Thursday, August 1, 2019

வெள்அத்தி மரம் சித்தப்பிரமையை சீராக்கும் மூலிகை VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS


வெள்அத்தி மரம் 

சித்தப்பிரமையை  சீராக்கும் 

மூலிகை 


  VELL-ATHI MARAM CURE

MENTAL DISORDERS 



தாவரவியல் பெயர்: பைகஸ் வைரன்ஸ் (FICUS VIRENS)தாவரக்குடும்பம் பெயர்: மோரேசி (MORACEAE)தாயகம்: இந்தியா (INDIA)

88888888888888888888888888888888

இந்த மரத்தின் இலை குறிப்பாக மூளையில் ஏற்படும் ரத்த கசிவு தலைச்சுற்றல் நோய் சித்தப்பிரமை போன்றவற்றை குணப்படுத்த இந்த உதவியாக இருக்கிறது.

இந்த கல்ஆல மரத்தின் கிளைகளை யானைகள் விரும்பி சாப்பிடும்.

ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் திரைச்சீலை அத்தி மரம். அங்கு ஒரு வெள்அத்திமரம்; ஒரு நகரையே சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறது.

8888888888888888888888888888888888888

ஆண்லிங்கம் பெண்லிங்கம்

நான் சமீபத்தில் ஆந்திராவில் பிச்சாட்டுர் என்ற கிராமத்திற்கு போய் இருந்தேன்.; அங்கு வட இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.; அவருடைய பண்ணையில் ஒரு இடத்தில் ஆண்லிங்கம் பெண்லிங்கம் உள்ளது என்று சொன்னார்.; எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே தெய்வீகமான ஒரு மரமும் இருக்கிறது என்று சொன்னார். இரண்டு லிங்கங்களுக்கும் தனித்தனி கிணறுகள் தனித்தனியாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் பாதுகாக்க அங்கு ஒரு ராஜநாகம் இருக்கிறது என்றார்.; நல்லவர்கள் யாரையும் அது எதுவும் செய்யாது. குறுக்கே அல்லது அருகில் யாராவது வந்துவிட்டால் ஐந்து அடி உயரம் எழுந்து படமெடுத்து நிற்கும். நாம்; அப்படியே நின்று விட்டால் அது  போய்விடும் என்றார். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு திகிலாக இருந்தது. 

வெள் அத்தி

தொடர்ந்து நாம் இப்போது அங்கு போகலாம் என்று சொன்னார். பிறகு அந்த இடத்திற்கு போனோம். ராஜநாகம் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்;தோம்.; அந்த மரத்தையும் பார்த்தோம்.; வித்தியாசமாக இருந்தது. என்ன மரம் என்று கேட்டேன் என்று ஹிந்தியில் சொன்னார்.; பார்க்க அந்த மரம் ஒரு சின்ன ஆலமரம் போல இருந்தது. இலைகள் ஆலமரம் மாதிரியே இருந்தது. ஆனால் காய்கள் வெள்ளையாக இருந்தது. காய்கள் எல்லாம் பட்டாணி சைஸில் இருந்தது. ஆனால் வெள்ளையாக இருந்தது. அதன் வேர்கள் பட்டை பட்டையாக கிணத்துக்குள்ளே இறங்கி இருந்தது. அன்றைக்கு எனக்கு தெரியாது அதுதான் வெள்அத்தி என்று.

