Sunday, July 14, 2019

ஹென்றிபோர்ட்’ டின் வெற்றி சூத்திரம் - SUCCESS FORMULA OF HENRY FORD

ஹென்றிபோர்ட்’ டின்

 வெற்றி சூத்திரம் 


SUCCESS FORMULA OF


HENRY FORD





உலகின் மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்தவர். தன்னிடம் வேலையாட்களுக்கு மிகஅதிகமாகப் படியளந்தவர். ஆனால் அதற்கும் மேலான லாபத்தை பார்த்தவர்.; தான் உற்பத்தி செய்த பொருட்களை பேராசையின்றி குறைவான விலைக்கு விற்பனை செய்தவர். தன்னுடைய தொழிலாளிகளையும் பொதுமக்களையும் கொள்ளையடித்தால்தான் கோடீஸ்வரனாக முடியும் என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கியவர் ஹென்றி போர்டு. அதனால்தான் இன்று உலகம் முழுவதும் போர்டு கம்பெனி கார்கள் ஹென்றி போர்டின் பெயரை உச்சரித்தபடி ஒடுகின்றன.)

ஹென்றி என்று கூப்பிடுங்கள்

பல கோடிகளுக்கு அதிபதியான போர்டு கார்கம்பெனி அதிபர் ஹென்றி போர்டு சம்பாதித்த ஒவ்வொரு பைசாவும் அப்பழுக்கில்லாதது. நியாயமான வழியில் பெரும்பணம் சம்பாதிக்கும் வித்தையை பிறருக்கு சொல்லித் தந்தார்.

வானத்திலிருந்து தேவதை எதுவும் அவருக்கு எதையும் வாரி வழங்கவில்லை. எல்லாம் அவருடைய முயற்சி வழிகாட்டுதல் அவருடைய தொழிலாளர்களின் உண்மையான உழைப்பு.
எவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தபோதும் எவ்வித ஆடம்பரமான பட்டங்களையும் விருதுகளையும் அவர் விரும்பியதில்லை.

ஒரு மிஸ்டர் போட்டுக்கூட தன் பெயரைச் சொல்வதை அவர் விரும்பமாட்டார்.; ஹென்றி என்று கூப்பிடுங்கள் என்பார்.

எடுபிடி பையன்

டெட்ராய்ட் நகருக்கு கூப்பிடு தூரத்து கிராமத்தின் விவசாய குடும்பத்தில் 1863 ம் ஆண்டு பிறந்தார். அவர் அப்பா ஐரிஷ் நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்.

சின்ன வயசில் ஹென்றிக்கு மண்டையில் படிப்பு ஏறவில்லை. தனது 15 வது வயதில் துணிச்சலாக படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வாரம் சொற்பமான கூலிக்கு எஞ்சின் வேலை பார்க்கும் ஒரு பட்டறையில் எடுபிடி பையனாக சேர்ந்தார்.

ஒரு குழந்தை தொழிலாளராக தனது வேலையைத் தொடங்கிய ஹெ.போ பல ஆண்டுகள் வேலைபார்த்துவிட்டு தனது பண்ணைக்குத் திரும்பினார்.

அந்த காலகட்டத்தில் அவர் செய்திருந்த முக்கியமான ஒரு காரியம் அடுத்த வீட்டுப் பெண்ணை கல்யாணம் முடித்திருந்தார்.

குதிரை இல்லா வண்டி

ஒரு பிரென்ச்சுக்;காரர் கண்டுபடித்ததாக குதிரை இல்லாமல் ஓடும் வண்டி ஒன்றின் படம்; ஒரு செய்தித் தாளில் பாரத்தார் ஹென்றி. காருக்கு அந்த காலத்து பெயர் குதிரை இல்லா வண்டி. அந்த நிடத்திலிருந்து அந்த குதிரையில்லா வண்;டி ஹென்றியின் மனதில் ஓடத் தொடங்கிவிட்டது. அவருடைய வாழ்க்கையை தலை குப்புற மாற்றிப் போட்ட சம்பவம் இதுதான்.

