
பொதுப் பெயர்கள்: ரோஸ் சேண்டல்வுட்
(ROSE SANDAL WOOD)


இந்தியான் ஆலிவ் ட்ரீ(INDIAN OLIVE TREE), 

காட்டொலிவம் (KATTOLIVAM)



பல மொழிப் பெயர்கள்(VERNACULAR NAMES)


1. தமிழ்: இடலை, இடலை கோலி, கோலி பயறு
(YEDALEI, IDALAI KOLI, KOLI PAYAR)


2. கன்னடா: எடலி, பிலிசாரலி, பார்ஜம்ப்
(EDALE, BILISARALI, PARRJAMB)


3. நேபாளி: கலா கிகோன்(KALA KIKONE)
4. மராத்தி: பார்ஐhம்ப்(PARJAMB)


5. அசாமிஸ்: பான் - போறுகா, போரெங்
(BON – BHOLUKA, PORENS)


6. மலையாளம்: வயலா, எடனா,
இரிப்பா, வெட்டிலா, வலியா,
பலரனா, கரிவெட்டி, கொருங்கு, விடனா.
(VAYALA, EDANA, IRIPPA, VETILA, KARIVETI,
KORUNGU, VALIYA)


1

பாம்புக்கடி, புற்றுநோய் உட்பட நோய்களை
குணப்படுத்தக் கூடிய, மேற்கு மலைத்
தொடச்சிக்கு சொந்தமான, பசுமை மாறாத,
மூலிகை மரம்.

2

பூக்களும் பழங்களும்
(FLOWERS & FRUITS)


பூக்கள் இலைக்கணுக்களில்
பூங்கொத்துக்களாகத் தோன்றும்.
சிறிய பூக்கள், வெளிர் பச்சை நிறத்தில்
பூக்கும்.  சில சமயம் லேசான ஊதா நிற
சாயை தென்படும் பழங்கள்,
அடர்த்தியான ஊதா நிறமாக இருக்கும்.
பழங்கள் உருண்டையாக சதைப்பற்றுடன்
இருக்கும்.  டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை
சுமார் நான்கு மாதங்கள்
பூத்துக் குலுங்கும்.

மகாராஷ்ட்ராவில் கண்டலா மற்றும்
மகாயலேஷ்வர் பகுதிகளில்
இந்த மரங்கள் அதிகம்
காணப்படுகின்றன.

3

பரவியிருக்கும் இடங்கள்
(DISTRIBUTION)


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி,
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி,
மற்றும், ஈரப்பசை மிகுந்த இலையுதிர்
காடுகளில், இந்த மரம் அதிகம் காணப்படுகின்றன.
இந்தியாவில் குறிப்பாக, அசாம்,
கேரளா, மற்றும் நேப்பாளம்.

தமிழ்நாட்டில் அநேகமாய் எல்லா
மாவட்டங்களிலும் பரவியுள்ளன.
அதிகம் இருப்பது, கோயம்பத்தூர்,
தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி,
மதுரை, நீலகிரி, சேலம், தேனி மற்றும் நாமக்கல்.
 கர்நாடகாவில், பெல்காம், சிக்மகளுர்,
கூர்க், ஹாசன், மைசூர், நார்க் கேனரா,
ஷிமோகா, மற்றும் சவுத் கேனரா.

மகாராஷ்ட்ராவில், அஹமத் நகர்,
கோலாப்பூர், நாசிக், பூனே, ராஜ்காட்,
ரத்னகிரி, சத்தாரா, மற்றும் தானே
பகுதியில் இந்த மரங்கள் பரவியுள்ளன.


4

இடலையின் மருத்துவப் பண்புகள்
(MEDICINAL PROPERTIES)


இடலை மரத்தின் இலைகள், வேர்கள்,
பட்டைகள் ஆகியவை பல காலமாக
மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் தற்போது
ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த ஆராய்ச்சிகளில் , பல்வேறு
மருத்துவப் பண்புகளை உடையது
என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பலவகையான
தாவர ரசாயனங்கள் இதன்
பயிர்ப்பாகங்களில் உள்ளன.

அவை சாப்பனின்கள், பிளேவனாய்டுகள்,
ஸ்டீராய்டுகள், கிளைகோ சைட்டுகள்,
பினால்கள், மற்றும் ஸ்டீரால்கள்
(SAPPANINS, FLAVANOIDS, STEROIDS, GLYCOSIDES, 
PHENOLS, & STEROLS)

இடலை மரத்தின் பல்வேறு பயிர்ப்பாகங்களை
பல மாநிலங்களில் மருந்துப்
பொருளாகப் பயன்படுத்தி
வருகிறார்கள்.

1. சித்த மருத்துவத்தில், இதன் வேர்களை
பாம்புக்கடி, மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்த
பயன்படுத்துகிறார்கள்.

2. மகாராஷ்ட்ராவின் பழங்குடி மக்கள்
இதன் பழங்கள் மற்றும் பட்டைகளைப்
பயன்படுத்தி, மூட்டுவாதம் (RHEUMATISM),
சொறி சிறங்கு போன்ற தோல் நோய்கள்
(SKIN DISEASES),ஆகியவற்றை குணப்படுத்த
பயன்படுத்துகிறார்கள்.

3. கேரள மாநிலத்தின் பழங்குடி மக்களும்,
பலவிதமான நோய்களைக் குணப்படுத்த
இடலை மரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இடலை மரத்தின் மருத்துவப் பண்புகள்,
பாரம்பரியமாக அவற்றைப் பயன்படுத்திய
விதம் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று
'ஐர்னல் ஆப் பார்மகாலஜி அண்ட்  பைட்டோ
கெமிஸ்ட்ரி' என்ற பத்ரிக்கையில்
வெளியாகியுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில்
அதிகம் பரவியுள்ளது.

தமிழில் இதனை இடலை, இடலைக் கோலி,
காட்டொலிவம், என எட்டு பெயர்களில்
அழைக்கப்பட்டுள்ளது.  ஆனால்
கன்னடத்தில் 30 பெயர்களும்
மலையாளத்தில் 18 பெயர்களும்
உள்ளன.  அதனால் இந்த மரங்கள்
கர்நாடகா மற்றும் கேரளாவில்
மிகவும் பிரபலம் எனத் தெரிகிறது.
அதுமட்டுமின்றி கிழக்கு இமயமலைப்
பகுதி வட கிழக்கு இந்தியா, மற்றும்
நேப்பாளத்திலும் இந்த மரங்கள்
பரவியுள்ளன எனத் தெரிகிறது.


