சீனாவின்பஞ்சு மிட்டாய் நகரங்கள்
(LEARN THE ART OF FLOODCONTROL FROM CHINA)
உகான் சிட்டி:
அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும்
நகரங்களில் மழை அறுவடை மூலம்
தீர்வு கண்ட நகரங்களுக்கு பஞ்சு மிட்டாய் நகரம்
என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பஞ்சு மிட்டாய் நகரங்களில் ஒன்று தான் உகான்
நகரம். இந்த “உகான் சிட்டி”க்கு நூறு ஏரி நகரம் (HUNDRED
LAKE CITY) என்ற பெயரும் உண்டு.
நூறு ஏரி நகரம்:
“உகான் சிட்டி” யின் பழைய பெயர் நூறு ஏரி நகரம். ஒரு காலத்தில் அங்கு 100 ஏரிகள் இருந்ததாம். 1980 களிலேயே அத்தனை ஏரிகள் இருந்த ஊரில், இன்று ‘30 ஏரிகள்தான்
உசிரோட
இருக்கு’
என்கிறார்கள். என்ன காரணம் என்றால், “எல்லாம் ‘நகர்மயமாதல்தான்’ அடிப்படைக் காரணம் என்கிறார்கள்.
சென்னையை எடுத்துக்கொள்ளுங்களேன் நகர விரிவாக்கத்தில் எத்தனை ஏரிகளை காவு கொடுத்தோம் யோசித்துப் பாருங்குகள்.
நதிகள் சங்கம்மாகும் இடம்:
இரண்டு
நதிகள் சங்கமமாகும் இடத்தில் அமைத்துள்ளது இந்த ‘உகான்’ நகரம். அதனால் இந்தப்பகுதி அடிக்கடி வெள்ளத்திற்கு உள்ளாகும்.
பெரும்பாலும் கோடை மாதங்களில்தான் இந்த வெள்ளம் அதன் கைவரிசையை காட்டும். இங்கு உள்ள சிறுசிறு தெருக்கள், சாலைகள், தெருமுனைச் சந்துகள் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு ஏரி, ஒரு குளம், ஒரு குட்டை என நீராதாரங்களின் பெயர்களைத்தான்
வைத்திருப்பார்கள். குளத்தூர் என்று நம்ம ஊரில் வைக்கவில்லையா
?
உகான்ரூபவ் 17 வது பஞ்சுமிட்டாய் நகரம்:
2016 ம் ஆண்டில் கடுமையான வெள்ளம் நகரில்
புகுந்து அழிச்சாட்டியம் செய்தது. ஆறுகள்
பாய்ந்தோடும் இடத்தை விட உகான்நகரம், கீழ் மட்டத்தில் இருந்ததால், வெள்ளம் எவ்விதமான சிரமமும் இன்றி நகருக்குள் புகுந்தது. அப்போது 14 பேர்கள் உயிரிழந்தனர். அந்த வெள்ளத்திற்கு ஒரு ஆண்டிற்கு
முன்னர்தான் உகான் நகரத்தை பஞ்சுமிட்டாய் நகரம் என அறிவித்தார்கள். இது சீனாவின் 17 வது .வெள்ள நகரம். அதற்கு முன்னதாக சீனாவில் 16 நகரங்களை பஞ்சு மிட்டாய் நகரங்கள் என அறிவித்திருந்தார்கள்.
என்ன செய்தார்கள்?
வெள்ள நீரை கட்டுப்படுத்த என்ன
செய்தார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அது நமக்கு உபயோகமாக இருக்கும். 2015 ம்
ஆண்டு சென்னை நகரம் வெள்ளத்தால்
திக்குமுக்காடிப் போனது. உகான் நகரை பஞ்சு மிட்டாய் நகரமாக மாற்றி, வெள்ள நீரை தேங்காமல் செய்ய சீனாக்காரர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.
