நாமே உருவாக்கும்
நமது காடுகள்
WE CAN CREATE
OUR OWN FORESTS
WE CAN CREATE
OUR OWN FORESTS
திருப்பத்தூர் மாவட்டத்தில்
மியாவாக்கி மாடல் காடு
THEKKUPATTU
MIYAWAKI MODEL FOREST
அன்பிற்குறிய சகோதரர்களே ! சகோதரிகளே !
இப்போது உங்களுக்கு மியாவாக்கி முறையில்,
காடுவளர்ப்பது எப்படி
என்று சொல்லப்போகிறேன். காடு வளர்ப்பது புரிகிறது; அது என்ன மியோவாக்கி ..? மியோவாக்கி
ஜப்பான் நாட்டு இயற்கை விஞ்ஞானி; உலகத்திலேயே அதிக
எண்ணிக்கையில் காடுகளை உருவாக்கியவர்; மரங்களை உருவாக்கியவர் ; அவற்றை செயற்கை
காடுகள் என்கிறார்கள்; ஆதாவது
ஆங்கிலத்தில் மேன் மேட் பாரஸ்ட் (MAN MADE FOREST).
மியாவாக்கி அவர்களுக்கு வயது 85 க்கும் மேல்; பல நாடுகளில்,
பல ஆண்டுகளாக,
3000 க்கும் மேற்பட்ட செயற்கை
வனங்களில் 40 மில்லியன்
மரங்களை வளர்த்து, வெற்றியும் பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு இயற்கையை பாதுகாத்த சிறந்த
மனிதர் என்பதற்கான சர்வதேச விருதான ' புளு பிளாண்ட் அவார்ட்"
வழங்கப்பட்டது.
இவரைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்; இப்போதைக்கு இங்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.
தெக்குப்பட்டு மியாவாக்கி அடர்வனம்
மியாவாக்கி சொல்லிக் கொடுத்த வழி இது; நாங்களும் ஒரு
சிறு மாதிரி அடர்வனத்தை உருவாக்கியுள்ளோம்; அதன் பரப்பளவு 220 சதுர மீட்டர்; அதில் நடவு
செய்துள்ள மொத்த மரங்கள் 1100; அதிலுள்ள மர
வகைகள் 100; இந்த மியேவாக்கி முறையின் சிறப்பே இதுதான்; குறைவான நிலப்பரப்பே போதுமானது; அதிகமான எண்ணிக்கையில் மரங்கள் நடலாம்; அதிகமான மர வகைகளையும் இதில் நட முடியும்;
ஒரு சதுர மீட்டரில் 5 மரங்கள் தோராயமாக் ஒரு மீட்டர் நீள, அகலமுள்ள நிலப்பரப்பில், 5 மரங்களை நடவு செய்யலாம்.
எங்கள் அடர் சிறு வனத்தில், 1100 மரங்கள்
இப்போது எங்கள் அடர் சிறு வனத்தில்,
1100 மரங்கள் உள்ளன் 100 வேறு வேறு வகையான மரங்கள்; இயற்கையான ஒரு
காட்டிற்கு போனால்கூட, ஒரே இடத்தில் 100வகையான மரங்களை பார்த்தல் இயலாது; இன்னொன்று உலகத்திலுள்ள இயற்கையான எந்த
வனத்திலும், ஒரு ஹெக்டேர்
நிலபரப்பில் 1,000 மரங்கள் என்பதுதான் சராசரி மர எண்ணிக்கை; ஆனால் இந்த அடர்
நடவு முறையில், 50,000 மரங்களை
உருவாக்க முடியும்; ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு என்பது 10000 சதுர மீட்டர்; ஒரு சதுர மீட்டருக்கு 5 மரக்கன்றுகள்; அப்படியானால்; 10,000 சதுர
மீட்டருக்கு 50,000
மரக்கன்றுகள்.
