Monday, August 26, 2019

பூரம் நட்சத்திர மரம் பலா - இன்று ஒரு குறுஞ்செய்தி PALA - POORAM BIRTH STAR TREE - NEWS TODAY



 

பூரம்

நட்சத்திர மரம் 

பலா   - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

PALA - POORAM

BIRTH STAR

TREE - NEWS TODAY




எப்போதும் உழைக்க 

விருப்பமும் நினைவாற்றலும் 

பேச்சுத் திறமையும் 

கலாரசனையும் உடைய 

நட்சத்திரக்காரரே ! 

உங்கள் நட்சத்திரமரம் 

பலா மரத்தை 

நட்டு வளர்த்து 

பராமரித்து வந்தால் 

பணமும் புகழும் மகிழ்ச்சியும் 

உங்கள் வாழ்வில் பெருகும்   


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு


பரணி நட்சத்திர மரம் நெல்லி - இன்று ஒரு குறுஞ்செய்தி NELLI - BARANI BIRTH STAR TREE - NEWS TODAY





பரணி

நட்சத்திர மரம் 

நெல்லி   - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

NELLI - BARANI

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR TREE OF 

BARANI – AMLA



ஆடுற மாட்டை ஆடியும் 
பாடுற மாட்டை பாடியும் 
இரண்டுக்கும் படியாத மாட்டை 
அடித்தும் கறக்கும் 
ஆளுமைத்திறன் படைத்த 
நீங்கள் 
உங்கள் நட்சத்திரமரம் 
நெல்லியை 
நட்டு நேர்பட வணங்கிவந்தால் 
உங்கள் வாழ்க்கை 
வளம்பெறும், 
சீர்பெறும் 
சிறப்புபெறும்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு


ஆயில்யம் நட்சத்திர மரம் புன்னை - இன்று ஒரு குறுஞ்செய்தி PUNNAI - AYILYAM BIRTH STAR TREE - NEWS TODAY






ஆயில்யம்

நட்சத்திர மரம் 

புன்னை    - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

PUNNAI - AYILYAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR TREE OF

 AYILYAM  

MAST WOOD



ஆயில்யம் நட்சத்திரத்தில் 
பிறந்த நீங்க, சக்கரையாகப் 
பேசுவிங்க. குறிப்பறிஞ்சு நடப்பிங்க
நிறைய படிப்பிங்க
பூமிக்கு வலிக்காம நடப்பிங்க.  
அழகான பஞ்சு மிட்டாய் மனசால 
சிரிப்பிங்க. இலையும் பூவும் மரமும் 
அழகா அமைஞ்ச உங்க 
நட்சத்திர மரம்  புன்னை மரத்தை 
நட்டு வளத்தா, 
பொன்னையும் 
பொருளையும் 
அறுவடையா 
அறுப்பீங்க .

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு



அனுஷம் நட்சத்திர மரம் மகிழம் - இன்று ஒரு குறுஞ்செய்தி MAGIZHAM - ANUSHAM BIRTH STAR TREE - NEWS TODAY




அனுஷம்

நட்சத்திர மரம் 

மகிழம்    - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

MAGIZHAM - ANUSHAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR TREE OF 

ANUSHAM – 

MAGIZHAM TREE



எல்லோருக்கும் உதவி செய்யும் 
மனம்படைத்தவராகவும்
யாருக்கும் தீங்கு நினைக்காதவராகவும்
கொண்ட கொள்கைகளுக்காக  
கொடிபிடிப்பவராகவும்
மக்கள் செல்வாக்கு உடையவராகவும்
குறிப்பாக பெண்களால் 
பாராட்டப்படும் குணவானாகவும்
மகாலட்சிமியின் 
பிறந்த நட்சத்திரத்தில் 
பிறந்த அனுஷம் நட்சத்திரக்காரரே
உங்கள் நட்சத்திர மரம் மகிழம் மரம்
உலர்ந்துபோன பின்னாலும் 
வாசம்தர மறக்காத 
மகிழமரத்தை நட்டு வளர்த்தால் 
திக்கெட்டிலும் புகழ்பரவுமாறு 
செல்வம் சேரும்
மகிழ்ச்சி கூடும்
துன்பங்கள் துயரங்கள் 
தூர விலகிப்போகும்.

இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு



விசாகம் நட்சத்திர மரம் விளாம் - இன்று ஒரு குறுஞ்செய்தி VILAM - VISAAKAM BIRTH STAR TREE - NEWS TODAY




விசாகம்

நட்சத்திர மரம் 

விளாம்     - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

VILAM - VISAAKAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR TREE OF 

VISAAKAM – 

VILAAM TREE



கொள்கைகளைக் கொண்டாடும் 
மாண்பும், வேலைகளை 
விரும்பி செய்யும் பண்பும்
அதற்காக எதையும் துறக்கும் 
அர்ப்பணிப்பு உணர்வும்
கலகலப்பாகவும்
இனிமையாகவும் பேசி 
நட்பு பாராட்டும் 
விசாக நட்சத்திரக்காரர் 
நீங்கள் ! உங்கள் நட்சத்திரமரம் 
விளாம் மரத்தை நட்டு வளர்த்தால்,  
நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்
உங்கள் சுற்றமும் நட்பும் 
சூழக்கொண்டாடும் 
மனிதராக வெற்றிகளைக் 
குவித்து
வாகை சூடுவீர் !


இப்படிக்கு 
குறுஞ்செய்தி 
கோவாலு




சுவாதி நட்சத்திர மரம் மருதம் - இன்று ஒரு குறுஞ்செய்தி MARUTHAM - SUVAATHY BIRTH STAR TREE - NEWS TODAY



சுவாதி

நட்சத்திர மரம் 

மருதம்      - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

MARUTHAM - SUVAATHY

BIRTH STAR

TREE - NEWS TODAY 

 

BIRTHSTAR TREE OF 

SUVAATHI – ARJUN TREE



நேர்கோடுபோல வளையாத நேர்மையும் சுயமாய் சிந்தித்து சுயமாய் செயல்படவும், கொடரிகொன்டு பிளக்க முடியாத வேலையை நகத்தால் கிள்ளிப்போடும் சூட்சுமமும், உழைக்கத் தயங்காத உறுதிகொண்ட மனமும், சிலந்திவலைச் சிக்கலையும் நொடியில் சீர்செய்யும் வல்லமையும் ஒருங்கேகொண்ட சுவாதி நட்சத்திரக்காரர் நீங்கள் ! உங்கள் நட்சத்திரமரம் மருதமரத்தை நட்டு வளர்த்து வந்தால், அரசியல் பதவிகள் தொடங்கி அரசுப்பதவிகள் அம்புட்டும் உங்கள் கதவினை ஓயாமல் தட்டி உபத்திரவம் செய்யும்.

இப்படிக்கு 
குறுஞ்செய்தி 
கோவாலு




Sunday, August 25, 2019

சித்திரை நட்சத்திர மரம் இலவம் - இன்று ஒரு குறுஞ்செய்தி ILAVAM - CHITHIRAI BIRTH STAR TREE - NEWS TODAY




சித்திரை

நட்சத்திர மரம் 

இலவம்       - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ILAVAM - CHITHIRAI

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR TREE OF CHITHIRAI - KAPOK


ஓய்வு என்ற வார்த்தையே 

எனக்கு பிடிக்காது என்று சொல்லி 

எடுத்த காரியத்தை தொடுத்து 

செய்துமுடிக்கும் ஆற்றலும் 

முகம் தெரியாத மனிதருக்கும் 

முகமன் சொல்லும் 

நட்பு முகமும் கொண்டு 

சித்திரை மாதத்தில் பிறந்த 

பத்தரைமாற்றுத்தங்கம் நீங்கள்

உங்கள் நட்சத்திரமரம் 

இலவம் மரம். இலவமரத்தை  

நட்டு வளர்த்தால் 

தொட்ட காரியங்கள் துலங்கும்

தொடர்ந்துவரும் தோஷங்கள் 

அனைத்தும் நித்திரைபோல விலகும்.



இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











அஸ்தம் நட்சத்திர மரம் கருவேலம் - இன்று ஒரு குறுஞ்செய்தி KARUVELAM - ASTHAM BIRTH STAR TREE - NEWS TODAY





அஸ்தம்

நட்சத்திர மரம் 

கருவேலம் - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

KARUVELAM - ASTHAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


BIRTHSTAR 

TREE OF ANUSHAM  

BLACK BABUL


உடுக்கை இழந்தவன் கைபோல 
உதவம் மனப்பான்மையும்
உற்சாகத்தையும் 
உடன்பிறந்த பண்புகளாகக்கொண்டு  
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவரே !
உங்கள் நட்சத்திரமரம் 
கருவேலமரம்
அது முள்மரமானதால் 
அது இருக்கும் இடம்தேடி 
இடைவிடாமல் 
வணங்கிவந்தால்
எடுத்த காரியங்கள் அத்தனையும் 
தொடர்ந்து சித்தியாக 
வேலவன் அருள்புரிவார்.. 



இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











உத்தரம் நட்சத்திர மரம் அலரி - இன்று ஒரு குறுஞ்செய்தி ALARI - UTHIRAM BIRTH STAR TREE - NEWS TODAY



உத்தரம் 

நட்சத்திர மரம் 

அலரி  - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ALARI - UTHIRAM

BIRTH STAR

TREE - NEWS TODAY



எறும்புபோல சுறுசுறுப்பும்துருதுருப்பும்எதையும் திட்டமிட்டு செய்யும் சாமர்த்தியமும் உடைய உத்தரம் நட்சத்திரக்காரரே ! உங்கள் நட்ச்த்திர மரம் அலரியை நட்டு வளர்த்துவந்தால்அரசியல் உட்பட அனைத்து முயற்சிகளிலும் அடித்து ஆடுவீர்கள் ! நொடித்துப் போகமாட்டீர்கள் !வெற்றிக்கனி பறித்து வீறுநடை போடுவீர்கள்.


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











Friday, August 23, 2019

மகம் நட்சத்திர மரம் ஆலம் - இன்று ஒரு குறுஞ்செய்தி ALAM - MAHAM BIRTH STAR TREE - NEWS TODAY




மகம்  

நட்சத்திர மரம் 

ஆலம்   - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ALAM - MAHAM

BIRTH STAR

TREE - NEWS TODAY



நிர்வாகத்திறமையும், 
பரந்த ஞானமும் கொண்டு 
சாதிக்கப்பிறந்த 
மகம் நட்சத்திரக்காரரே ! 
உங்க நட்சத்திர மரம் 
ஆலமரத்தை நட்டு வளர்த்து 
வணங்கி வந்தால் 
பெருஞ்செல்வம் பல சேர்த்து 
ஜெகம் ஆளுவீர் !


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











பூசம் நட்சத்திர மரம் அரசம் - இன்று ஒரு குறுஞ்செய்தி ARASAM - POOSAM BIRTH STAR TREE - NEWS TODAY


பூசம்

நட்சத்திர மரம் 

அரசம்    - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

ARASAM - POOSAM

BIRTH STAR

TREE - NEWS TODAY


ஆசையை அறவே 

துறக்கணும்னு ஆசைப்பட்ட 

புத்தருக்கு அவர் ஆசையை 

நிறைவேற்றி வச்சது 

இந்த அரச மரம்தான். 

பூசம் நட்சத்திரத்தில பிறந்த 

உங்களோட நட்சத்திர மரம் 

அரச மரம் !


ஊராம்புள்ளய ஊட்டி வளக்க 
ஆசைப்படும் பெரிய குணம் 
கொண்டவங்க 
பூச நட்சத்திரத்தில பிறந்த நீங்க !

உங்க நட்சத்திர மரம் 
அரச மரத்தை நட்டு வளத்துவந்தா, 
நீங்க ஆசைப்பட்டது 
எல்லாம் அது அள்ளித்தரும்ங்க !  


இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











Sunday, August 18, 2019

ROOF WATER HARVESTING - VIDEO FILM - இன்று ஒரு குறுஞ்செய்தி


இன்று ஒரு குறுஞ்செய்தி 

கூரை நீர் அறுவடை 
குறும்படம் 



ROOF WATER HARVESTING

பூமி இயற்கை வள பாதுகாப்பு மையத்தில் ஒரே நாளில் 
30 ஆயிரம் லிட்டர் மழை நீரை  அறுவடை செய்தோம்.

