பேவோபாப் -
கல்லறையாகக்கூட
பயன்பட்ட மரம்
கல்லறையாகக்கூட
பயன்பட்ட மரம்
BAO
BAB -
ONCE USED
ONCE USED
CEMETRY
தாவரவியல் பெயர்: அடன்சோனியா டிஜிட்டேட்டா (ADANSONIA DIGITATA)
தாவரக்குடும்பம்: மால்வேசியே (MALVACEAE)
பொதுப்பெயர்: ‘மங்கி பிரட் ட்ரீ’ (MONKEY
BREAD TREE)
8888888888888888888888888888888888888
உலகின் அதிசயமான மரம் எது என்றால் கண்ணை மூடிக்கொண்டு
சொல்லலாம் ' பேவோபாப் " ஆங்கிலத்தில் ‘மங்கி பிரட் ட்ரீ’. ;தமிழில் 'ஆனைப்புளி". சொந்த ஊர் மடகாஸ்கார் தீவு. ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தது.
சட்டென்று பார்த்தால் மரத்தைப்
பிடுங்கி யாரோ தலைகீழாக நட்டது போல் தெரியும். மோட்டா உடம்பில் மெல்லீசான
கைகால்களுடன் நிற்கும் மனிதன் போலத்
தோன்றும். அகலமான அடிமரம். ஒல்லிக் குச்சான் கிளைகள். அதிகபட்சமாக 100 அடி உயரம் வளரும். அடிமர விட்டம் 30 அடியைத் தாண்டும். மார்பளவில் மரத்தின் சுற்றளவு 112 அடியை மிஞ்சும்; வயது 5000 ஆண்டுகள்.
பேய் ஒன்று ஆனைப்புளி மரத்தைப் பிடுங்கி தலைகீழாக நட்டுவிட்டதால்தான் இலையுதிர் காலத்தில் இவை தலைகீழாக நிற்பதாகவே தோன்றுகிறது என ஒரு அரேபியக்கதை
சொல்லுகிறது.
பலசமயம் பஞ்சாயத்துக்களில் கட்டிவைத்த தண்ணீர் தொட்டிகள் மாதிரியும் தோன்றும். இந்த பேவோபாப் மரத்தின் மையப்பகுதி சில ஆண்டுகளில் உளுத்து உதிர்த்து தண்ணீர்த் தொட்டி மாதிரி
ஆகிவிடும். மரங்கள் சாகாது. மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் இந்த
விசாலமான மரத்தொட்டிக்குள் சேகரமாகும். அதிகபட்சமாக ஒரு மரத் தொட்டிக்குள்
ஒரு லட்சத்து இருபதினாயிரம் லிட்டர் தண்ணீர் வரை சேகரம் ஆகும்.
எங்கே பேவோபாப் மரங்கள் ..?
ஆப்பிரிக்காவின் வறண்ட பாலைவனங்களின் தாகமுள்ள பறவைகளும், கோடைக் காலத்தில் எங்கே பேவோபாப் மரங்கள் ..? என்று தேடுமாம் ..! சுற்றுலா செல்லும்
பயணிகள் கூட பேவோபாப் மரத் தொட்டிகளில் தாக சாந்தி செய்து கொள்வார்கள். தண்ணீர் எடுத்துக் கொண்டும் செல்வார்களாம்.
கிராமப்புற
மக்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரில் உள்ள மரங்களில் தானியங்களை கொட்டி
வைக்கிறார்கள். பேவோபாப் மரங்கள், ரெடிமேட்
தானியசேமிப்பு தொம்பைகள். அதுமட்டுமல்ல, இறந்தவர்களை இந்த மரப்
பொந்துகளில் வைத்து அடக்கம் செய்வதும்
உண்டு ! இயற்கை முறை நல்லடக்கம். நூறு சதம் ஆர்கானிக்
..!
பெட்டிக் கடை வைக்கலாம்
இப்போது பேவோபாப் மரங்களை
குடைந்துவிட்டு பெட்டிக் கடைகள் வைக்கிறார்கள்; ஹோட்டல் நடத்துகிறார்கள்; அவ்வளவு ஏன் 'டாய்;லெட்" வைத்துள்ளார்கள். மேலே கூரை போட்டு குடியும் குடித்தனமுமாக
வசிக்கிறார்கள்.
ஒரு மரத்தைக் குடைந்து கூரை போட்டால் அது வீடாகும். இரண்டாவது மரத்தில் தண்ணீர் தேக்கத் தொட்டி. மூன்றாவது மரத்தில் தானிய சேமிக்கும் கிடங்கு. நான்காவது மரத்தில் அட்டாச்சுடு பாத்ரூம் கம்
டாய்லட். ஆறாவது மரத்தில் டிப்பர்ட்மெணட் ஸ்டோர். ஏழாவது மரம் கடைசி காலத்தில் சுய நல்லடக்கத்திற்கும் உதவும் . மொத்தத்தில் ஐந்தாறு மரங்கள் இருந்தால் போதும். 1962 ம் ஆண்டு இது செனிகல் நாட்டின் அதிபர் இதற்கு தடை சட்டம் கொண்டு வந்தார்.