1. வெள்அத்தி மரத்தின் பலமொழிப் பெயர்கள்.
1.1. தமிழ்: சிற்றால்> சுவி> இத்தி> கல்ஆல்> குருக்கத்தி> மலை இச்சி (SITRAAL, SUVI, ITHI, KAL AAL, KURUKKATHI, MALAI ICHI)
1.2. இந்தி: பிக்கான்> பக்காட் (PIKAN, PAKHAD)
1.3. மணிப்புரி: சிங் இபாங் (CHING IBONG)
1.4. மராத்தி: பஸ்ஸாரி> கந்தாம்பரா (BASSARA, GANDAUMBARA)
1.5. மலையாளம்: செராலா (CHERALA)
1.6. தெலுங்கு: படி ஜீவி> ஜட்டி (BADI JIVI, JATTI)
1.7. கன்னடா: கரிபசாரி> ஜூவ்வி (KARIBASARI, JUVVI)
1.8. குஜராத்தி: பெப்ரி (PEPRI)
1.9. சமஸ்கிருதம்: பிளாஸகா (PLASKA)
1.10. அசாமிஸ்: பக்கோரி (PAKORI)
1.11. பெங்காலி: பக்கார் (PAKAR)
1.12. பர்மிஸ்: ஹயாங் பேன் (HYANG PAN)
1.13. சைனீஸ்: ஹ_வாங் கே ஷ_ (HUANG GE SHU)
1.14. ஜெர்மன்: ஜாவா வீய்டி (JAWA WEIDE)
1.15. மலாய்: அம்புலு (AMBULU)
1.16. இந்தோனேஷியா: அரா நாசி (ARA NASI)
1.17. ஜாவா: வுனுட் பாங்கு (WUNUT PANGU)
1.18. நேப்பாளிஸ: சபேத் கப்ரா (SAFED KAFRA)
1.19. ஒரியா: ஜாரி (JARI)
1.20. பஞ்சாபி: ஜங்லி பிப்லி (JANGLI PIPLI)
1.21. உருது: பாக்ரையா (PAAKRAIYA)
1.22. சிங்களிஸ்: கலகாய்> காவுடுபோவா (KALAHAI, KAVUDUBOA)

யானைகள் விரும்பி சாப்பிடும்

இன்னொரு முறை மரக் கன்றுகள் விற்பனை செய்யும் இடத்திற்கு போய் கல்ஆலம் என்று சொன்ன மரக்கன்றை வாங்கி வந்தேன்.; இந்த கல்ஆல மரத்தின் கிளைகளை யானைகள் விரும்பி சாப்பிடும். அப்போது எனக்குத் தெரியாது கல்ஆலம் என்பதும் வெள்அத்தி என்று.

சங்க இலக்கியம் பேசும் மரம்

கல்ஆலம் என்பதும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்படும் குருக்கத்தியும் வெள்அத்திதான். இவை எல்லாமே நம் மண்ணுக்குரிய மரங்கள். சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட அந்த மரங்கள் எல்லாம் சமகாலத்தில் வேறு பெயர்களில் உள்ளன. சில இல்லாமலேகூட போய்விட்டன. இவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்புகளும் நமக்கு இல்லை. இவற்றை எல்லாம் தோண்டித் துருவி வெளிக்கொணரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆபத்தான மரமும்கூட

து ஆபத்தான மரமும்கூட. வித்தியாசமான மரங்களில் ஒன்றாகவும் இது பேசப்படுகிறது. காரணம் இதற்கும் விழுதுகள் உண்டு. ஆனால் அந்த விழுதுகள் நேரம் தரையில் இறங்காது நேராக அடிமரத்தை நோக்கி; இறங்கிச் சென்று அதனைக் கட்டிப் பிடித்து நெறிப்பதுமாதிரி சுற்றிக்கொள்ளும். அதனால் இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரேங்லிங் பிக்; (STRANGLING FIG) என்கிறார்கள். சுருக்குப்போடும் அத்தி’ என்று தமிழில் சொல்ல்லாம்.

இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் சொல்லுகிறேன். பறவைகள் வெள்அத்திப் பழத்தை தின்றுவிட்டு பறந்துபோய் வேறு மரக்கிளைகளில் எச்சமிடும். இந்த கிளைகளில் மீது முளைக்க ஆரம்பிக்கும். முளைக்கும் விதைகள் தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்.; இது வேறு மரங்களில் முளைத்தால்  இது ஒரு ஒட்டுண்ணியாக (PARASITE) செயல்படும்.

