கருங்குங்கிலிய மரம் என்னும்
சாம்பிராணி மரம்
SAMBIRANI ALIAS BLACK DAMMAR TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருப்பு குங்கிலிய மரம் (KARUPPU KUNGILIYA MARAM)
2. தாவரவியல் பெயர்
: (CANARIUM STRICTUM)
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : BLACK DAMMAR TREE
4. தாவரக்குடும்பம்
: பர்ஸரேசி (BURSERACEAE)
5. மரத்தின் வகை
: வாணிப மரம்
கருங்குங்கிலியம் முதலில் ஒரு வியாபார மரம் , இரண்டாவதாக ஒரு மருத்துவ மரம்
மரங்கள் பரவி இருக்கும் இடங்கள்: இந்தியா, தெற்கு சீனா, மியான்மர் மற்றும் தாய்லாந்து.
மரம்; சுமாரான கடினத்தன்மையுடன் இருக்கும். இதன் வயிரப்பகுதி மரம் ஊதா நிறத்தில் இருக்கும். மேற்பகுதியில் இருக்கும் சாற்றுத்தசை மரம் வெண்சாமபல் நிறத்திலும் இருக்கும்.
மரத்தின் அடிப்பகுதியில் வெட்டி காயப்படுத்துவதன் மூலம் இந்த குங்கிலியம் என்னும் பிசினை வடியச்செய்வார்கள். இதுதான் கருங்குங்கிலியம்.
இந்த குங்கிலியத்தை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் மருந்துகள் தயாரிக்கிறார்கள்.
ஓங்கி வளர்ந்து
கம்பீரமாய் காட்சியளிக்கும் மரங்கள் வீசும் காற்றின் வேகத்தை
தடுத்து, தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும்.
8. மரத்தின் தாயகம்
:-- இந்தியா --
இமயமலை
9. ஏற்ற மண்
:-- மணல்சாரி வறண்ட மண்
10. நடவுப் பொருள் :-- விதைகள் கடினமானவை. அதனால் இதன் முளைப்புத்திறன் சீராக இருக்காது. விதைகளை மண்ணில் போட்டு நன்றாக தேய்த்துவிட்டு முளைக்கப்போடுவது சுமாரான பலனை அளிக்கும்.
11. மரத்தின் உயரம்
: 40 - 50 மீட்டர்.
No comments:
Post a Comment