கொஞ்ச நாட்களாய் பண்ணை வேலைகளை பார்த்துவந்தவர் அவற்றை எல்லாம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு குதிரை இல்லா வண்டி தயார் செய்வதற்கான பட்டரை ஒன்றை தவணை முறையில் ஏற்பாடு செய்தார்.

ஒரு பழைய மாடல் எஞ்சின் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து பட்டறையில் வைத்து தனது பரிசோதனைகளைத் தொடங்கினார்.

ஆளுக்கு ஆள் கொடுத்த அட்வைஸ்

அந்த வட்டாரத்தின் மிகப்பெரிய கோமாளித்தனம் என்று எல்லோரும் பேசத் தொடங்கினர்.
அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் ஆண்கள் பெண்கள் சிறியவர் பெரியவர் இப்படி வயசு வித்தியாசம் இல்லாமல் அங்கு வந்தார்கள் ஹென்றியைப் பார்த்து சிரிப்பதற்காக.
வேற வேலை எதுவும் ஒனக்கு கிடையாதா? என்று ஆளுக்கு ஆள் கொடுத்த அட்வைஸ் தாங்க முடியாமல் மீண்டும் டெட்ராய்ட் நகரத்துக்கு ஓடிப்போய் ஒரு மெக்கானிக் கடையில் 150 டாலர் மாதச்சம்பளத்திற்கு சேர்ந்தார்.

பகலில் வேலை 
ராத்திரியில் 
ஆராய்ச்சி

பகல் முழுக்க சமபளத்திற்கு வேலை இரவு முழுக்க சொந்த பட்டறையில் குதிரை இல்லா வண்டி தயாரிப்பு வேலை என்று நாட்கள் நகர்ந்தன. ஆனால் வண்டி மட்டும் நகரவில்லை.
ஒரு நாள் போர்டின் வண்டி ஆமை வேகத்தில் நகர ஹென்றியின் மனசில் நட்சத்திரம் ஒன்று கண் சிமிட்டியது.

எட்டு ஆண்டுகள் இப்படி கண் சிமிட்டிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி ஒரு போட்டியில் ஜெயித்து. ஒரே நாளில் ஹென்றி பிரபலம் ஆனார். ஹென்றிக்கு மரியாதை கூடியது.

ஜெயிக்கும் குதிரை

கொடுக்கிற சாமி கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்ற பழமொழியை மாற்றி சாமியே பணத்தோடு உள்ளே குதித்தது. போர்டு மோட்டார் கம்பெனி வைக்க முதலீடுகள்  குவிந்தன. நண்பர்கள் நீ நான் என்று போட்டி போட்டபடி டாலர்களை குவித்தனர்;. போட்ட பணம் உறுதியாக வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே வந்துவிட்டது. இப்போது ஹென்றிபோர்டு பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரை. வெற்றிகளை குவிக்கும் குதிரை.

தரத்தை உயர்த்தும் கொள்கை


திறமைசாலிகளை தேடிப்பிடித்து தனது நிறுவனத்தில் பணியாளர்களாக நியமித்தார்.
அவரை ஒரு தொழிலதிபர் என்றோ வியாபாரி என்றோ சொல்லமுடியாது. அவர் அடிப்படையில் ஒரு மெக்கானிக். மெக்கானிக்காக இருந்து ஒரு கண்டுபிடிப்பாளராக மாறியவர்.

தான் செய்யும் வேலை அல்லது உற்பத்தி எதுவாக இருந்தாலும் அதன் தரத்தை மேலும் மேலும் உயர்த்துவது என்பதை கொள்கையாகக் கொண்டு வாழ்க்கையை ஜெயித்தவர்.
இந்த திரேகத்தில் இந்த திறமைகளை எந்த இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார் என்று சொல்லும்படியாக வெயிலில் காய்ந்து தீய்ந்து போன ஒரு முருங்கைக்காய் மாதிரியான பர்சனாலிட்டி ஹென்றிபோர்டு.