ஆகையால், நாங்கள், நம்பிக்கையோடு, 2016 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24 ம் தேதி, இந்தப் பணியைத் தொடங்கினோம்; ஆனால் 100 மர வகைகளை தெரிந்தெடுத்து, நட்டு முடிக்க, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என
மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டது;
ஆனால் மலைவேம்பு, மந்தாரை, நீர்மத்தி, தேக்கு, பூவரசு, பெருங்கொன்றை, பொன்னாவரை, போன்றவை, 10 முதல் 15 அடிவரை வளர்ந்துள்ளன் நொச்சி, ஆடாதொடை, ஆச்சா, சீயக்காய், ருத்ராட்சை,
வில்வம், கருமருது, மருதாணி, மூங்கில், போன்றவை நன்றாக வளர்ந்துள்ளன ; செஞ்சந்தனம், சந்தனம் ,ரப்பர், தோதகத்தி போன்றவையும் நன்கு வளர்கின்றன.
யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம்
இப்படி ஒரு அடர்வனம், என்னும் இந்த சிறு காட்டினை, ஏன் நாம் உருவாக்க வேண்டும் ..? இதுபோன்ற சிறு
அடர் வனங்களை, யார்
வேண்டுமானாலும் உருவாக்கலாம்; வெறும் 20 சதுர மீட்டர் நிலம்கூட
போதுமானது; அதில் 100 மரங்கள நடலாம்; இந்த 20 சதுர மீட்டரில் கூட 100 வகை மரங்களை நட முடியும்; நமது
தோட்டத்தில் ஒரு சதுர மீட்டர் நிலம் இருந்தால் போதும்; ஐந்து 5 மரங்கள் கொண்ட மிகச்சிறு வனத்தை, உருவாக்கலாம்; மனம் இருந்தால்
போதும், மரங்களை நடலாம்; மரவனம் உருவாக்கலாம்.
மியோவாக்கி மாடல் காடுகள்
இப்போது மியாவாக்கி
என்ன செய்தார் என்று பார்க்கலாம். உலகிலேயே மிக
அதிகமான எண்ணிக்கையில், பல நாடுகளில்
அதிசயமான மரங்களை நட்டவர் மியோவாக்கி; இதுவரை 40 மில்லியன்
மரங்களை, கன்றுகளாக நட்டு காடுகளாக மாற்றியுள்ளார்; இவற்றில்
முக்கியமானது சீர்கேடடைந்த வனங்களை சீரமைத்ததுதான்; ஜப்பான், போர்னியோ, அட்டசோனியா, மற்றும் சீனாவில் மட்டும் 1400 இடங்களில் வனங்களை அமைத்துள்ளார்.
தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள உள்ளுர் தாவர
வகைகளை ஆய்வு செய்யும் பணியை 1908 ஆம்
ஆண்டுவாக்கில் எடுத்துக்கொண்டார்.
முக்கியமான மூன்று அம்சங்கள்
மியோவாக்கி மாடல் என்று சொல்லும்போது
முக்கியமான மூன்று அம்சங்களை முன் வைக்கிறார்; ஒன்று உள்ளுர்
மரவகைகள்,
இரண்டாவது அடர் நடவு முறையில் ஒரு சதுர மீட்டர்
நிலப்பரப்பில், 5 மரக்கன்றுகள்
நடவு செய்வது; மூன்றாவது முக்கியமாக, பிரச்சனை உள்ள இடங்களில் ஏற்ற மர வகைகளை
தெரிந்தெடுப்பது; உதாரணம் இயற்கை
சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடம், சீர்கேடடைந்த
வனம், மற்றும் மேல்மண் இழந்த
நிலப்பகுதிகள்.
1990 ஆண்டு வாக்கில்
மிக மோசமாக சீர் கேடடைந்த காடுகளை, வெப்பமண்டலக்
காடுகளை, சீரமைக்கும்
முயற்சிகளை மேற்கொண்டார்.
2013 வாக்கில்,
இந்தியாவில் வடகிழக்கு
பகுதியில், பாராபாணி
தொழிற்சாலைப்பகுதியில், முதன்முதலாக,
'மியோவாக்கி மாடல்"
ல் அடர்வனம் ஒன்று உருவாக்கப்பட்டது.