அது பெரிய மரமாக வளரும் போது நிறைய விழுதுகளை விட அந்த விழுதுகள் அந்தத் தாய்மரத்தின் அடிமரத்தில் இறுக்கமாக சுருக்குப்போடுவதுபோல சுற்றிக் கொள்ளும். வெளிச்சம்> காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டு அந்த மரம் காலப்போக்கில் பட்டுப்போகும்.

இயற்கையின் அதிசயம்

இதனை ஒரு இயற்கையின் அதிசயம் என்றுகூட சொல்ல்லாம். தரையில் விழும் விதைகள் முளைத்து தனிமரமாகும். ஆப்போது தனது வேர்களின் மூலமாகவே நிலத்திலிருந்து நீரையும்  ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்ளும். அது வளரத் தொடங்கிய பின்னர் அது ஆல் போல் தழைத்து பெரிய மரமாக வளரும். எவ்வளவு பெரிய இயற்கையின் அதிசயம் பாருங்கள்.

திரைச்சீலை அத்திமரம்

ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் திரைச்சீலை அத்தி மரம். அங்கு ஒரு வெள்அத்திமரம்; ஒரு நகரையே சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறது. அந்த நகரின் முக்கிய காட்சிப்பொருளே  அந்த ஒரு வெள்அத்தி மரம்தான். அதற்கு அங்கு வேறுபெயர் வைத்திருக்கிறார்கள். கர்ட்டன்பிக் (CURTAIN FIG ) என்பதுதான் அதன் பெயர்;. ஒரே ஒரு மரம். பிரம்மாண்டமான மரம். ஒரு ஜன்னலுக்கு கர்ட்டன் போட்ட மாதிரி அதன் விழுதுகள் வளர்ந்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள். இந்த மரத்தைப் பார்த்து திறந்த வாயை மூடாமல் போகிறார்களாம்.

இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரம்

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பான் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. மரங்களிலும் இப்படி உண்டு. அக்கம்பக்கத்தில் இருக்கும் மரங்களை வாழவிடாது. அப்படிப்பட்ட மரங்களை இன்வேசிவ் ஸ்பீசிஸ் (INVASIVE SPECIES) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.; நான் அது பற்றி எழுதும்போது இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரங்கள் என்று குறிப்பிடுவேன். ஆனால் அதற்கு பொருத்தமான மரம் இதுதான்.

இது பற்றி சில நண்பர்களிடம் பேச்சு வாக்கில் சொன்னேன்.; இது போன்ற மரங்கள் பல இடங்களில் பனை மரங்களை சுற்றி வளைத்து இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.; அது போன்ற பனைமரங்களை நானும் பார்த்திருக்கிறேன்.;
இந்தியாவில் இது புனித மரமாகக் கருதப்படுகிறது இந்த மரத்தை கட்டிடங்கள் கட்டவோ வேறு மரச்சாமான்களோ செய்யப் பயன்படுத்தக் கூடாது.  அப்படி செய்தால் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்த மரத்தின் இலை பூ மரம் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பொருளாக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.; மிகவும் வித்தியாசமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உடையது. இந்த மரத்தின் இலை குறிப்பாக மூளையில் ஏற்படும் ரத்த கசிவு தலைச்சுற்றல் நோய் சித்தப்பிரமை போன்றவற்றை குணப்படுத்த இந்த உதவியாக இருக்கிறது.