நீங்களும் உங்கள் வீட்டில், கட்டிடத்தில் மழை அறுவடை செய்து தண்ணீர் செலவை மிச்சப்படுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்படிக்கு 
பூமி இயற்கை வள பாதுகாப்பி மையம் 
தேக்குப்பட்டு.
போன்: +91 8526195370

Saturday, August 17, 2019

சரக்கொன்றை - சரவிளக்கு பூக்களால் அலங்கரிக்கும் - GODEN SHOWER MAKE YOUR GARDEN SMILING



HOW TO MAKE YOUR GARDEN COLORFUL ?, 

உங்கள் தோட்டத்தை வண்ணமயமாக 
மாற்றுவது எப்படி ?



சரக்கொன்றை -

சரவிளக்கு பூக்களால் 

அலங்கரிக்கும்

 

GODEN SHOWER

MAKE YOUR 

GARDEN 

SMILING


தாவரவியல் பெயர் 
கேசியா பிஸ்டுலா 
(CASSIA FISTULA)

 





நந்தியாவட்டம் வீட்டுத் தோட்ட சிறு பூமரம் NANTHIYAVATTAM SMALL FLOWERING TREE


நந்தியாவட்டம் வீட்டுத் தோட்ட சிறு பூமரம் 

NANTHIYAVATTAM  SMALL FLOWERING TREE

சிறு பூமரம் 

தாவரவியல் பெயர் ;
TABERNAEMONTANA 
DIVARICATA










புனர்பூசம் நட்சத்திர மரம் மூங்கில் - இன்று ஒரு குறுஞ்செய்தி MOONGIL - PUNARPOOSAM BIRTH STAR TREE - NEWS TODAY


புனர்பூசம்

நட்சத்திர மரம் 

மூங்கில்     - இன்று ஒரு  

குறுஞ்செய்தி

 

MOONGIL - PUNARPOOSAM

BIRTH STAR

TREE - NEWS TODAY




புனர்பூசம் நட்சத்திரத்தில் 

பிறந்து, எட்டாத உயரம் வளர்ந்தாலும் 

ஏழை பாழைகளுக்கு இறங்கி உதவும் 

இரக்க குணம் கொண்ட எஜமான் நீங்க

உங்க நட்சத்திர மரம் மூங்கிலை 

முழு நம்பிக்கையோட 

நட்டு வளர்த்து வந்தா

தோஷங்களோட

துன்பமும் துயரமும் நீங்கும்

இன்பமும் இனிமையும் ஓங்கும்.



இப்படிக்கு 

குறுஞ்செய்தி 

கோவாலு











Friday, August 16, 2019

மெக்சிகன் சைகாமோர் அழகிய மருத்துவ மரம் - MEXICAN SYCAMORE - BEAUTIFUL MEDICINAL TREE


மெக்சிகன் சைகாமோர்
அழகிய மருத்துவ  மரம்


MEXICAN

SYCAMORE -  

BEAUTIFUL

MEDICINAL TREE


மெக்சிகன் சைகாமோர்
(MEXICAN CYCAMORE)
8888888888888888888888888888888888

தாவரவியல் பெயர்: பிளாட்டேனஸ் மெக்சிகானா(PLATANUS MEXICANA)
தாவரக் குடும்பம் பெயர்: பிளாட்டேனேசி ( PLATANAECEAE )தாயகம்: அமெரிக்காவின் கிழக்குப்பகுதி (EASTERN UNITED STATES)பொதுப் பெயர்கள்: மேக்சிகன் சைகாமோர், மேக்சிகன் பிளேன.  (MEXICAN SYCAMORE, MEXICAN PLANE )அழகு மரம் (ORNAMENTAL TREE )

8888888888888888888888888888888888888


இங்கு சாலைகள்  மற்றும் பூங்காக்களில் நடுவதற்கான மரம் இது. இதiனை பராமரிக்க அதிக அளவு தண்ணிர் தேவை இல்லை. வெள்ள நீரைத் தாங்கும் தன்மையுடையது.    மரங்கள் 50 அடி உயரம் நிமிர்ந்து வளரும். 30 அடிக்கு படர்ந்து வட்ட வடிவமாகவும்    முட்டை வடிவமாகவும் குடைபோல வளரும். கொஞ்சம் கூடுதலான இடம் தேவைப்படும். இலை உதிர்க்கும் மரம். இதன் வயது சுமார் 150 ஆண்டுகள்.

இலைகள் கைவிரல்கள் போன்ற அமைப்புடையவை. வெளிர் பச்சை நிறத்தில் தோன்றும் .இதன் இலைகள், முதிர்ந்தவுடன் வெண்கல நிறம் மற்றும் தங்கநிறச் சாயை பெறும், உதிர்வுக்கு முன்னால்.