ஜாம் - ஜெல்லி - ஜூஸ்
அதன் பழங்களில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் என்று தயாரித்து வெளுத்துக் கட்டுகிறார்கள். இலைகளை கீரையாக சமைக்கின்றனர். பழங்களை உலர்த்தி பொடியாக்கி டின்களில்
அடைத்து காசு பண்ணுகிறார்கள். கரும்பு சாற்றுடன் சேர்த்து பீர்
தயாரித்து தாகம் தணிக்கிறர்கள். ஐஸ் கிரீம் செய்கிறார்கள்.
பலமொழிப்பெயர்கள்
1.1. தமிழ்: ஆனைப்புளி, பாப்பாரப் புளி (ANAIPULI, PAPPARAPULI)
1.2. தெலுங்கு:
பிரஹாமாம்லிகா (BRAHAMAMLIKA)
1.3. குஜராத்தி;: புக்கா (BUKHA)
1.4. பெங்காலி;: கடகாச் (KADHAKACHH)
1.5. சமஸ்கிருதம்: சர்ப்படண்டி (SARPADANTI)
1.5. இந்தி: கோரக் இம்லி (GORAK IMLI)
1.9. மராத்தி: கோரக் சிஞ்ச் (GORAKH CHINCH)
1.10.பொதுப் பெயர்: பேவோபாப் (BAO BAB)
1.11. தாவரவியல் பெயர்: அடன்சோனியா டிஜிட்டேட்டா (ADANSONIA DIGITATA)
சொல்லப்போனால் பேவோபாப் இப்போது ஒரு தொழில் மரம் (INDUSTRIAL
TREE)
இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி செல்லும் வழியில் ஒரு பெரிய பேவோபாப்; மரத்தைப் பார்த்து
பயந்தே போனேன்;. யாரும் இல்லாத அத்துவானக் காடு அது. உள்ளுர்க்காரர் ஒருவர் அங்கு
வரும்வரைக் காத்திருந்தேன்.
வந்ததும் கேட்டேன் 'வித்தியாசமா இருக்கே ! இந்த மரத்தின் பெயர் என்னங்க ..? ' என்றேன். அவர்
சொன்னார் . 'பேர் சொல்லா மரம்." இதற்கு அவர் சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே
அங்கிருந்து புறப்பட்டேன்.
எனது மானசீக குருநாதர் பி.எஸ். மணி எழுதிய 'வளம் தரும் மரங்கள் "படிக்கும்வரை அது பேவோபாப் என்று எனக்குத் தெரியாது.
அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து சென்னை ' அக்ரி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி" யில் இரண்டு இளம் மரங்களைப் பார்த்தேன்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் பாண்டிச்சேரியில் ஒரு மரத்தைப்
பார்த்தேன். அந்தப்பக்கம் வந்த ஒருவரிடம்
கேட்டேன் . இது என்ன மரங்க ..? “இது பிள்ளையார் மூஞ்சி மரங்க” என்றார். அங்கு தினமும்
பேவோபாப் மரத்திற்கு பூஜை புனஸ்காரம்
என்று தடபுடலாய் நடந்து வருகிறது. நானும் தொட்டு கும்பிட்டுவிட்டு 'பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா
" என்று வேண்டிக் கொண்டு வந்தேன்.
TO READ FURTHER MORE
1.
பாட்டில் மரம் – ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND – Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
2.
மங்கிபஸ்சில் - தென் அமெரிக்காவின் அதிசய
மரம் - MONKEY PUZZLE -
TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
3.
டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான
அழகுமரம் - TRAVELLER’S PALM
- IS A DIFFERENTLY BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
4.
செக்கோயா உலகின்
உயரமான மரம் - KING SEQUOIA WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020
/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
5.
ஒசேஜ் ஆரஞ்சு மண்ணரிப்பைத் தடுக்க ரூஸ்வெல்ட்
அதிகம் நட்ட மரம் - OSAGE ORANGE PET TREE OF ROOSEVELT - Date of Posting:
08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
6.
மரூலா மரம் - ஆப்ரிக்காவின் சிறுதொழில் மரம் - MARULA - ENTREPRENEUR FRIENDLY AFRICAN TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
7.
பேவோபாப் - கல்லறையாகக்கூட பயன்பட்ட மரம் BAO BAB - ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019
/ https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
8.
டிராகன் பிளட் ட்ரீ - சாக்ரடிஸ் பயன்படுத்திய மருத்துவ மரம் - DRAGON BLOOD RARE HERB USED BY
SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
9.
கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு
பாத்திரம் தரும் மரம் CALABASH - BLESS BOWELS TO SAINTS - Date of Posting:
29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
10.
முருங்கை - பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம் MURUNGAI - GOOD FOR MAL- NUTRITIONED BABIES - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
11.
வேப்ப மரம் கிராமத்து
மருந்து கடை - VEPPA MARAM
- VILLAGE PHARMACY OF THE
WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
12.
பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI
LIVELIHOOD TREE OF DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017
- https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
13.
அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம் SENCHANTHANAM ONLY CAN BLOCK
ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html
88888888888888888888888888888888888
No comments:
Post a Comment