5

ஒலியேசி தாவரக்குடும்ப தாவரவகை
(PLANTS OF OLEACEAE FAMILY)


 “ஒலியேசி” தாவரக்குடுத்தில்,
700 தாவரவகைகள் உள்ளன.
இந்தக் குடும்பத்தில் இருப்பவை
பெரும்பாலும், குறுமரங்கள்,
மரங்கள் மற்றும் லியானாஸ்
(LIYANAS) என்பவை.  லியானாஸ்
என்றால் பெருங்கொடிகள் என்று
அர்த்தம்.  ஓலிவ மரங்களும்,
மல்லிகையும் இந்த குடும்பத்தைச்
சேர்ந்தவைதான்.


இடலை மரம் பிரபலமான மரம் இல்லை
என்றாலும், அவற்றைத் தேடிக்
கண்டுபிடித்து, நட்டுவைத்து அவற்றைப்
பயன்படுத்திக் கொள்ளும்படியான
மூலிகை மரம் என்பதை நாம்
தெரிந்து கொண்டோம்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4.மலைவேம்பு மரம்                                        எல்லா மருத்துவ                                            முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html


11. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

12. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

13. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

14. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

15. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html

16. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

REFERENCES FOR LINK


1.      WWW.FLOWERS OF INDIA.NET/OLEA DIOICA/ROSE SANDALWOOD TREE


2.      WWW.FLICKR.COM/OLEA DIOICA


3.      WWW.INDIAN BIO DIVERSITY.ORG/OLEA DIOICA


4.      WWW.PHYTO JOURNAL.COM/ “PRELIMINARY PAYTOCHEMICAL AND 

ANTIMICROBIAL PROPERTIES OF OLEA DIOICA (EXTRACT COLLECTED FROM  WESTERN CLWTS, KARNATAKA, INDIA)


5.      WWW.ENVISFRIHT.ORG/PLANT DETAILS FOR A OLEA DIOICA


6.      WWW.EN.WIKIPEDIA.ORG/OLEACEAE - PLANT FAMILY
     ,

Monday, December 30, 2019

CORPSE FLOWERS - பிணவாடைப்பூக்கள்









பிணவாடைப்

பூக்கள்

 CORPSE 

FLOWERS


CORPSE FLOWER


தாவரவியல் பெயர்: 

அமோர்போபேல்லஸ்டைட்டேனியம் (AMORPHOPHALLUSTAITTANIUM)


குறுஞ்செய்திகோவாலு


உலகிலேயே மிகப்பெரிய கிளையற்ற
பூங்கொத்தை தரும் செடியின் பெயர்
டைட்டன் ஆரம் (TITAN ARUM) என்பது.
அதிகபட்சமாக 10 அடி நீளம் வரை
உயரமாக வளர்ந்து மிரட்டும். செடியும்
பூவும் சேர்ந்து ஒரு பெரிய நாட்டு
செக்கு மாதிரி தோற்றம் தரும்.

இந்த பூக்கள் அழுகும் மாமிச வாடை
வீசும். பிராணிகளின் அழுகிய மாமிசத்தை
சாப்பிடும் மாமிசவண்டுகள் மற்றும்
மாமிச ஈக்களை கவருவதற்குத்தான்
இந்த விஷேச வாசனை. இவை
இந்த பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு
 உதவுகின்றன.

இந்த பூங்கொத்தே பார்க்க  ஒரு மரம்
போல காட்சி தரும். இதன் இலைகள்
20 அடி நீளமும் 16 அடி அகலமும்
கொண்டவைகளாக இருக்கும்.

புதிய செடிகளை உருவாக்க இதன்
கிழங்குகளை நடவேண்டும். ஒரு கிழங்கு
அதிகபட்சமாக 150 கிலோ வரை எடை
இருக்கும். இந்த டைட்டன் ஆரம்
செடியின் தாவரவியல் பெயர் அமோர்போபேல்லஸ்
டைட்டேனியம் (AMORPHOPHALLUS
TAITTANIUM). இதன் சொந்த ஊர்
இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவு.
இது உலகில் உள்ள தீவுகளில்
ஆறாவது பெரிய தீவு என்பது
குறிப்பிடத்தக்கது.

கருநொச்சி - ஆண்கள் குடும்ப கட்டுப்பாட்டு மரம் - KARUNOCHI - MALE FAMILY PLANNING TREE















கருநொச்சி - ஆண்கள்குடும்ப கட்டுப்பாட்டு
மரம்


WILLOW LEAF JUSTICIA - KARUNOCHI - MALE 

FAMILY PLANNING TREE


தாவரவியல் பெயர்: ஜெண்டுராசா
வல்காரிஸ் (GENDARUSSA VULGARIS)

தே. ஞானசூரிய பகவான், போன்: + 918526195370,
Email: gsbahavan@gmail.com

 பப்புவா, இந்தோனேசியாவின் ஒரு பகுதி.
இங்கு  பழங்குடியில் ஆண்களில்
அத்தனை உருப்படியும் இந்தக்
கருநொச்சி கஷாயத்தை, உடலுறவுக்கு
30 நிமிடத்திற்கு முன்னதாகக்
குடிக்கிறார்கள். கருத்தறிப்பு
‘போயேபோச்’ என்கிறார்கள்.
பப்புவா மாநிலத்தின் பழங்குடி
மக்களிடையே இந்தப் பழக்கம் 

வெகு காலமாக உள்ளது.
கிராமத்தில் சாயங்காலம் ஆனால்
நொச்சித் தழைகளைப் போட்டு
புகைபோடுவது வழக்கமாக
இப்போதும் உள்ளது. நொச்சிப்புகை
போட்டால் ஒரே ஒரு கொசு கூட வராது. 

கருநொச்சியிலிருந்து ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். விரைவில் அந்த மாத்திரை வெளிவர உள்ளது. 
















தாவரவியல் பெயர்: ஜெண்டுரூசா
வல்காரிஸ் (GENDARUSSA VULGARIS)
தாவரக் குடும்பம் பெயர்: அகாந்தேசி
(ACANTHACEAE)
தாயகம்: சைனா (CHINA)
பொதுப் பெயர்கள்: வில்லோ லீஃப்
ஐஸ்டீசியா, ஏசியன் வாட்டர் வில்லோ
(WILLOW  LEAF JUSTICIA, ASIAN WATER WILLOW)

நொச்சி மரத்தின் இலைகள் பார்க்க
மயிலின் பாதம் போல இருக்கும்.
அதனால் இதனை ‘மயிலடிச் செடிகள்’
என்று சொல்லுகிறது சங்க காலத்து
தமிழ் இலக்கியம்.