பூக்கள் பற்றி சிறப்பாக சொல்வதற்கு எதுவும் இல்லை.  துளிர்விடும் காலத்தில் (SPRING) பூக்கும்.  ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக ஒரே மரத்தில் பூக்கும் (MONOECIOUS).  இலையுதிர் அல்லது குளிர்ப்பருவங்களில் (FALL OR WINTERகாய்க்கும்.

ஒரு மரத்தை வீடுகளில் அல்லது பொது இடங்களில் அழகுக்காக, அல்லது நிழலுக்காக என்று நடும்போது அதில் வந்த அளவு குப்பை விழும்? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை அவற்றை சுத்தம் செய்ய வேண்டும், என்பது பற்றி எல்லாம் தெரிந்த கொண்டு பின்னர் தான் அந்த மரம் நட அனுமதி தருகிறார்கள்.  உதாரணமாக இந்த சைகோமோர் மரங்களிலிருந்து, உலர்ந்த பழங்கள், இலைகள், குச்சிகள் போன்றவை குப்பைகளாக விழ வாய்ப்பு உள்ளது.

எப்படிப்பட்ட இடங்களில் வளரும்(SUITABLE HABITAT)

சைகோமோர் மரங்களுக்கு முழுமையான சூரிய வெளிச்சம் அவசியம்.  சுமாரான அளவு நிழலைத் தாங்கி வளரும்.  ஈரம் மிகுந்த மண்கண்டம் மற்றும் வறண்ட பிர தேசங்களிலும் நன்கு வளரும்.  வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உடைய மரம்.  களிமண், இருமண்பாடான மண், மற்றும் மணற்சாரியான மண்பரப்பில் இந்த மரங்கள் நன்கு வளரும்.  அமிலத்தன்மை மற்றும் உப்புத்தன்மை மிகுதியான மண்கண்டத்திலும் நன்கு வளரும்.  கடற்கரைப் பகுதி மணலிலும், அதன் உப்புத்தன்மையைத் தாங்கி சுமாராக வளரும்.

இந்த மெக்சிகன் சைகோமேர் மரங்கள், வேகமாக வளரும்.  அதிகபட்சமாக 50 அடி உயரம் வரை வளரும். இதன் வயது சுமார் 60 ஆண்டுகள்.  இந்த மரங்கள் ஆற்றங்கரைகள், மற்றும் ஒடைக்கரைகளில் அதிகம் வளர்ந்துள்ளன.

சைகோமோர் மரங்கள் உலகின் எந்த மூலையில் இருத்தாலும், அவை ஏச்சம் ஒரு வகையில் மெக்ஸிகோவுடன் தொடர்புடையவையாக இருக்கும் என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.  அடுத்த 20 ஆண்டுகளில், அழகுமரமாக இதற்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்றும் சொல்லுகிறார்கள்.

இதன் மரப்பட்டை, வெள்ளையடித்தது போல தென்படும்.  இலைகள் கரும்பச்சை நிறத்தில் ஐம்பிரிவுகளாக பார்ப்பதற்கு பருத்திச் செடியின் இலைகள் போல இருக்கும்.

தற்போதுள்ள சூழலில் அழகுத் தோட்டம் அமைக்கும் பணிகளில் எல்லாம், அமெரிக்கன் சைகாமோர் மரங்களுக்குப் பதிலாக மெக்சிகன் சைகாமோர் மரங்களை சிபாரிசு செய் கிறார்கள்.

ஆக்கிரமிக்கும் மரம் அல்ல (NON INVASIVE TREE)

வெளிநாடுகளிலிருந்து, அமெரிக்காவில் நட சிபாரிசு செய்யும் போதெல்லாம், அதனை ஆக்கிரமிப்புத் தன்மையுடைய மரமா(INVASIVE TREE SPECIES) என்று பரிசோதனை செய்து பார்த்த பின்னர்தான் சிபாரிசு செய்வார்கள்.

இதன் இலைகள் மற்றும் பழங்களை தும்மல், இருமல் போன்ற சுவாசம் தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பொதுவான மரத்தேவைகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள்.