ஹென்றிபோர்ட்டின் வெற்றி சூத்திரங்கள்


பிரச்சினைகளை தீர்;த்துக் கொள்ளும்; திறமை> மனிதர்களை மனங்கோணாமல் கையாளும் நேர்த்தி> யாரையும் பகைத்துக் கொள்ளாத பக்குவம்> லாபம் தரும்படியாக பொருட்களை உற்பத்தி செய்யும் லாவகம் அனைத்தும் ஹென்றிபோர்ட்டின் வெற்றி சூத்திரங்கள்.
ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒரு ஹென்;றிபோர்டு இருந்தால் போதும். தொழிலாளிகளுக்கு நியாயமான சம்பளம் வரும்;. வேலைநிறுத்தம்; வராது. தொழிற்சாலை நஷ்டத்தில் நடைபோடாது.

லேபர் லீடர்


ஓர் தொழிற்சாலையின் முதலாளியாக இருந்ததைவிட அவர் ஒரு லேபர் லீடராக இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

தொழிலாளிகள் கேட்டதைவிட அதிகம் கொடுத்தார், அவர்கள் வேலை செய்ய ஏற்ற சூழலை அவர்கள் எதிர்பாராத வகையில் ஏற்படுத்திக் கொடுத்தார்.

உலகின் எந்த தொழிற்சாலையும் ஹென்றிபோர்டுக்கு சமமான ஒரு முதலாளியைப் பார்க்கவில்லை.

ஐம்பதாயிரம் தொழிலாளர்களும்> 2000 போர்மென்களும் அவருடைய தொழிற்சாலையில் வேலை பார்த்த அதிர்ஷ்டசாலிகள்.

1914 ம் ஆண்டு திடீரென்று; கூலித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார். அடுத்த ஆண்டே ஹென்றி எப்போதும் காணாத அளவு லாபம் கிடைக்குமாறு பதில் அதிர்ச்சி கொடுத்தனர்> அவருடைய தொழிலாளிகள்.


கருணை கொண்ட 
தொழிற்சாலை


தொழிலாளர்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக மட்டும் 30 அலுவலர்களை வேலைக்கு வைத்திருந்தார். அப்படி தெரிவு செய்யப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டன.

பல சர்ச்சுகளைவிட அவருடைய தொழிற்சாலை; கருணை மிக்கதாக விளங்கியது. கிட்டத்தட்ட 400 கைதிகளுக்கு வேலைவாய்ப்பு தந்தார். இரண்டாயிரம் தொழிலாளர்கள் உடல் ஊனமுற்றோர்.

உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு அவர்களால் செய்ய முடிந்த வேலைகளே ஒதுக்கப்பட்டன. அவர்களுடைய உடைகளில் லேசான வேலைகளுக்கு மட்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

சிறைத் தண்டனை பெற்றவர்கள்> உடல் ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்பதை தனது கொள்கையாக வைத்திருந்தார்.

வேலைநிறுத்தம் 

இல்லாத 

கம்பெனி


அவரிடம் 700 பெயிண்ட்டர்கள்> அது தவிர ஜன்னல் கழுவ> தச்சுவேலை செய்ய என்று சிறப்பு பணியாட்களும் வேலைபார்த்தனர்.

அவருக்கு தொழிற்சாலை; பார்க்க பளிச் சென்று ஒரு சமையலறை போல சுத்தமாக இருக்க வேண்டும்.

பவுண்டரியில் எழும் புகையை 12 நிமிடத்திற்கு ஒரு முறை வெளியேற்ற வேண்டும். எந்த பகுதியும் அதிக வெப்பமாகவோ குளிராகவோ இருக்கக் கூடாது.

வேலைநிறுத்தம்  என்ற வார்த்தை ஹென்றி போர்டு அகராதியில் பார்க்கமுடியாதது. ஹேன்றி போர்டுக்கு நிர்வாகிகள் ஒரு கண் என்றால் தொழிலாளிகள் இன்னொரு கண்.

8888888888888888888888888888888888
NOTE: Please write your comments with your email id and phone number.


1 comment:

சுப்ரமணிய பாலா said...

நல்ல தகவல் ஓரே வருத்தம் ஏனோ Ford கம்பனியை இந்தியர் ஆதரிக்கவில்லை...இப்ப இங்கஇப்ப ford இந்தியாவில் இல்லை...தொழிலாளர் நலன் பேணிய நல்ல மனிதர் புகழ் ஓங்கட்டும்..பாலா சுப்ரமணிய பாலா

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...