     “மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி
      அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
      மணி மருள் பரவின் பாடுநனி கேட்டே” – 

(கொல்லன் அழிசி – 138 வது  பாடல்   

குறுந் தொகை)


‘நொச்சிப் பூ உதிரும் நடுராத்ரியில் வருவேன்
என்றான். அவனுக்காக அவள்; காத்திருந்தாள்.
 ஊர் உறங்கிவிட்டது. மயிலடி போன்ற இலைகளை
 உடைய நொச்சி மரங்கள், தங்கள் பூக்களை
ஒசையுடன் உதிர்க்கின்றன: எப்படித்தான்
ஊர் உறங்குதோ?; பாழாய்ப்போன தூக்கம்
எனக்கு மட்டும வராமல் அடம்பிடிக்கிறது ?’
என்கிறாள் அந்தப் பெண். அதுதான் இந்த
குறுந்தொகைப்பாட்டு.

கருநொச்சி கிழக்காசிய நாடுகளில்
அதிகம் பரவியுள்ளது: சீனா, பாகிஸ்தான்,
இந்தியா, ஸ்ரீலங்கா, மியான்மர், தாய்லாந்து,
கம்போடியா, லாவோஸ், வியட்நாம்,
மலேசியா, இந்தோனேசியா, மிலிப்பைன்ஸ்
ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
 “புளோரா ஆப் சைனா” என்ற ஒரு வலைத்தள
செய்தியில் இந்தியா உட்பட மேலே
சொல்லப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளை
கருநொச்சியின் சொந்தமண் என்றும்
குறித்துள்ளது. அப்படிப் பார்த்தால்
கருநொச்சியும் நம்ம ஊர் மரம்தான்.

         

1. கருநொச்சியின் பல மொழிப் பெயர்கள்:


1.1. தமிழ்: கருநொச்சி, வாடைக்குட்டி
(KARUNOCHI, VADAIKUTTI)


1.2. இந்தி: நீலி நர்கண்டி, காலா பாசிம்ப்,
காலா ஆடுல்சா (NILI NARGANDI,
KALA BASHIMB, KALA ADULSA)


1.3. மலையாளம்: கரு நொச்சி, வட கொடி
(KARUNOCHI, VADAKODI)


1.4. தெலுங்கு: அட்டசரமு, கந்தர சாமு,
நல்ல நொச்சிலி, (ADDASARAMU,
KANDHARA SAMU, NALLA NOCHILI)


1.5. கன்னடா: ஆடு தொட்டகிகா, கரலகிட்டா ,
கரிநேக்கி (ADU THODAKIDDA,
KARALAKIDDI, KARINOKKI)


1.6. ஒரியா: நில நிர் குண்டி (NILA NIRGUNDI)


1.7. பெங்காலி: ஐகத் மாடன் (JAGAT MADAN)


1.8. அசாமிஸ்: ஜிட்டா பஹாக், பில்யா கரணி
(JITTA BAHAK, BILGHYA KARANI)


1.9. சமஸ்கிருதம்: கந்தரசா, இந்திராணி,
கப்பிகா, கிருஷ்ண நிர்குண்டி
(GANDHARASA, INDRANI, KAPIKA,
KRISHNA NIRGUNDI)


1.10. மராத்தி: பகாஸ், காலா அடுலசா
(BAKAS, KALA ADULASA)


1.11. இந்தோனேசியா: கண்டாருசா,
பெசி – பெசி, காவோ (KANDARUSA,
BESI-BESI,  KAWO)


1.12. மலேசியா: கண்டாருசா, டெமிங் காங்,
மெலிலா, உரட் சுகி (KANDARUSA, TEMEN KONG
MELELA, URAT SUGI)


1.13. தாய்லாந்து: சியாங் பிரா மான்,
பாங் டாம், கிராடுக் கெய்டம் (CHIYANG PHRAA
 MON, PONG DOM, KRADUK KEIDUM)


1.14. வியட்நாம்: டாஃபென், கூவ்ரு (TAFFN, CUWRU)

நொச்சி என்றாலே மூலிகை என்று அர்த்தம். அதிலும் கரு நொச்சி மிகவும் அரிதான மூலிகை மரம்.  கருநொச்சியிலிருந்து ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். விரைவில் அந்த மாத்திரை வெளிவர உள்ளது. இதற்கான அடிப்படை ஆராய்ச்சிகள் அநேகமாக முடிந்துவிட்டன. இந்தோனேசிய ஆராய்ச்சியாளர்கள் இதில் முனைப்பாக உள்ளார்கள். அதுபோல ‘எச்.ஐ.வி’ எய்ட்ஸ் வைரஸ்’ன் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் கருநொச்சிக்கு உண்டு என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

இந்தோனேசியாவைச் சேர்ந்த பப்புவா
மாநிலத்தில் (PயுPருயு PசுழுஏஐNஊநு)
பல காலமாக, கரு நொச்சியை, ஆண்கள்
கருத்தரிப்பைத் தள்ளிப்போட பயன்படுத்தி
வருகிறார்கள்.  இதனைத் தெரிந்து
கொண்ட பல்கலைக் கழக பேராசிரியர்,
ஒருவர் 1985 ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியைத்
தொடங்கினார்: இன்று சாதா மாத்திரை
குழாய் மாத்திரை எல்லாம் தயார்
என்கிறார். இது வெளி வந்தால்
உலகின் முதல் ஆண்கள்
கருத்தடை மாத்திரை இதுதான்.
உலகம் முழுவதும் இது வலம் வர உள்ளது:
‘நீயா நானா ?’  என்று சீனாவும்,
அமெரிக்காவும் மாத்திரை
உரிமை வாங்க குதிரை பேரம்
நடத்துகின்;றன.

இதுபற்றிய சோதனை செய்ததில்
 99.999 % இந்த மாத்திரைகள் ‘பவர்புல்’
என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது வெளிவந்தால் அகில உலகையும்
இது புரட்டிப்போடும் என்கிறார்கள்.
மிகப் பெரிய அலையே உருவாகும்
என்கிறார்கள், ஆராய்ச்சிக்காரர்கள்.

 பப்புவா, இந்தோனேசியாவின் ஒரு பகுதி.
இங்கு  பழங்குடியில் ஆண்களில்
அத்தனை உருப்படியும் இந்தக்
கருநொச்சி கஷாயத்தை, உடலுறவுக்கு
30 நிமிடத்திற்கு முன்னதாகக்
குடிக்கிறார்கள். கருத்தறிப்பு
‘போயேபோச்’ என்கிறார்கள்.
பப்புவா மாநிலத்தின் பழங்குடி
மக்களிடையே இந்தப் பழக்கம்
வெகு காலமாக உள்ளது.

