கருங்கொன்றை பூ மரம்
KARUNKONRAI
BRICK RED
FLOWERING TREE
BRICK RED
FLOWERING TREE
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : கருங்கொன்றை (KARUNGKONRAI)
2. தாவரவியல் பெயர்
: கேசியா ராக்ஸ்பர்கியை (CASSIA ROXBURGHII))
3. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : (BRICK RED-SHOWER TREE)
4. தாவரக்குடும்பம்
: சிசால்பினியேசி (CAESALPINEACEAE)
5. மரத்தின் வகை
: அலங்கார அழகுமரம்
6. மரத்தின் பயன்கள் :
1.
தழை, விளை நிலங்களுக்கு தழை உரமாகும் இலைகளைத் தரும் மரம்.
2.
கிளை முழுவதிலும், இலைகளின்
இடுக்குகளில், செங்கல்சிவப்பு நிறத்தில், பளிச்சென்று
சிறு கொத்துக் களாக
செங்கல்சிவப்பு பூக்களை மரம் முழுவதும்
பூத்துக் குலுங்கும் ,வீட்டு முகப்பிற்கும்,தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் அலங்கார அழகு
மரம் கருங்கொன்றை.
3.
பூக்கள், மார்ச்
- ஏப்ரல் - மே மாதத் தேனீக்களுக்கு, செங்கல்சிவப்பு வண்ண
மலர்க்கோப்பைகளில் தேன் தரும்; பூக்களைத் தரும் மரம்.
4.
பட்டை, டேனின்
நிறைந்து தோல் பதனிட பட்டை தரும் மரம்.
5.
மரம், உரல்கள், உலக்கைகள், கம்பங்கள்,தூண்கள், பந்தல்
கால்கள், மாட்டு வண்டி சாமான்கள்,ஆகியவற்றைச் செய்ய
மரம் தரும் மரம்.
7.
மரம் , காகிதம்
தயாரிக்க மரக்கூழ் செய்ய மரம் தரும்
மரம்.
8.
இலைகள், கிளைகள், மரம், ஆகியவற்றை.
அடுப்பெரிக்க விறகாக
தரும் மரம்.
9.
வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை
வடிகட்டி காற்றை
தூய்மைப்படுத்தும் மரம்.
7.சிறப்பு செய்திகள் :
1.கல்கத்தாவின் தாவரவியல்
தலைவர் ராக்ஸ்பர்க் என்பவரின்
நினைவாக, 'ராக்ஸ்பர்கியை " என்ற இணைப்புப் பெயர் பெற்ற மரம்தான் கருங்கொன்றை மரம்.
2. வறட்சியிலும் வாடிடாமல், இருக்கு
இடமெல்லாம் செங்கல்சிவப்பு வண்ணப் பூக்களை சொரிந்து சுற்றுப்புறத்தை அழகூட்டும் கருங்கொன்றை மரம்.
3. இலை, கிளை, மரம்
என, அடுப்பெரிக்க விறகு தரும்
மரம்.
4. காகிதக் குழம்பு தரும்
மரம்.
5. தழைத்து வளர்ந்து ,வீசும்
காற்றைத் தடுத்து தூசியினை
வடிகட்டும் மரம்.
8. மரத்தின் தாயகம்
: இந்தியா
9. ஏற்ற மண்
: மணல்சாரி வறண்ட மண்.
10. நடவுப் பொருள் : விதை / நாற்று / வேர்க்குச்சி
11. மரத்தின் உயரம்
: 6 -- 15
மீட்டர்.
1 comment:
nice to read..keep going
Post a Comment