Wednesday, August 7, 2019

ஆத்தி பூக்கள் தரும் அழகு மரம் AATHI BEAUTIFUL FLOWERING TREE



ஆத்தி பூக்கள் தரும் அழகு மரம்

AATHI BEAUTIFUL

FLOWERING TREE

தாவரவியல் பெயர்:  பாஹினியா  வேரிகேட்டா (BAUHINIA  VARIEGATA)
தாவரக் குடும்பம்: சிசால்பீனியேசியே  (CESALPINEAECE )
ஆங்கிலப் பெயர்: கேமல் ஃபூட் ட்ரீ (
CAMEL FOOT TREE )

88888888888888888888888

1. அறிமுகம்

இந்தியாவிலேயே அழகான பத்து பூ மரங்களுள் ஒன்று மந்தாரை என்னும் ஆத்தி. ;  மிக அழகான பூக்களைத் தரும்  மரம்.; இதன் இலைகளின் தோற்றத்தை வைத்துத்தான் ஆங்கிலத்தில் இதனை ஒட்டகக்கால் மரம் என்கிறார்கள்.

2. சிறப்பு 

சங்ககாலத்தில்; இதன் பெயர் ஆத்தி; அவ்வைக்கு பிடித்த பூ. மரம்;;; இல்லை என்றால் தனது நூலுக்கு ஆத்திச்சூடி என்று பெயர் வைத்திருப்பாரா ? ; தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. மந்தாரை என்னும் ஆத்தி. இமைய மலையில் தொடங்கி குமரிவரை  பரவலாக வளரும் மரம் ஆத்தி.

1. மரத்தின் பெயர்

1.1. தமிழ்: ஆத்தி (Atti)
1.2. தெலுங்கு:  போதந்தா> தேவகாஞ்சனமு (Bodanta, Daevakanchanamu)

1.3. கன்னடம்: அரிசிநந்திகி> அயாட்டா> பிலிகஞ்சிவாலா> இர்க்குபாலித்து (Arisinantige, Ayata, Bilikanjivala, Irkubalitu)

1.4. மலையாளம்: சோவன்ன மந்தாரு> சுவன்ன மந்தரம் (Chovanna mandaru, Chuvanna mandaram)

1.5. மராத்தி: கானராஜ கவிதரா> காஞ்சன்> ரக்தா காஞ்சன்; (Kanaraj, Kavidara, Kanchan, raktha kanchan )
1.6. மிசோரம்: மாவ்-பேவாங்> வாப்> வாவ்வேங் (Mau favong, Vaube, Vaufawang)
1.6. பெங்காலி: ரக்தா காஞ்சன் (Raktha kanthan)
1.5. மணிப்புரி: சிங்த்ராவ்; (Chingthrao)
1.5. ஒரியா: வாவ் பேபாங்> வாப்> காஞ்சன் (Vau fabang, Vaube, Kanchan)
1.5. இந்தி: கச்னார்; (Kachnar)
1.9. சம்ஸ்கிருதம்: அஷ்மன்டகா> அஷ்போட்டா> சாமரிகா> சாமரி (Ashmantaka, Ashphota, Chamarika, Chamari )
1.10. நேபாளி:  கொய்ராலோ (Koiraalo)
1.11. அசாமீஸ்: கொட்டோரா> குரால் (Kotora, Kurol)
1.10. பொதுப் பெயர்: கச்னார் ஆர்கிட் ட்ரீ> வேரிகேட்டட் பாஹினியா (Kachnar orchid tree, Variegated bauhinia)
1.11. தாவரவியல் பெயர்: பாகினியா ரெசிமோசா (Bauhinia racemosa)

1.12. தாவரக்குடும்பம்: சிசால்பைனியேசி (Caesalpineaceae)

2. தாயகம்: இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி

3. பண்புகள்

சுமார் 10 மீட்டர் உயரம் வளரும் நடுத்தரமான மரம் இது; கிளைகள் பெரும்பாலும் மெல்லியதாக இருக்கும்;  பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பூக்கள் அதிகம் பூக்கும்;;  நுனிக் கிளைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும்.

4. பயன்கள்

4.1. இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகும். இதன் தழைகள்  10 முதல் 15 சதம் வரை புரதம் தரும்;. முற்றிய இலைகளில் டேனின் அதிகம் உள்ளது;. அதனால் இளம் இலைகளையே கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவர்;. ஆத்தி இலைகளை பீடி சுற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.; சில வகையின இலைகள் அகலமாக இருக்கும்;  இவற்றில் உணவு விடுதிககளில் பொட்டலங்கள் கட்டுகிறார்கள்.; தையல் இலைகள் கூட தயாரிக்கிறார்கள்.

4.2. ஐந்து இதழ்களைக் கொண்ட இதன் பூக்கள் தேனீக்களுக்கு தேன்> மகரந்தம் தரும். ஆத்தி மரங்கள் அதிகமிருந்தால்> அங்கே தேனிப் பெட்டிகள் வைத்து> தேன் உற்பத்தி செய்யலாம்;.  சிலர் இதன் பூக்களை சமைத்து சாப்பிடுகிறார்கள். 
 
4.2. மரத்தில் வேளாண் கருவிகள் செய்யலாம்.

4.3. பூக்கள், பட்டை, வேர், அனைத்தும் மருந்து தரும்.    சிலசமயம் கன்று ஈன்ற பின்னர், நச்சுக் கொடி தாய்ப்; பசுவின் வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும்; அவற்றிற்கு  ஆத்தி இலையைக் கொடுத்தால், நச்சுக்கொடி  இயல்பாக வெளியேறும்.

4.4. பட்டைகளில் டேனின் சத்து அதிகமிருப்பதால் தோல் பதனிடலாம்> சாயமேற்றலாம்;  இதிலிருந்து>  நார் உரித்தெடுக்கலாம்.

5.எங்கு நடலாம் ?

5.1.ஆத்தி மரங்கள்  சிறு குன்றுகளின் சரிவுகளிலும், ஏரி ஓரங்களிலும்> தோட்டங்களிலும், பொது இடங்களிலுள்ள வீடுகள் அல்லது இதர கட்டிட முகப்புக்களில்அழகூட்டுவதற்காக நடவு செய்கிறார்கள்.

6. ஏற்ற மண்வகை

6.1. செஞ்சரளை மண்> சுண்ணாம்பு நிலங்கள்> இருமண்பாடான நிலங்கள்> போன்ற எல்லா மண் வகைகளிலும் ஆத்தியை நட்டு வளர்க்கலாம்;  ஆனால் வடிகால் வசதி தேவை.

7. விதை சேகரிப்பு 

7.1.நீளம்குறைந்த நெற்றுக்கள்> ஆழ்ந்த காவி வண்ணமுடையதாக இருக்கும்; இவை வெடித்துச்சிதறும் முன்> இதை பறித்து விதைகளை சேகரிக்கலாம்;    விதைகள் நீளமான வட்ட வடிவில்> காவி வண்ணத்தில் இருக்கும்;   ஒரு கிலோ எடையில் 2800 முதல் 3800 விதைகள் வரை இருக்கும்.  

8. விதை முளைப்பு

8.1. 100 விதைகளை விதைத்தால் 95 விதைகள் அப்;பழுக்கு இல்லாமல் முளைக்கும்;   தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால்> அவை விரைவாக முளைக்கும்;   ஆனால்  முளைப்பு  முப்பது நாள்வரை நீடிக்கும்;   ஆத்தி மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதைவிட> விதைகளாக விதைப்பதே சிறந்தது.

88888888888888888888888888

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...