இன்னொரு அதிர்ச்சிகரமான
செய்தியும் பப்புவாவில் உள்ளது.
இந்தப் பழங்குடிப் பெண்கள் திருமணம்
செய்துகொள்ள மாப்பிள்ளைக்கு
‘டவுரி’  தரவேண்டும். இதைத் தவணை
முறையில்கூட தரலாம்.; இந்த வரதட்சிணைப்
பணம் வசூல் ஆகும்வரை இந்தப் பெண்களை
கருத்தரிக்க விடமாட்டார்கள்.
பாவி மக்கள் அதுவரை கருநொச்சி
கஷாயம் குடிப்பார்கள்.

மக்கள் தொகை என்பது
மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது,
இந்தோனேசியாவில். அதனால் இந்த மாத்திரை
கொண்டுவருவதில் அவர்கள்
தீவிரமாக உள்ளனர்.  இந்தப் பிரச்சினை
இன்னும் கூர்மையாக உள்ள
சீனாவும் மற்றும் இந்தியாவும்கூட
கருநொச்சித் திட்டத்தை கக்கத்தில்
வைத்திருக்கலாம்.

கருநொச்சி பல்வேறு நோய்களை
குணப்படுத்தும். உதரணமாக முகவாதம்
(FACIAL PARALYSIS),
இடுப்புவலி;, மக்கர் பண்ணும் மாதவிடாய்;
(AMENORRHOEA), கரப்பான் புண்,
செபலேஜியா  தலைவலி, ஒற்றைத்
தலைவலி, மேக வெட்டை நோய்,
காதுவலி, மற்றும் கைகால் வீக்கம்,
கருநொச்சி பலவிதமான மருத்துவ
குணங்களையும் தன்னகத்தே கொண்டது:
நோயகற்றி, வியர்வையுண்டாக்கி,
சிறுநிர் கழிவு தூண்டி, மலமிளக்கி,
நீர்கடுப்பு நீக்கி, நச்சு எதிர்ப்பி ஆகியவை.
நொச்சியில், வெண்நொச்சி,
கருநொச்சி என இரண்டு வகையான
நொச்சி வகைகளைச் சொல்லுகிறார்கள்.
இதில் கருநொச்சி மிகவும் அரிதானது.
ஏறத்தாழ இது அற்றுப் போகும் நிலையில்
உள்ளது. காரணம் இது ஒரு
அற்புதமான மூலிகை என யாருக்கும்
தெரியாததுதான். ஆனால்
ஒரு கிலோ கரு நொச்சி இலைகள்,
500 முதல் 1500 ரூபாய்க்கு விற்பனை
செய்கிறார்கள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்
கொசுக்களை ஒழிக்க வீடுகளில்
நொச்சிச் செடிகளை வளர்க்கும் திட்டத்தை
சென்னை மாநகராட்சி; கொண்டுவந்தது.
அந்தத் திட்டம் குறித்த விவரம் தெரியவில்லை.
கிராமத்தில் சாயங்காலம் ஆனால்
நொச்சித் தழைகளைப் போட்டு
புகைபோடுவது வழக்கமாக
இப்போதும் உள்ளது. நொச்சிப்புகை
போட்டால் ஒரே ஒரு கொசு கூட வராது.
ஆனால் இன்று கொசுவத்திச் சுருள்களை
கொசுக்கள் தூக்கிக் கொண்டு பறந்தாலும்
பறக்கும் என்ற  அளவுக்கு
கொசுக்களின் எண்ணிக்கை
கூடிவிட்டது.

சங்க இலக்கிய காலத்தில், ஒரு நாட்டின்
கோட்டையை முற்றிகையிட்டு
போர்புரியும் போது, கோட்டைக்குள்
இருக்கும் மன்னன் தனது கொட்டையை
விடுவிக்க, தனது படைவீரர்களுடன்
நொச்சிமாலை அணிந்து போரிடுவான்.
இதற்குப் நொச்சித் திணை, என்று பெயர்.
நொச்சி மரம் என்பது தமிழ் மக்களின்
கலாச்சாரத்துடன் நெருங்கி
தொடர்புடைய மரம். ஆனால்
இன்று அதன் மருத்துவப் பண்புகளைப்
பார்த்து பல நாடுகள், மூக்கின் மேல்
விரல் வைக்கின்றன.




WWW.PRI.ORG/STORIES/INIDONESIA’S BIRTH CONTROL PILL FOR MEN. WWW.COCONUTS.CO/JAKARTA/INDONESHA IS ABOUT TO START PRODUCING A MALE BIRTH CONTROL PILL THAT WILL CHANGE THE WORLD.

அரப்பு - அரை டஜன் நோய் நீக்கும் அபூர்வ மரம் - ARAPPU - MULTISPECIALITY HERBAL TREE


ALBIZIA ODOROTISSIMA










அரப்பு -  அரை டஜன் 

நோய் நீக்கும் 

அபூர்வ  மரம் 


ARAPPU - MULTISPECIALITY 

HERBAL  TREE

தே. ஞானசூரிய பகவான், போன்: + 918526195370,
Email. gsbahavan@gmail.com

அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும்.
உதாரணமாக, தொழு நோய், குடற்புண்,
சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய்
அழற்சி, சக்கரை நோய், உடல் எரிச்சல்
(LEPROSY, COUGH, BRONCHITIS, DIABETES, BURNING SENSATION)


இந்த சிலை மரம்தான். ‘உசிலம்பட்டி
பெண்குட்டி’ பாடலுக்கு கவிஞர்
வைரமுத்துவுக்கு காலெடுத்துக்
கொடுத்ததும் இந்த மரம்தான் என
இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும்
ஒன்றுதான்: கருவாகையும் ஒன்றுதான்.

இந்த மரத்தின் கட்டைகள் (வுஐஆடீநுசுளு),
அடர்த்தியான காவி நிறத்தில் வலிமையாக
இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும்.
இழைக்க இழைக்க பளபளப்பும்
மெருகும் கூடும். அனைத்து வகையான
மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும்
செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட்
என்ற பெயரும் உண்டு.

இந்த மரங்களையெல்லாம் நமது
இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்தும் பொறுப்பும்
கடமையும் பெற்றோர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு,
தொண்டு நிறுவனங்களுக்கு, உள்ளது.
அரப்பு, சீயக்காய், ஷேம்பு தயாரிக்க
ஒரு தொழில் தொடங்கலாமே ! 

