Friday, August 9, 2019

கல்யாணமுருங்கை அழகான ஆட்டுத் தீவன மரம் - KALAYANAMURUNGAI GOAT FODDER TREE


கல்யாணமுருங்கை 

அழகான ஆட்டுத்

தீவன மரம்

KALAYANAMURUNGAI  GOAT FODDER TREE

தாவரவியல் பெயர்: எரித்ரீனா இண்டிகா (ERYTHRYNA INDICA)தாவரக் குடும்பம்:   பேபேஸி  (FABACEAE)

 888888888888888888888888888888

 எங்கள் ஊருக்கு புயல் வருமா ? வராதா ? அதிகமாய் வருமா ? குறைவாய் வருமா ? எல்லாம் எங்களுக்கு டி கோ பூக்கள்தான் சொல்லும். டீகோ பூக்கள் உரிசன் (இளங் கோடை) பட்டத்தில்தான் பூக்கும். அதிகமா பூத்தா நிறைய புயல் வரும். குறைவா பூத்ததுன்னா புயல் குறைவா வரும். அதனால டி கோ ன்னா எங்களுக்கு சாமி மாதிரி. எங்க ஒக்கினாவா தீவில அரசு மரமா 1967 ம் ஆண்டு  அரசாங்கம் அறிவிச்சிருக்கு டீகோ ன்னா ஜப்பான் மொழியில் நம்ம ஊர் கல்யாணமுருக்கு

டீகோ ன்னா கல்யாணமுருக்கு

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். டைபூன் என்னும் சுழல் காற்றை அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை. நாங்கள் நினைப்பது அது டூரிஸ்ட்களுக்கு தொல்லையாக இருக்கக் கூடாது. அது கடல் நீர் வெபபமடைவதைத் தடுக்கும. அதனால் பவழம் (CORAL) மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களுக்கு அது ரொம்ப நல்லது.; சமீபத்தில் 1945 ல் டீகோ அதிகம் பூத்தது. எங்கள் தீவு அதிக பாதிப்பினை அடைந்தது என்கிறார்கள்.

தேசியகீத மரம் 

நமக்கு ஜனகன மாதிரி அவர்களுக்கு ஷிமா உட்டா. அந்தப் பாட்டு கூட டீகோ பூவையும் டைபூன் இயற்கை சீற்றத்தையும் தொடர்புபடுத்தியதுதான். டீபோ நொ ஹானா கா சாகி> கசி வோ யோபி அரஷி கா கீதா (வாந னநபைழ கடழறநசள டிடழழஅநனஇ வாநல உயடடநன வாந றiனெஇ ய ளவழசஅ உயஅந). டீகோ பூக்கள் பூத்தது> அவை காற்றை வா என அழைத்தது> அது புயலாய் வந்தது இப்படித்தான் அந்த தேசிய கீதம் தொடங்குகிறது.

மாப்பிள்ளை முருக்கு என்பதை நாம் கேள்விப்படிருக்கிறோம்; கல்யாண முருக்கு என்பது இதுதான் புதுப்பெயர்;. காக்கா பூ மரம்> சூடு கொட்டை மரம்> தீவன மரம் எல்லாம் இதன் கூடுதலான  பெயர்கள்.

ஆட்டுக்கு அல்வா 

பலவகையான பயன்பாடுகளை இது தந்தாலும், பிரதானமாக இது ஒரு தீவன மரம். ;கிராமங்களில், கல்யாண முருக்கு மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக ஆடுகள் இருக்கும்.   ஆடுகள் இதன் தழைகளை அல்வா போல ரசித்து ருசித்து சாப்பிடும்.

சூடுகொட்டை மரம்

எனது பள்ளிப்பருவத்தில், சூடுகொட்டை மரம் என்ற பெயரிலேயே  இதைத்  தெரியும்.  குறும்புக்கார சிறவர்கள் பாக்கெட்டுக்களில் ஐந்தாறு கல்யாணமுருக்கு கொட்டைகள் இருக்கும்;.  அதன் பெயர் சூடுகொட்டை.   சூடுகொட்டையை தரையில் தேய்த்து. நமது உடலில் எந்தப்பதியில் வைத்தாலும்> நெருப்பில் சூடு வைத்த மாதிரி இருக்கும்;.   

இந்த சூடு கொட்டையினால் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்; சில சமயம் ஆசிரியர்கள்,  செக்யூரிட்டி  செக்கப் மாதிரி பையன்களின் பாக்கெட்டுக்களை சோதனையிடுவர். அதையும் மீறி மாணவர்கள் ரகசியமாக சூடு கொட்டையை எடுத்துச்செல்வர். 

