Wednesday, August 7, 2019

அத்தி - பஞ்சாப் மாநிலத்தின் அரசு மரம் - ATHI - STATE TREE OF PUNJAB



அத்தி -

பஞ்சாப் மாநிலத்தின் 

அரசு மரம்

 ATHI - STATE TREE OF

PUNJAB


888888888888888888888

அத்தி பூக்காம காய்க்கும்னு கிராமத்தில் சொல்லுவாங்க. ஆனா அது உண்மை இல்ல. அது பூக்கும். அதன் காய்க்குள்ள இருக்கும் பூக்கள். ஒரு வகை குளவிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவியா இருக்கு. 

1. மரத்தின் பலமொழிப் பெயர்கள்

1.1. தமிழ்: அத்தி (ATTI)
1.2. தெலுங்கு:  பைடி (PAIDI)
1.3. கன்னடம்: ருமாடி (RUMADI)
1.4. மலையாளம்: அத்தி  (ATTI)
1.5. மணிப்புரி: ஹைபாங் (HIBONG)
1.5. ஒரியா:  டிம்ரி (DIMRI)
1.5. இந்தி: கூலார் (GOOLAR)
1.9. சம்ஸ்கிருதம்: உடும்பரா (UDUMPARA)
1.10. நேபாளி: குலர்> டும்ரி (GOOLAR, )
1.10.பொதுப் பெயர்: கிளஸ்டர் ஃபிக் (CLUSTER FIG)
1.11. தாவரவியல் பெயர்: பைகஸ் ரெசிமோசா (FICUS RACEMOSA)
1.12. தாவரக்குடும்பம்: மோரேசியே (MORACEAE)
2. தாயகம்: இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி (WESTERN GHATS OF INDIA) 

3. மருத்துவப் பயன்கள்:

3.1. அத்தியன் படடைக் கஷாயம் வாயில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்யும்.

3.2. இதன் பிசினை பசை போல் செய்து மேலாகப் பூச காது மற்றும் இதர பகுதிகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும்.

3.3. இதன் இலைகளில் கருப்பு நிறக் கொப்புளங்கள் போன்ற வளர்ச்சிகள் தென்படும். அவற்றை சேகரித்து 3 முதல் 4 கிராம் பாலில் அரைத்து வடிகட்டி அதனைத் தேனுடன் ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்க சின்னம்மை குணமாகும். இதையே தயிர் மற்றும் தேனுடன் கலந்து கொடுக்க டி.பி என்று சொல்லப்படும் எலும்புருக்கி நோய் குணமாகும்.

3.4. அத்தி மரத்துப் பால் சைனஸ் ஐ குணப்படுத்தும்.

3.5. வயிற்று வலியின் போது அத்திப் பழங்களை சாப்பிட்டால் அது விரந்து குணமாகும்.

3.6. அத்திப் பழச் சாற்றினை 5 முதல் 10 மில்லியை சக்கரையுடன் சேர்த்து இரு நாளைக்கு ஒரு முறை கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

3.7. அத்திப் பழத்தைப் பாலுடன் சேர்த்துத் உணவின் போது சாப்பிட கருவில் வளரும் சிசு ஆரோக்கியமாக வளரும். அபார்ஷன் ஏற்படுவதைத் தடுக்கும்.

3.8. அத்திப் பழங்களை தயிரில் கலந்து சாப்பிட மாதவிடாயின்போது ஏற்படும் மிகையான உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

3.9. அத்தி இலைகளை அரைத்து கூழ்போலச் செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர பித்த சம்மந்தமான பிரச்சினைகளைக் குணப்படுத்தும்.

3.10.கோடையில் தொடர்ந்து அத்திப் பழங்களைச் சாப்பிட்டு வர ஆஸ்துமா உட்பட சுவாச மண்டலம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

3.11. அத்திப் பழத்தின் தோலை பொடியாக்கி அத்துடன் வெல்லப் பாகு சேர்த்து, அதனை பாலுடன் கலந்து காலை மாலை கொடுக்க சிறுநீர் சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும்.

வெள்ளைக்காரர்கள் வேப்ப மரத்திற்கு கிராம மருந்துக் கடை என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு மரத்தையும் ஆய்வு செய்து பார்க்கும்போது ஒவ்வொரு மரமும் ஒரு மருந்துக் கடையாக இருக்கிறது என்பது தெரிகிறது.

88888888888888888888888888888888888





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...