ALBIZIA ODOROTISSIMA


























தாவரவியல் பெயர்: அல்பீசியா ஒடரோடிசிமா
(ALBIZIA ODOROTISSIMA)

தாவரக் குடும்பம் பெயர்: மைமோசியே
(MIMOSACEAE)

தாயகம்: இந்தியா, சைனா, பங்ளாதேஷ்,
லாவோஸ், மியான்மர், நேப்பாளம், பாகிஸ்தான்,
ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மற்றும் வியட்நாம்.

பொதுப் பெயர்கள்: பிளாக் சீரிஸ்,
சிலோன் ரோஸ் வுட், பிராக் ரண்ட்
அல்பீசியா, டீ ஷேட் ட்ரீ (BLACK SIRIS, 
CEYLON ROSE WOOD, 
FRAGRANT ALBIZIA, TEA SHADE TREE)
உள்ளுர் ஷேம்பு மரம்

சமீப காலமாக இந்த மரம், அரப்பு மரம்
என்றும் ‘ஷேம்பு மரம்’ என்றும் கூட
அழைக்கிறார்கள். சங்ககாலத்தில்
இதன் பெயர் சிலைமரம். இதுதான்
உசிலை மரம் என்பதும் தெரிகிறது:
உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக
இருந்ததும் இந்த சிலை மரம்தான்.
‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடலுக்கு
கவிஞர் வைரமுத்துவுக்கு காலெடுத்துக்
கொடுத்ததும் இந்த மரம்தான் என
இப்போது புரிகிறது: சிலையும் உசிலையும்
ஒன்றுதான்: கருவாகையும் ஒன்றுதான்.

சங்க காலத்து மரம் 


இந்த மரம் சங்க இலக்கியத் காலத்தில்
பிரபலமான இந்த மரம் இன்று எனது
தோட்டத்து வேலியில் தானாய்
முளைத்த மரம். அந்த மரத்தின்மீது
எனக்கு மிகப்பெரிய மரியாதையே வந்தது.
இந்த கட்டுரையை எழுதி முடித்த
பின்னால் அந்த மரங்களைப் போய்
பார்த்தபோது  எனக்கு கண்ணீரே வந்தது.

அதனால்தான் நமது தமிழ் மக்கள்
இதனை 54 வேறுவேறு பெயரிட்டு
அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம்
என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது.
இதே கருத்தினை என் பாட்டன்மார்கள்
2000 வருஷத்துக்கு முன்னாடி
சொல்லியிருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள்
‘வில் அம்பு’ செய்ய உறுதியான மரம்
என்று சொல்லுகின்றன.

     “சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக்
      கொலைவில் எயினர் தங்கை!.....’) – ஒதலாந்தையார்
       (ஐங்குறுநூறு – 363 வது பாடல்)


‘சிலை’ என்பது கருவாகை மரத்தைக்
குறிக்கும். பகழி என்றால் அம்பு. ‘துவராடை’
என்றால் செந்நிற ஆடை. எயினர் என்றால்
பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள்.

“சிலை மரத்தால் செய்த வில்லையும்
அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து,
கொலை புரிதலை தொழிலாகக்
கொண்டவனின் தங்கையே..”
என்று சொல்லும் பாடல். 


சிலை என்னும்
கருவாகை மரத்தின்
பல மொழிப் பெயர்கள்

1. தமிழ்: சிலை, கருவாகை (SILAI, KARUVAGAI)
2. இந்தி: காலா சிரிஸ் (KALA SIRIS)
3. அசாமிஸ்: கொராய் (KORAI)
4. பெங்காலி: காக்குர் சிரிஸ் (KAKUR SIRIS)
5. குஐராத்தி: கலோ ஷிரிஷ் (KALO SHRIS)
6. கன்னடா: காடு பாக்கி (KAADU BAAGE)
7. காசி: டயங் கிரெய்ட் (DIENG KRAIT)
8. கொங்கணி: காலி சிரஸ் (KALI SIRAS)
9. மலையாளம்: கருவாகா, குன்னி வாகா,
நெல்லி வாகா, புலிவாகா (KARU VAGA,
KUNNI VAGA, NELLI VAGA, PULI VAGA)
10. மணிப்புரி: உயில் (UYIL)
11. மராத்தி: சின் சாவா (CHIN CHAVA)
12. மிசோ: காங் தேக் (KANG TEK PA)
13. நேப்பாளி: கலோ சிரிஷ் (KALO SIRISH)
14. ஓரியா: டீனியா (TINIYA)
15. சமஸ்கிருதம்: சிரிஷா (SIRISHA)
16. தெலுங்கு: சிண்டுகா(CINDUKA)
இலை உதிர்த்தபடி 15 முதல் 25 மீட்டர் வரை 

உயரமாக வளரும். இந்தியாவை
தாயமாகக் கொன்டது கருவாகை.

பங்ளாதேஷ், பூடான், நேபாளம்,
மியான்மர், லாவோஸ், தாய்லாந்து,
வியட்நாம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில்
பரவியிருக்கும் மரம்.

முக்கியமாக இந்த மரம் மிகவும்
வேகமாக வளரும். ஒர் ஆண்டில்
ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.
இன்னொரு முக்கியமான அம்சம்,
இந்த மரம், அதிகமான தழைச்சத்தை,
நிலைப்படுத்தும் (NITROGEN FIXATION)
சக்தி உடையது. காற்றில் வாயு வடிவில்
இருக்கும் தழைச்சத்தை கிரகித்து
மண்ணில் நிலைப்படுத்தும்.

ஆப்ரிக்கா
அமெரிக்காவிலும்
பிரபலம் 


ஆப்ரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில்
 எல்லாம் பரவியுள்ளது, கருவாகை
என்று சொல்லப்படும் சிலை மரம். இவை,
அங்கு பரவியிருக்கும் நாடுகள் கென்யா,
தான்சானியா, மலாவி, ஜிம்பாவே,
மொசாம்பிக், ஜோகன்ஸ்பர்க், மற்றும்
தென் ஆப்ரிக்கா.

அமெரிக்காவில், மத்திய அமெரிக்கா
மற்றும் புளோரிடா’ வில் தீவிரமாக
பரவியுள்ளது. இதற்கு முக்கியமான
காரணங்களில் ஒன்று, இது பரவலான
மண்வகைகளில் வளரும் என்பது.
ஆனால் அதிக ஈரப்பசை உள்ள மண்கண்டம்,
வடிகால் வசதி உள்ள மண், இருமண்பாடான
மண், மற்றும் கடல் மட்டத்திலிருந்து
1800 மீட்டர் வரை உள்ளப் பகுதிகளில்
நன்கு வளரும்.