நூறு சதம் மியாவாக்கி மாடல்
மியோவாக்கி மாடலில் முழுக்க முழுக்க ஒரு அடர்
வனத்தை, 100 சதவீதம் மாற்றம் இல்லாமல் உருவாக்குவது எப்படி
..?
1. அடர்வனம் அமையும் பகுதியில் உள்ள உள்ளுர்
மரவகைகள் என்னென்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.
2. மரவகைகளை தெரிந்தெடுத்தபின், உள்ளுர் மரவகைகளின், விதைகளை சேகரம் செய்ய வேண்டும்.
3.விரைந்து முளைப்பதற்கான விதைநேர்த்தி முறைகளை
செய்யவேண்டும். 4. மரங்கள் நடவு செய்வதற்கான நிலப்பரப்பினை தயார்
செய்வது.
5. மரக்கன்றுகளை நடவுசெய்வது.
மியாவாக்கி தனது மாடலை, தாய்லாந்து, பிரேசில், சைல் ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக நிரூபித்தார்.
1998 ல்
சீனப்பெருஞ்சுவரின் ஊடாக 4 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை
தொடங்கினார்; அவை 2004 ஆம் ஆண்டு வாக்கில், 3 மீட்டர் உயரம் வளர்ந்து சாதனை நிகழ்த்தியது;
செயற்கைக் காடுகளின் தந்தை
அகிரா மியாவாக்கி பற்றி
கூடுதலாக கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். இவர் 1928 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் பிறந்தவர்
ஜப்பானிய தாவரவியலர் (BOTANIST)
மற்றும் சூழலியல் வல்லுநர். விதைகள் மற்றும் இயற்கைக் காடுகள் பற்றிய ஆய்வு
செய்தவர். 2006 ல் புளு பிளாண்ட் அவார்ட் (BLUE PLANET AWARD)
பெற்றவர்; 1998 ல் ஆசாகி (ASAKI AWARD) விருது
பெற்றவர். 1993 வரை ஜப்பானின் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழகத்தின் எமிரிட்டஸ் பேராசிரிரியராக (EMIRITUS PROFESSOR) பணிசெய்தவர். செயற்கைக் காடுகளின் தந்தை என அழைக்கப்படுபவர்.
1970 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை காடுகள் பற்றிய
ஆய்வுகளைச் செய்தார்; 1992 ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த 'எர்த் சம்மிட்" (EARTH SUMMIT) ல் இயற்கைக் காடுகள் பற்றிய முடிவு எடுக்கவில்லை என அறிவித்தவர் மியோவாக்கி.
மியோவாக்கி பாரம்பரியமான ஜப்பானின் மரங்களைப்
பற்றிய ஆய்வினை மேற்கொண்டார்; ஆனால் பல மரவகைகள் ஜப்பானின் சொந்த மரங்கள் போல
ஆகிவிட்டன.
இதனால் இயற்கையான ஜப்பானிய காடுகளின் முகம் மாறிவிட்டது என்கிறார்.
ஜப்பானின் பாரம்பரிய மரவகைகளை கண்டுபிடித்தார்
ஜப்பானிய செடார் (JAPANESE CEDAR), சைப்ரஸ் (CYPRESS), லார்ச் பைன் (LARCH PINE)
ஆகியவை, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகம்; செய்யப்பட்டு , ஜப்பானின் சொந்த மரங்கள்போல, மாறிப்போனவை எனக் கண்டு பிடித்தார்.
ஜப்பானின் புளு ஓக் (JAPANESE BLUE OAK)
காஸ்டனோன்ப்சிஸ் கஸ்பிடேட்டா (CASTANOPSIS
CUSPIDATA) பேம்பூ லீப்
ஓக் (BAMBOO LEAF OAK), மற்றும் ஜப்பானிய செஸ்ட் நட் (JAPANESE CHESTNUT) போன்றவைதான் ஜப்பானின் பாரம்பரிய
மரவகைகள் என கண்டுபிடித்தார்.
