Monday, July 1, 2019

சிறு நாகப்பூ மிசோரம் மாநிலத்தின் அரசு மரம் - SIRUNAGAPPOO STATE TREE OF MIZORAM


சிறு நாகப்பூ
 மிசோரம் 
மாநிலத்தின் 
அரசு மரம்

SIRUNAGAPPOO
STATE  TREE OF
MIZORAM


பூமி ஞானசூரியன், செல்பேசி :+91-8526195370

888888888888888888888888888

ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலத்து மக்கள் இதன்  எண்ணெயில்தான்  விளக்கு எரிச்சாங்க;  இதன் மரம் கடினமானது; 14 ம் நூற்றாண்டில் செய்த  இந்த மரத்தின் தூண்கள் இன்றும் உறுதியாக உள்ளனவாம்; கிட்டத்தட்ட  100 அடி உயரம் வளரும்; சாம்பல்,பசுமை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த தொங்கும்  அமைப்புடைய அழகிய இலைகள்; பெரிய வாசனையான பூக்கள்; அடி முதல் நுனி வரை மருந்தாகும் சிறப்பு;  அனைத்தும் இந்த மரத்தின் மகிமை; இந்தியா மற்றும் பல நாடுகள் இதன் தாய்மண்.

 சிறுநாகப்பூ மரத்தின் தாவரவியல் பெயர் மெசுவா ஃபெரியா (Mesua ferrea); இதன் தாவரக்குடும்பம் கேலோபில்லேசியே  (Calophyllaceae).

இதை சாதாரண மரம் என்று நினைக்க வேண்டாம்; மூன்று நான்கு புத்தமதக் குருமார்களுக்கு சிறு நாகப்பூ மரத்தடியில்தான் பெரும் ஞானம் கிடைச்சது.


'ஆல்டர்' (ALDER)
நாகாலாந்து மாநிலத்தின் 
அரசு மரம் (STATE TREE) 

ஆல்டர் மரம் இமயமலையின் மித வெப்பநிலைக்கு ஏற்றது; நேபாள நாட்டில் இது ரொம்பப் பிரபலம்; அதனால்தான் இதன் தாவரவியல் பெயர் ஆல்னஸ் நேபாலென்சிஸ்  (ALNUS NEPALENSIS); விறகு, கரி என உபயோகமாகும் 'ஆல்டர்' அபாயகரமான மலைச் சரிவில் கூட மளமளவென வளர்ந்து மண் அரிப்பைத் தடுக்கும்; கொத்துக் கொத்தாகப்  பூத்து ஆளை மயக்கும்  'ஆல்டர்' 'பெட்டுலேசியே' (BETULACEAE) தாவரக் குடும்பத்தில் மரியாதைக்குரிய  மர உறுப்பினர்

அகில் மரம்

இது திரிபுரா மாநிலத்தின் அரசு மரம்; திருக்கறாய் திருத்தலத்தின் தலவிருட்சம்; சர்வ தேச அளவில் வாசனைத் திரவியங்களின் சூப்பர் ஸ்டார்; ஒரு கிலோ முதல்தர அகிலின் விலை ஒரு லட்சம் டாலர்; பொதுப் பெயர்கள், அகர் வுட், அலோஸ் வுட் மற்றும்  ஈகிள் வுட்(Agar wood, Aloes wood, Eagle wood); இதன் தாவரவியல் பெயர் அக்யுலேரியா அகல்லோச்சா(Aquillaria agallocha); தைமீலேசி (Thymelaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தியா, சீனா,  ஜப்பான்,  வியட்நாம் ஆகிய நாடுகளின் கலாச்சாரத்தின்  தொடர்படையது அகில் மரம். 


டூனா மரம் 

மணிப்பூர் மாநிலத்தின் அரசு மரம்;இதன்  பொதுப் பெயர்கள்  ரெட்செடார் மற்றும்  சீனமகோகனி; சீனாக்காரர்களின் முருங்கைக் கீரை இது; சீன இலக்கியத்தில் 'டூனா சைனென்சிஸ்'  என்றால் அப்பா; 'டே லில்லி' என்றால் அம்மா; 'I wish your toona sinensis & day lily are happy and healthy' என்றால்  ' 'உங்க அம்மா அப்பா மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமா இருக்க வாழ்த்துக்கள்' அப்படீன்னு அர்த்தம்; இதன் தாவரவியல் பெயர் டூனா சைனென்சிஸ் (Toona chinensis) தாவரக் குடும்பம் மீலியேசி ( Meliaceae ); வடகிழக்கு இந்தியாவை தாயகமாகக் கொண்ட டூனாவை நடுவது பூங்காக்களுக்கும், சாலைகளுக்கும் நகை நட்டு பூட்டுவது மாதிரி 


Attachments area

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...