விதைகளை விதைத்தும், கிளைத் துண்டுகளை நட்டும், பதியன்கள் மூலமாகவும் புதிய மரங்களை உருவாக்கலாம்.  நன்கு முளைக்க புதிய விதைகளை உடனே விதைக்கலாம்.  விதைகளை சேமித்து வைத்தும் விதைக்கலாம்.

தத்துவ அறிஞர் பிளாட்டோவால் எழுதப்பட்டது (WRITTEN BY PLATO)

சைகாமோர் மரங்கள் மிகவும் பழமையானவை.  பிளாட்டோ தனது பேட்ரஸ் (PHAEDRUS) என்னும் நூலில் சைகோமோர் மரங்கள் பற்றி எழுதி உள்ளார்.  மேலும் டிரை ட்ரீ (DRY TREE) என்று மார்கோலோலோ தனது குறிப்பகளிலும் எழுதி உள்ள மரமும் இது தான் என்றும் சொல்லுகிறார்க்ள.

இந்த சைகோமோர் மரங்கள் பைகஸ் சைகோமோரஸ்  (FICUS SYCOMORUS) என்று சொல்லப்படும் அந்த மரத்துடனும், சைகோமேர் மேப்பிள் ;(SYCOMORAN MAPLEஎன மேப்பிள் மரத்துடனும் தொடர்புடையது எனத் தெரிகிறது.

இப்போதைக்கு நாம் அதுபற்றி எல்லாம் வேலைப்பட வேண்டும்.  வட அமெரிக்காவில் அழகுமரமாக அதிகம் பயன்படுத்தும் மரங்களில் ஒன்று இந்த மெக்சிகன் சைகோமோர், மரம்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. ஊமத்தை   ரேபிஸ் நோயை  கட்டுப்படுத்தும்  அரிய மூலிகை -    DATURA  A VALUABLE MEDICINE AGAINST RABIES – Date of Posting; 24.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/datura-best-traditional-herbal-tree.html

2. நீர் பார்க்காத  நான் பார்த்த  மொஜாவ்   பாலைவன  மரங்கள் -  WATER STARVING  TREES OF  MOJAVE  DESERT – Date of Posting; 17.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/water-starving-trees-of-mojave-desert.html

3. செக்கோயா  உலகின்  உயரமான   செக்கோயா மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE – Date of Posting; 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html

4. கலிபோர்னியா  விசிறிப்பனை   சாலைகளுக்கு அழகு தரும் மரம்  -    CALIFORNIA    FAN PALM -    GRACEFUL TREE – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/california-fan-palm-graceful-tree.html

5. டவுக்ளஸ்  பிர் -  பிரபலமான   மின்சார மரம் DOUGLAS FIR - - UTILITY  POLE TREE  – Date of Posting; 16.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/douglas-fir-popular-utility-pole-tree.html

6. சில்க்பிளாஸ்- ஹாலிவுட் அழகுமரம்        -         SILK FLASS -   HOLYWOOD  BEAUTY  TREE  – Date of Posting; 15.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/silk-flass-holywood-beauty-tree.html


7. செடார்  எல்ம் - உறுதி மிக்க  பாறை மரங்கள் -   CEDAR  ELM - STRONG TIMBER TREE – Date of Posting; 14.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/cedar-elm-strong-timber-tree.html

8. டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல்  ட்ரீ - அழகு மரம்      TEXAS MOUNTAIN LAUREL - AWESOME  TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-mountain-laurel-awesome-tree.html

9. சைனிஸ் பிஸ்டாச்சி  மிரட்டும்  அழகு மரம் - CHINESE PISTACHE -  TREE OF STUNNING  BEAUTY – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chinese-pistache-tree-of-stunning-beauty.html

10. டெக்ஸாஸ் பெர்சிமான் - சிற்பமும் சிலையும் செய்ய ஏற்ற பழமரம் TEXAS PERSIMON -   EXCELLENT TIMBER TREE – Date of Posting; 11.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/texas-persimon-excellent-timber-tree.html

11. சுமார்டு சிவப்பு ஒக் மரம் - கலக்கலான  வணிக மரம்       SHUMARD  RED OAK - TOP CLASS BUSINESS TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/shumard-red-oak-top-class-business-tree.html

12. சாவன்னா  ஹோலி - அழகான  காட்டுமரம்       -       SAVANNA    HOLY -   PRETTY  WILD TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/savanna-holy-pretty-wild-tree.html