மழைநீர் உறிஞ்சும் தோட்டங்கள் மற்றும் நடைபாதைகள்:
1980 வாக்கில் பெரிய கழிவுதீர்த் தேக்கமாக இருந்த ஒன்றை
மாற்றி மிகப்பெரிய
வெள்ளநீர்
அறுவடை தோட்டமாக மாற்றிவிட்டோம் என்கிறார்கள். சாக்கடையாக
தேங்கி நின்ற கால்வாய்களை சுத்தம்செய்து ஒட வைத்து மிகையான
வெள்ள நீரை வடிக்க வகை செய்திருக்கிறார்கள். இவை தவிர இதற்காக பிரத்தியேகமான மழைத்தோட்டங்களை (RAIN
GARDENS) அமைத்திருக்கிறார்கள். அங்கு
மழை அறுவடை
செய்வதற்குத் தோதான புல்தரைகள், செயற்கைக் குளங்கள், மற்றும் மரங்களை
நட்டிருக்கிறார்கள். அகன்ற பரப்புடைய நஞ்சை நிலங்களை மிகுதியான வெள்ள நீரை சேமிக்கும் ஆழமில்லா தொட்டிகளாக உருவாக்கி உள்ளார்கள். சிறிய
நடைபாதைகள் முதல் தேசிய நெடிஞ்சாலைகள் வரை சாலையோர மழை அறுவடைக் கால்வாய்களை அமைத்துள்ளார்கள்.
பல மணி நேரம் பலத்தமழை பெய்தால்கூட சாலைகளில் சொட்டுநீர்க்கூட ஓடுவதை பார்க்கமுடியாது.
இப்படிபட்ட ஏற்பாடுகளை உடைய நகரங்களைத்தான் ஆங்கிலத்தில் ‘ஸ்பாஞ்ச்சிட்டி’ என்கிறார்கள்.
நாம் அவற்றை தமிழில் பஞ்சுமிட்டாய் நகரங்கள் என்று சுவைபட சொல்லுகிறோம்.
வெள்ள நீர் என்னாகும்?
இந்த அமைப்புகள் எல்லாம், முதலாவதாக அதிகப்படியான வெள்ள நீரை நிலத்துக்கு அடியில், சேமிக்கின்றன. இரண்டாவதாக நிலத்திற்கு மேலேயே சேகரித்து சேமித்து வைக்கின்றன. மூன்றாவதாக ஆறுகளிலிருந்து வந்த அதிகப்படியான தண்ணீரை மறுபடியும்
ஆறுகளுக்கே திருப்பி அனுப்புகின்றன. இதனால் சாலைகளில், அல்லது குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் இடுப்பளவு
ஆறாக ஓடுவதில்லை. வெள்ள நீர் தேங்கி
முதல்மாடிக்குப் போய் எட்டிப் பார்ப்பதில்லை. கார் ஒடும் சாலைகளில் எல்லாம் படகுகளை ஒடச்செய்வதில்லை. அவற்றை எல்லாம் அடியோடு மாற்றிய
நகரங்களைத்தான் இவர்கள் பஞ்சுமிட்டாய் நகரங்கள் என்கிறார்கள்.
இதற்காக 20 சத நிலத்தை ஒதுக்க வேண்டும்:
வெள்ள மீட்பு நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, நகரங்களில் 20 சதவிகித நிலப்பரப்பு தேவைப்படும்
என்கிறார்கள். இதன் மூலம் 70 சத வெள்ள நீரை கட்டுப்படுத்த
முடியும். மொத்தம் 860 சதுர கி.மீ. பரப்புள்ள உகான் நகரில் 170 ச.கி.மீ பரப்பை இதற்கென ஒதுக்கி இருக்கிறார்கள்.
பரவாலாகும் பஞ்சுமிட்டாய் திட்டம்:
மேலும் பல நகரங்களை இந்தத் திட்டத்தில்
சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள். ஆக
மொத்தம் இதற்கென இதுவரை 30 நகரங்களை தெரிந்தெடுத்துள்ளார்கள்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கருத்து
என்ன என்றால் “மீண்டும் ஆறுகள்
ஓட இடம் கொடுங்கள். அதனுடன் சண்டை போடாதீர்கள். அதனை சாக்கடையாக மாற்றாதீர்கள். ஆறுகளிடம்
அனுசரணையாக போய்விட்டால் பிரச்சினை இல்லை என்பதுதான்.
இந்தியாவில் வருமா ?
'வெள்ள
நிவாரணத்துக்காக பலகோடிகளை செலவு செய்வதைக்காட்டிலும் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும்
பகுதிகளை தேர்ந்தெடுத்து இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை செய்ய சில லட்சங்களை மட்டும் செலவு செய்தால் போதும்' என்று தங்கள்
அனுபவத்தை சொல்லுகிறார்கள் சீனாக்காரர்கள்.
இந்தியாவில்,
நாம்கூட இதுபோன்ற பஞ்சுமிட்டாய் நகரங்களை உருவாக்கலாம்தானே ?
888888888888888888888888888
No comments:
Post a Comment