இளஞ்சிவப்புக்
கொன்றை பூமரம்
ILAM SIVAPPU KONRAI
FLOWERING TREE
8888888888888888888888888888888
(தாய்லாந்து நாட்டின் புனிதமான மரங்களில் இளஞ்சிவப்பு
கொன்றையும் ஒன்று. மலச்சிக்கல் சக்கரைநோய் சிறுநீரகநோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த ஆயுர்வேத மற்றும் புராதன
மருந்துகள் தயாரிக்கிறார்கள். பூங்காக்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களிலும்
நடலாம்)
அலங்கார அழகுமரம்
1. மரத்தின் தமிழ்ப் பெயர் : இளஞ்சிவப்புக் கொன்றை / ஜாவா கொன்றை
2. தாவரவியல் பெயர்
: கேசியா நொடோசா (CASSIA NODOSA)
3. பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பிங்க் ஷவர் ட்ரீ (PINK SHOWER TREE)
4. தாவரக்குடும்பம்
: பேபேசியே (FABACEAE)
5. மரத்தின் வகை
: அலங்கார அழகுமரம்
6. மரத்தின் பயன்கள் :
6.1. தழை விளை நிலங்களுக்கு தழை உரமாகும்
6.2. அழகு மரம்: பச்சைஇலைகளின் இடுக்குகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் பளிச்சென்று
இளஞ்சிவப்பு பூச்சரங்களை மரக்கிளைகள் முழுவதும் பூத்துக்குலுங்கும். வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப் புறத்திற்கும், அழகூட்டும் அலங்கார அழகு மரம்.
மார்ச்-ஏப்ரல் மாதத்தில் பூக்கும்
6.3. பூக்கள் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் பூக்கும்.
டிசம்பரில் இலைகளையும் நெற்றுக்களையும் உதிர்த்துவிடும். இதன் நெற்றுக்கள்
புல்லாங்குழல் போல 30 முதல் 70 செ.மீ. நீளமாக இருக்கும்.
6.4. பட்டை டேனின் நிறைந்தது.
கட்டுமானப்பணிகள்
6.5. உரல்; உலக்கை, கம்பம், தூண், பந்தல்கால், மாட்டுவண்டிச் சாமான்கள், மற்றும் காகிதம் தயாரிக்க
மரக்கூழ் இலைகள், மற்றும்
கிளைகள் விறகு தரும். மிருதுவான இதன் மரங்கள் கட்டுமானப்பணிகள் மரச் சாமான்கள் மற்றும் கேபினட் செய்யவும் பயன்படும்.;
6.6. வீசும் காற்றின் வேகத்தை தடுத்து தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
நாற்பது மீட்டர் உயரம்
7. மரத்தின் தாயகம் : இந்தியா
8. ஏற்ற மண்
: ஈரச் செழிப்பான வடிகால் வசதி
கொண்ட மரம்
9. நடவுப் பொருள் : விதை /
நாற்று / வேர்க்குச்சி
10. மரத்தின் உயரம்
: 25 - 40
மீட்டர்.
வெப்ப மண்டல மரம்
11. விதை எண்ணிக்கை: ஒரு கிலோவில் 14500
முதல் 14800 விதைகள்.
12.விதைச் சேகரிப்பு: மே முதல் அக்டோபர் வரை.
13.ஏற்ற தட்பவெப்ப சூழல்: வெப்ப மண்டலங்களில் வளரும் மரம்
13. பரவல்: ஜாவா, சுமத்ரா, சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மியான்மர் மாரிஷியஸ் யு எஸ் ஏ பசிபிக் தீவுகள் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பரவலாகக்
காணப்படுகிறது.
888888888888888888888
No comments:
Post a Comment