இந்த மரத்தின் கட்டைகள் (TIMBER),
அடர்த்தியான காவி நிறத்தில் வலிமையாக
இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும்.
இழைக்க இழைக்க பளபளப்பும்
மெருகும் கூடும். அனைத்து வகையான
மரச்சாமான்களும், விவசாயக் கருவிகளும்
செய்யலாம். இதற்கு சிலோன் ரோஸ்வுட்
என்ற பெயரும் உண்டு.

பங்ளாதேஷ்  நாட்டில் பெரும்பாலான
தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களில்
இருக்கும் நிழல் மரங்கள், சிலை மரம்தான்.
இதன் இலைதழைகள் ஆடுமாடுகளுக்கு
அருமையான தீவனம் ஆகிறது.

சிலைமரம் இயல்பாகவும், இயற்கையாகவும்
பரவி இருக்கும் மூன்று இடங்கள்,
இந்தியாவின் தென்பகுதி, மியான்மர்
மற்றும் சைனா. ஆனால் கிழக்கு
ஆப்ரிக்காவில் இது அறிமுகம்
செய்யப்பட்டது.

இதன் பூக்கள் வெண்மையாக அல்லது
வெளிர் மஞ்சளாக இருக்கும். பெரிய
நுனிக்கினை பூங்கொத்துக்களாக
(TERMINAL CLUSTERS)
பூக்கும். பூக்கள் வாசனை உடையவை.

மரங்கள் என்றால் பெரும்பாலும்
அவை கட்டைக்கானவை (TIMBER)
 என்று எல்லோரும் நினைப்பார்கள்.
 நானும் அப்படி நினைத்திருத்த ஒரு
காலம் உண்டு. மரங்கள் என்பவை
அப்படி அல்ல. பொதுவாக எல்லா
மரங்களுமே பல பயன் தரும்
மரங்களே. சில மரங்களில் சில
பயன்கள் தூக்கலாக இருக்கும்:
மற்றபடி எல்லா மரங்களுமே
சகலகலாவல்லமை உள்ளவை தான்.
நமது சிலைமரமும் அப்படித்தான்.

தொழுநோய்
சக்கரைநோய்
குணப்படுத்தும்


சிலைமரமும் மருத்துவப் பயன்களும்
உள்ள மரம் தான்: குறைந்தபட்சம் ஒரு
 அரைடஐன் நோய்களையாவது குணப்படுத்தும்.
உதாரணமாக, தொழு நோய், குடற்புண்,
சரும நோய்கள், இருமல், மூச்சுக் குழாய்
அழற்சி, சக்கரை நோய், உடல் எரிச்சல்
(LEPROSY, COUGH, BRONCHITIS, 
DIABETES, BURNING SENSATION)

சிலைமரத்துக்கு தமிழில் 54
பெயர்கள் உள்ளது ஆச்சரியம்
தரும் செய்தி. அவற்றில் முக்கிய
பெயர்களை மட்டும் தெரிந்து கொள்ளலாம்.
அவை கருவாகை, சிற்றிலைவாகை,
காசிமகா மரம், கல்துரிஞ்சி, துரிஞ்சி
மற்றும் வன்னிவாகை மரம்.

சிலைமரத்தின் முற்றிய நெற்றுக்கள்
செங்காவி நிறமானவை: நெற்றுக்களைப்
போல விதைகளும்
செங்காவி நிறமாகவே இருக்கும்.
விதைகள் பிரச்சினை
இல்லாமல் முளைக்கும்.

இதன் விதையுறை கொஞ்சம்
கடினமானவை. அதை நேரிடையாக
விதைத்தால் அதன் முளைப்புத் திறன்
அவ்வளவு சிறப்பாக இருக்காது. விதைகளை
24 மணிநேரம் நீரில் ஊறவைத்து
விதைக்க வேண்டும்.

அரப்பு
சீயக்காய்
ஷேம்பு


கிராமங்களில் ஷாம்பு வருவதற்கு
முன் ‘கருவாகை’ தான் ஷாம்பு.
இதன் இலைகளைப் பொடியாக்கி
டப்பாக்களில் சேமித்து வைத்துக்
கொள்வார்கள். இதனை தலைக்கு
போட்டுப் பாருங்கள். விளம்பரத் தலை
முடியை தோற்கடித்து விடும்.

மதுரைப் பகுதியில் பச்சைப்பொடி
என்று கடைகளில் விற்பனை ஆவது,
சிலைமர இலைப்பொடி தான்.
ஆனால் அங்கு இந்த மரத்தின் பெயர் உசிலை.
இந்த மரம் அதிகம் இருந்ததால் தான்,
ஒரு கிராமம் உசிலம்பட்டி ஆனது.
ஆண்டிப்பட்டிக்கு அடுத்த ஊர். உசிலம் பட்டி
அழகான ஊர். புல ஆண்டுகளுக்கு
முன்னால் அந்த ஊருக்குப் போய்
இருக்கிறேன். ‘இதுவா அந்த உசிலை மரம் ?”
என்று தேடிப்பிடித்துப் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவில் சிலைமரம் பரவலாக
பல மாநிலங்களில் பரந்துள்ளது.
அவை, அசாம், கேரளா, மத்தியப்பிரதேசம்,
ஒரிசா, மகாராவு;ட்ரா, மேற்கு வங்காளம்,
கர்காடகா, ஆந்திரப் பிரதேசம்
மற்றும் நம் தமிழ் நாடு.

என்ன செய்யலாம் ?

தமிழ்நாட்டில் உசிலை, துரிஞ்சி,
கல்துரிஞ்சி, இப்படி பல பெயர்களில்
பல மாவட்டங்களிலும் இயற்கையாகப்
பரவியுள்ளது. பல இடங்களில் களை
மரங்களாகப் பார்க்கிறார்கள். நலிந்துபோன
காடுகளில் மட்டும் மிச்ச சொச்சமாக
காடுகள் என்று சொல்லக் காட்சிப்
பொருளாக இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில் கிராமப்புறப்
பெண்கள் அரப்பு மரம் என்று
ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.
‘ஷேம்பு’ வந்த பிறகு இதனை யாரும்
சீண்டுவதில்லை. அதைவிட
இப்படி மரங்களை தெரிந்துகொள்ள
வாய்ப்புகள் ஏதும் இல்லை
என்பதுதான் உண்மை.

இந்த மரங்களையெல்லாம் நமது
இளைஞர்களுக்கு குழந்தைகளுக்கு
அறிமுகப்படுத்தும் பொறுப்பும்
கடமையும் பெற்றோர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு,
தொண்டு நிறுவனங்களுக்கு, உள்ளது.
அரப்பு, சீயக்காய், ஷேம்பு
 தயாரிக்க ஒரு தொழில்
தொடங்கலாமே !