13. ரீகல் பிரின்ஸ் ஒக்   -   மரங்களின்  சகல கலா வல்லவன் - REGAL PRINCE  OAK  A VERSATILE  TREE – Date of Posting; 10.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/regal-prince-oak-versatile-tree.html

14. மக்னோலியா -  ஒரு மரமே  சிறு வனமாகும்  -  MAGNOLIA - ONE TREE  FOREST – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/magnolia-one-tree-forest.html


15. லைவ் ஒக் -  சமையல் எண்ணை    மரம்    LIVE OAK  -   COOKING OIL TREE  – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/live-oak-cooking-oil-tree.html

16. ஈஸ்டன் ரெட் செடார் வாசனைத்திரவிய மரம்    EASTERN  RED  CEDAR TREE OF PERFUMES – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/eastern-red-cedar-tree-of-perfumes.html

17. சிட்டல்பா சேம்பியன் ட்ரீ  அங்கீகரிக்கப்பட்ட   அழகு மரம் -  CHITALPA CHAMPION  A STUNNING BEAUTY – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/chitalpa-champion-stunning-beauty.html

18. ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT – Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html

19. பிக் டூத் மேப்பிள்  சக்கரை  மரம் -  BIG TOOTH MAPLE  SUGAR TREE– Date of Posting; 08.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-tooth-maple-sugar-tree.html

20. பால்ட் சைப்ரஸ்  பாரம்பரிய  மருத்துவ மரம் -  BALD CYPRESS  A TRADITIONAL  HERB  – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bald-cypress-traditional-herb.html

21. புளு அட்லஸ் செடார்  தொழில் மரம் -  BLUE ATLAS CEDAR TREE OF INDUSTRIES – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-tree-of-industries.html

22. அனாகேச்சோ ஆர்கிட்  அழகு பூமரம்” -   ANACACHO ORCHID  GRACEFULL  FLOWERING  TREE – Date of Posting; 07.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/anacacho-orchid-gracefull-flowering-tree.html

23. கிரேப் மிர்ட்டில்   நீண்ட பூங்கொத்து மரம்      CRAPE MYRTLE     GLAMOROUS     FLOWERING TREE – Date of Posting; 06.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html
  
24. ஜோஷுவா  அமெரிக்க  பூர்வகுடிகள் மரம் -  JOSHUVA  TREE OF AMERICAN  NATIVES – Date of Posting; 02.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/joshuva-tree-of-american-natives.html

25. பப்பாளி உடல் எடை  குறைப்பு மரம்  - PAPAYA  BODY WEIGHT REDUCING TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/papaya-body-weight-reducing-tree.html

26. கார்டியா -  மரச்சாமான்  மரம்-    CORDIA   NICE WOOD WORK  TREE– Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/cordia-nice-wood-work-tree.html

27. பிக்சேஜ் எனும்  நோய் போக்கும்  உண்ணி மரம் - BIG SAGE  A  PLEASING HERB TOO– Date of Posting; 22.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/big-sage-pleasing-herb-too.html

28. டாக்வுட் ட்ரீ - மலேரியாவை  குணப்படுத்தும் மரம்  -  DOG WOOD  ANTI MALARIA  TREE – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/dog-wood-anti-malaria-tree.html

29. சிவப்பு  மேப்பிள்  மலிவான  மரவாடி மரம் - RED  MAPLE    CHEAP TIMBER TREE  – Date of Posting; 13.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/red-maple-cheap-timber-tree.html


REFERENCES:
1. WWW.SELECT TREE.CALPOLY.BDU/- “ SRBAN FOREST ECO SYSTEMS INSTITUTE- SELECT TREE: MEATCAN SYCAMORE – PLATANUS MEXICANA.
2. WWW.AUSTINTREEEXPENTS.COM “MEACAN SYCAMORE”
3. WWW.LANDSCAPE PALNTS.OREGAN STATE.EDT – “ LONDSCADE PLANTS – “ PLATANUS MEXICANA”.
4. WWW.NWD DISTRICT.IFAS.UFL.EDU. – UNIVERSITY OF FLORIA – MEAICAN SYCAMORE
5. WWW.TRODICAL. THE EFRNS.INFO USEFUL TROPICAL PLANTS – PLOTANUS MEXICANA.
WWW.EN.WIKIPEDIA.ORG-“PBAPANUS”

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...