ஜப்பானில் 0.6 சதம் மட்டுமே பாரம்பரிய காடுகள்
மியோவாக்கியின் ஆய்வுப்படி, ஜப்பானிலுள்ள மொத்த காடுகளின்,
பரப்பில் 0.6 சதம் மட்டுமே பாரம்பரிய காடுகள் என்ற உண்மையைக்
கண்டுபிடித்தார்; இப்போதுள்ள காடுகள் ஜப்பானின் சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் அறிவித்தார்.
மூன்றுவகைக் காடுகள்
மியோவாக்கி முறை (MIAWAKI METHOD) என்றால் பாரம்பரிய வகைகளின் விதைகளை
சேகரித்து, அழிந்துபோன காடுகளில் மீண்டும் விதைத்து, மறுபடியும் அவற்றை உருவாக்கும் முறை என்று பெயர். இதன் அடிப்படையில் மூன்றுவகையான பாதுகாப்பான காடுகளை (PROTECTVE FORESTS)
உருவாக்க திட்டமிட்டார்; இயற்கை சீற்றங்களை தவிர்க்கும் வகைக்காடு முதல்வகை; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காடு இரண்டாம்வகை; நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்புக்காடு மூன்றாம்வகை; இதன் அடிப்படையில் 1300 இடங்களில் பல வெப்ப
மண்டல பகுதிகளில் நாடுகளில் நிறுவ
திட்டமிட்டார்; பசிபிக்
பகுதிகளில் (PACIFIC AREA) காற்றுத் தடுப்பு வனமாகவும் உட் லாட்ஸ் (WOOD LOTS) ஆகவும், உட் லேண்ட் (WOOD LAND ) ஆகவும், குறிப்பாக
நகர்ப்புறங்கள் துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் நிறுவினார்.
பொருத்தமான மரவகைகள்
சீர்கேடடைந்த வனப்பகுதிகளை சீரமைப்பது கடினமான
பணி என்று கருதினார்கள் சில வனவியல் அறிஞர்கள். சரியான மரவகைகளைக் கண்டறிந்து, அடர்நடவு செய்து, நுண்ணுயிர்ப் பெருக்கம் செய்வதனால், இதனைச் சுலபமாக செய்யமுடியும் என நிரூபித்தவர் மியோவாக்கி. இதற்காக 40 முதல் 60 வகையான மரங்களைத்
தேர்ந்தெடுத்தார்.
ஜெர்மனியின் 'பெடரல்
இன்ஸ்ட்டியுட் ஆப் நேச்சரல் வெஜிட்டேஷன் (FEDERAL INSTITUTE OF NATURAL VEGETATION) என்ற அமைப்பின் தலைவர் 'ரெய்ன்ஹோல்ட்
டியூக்ரன்" (REIGNHOLD DYUKRAN) என்பவருடன்
இணைந்து 1956 முதல் 1958 வரை கான்செப்ட் ஆப் பொட்டன்ஷியல் நேச்சர் (CONCEPT OF POTENTIAL NATURE) என்பதுபற்றி ஆய்வுகளை மேற்கொண்டார்.
1300 இடங்களில்
ஜப்பானிய மரங்கள்
1960 ஆம் ஆண்டில் ஜப்பான் திரும்பிய அவர்
பழமையான வனங்கள் மற்றும் மரங்கள் பற்றிய ஆய்வினைத் தொடங்கினார்; அது தொடர்பான வரைபடங்களைத் தயாரிக்க தொடங்கினார்; பின்னர் 1300 இடங்களில், முழுக்க
முழுக்க ஜப்பானிய மரங்களை உடையதாகத்
திட்டமிட்டார்.
மியோவாக்கி அடிப்படையில் ஒரு ஆராய்ச்சியாளர்; அவர் மிகுந்த சிரமத்துடன் பல ஆண்டுகள் ஆய்வுசெய்து, உள்ளுர் மரவகைகளைக் கண்டுபிடித்தார். நாமும் நாம் இழந்துபோன வனங்களை
உருவாக்கும்போது, நமது உள்ளுர் மரவகைகளை தேடிக் கண்டுபிடிக்க
வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.
88888888888888888888888
x
No comments:
Post a Comment