இதன் பூக்கள் இரத்த சிகப்பு நிறத்தில், பெரிய  பூக்களாக, இலைகளே இல்லாமல், மரம் முழுவதும் பூக்களால் அலங்காரம்  செய்ததுபோல்  இருக்கும்;.  இந்த  மரங்களின் மீது காகங்கள் அதிகம் அமர்ந்து, நீண்ட நேரம் செலவு செய்யும்.;  இந்தப் பூவில் காகங்கள், தேன் குடிப்பதாக சொல்வர்;.  அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.

மூன்று வகை

கல்யாண முருக்கு  மரங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன.  மரத்தில் கரிய நிறத்தில் சிறு சிறு முட்கள் இருப்பது ஒருவகை;.  முட்களே இல்லாதது ஒரு வகை.; காப்பித் தோட்டத்தில் நிழலுக்காக வளர்ப்பது இது;.  இன்னொரு வகையை மிளகுகொடியை ஏற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்.; இந்த மரத்தை அழகு மரமாகவும்  பயன்படுத்துவர். இது 15  முதல் 17 மீட்டர் வரை உயரம் வளரும்.

இந்தியாவின் சில பகுதிகளில்  வெள்ளை நிற பூக்களையுடைய மரங்கள் உள்ளன. இதன் நெற்றுக்கள் அதிக பட்சமாக அரை அடி அல்லது ஒரு அடி வரை இருக்கும்;.  கறுப்;பு நிறத்தில் இருக்கும்.;  இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த ஒரு கவர்ச்சிகரமான நிறத்தில். இதன் விதைகள் இருக்கும்;.  விதைகளைப் பார்க்க பெரிய உருவ பெரும்பயறு போல  இருக்கும்.

தீவனமாக  அளிக்கலாம்.

இதன் தழைகளில்  புரதம் 16..37 சதம்,  மாவுப் பொருட்கள்  37.12 சதம், மற்றும் கொழுப்பு  சத்து  5.38 சதமும்  அடங்கியுள்ளது.  ஆடுகள் மாடுகள் என்று அனைத்து விதமான கால்நடைகளுக்கும் தீவனம் அளிக்கலாம். தீவனத்திற்காக  நடும்போது   நெருக்கி நட்டு அவ்வப்போது தழைகளை அரக்கி கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.



இம்மரம் வலுவில்லாதது. சரிவர எரியாது. ஆனால் தீக்குச்சிகள் செய்யலாம்;.  பெட்டிகள் செய்யலாம்.  இதர தட்டு முட்டு சாமான்கள் செய்யலாம்.  காகிதக்குழம்பு  தயாரிக்கலாம்.   படகுகள்தோணிகள்,   கட்டுமரங்கள் செய்யலாம்.

அழகு மரம் 

இந்த மரங்கள் கிராமங்களில்,  வயல்களில்,  வேலியாகவும்,  குளம் மற்றும்  குட்டை,  ஏரிக்கரைகளில்,   வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் . 

நகரங்களில், அழகு மரமாக வீடுகளின் முகப்பில், தோட்டத்தில், சாலை ஓரங்களில், பூங்காக்களில், மற்றும் பெரும் கட்டிட வளாகத்துள் இதனை  நட்டும்  வளர்க்கலாம்.

ஒரு கிலோ எடையில் சுமார் 2000. விதைகள் இருக்கும்.  இதன் முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம்.   விதைகளை நீரில் ஒரு நாள் ஊற வைத்து விதைத்தால்  நன்கு முளைக்கும். ஆறு அடி நீளமுள்ள  போத்துக்களையும் வெட்டி நடலாம்.

இதன் இலைகள் மூன்றிலைகளைக் கொண்டு  கொத்து கொத்தாக வளரும். இந்த மூன்று இலைகளும் மும்மூர்த்திகளை  குறிப்பதாக சொல்வர். வலப்பக்கம் உள்ள இலை சிவபெருமானையும், நடுப்பக்கம் உள்ள இலை பிரம்மாவையும், இடப் பக்கம் உள்ள இலை விஷ்ணுவையும் குறிக்கும்.

விதைச் சேகரிப்பு: அக்டோபர் முதல் நவம்பர் வரை.

1. தாயகம்: இந்தியாஆப்ரிக்கா.

2.நொதிக்க வைத்த இறைச்சியை மூடுவதற்காக இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள் வியட்நாம் நாட்டில்.

3. மருத்துவம்: பிலிப்பைன்ஸ் நாட்டில் இலைகள் மற்றும் பட்டைகளை நோய்களுக்கு சிகிச்சை தர நாட்டு மருந்துகள் தயாரிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகள், ஆண்குறிகளில் ஏற்படும் புண் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

888888888888888888888888888







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...