WWW.ENVISFRLHT.ORG –‘PLANT DETAILS FOR A ALBIZIA OPOROTISSIMS’, WWW.FLOWERS OF INDIA.NET ‘BLOCK SIRIS’, WWW.EN.WIKIPEDIA.ORG-‘ALBIZIA ODOROTISSIMA’, WWW.SENTHUHERBALS.BLOGSPOT- ‘ALBIZIA AMARA’
    


ஆற்றுப்பூவரசு மிருதுவான மரவேலைக்கான மரம் - ATRUPPOOVARASU SOFT WOOD WORK TIMBER














ஆற்றுப்பூவரசு மிருதுவான

மரவேலைக்கான மரம்

ATRUPPOOVARASU

SOFT WOOD WORK

TIMBER

 

FALSE WHITE TEAK

தாவரவியல் பெயர்: டிரீவியா நியூடிபுளோரா (TREWIA NUDIFLORA)

தாயகம்: இந்தியா 


காஞ்சிமரம் ஒரு மிகச் சிறந்த மூலிகை மரமும் கூட. பலவிதமான மருத்துவப் பண்புகளை உள்ளடக்கியது: பித்தம்  போக்கியாகவயிற்று உப்புசம் நீக்கியாக,உடல் வீக்கம்இரைப்பை மற்றும் குடல்வலி நீக்கியாகவாதம் மற்றும் கல்வாதம் போக்கியாகசித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் காஞ்சிமரம் கலக்கி வருகிறது.


ஆற்றுப்பூவரசு மரம், இதன் பழங்களை காட்டு விலங்குகள் ருசித்து சாப்பிடுகின்றன.  இவற்றில் ஜாவா நாட்டின்காண்டா மிருகங்கள் மற்றும் மான்கள் முக்கிய புள்ளிகள்.


இதன் கட்டைகள் மிகவும் மிருதுவானவை. இவைதீக்குச்சிகள்தேயிலைப் பெட்டிகள்பொருட்களை அடைப்பதற்கான பெட்டிகள் (PACKAGING CASES) வேளாண்மைக் கருவிகள்நுகத்தடிகள்சிலேட்டுகள்படங்களுக்கு பிரேம் போடும் சட்டங்கள்கடைசல் மூலம் தயாரிக்கும் பொருட்கள்குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள்போன்றவற்றை தயாரிக்க உதவுகிறது.


தாவரவியல் பெயர்: டிரீவியா நியூடிபுளோரா 
(TREWIA NUDIFLORA)
தாவரக் குடும்பம் பெயர்: யூபோர்பியேசி 
(EUPHORBIACEAE)
தாயகம்: இந்தியா (INDIA)
பொதுப்பெயர்: பால்ஸ் ஒயிட் டீக் 
(FALSE WHITE TEAK)


தமிழ் இலக்கியங்களில், காஞ்சி என 
சொல்லப்படு;ம் மரம்தான் இந்த ஆற்றுப்பூவரசு. 
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது 
இந்த மரம். இங்கு பல மாநிலங்களிலும் 
பரவி உள்ளது. ஏறத்தாழ இது தேக்குக்கு 
சமமான மரம். அதனால்தான் இதனை 
ஆங்கிலத்தில் பால்ஸ் ஒயிட் டீக் 
(FALSE WHITE TEAK) என்கிறார்கள்.

காஞ்சி மரத்திற்கு தமிழில் மட்டும் 
14 பெயர்கள் உள்ளன: அவற்றில் 
சில முக்கியமான பெயர்கள், ஆற்றுப்பூவரசு 
ஆற்றரசு, சன்னத்துவரை,  மற்றும் நாய்க்குமிள்.

சங்க இலக்கியங்கள் பெருமைபட பேசும் 
மரங்களில் இந்த ஆற்றுப் பூவரசு 
என்னும் காஞ்சி மரமும் ஒன்று. 
பழந்தமிழ் இலக்கியங்களில் இதனை 
காஞ்சி என்றே குறிப்பிடுகிறார்கள். 
குறுந்தொகைப் பாடல் ஒன்றை 
உதாரணமாகப் பார்க்கலாம்.

;வயல்வரப்புகளில் காஞ்சி மரங்களில் 
பூக்கள் மாலைகளாக  பூத்துக் குலுங்கும். 
உழவு செய்யும் விவசாயிகள் சுலபமாக 
கிளைகளை வளைத்து பூக்களை 
உதிர்க்கும் படியாக இந்த மரங்கள் 
குட்டையாக நிற்கின்றன என்று  
சொல்லுகிறது, இந்தப் பாடல்

     பயறு போல் இணர் பைந்தாது படீ இயர்
   உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
   காஞ்சி ஊரன் கொடுமை
   கரந்தனள் ஆதலின் நாணிய வருமே. (ஒரம் போகியார் - குறுந்தொகை)

அகநானூற்றுப் பாடல் ஒன்று, காஞ்சி மலரின் மகரந்தம் பொன் நகைபோல மின்னும். என்கிறது.

    குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
  பொன் நகை நுண்தாது உறைப்ப அகநானூறு-

காஞ்சி மரத்தின் பிறமொழிப் பெயர்கள்


1.     தமிழ்: ஆற்றுப்பூவரசு, காஞ்சி    (ATRU POOVARASU,    KANCHI)


2.     இந்தி: பிண்டாலு, பிண்டார்    (PINDALU, PINDAR)


3.     மணிப்புரி: வாங் பாப் (WHAHG PHOP)

4.     மராத்தி: பெட்டாரி (PETARI)

5.     மலையாளம்: நீர்கடம்ப், பாம்பர கும்பில் (NIRKATAMP, PAMPARA KUMPIL)

6.     தெலுங்கு: எருபோனுக்கு (ERUPONUKU)

7.     கன்னடா: காடு கும்பலா, காடுகம்ச்சி (KADU GUMBALA, KADUKAMCH)

8.     பெங்காலி: பிட்டாலி (BITALI)

9.     ஒரியா: பித்தாலியா (PITHALIA)

10.    கொங்கணி: போம்வரோ (BUMVARO)

11.    உருது: பிண்டாரா (PINDARA)

12.    அசாமிஸ்: பெல்கோல் (BHEL KHOL)

13.    காசி: டையங் சோ லிண்டாட் (DIEN SOH LYNDOT)

14.    சமஸ்கிருதம்: பிண்டாரா (PINDARAH)

15.    நேப்பாளி: குரெல் (GUREL)

காஞ்சி உயரமாகவும், படர்ந்தும் 
வளர்ந்து இலை உதிர்க்கும் பெரியமரம்: 
10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளரும். 
ஆண் பெண் பூக்கள் தனித்தனியானவை. 
பெண் பூக்கள் ஒற்றைப் பூக்களாக 
மலரும். ஆண் பூக்கள் பூங்கொத்துக்களாக 
7 19 செ.மீ வரை பூத்துத் தொங்கும். 
டிசம்பர் முதல் மார்ச் வரையான 
காலத்தில் பூக்கும்.