FOR FURTHER READINGON RELATED TOPICS


1. காரை மரம்   அனைத்து   மருத்துவ   முறைகளும்   பயன்படுத்தும்   மூலிகை -   KARAI MARAM  HERB  FOR ALL  MEDICAL SYSTEMS – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

2. புளிச்சக்காய் மரம் உலகம் முழுக்க                                              பிரபலமான  மூலிகை  -  PULICHAKKAI MARAM WORLD RENOWNED HERB– Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/karai-maram-herb-for-all-medical-systems.html

3. மதுக்காரை மரம்   அற்புத ஆயுர்வேத   மூலிகை    MADHUKKARAI    ACCEPTED AYURVEDIC HERB    – Date of Posting; 01.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/madhukkarai-accepted-ayurvedic-herb.html

4. மலைவேம்பு மரம்                                              எல்லா மருத்துவ                                             முறைகளுக்கும்                மருந்தாகும்               மூலிகை  -   MALAIVEMBU MARAM OUTSTANDING  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/malaivembu-maram-outstanding-tree-herb.html

5. நொச்சி மரம்   பல நோய்   குணப்படுத்தும்   மூலிகை   -   NOCHI MARAM -  MULTISPECIALITY  TREE HERB – Date of Posting; 06.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/nochi-maram-multispeciality-tree-herb.html

6. மருத்துவம் பேசும் 21 மரங்கள்     - 21  MEDICINAL TREES   BOOK   – Date of Posting; 03.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/21-21-medicinal-trees-book.html

7. வெள்அத்தி மரம்  சித்தப்பிரமையை  சீராக்கும்  மூலிகை     VELL-ATHI MARAM CURE MENTAL DISORDERS – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/vell-athi-maram-cure-mental-disorders.html

8. பன்னீர்மரம்  ஒரு  பாலுணர்வுத் தூண்டி  மூலிகை மரம் -  PANNEER MARAM  NATURAL SEX DRIVING HERB – Date of Posting; 26.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/panneer-maram-natural-sex-driving-herb.html
9. மலம்புளுவன்   பாலைவன  மருத்துவ மரம்  MALAMBULUVAN -  MATCHLESS   DESERT  TREE HERB – Date of Posting; 27.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/malambuluvan-matchless-desert-tree-herb.html

10. சேங்கொட்டை - பெண்களுக்கான   கருத்தடை மூலிகை -  SENKOTTAI  SUPREME  FAMILY PLANNING HERB – Date of Posting; 29.12.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/senkottai-supreme-family-planning-herb.html

11. இடலை மூலிகை மரம்  பாம்புக்கடியை  குணப்படுத்தும்     IDALAI MARAM  CURES SNAKE BITES – Date of Posting; 30.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/idalai-maram-cures-snake-bites.html

12. காட்டலரி பல நோய்களை   கட்டுப்படுத்தும்   சிறந்த  மூலிகைமரம்   - KATTALARY HERB  CURE MANY DISEASES – Date of Posting; 21.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/kattalary-herb-cure-many-diseases.html

13. வெட்சி - உடல் பருமனாதல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பூமரம் -  VETCHI - DIABETES AND OBESITY CURING HERB – Date of Posting; 25.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/vetchi-diabetes-and-obesity-curing-herb.html

14. புத்திரன்ஜீவா - குழந்தை பாக்கியம் தரும் மரம் - PUTRAN JIVA – UNISEXUAL  FERTILITY TREE  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/putran-jiva-unisexual-fertility-tree.html

15. நஞ்சுள் மரம் சிசேரியனிலிருந்து  கர்ப்பிணிப்  பெண்களை  காப்பாற்றும்  மரம் -  NANJUL – SAVE  PREGNANT MOTHERS  – Date of Posting; 26.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/nanjul-save-pregnant-mothers.html

16. சூரை  இலந்தை ஒரு  ஆயுர்வேத மருத்துவ மரம்  - SOORAI ILANTHAI – AN AYURVEDIC  MEDICINAL TREE – Date of Posting; 30.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/soorai-ilanthai-ayurvedic-medicinal-tree.html


17. நாட்டு பாதாம்கொட்டை வைரஸ் நோய் நீக்கும்   மருந்து மரம் - NATTU PADHAMKOTTAI  -  IDEAL  TREE HERB  – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/nattu-padhamkottai-ideal-tree-herb.html

88888888888888888888888888888888888888



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...