இந்தியாவை தாயகமாகக் கொண்ட 
இந்த காஞ்சிமரம், ஆப்ரிக்காவின் வெப்ப 
மண்டலப் பகுதிகளில் அதிகம் 
காணப்படுகின்றன. இந்தியா உட்பட 
கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசிய 
நாடுகளில் பசிபிக் தீவுகள் மற்றும் 
ஆஸ்திரேலியாவிலும் இந்த மரங்கள் 
பரவியுள்ளன.  இந்தியாவில் குறிப்பாக 
மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் 
தொடர்ச்சி மலை மற்றும் இலையுதிர்க் 
காடுகளில் ஆற்றங்கரைகளில்
ஆற்றுப்படுகைகளில் காஞ்சி எனும் 
ஆற்றுப்பூவரசு மரங்கள் 
அதிகம் உள்ளன.

இவை தமிழ்நாட்டில், கோயம்புத்தூர்
நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் 
மாவட்டங்களில் உள்ளன.
கேரள மாநிலத்தில், இடுக்கி, கண்ணூர்
காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு
மலப்புரம், பாலக்காடு, பத்தனம்திட்டா 
ஆகிய பகுதிகளில், இந்த மரங்களை 
அதிகம் பார்க்கலாம்.

மகாராஷ்ட்ராவில், பூனா, ரேய்காட்
ரத்னகிரி, சிந்;துதுர்க், தானே ஆகிய 
பகுதிகளிலும், காஞ்சிமரம், பிரபலமானது.
இதன் கட்டைகள் மிகவும் மிருதுவானவை. 
இவை, தீக்குச்சிகள், தேயிலைப் பெட்டிகள்
பொருட்களை அடைப்பதற்கான பெட்டிகள் 
(PACKAGING CASES) வேளாண்மைக் 
கருவிகள், நுகத்தடிகள், சிலேட்டுகள்
படங்களுக்கு பிரேம் போடும் சட்டங்கள்
கடைசல் மூலம் தயாரிக்கும் பொருட்கள்
குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள்
போன்றவற்றை தயாரிக்க உதவுகிறது.

காஞ்சி மரங்கள், ஏற்ற சூழலில்
20 மீட்டர் உயரம் கூட வளரும் 
என்கிறார்கள், அறிவியல் ரீதியாக. 
ஆனால் தமிழ் நாட்டில் இந்த மரங்கள் 
சிறிய மரங்களாகவே இருந்துள்ளன.  
குறுந் தொகை, மற்றும் அகநானூற்றின் 
பாடல்களில் எல்லாம், சிறிய  
மரம் என்ற பொருளில் குறுங்கால்காஞ்சி 
என்கிறார்கள்.

வட இந்தியாவில் யமுனை 
நதிக்கரையில் தொடங்கி, தென்மதுரை 
வைகை நதிக்கரை வரை, 1200 மீட்டர் வரை 
உயரம் உள்ள பகுதிகளில் எல்லாம்
குறுங்கால்காஞ்சி ஆட்சி புரிகிறது.

பழங்களைப் பறித்து, அவற்றை 
சில நாட்கள் உலர வைக்க வேண்டும்.  
பின்னர் விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.  
ஒரு பழத்தில் 2 முதல் 5 விதைகள் 
இருக்கும்.  இந்த விதைகளை உடன் 
விதைத்தால் முளைப்புத் திறன் 
நன்றாக இருக்கும். சேகரித்த 
விதைகளை கூடுமான வரை ஒரே 
ஆண்டில் விதைத்துவிட வேண்டும்.  
நாற்றுக்கள் நடுவதைவிட நேரடி 
விதைப்பே சிலாக்கியம்.

இதன் பழங்களை காட்டு விலங்குகள் 
ருசித்து சாப்பிடுகின்றன.  
இவற்றில் ஐhவா நாட்டின், காண்டா 
மிருகங்கள் மற்றும் மான்கள் 
முக்கிய புள்ளிகள்.

ஒரு கிலோ எடையில் 4200 முதல் 
8100 விதைகள் இருக்கும். விதைகளை 
48 மணி நேரம்  தண்ணீரில் ஊர வைத்து 
விதைத்தால் முளைப்புத்திறன் நன்றாக 
இருக்கும். புதிய விதைகளை விதைத்தால் 
அவற்றின் முளைப்புத்திறன் 
70 முதல் 80 சதம் இருக்கும்.
வளர்ந்த மரங்களை வெட்டினால் 
நன்கு துளிர்த்து வளரும்.  
அதே சமயம் நிறைய வேர்ச் 
செடிகளையும் உருவாக்கும்.

காஞ்சிமரம் ஒரு மிகச் சிறந்த 
மூலிகை மரமும் கூட. பலவிதமான 
மருத்துவப் பண்புகளை உள்ளடக்கியது: 

பித்தம்  போக்கியாக, வயிற்று 
உப்புசம் நீக்கியாக,
உடல் வீக்கம், இரைப்பை மற்றும் 
குடல்வலி நீக்கியாக, வாதம் மற்றும் 
கல்வாதம் போக்கியாக
சித்த மருத்துவம் மற்றும் 
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் 
காஞ்சிமரம் கலக்கி வருகிறது.

தே.ஞானசூரிய பகவான், போன்: +918526195370, 
Email: gsbahavan@gmail.com


WWW.USES.PLANTNET.PROJECT ‘TREQTA’(PROSEA), WWW.EHORICULTURE.COM ‘TRENIA NUDIRLORA’, WWW.GREENCLEAM GUIDE.COM ‘ECONOMIC IMPORTANCE OF TREWIA NUDIFLORA’, WWW.ENVIS.FRIHT.ORG- “PLANT DETAILS FOR A TREWIA NUDIRDORA”, WWW.INDIA BLODLUERSITY.ORG – ‘TRENIA NUDIROLIA’,  WWW.TA.WIHPEDIA.ORG/” ATRU ARASU”,  WWW.SENTHU HERBALS.BLOGSPOT.COM ‘ATRUPPUUARASU – FALSE WHITE TEAK.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...